03 September 2018

யாசிக்கும் ஏதிலி- மின்நூல்!

வணக்கம் உறவுகளே நலம் தானே

கொஞ்சம்  பதிவுலகம் எல்லாம் எப்படி இருக்கு என்பதை கண்டுகளிக்கலாம் என்று ஓடோடி வந்தேன்!)))ஒரு சிறிய சோம்பல் நீக்கி .

உங்களுடன் இணையத்தில் சந்திப்பது மகிழ்ச்சி.

கடிகார மனிதர்கள் படம் போல வாழ்க்கை என்னும் வீடுக்கனவுடன் பொருளாதார தேடலில் புதிய வேலை தேடும் படலம் சில மாதங்களாக தொடர்கின்ற கதை எல்லாம் விரைவில் உங்களுடன் பகிர ஆசை !என்றாலும் எப்போதும் ஒரே சினேஹா முகாரி பாடும் உன் கதை கேட்டுச்சலித்துப்போச்சு என்றவர்களுக்காக !

இதோ புதிய அவதாரம் போல யாசிக்கும் ஏதிலி மின்நூல் வடிவத்தில் உங்களை நாடி வந்துவிட்டது.)))) https://thanimaramnesan.pressbooks.com/

இனி தொடர்கதை வாசிக்காதவர்கள் மின்நூல் வாசித்து உங்களின் உள்ளக்கிணற்றில் இருந்து எழும் கருத்துப்புயல்களை தனிமரம் நோக்கி வீசுங்கள் .


என் எழுத்துப்பணிக்கும், அடுத்த படைப்புக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற  ஆவலுடன் என் தாழ்மையான வேண்டுகேளுடனும் உங்களை யாசிக்கும் இந்த ஏதிலியின்  இன் மின்நூல்களை பலரிடம் சென்று சேர்க்க வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் 
உங்களின் 
சினேஹா அபிமானி தனிமரம் நேசன்!))))

விரைவில் அடுத்த மின்னூல் பற்றிய பகிர்வுடன்!

தனிமரம் வருவேன் என்ற தேர்தல் வாக்குறுதி போல அல்லாது செயல்வடிவில் உங்களைச்சந்திப்பேன்.!
நட்புடன் தனிமரம்,
பாரிஸ்.

18 July 2018

காற்றில் வந்த கவிதைகள்-41

லைய மறுக்கும் கனவு!
—-
ஏதிலியின் இதயத்துக்கும்
ஏனோ காதல்  ஏற்றம் கட்டி
ஏர் பூட்டி ஊழுவது போல
ஏழ்மையில் ஏக்கம் தந்தவளே!
ஏனோ இன்னும் தராத
ஏகாபத்திய தேசங்களின்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு போல
ஏழை என்னையும் இழுத்தடித்து
எல்லோரிடமும் கையேந்தும்
எங்கநாட்டு காணமல்போனோர் விடயம் போல
ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரிகள்
எல்லோரும் இருக்கும் கதிரையில்
ஏளனம் பேசும் பாராளமன்ற மேடை போல
எல்லோரும் நேசிக்கும்
ஏட்டுக்கல்வித்திறமை
ஏனோ உன்னிடம் இல்லை!
ஏதிலிக்கு எப்போது வரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வதிவிடவிசா?
என்றெல்லாம் நீ சூட்டிய!
என்றென்றும் புன்னகை போல
ஏனோ சிரித்த பார்வையில் தான்
ஏதிலியும் இன்னும்
எழுதுகிறேன் பல தொடர்கள்!
என்னவளே நாயகி நீ என்ற
எடுகோலில் என்றும்
ஏக்கம் 
கலையாற மறுக்கும் கனவு போல
என்னுள் வந்த உன்னை நினைத்து!
(யாவும் கற்பனை)////தேயாத வெண்ணிலா!

—-
இனவாத மேகங்களும்
மதவாத தூறல்களும்
ஊழல்கள் என்னும் சுழற்காற்று
ஊழிக்கால மண்சரிவு போல
இயற்க்கையின் வளர்ச்சியில்
இன்னும் இன்னும்
இலங்கை என்ற தேசத்தின்
இதயக்கமலத்தில் மின்வெட்டுப்போல
இடறிவிழுகின்ற போதெல்லாம்!
இறையாண்மை என்ற தேயாத வெண்ணிலா
இசைந்தாடும்  தென்றலாய் !
இன்னும் இருட்டறைக்கைதிகளுக்கு 
இருவிழிகளில் தருசனம்
இனியும் வருமா தேயாத வெண்ணிலாவே
இருகரம் கூப்பிக்கேட்கின்றேன்
இன்னுயிர்க்காதலியே?!!!

(யாவும் கற்பனை)//

///
விளம்பரங்கள் இங்கே
 விரும்பம் இல்லை என
விரும்பாமல் போவோரினால்
விருப்பப்பக்கம் வீழ்ச்சி காணும்
விலைச்சுட்டென்  இலங்கை போல
விருப்பங்கள் விரும்பாமலே
விண்ணைத்தாண்டி வருவாயா என
விழிகள் நோக்கும் 
விடுமுறை விருப்பங்கள் தொலைந்து
வீட்டுக்கொரு கணனி 
விளையாடும் விருப்பு வாக்கு நாடி
விளம்பரம்செய்தவர் இன்றைய
வீட்டின் தலைவரிருடன்
விருந்தோம்பல் செய்வதும்
விரைவில் வரும்
விடுதலைத்தீர்வு என்று
விளக்கம் கொடுப்பதும்
விடியவிடிய கேட்ட கதைகள் எல்லாம்
விட்டில்பூச்சி போல
விதைக்க ஆசை !விரைவில் வந்திடு
விளக்கு எரியட்டும் 
விளக்கம் கேட்டு முகநூலில்
விழித்திருக்கின்றேன்!விதாணையார் வேலைக்காரன்!
(யாவும் கற்பனை)