30 March 2011

விடை கொடுங்கள் நினைவுகளே!

எப்போதும் தாண்டிச்செல்லும் இந்த முற்கம்பி சோதனைச்சாவடிகள் இனியில்லை உற்றுப்பார்க்கும் கழுகுப்பார்வைகளில் இருந்து தப்பிக்கின்றேன் மனநிம்மதியுடன் என்றாலும் என்னிடம் பல துயருடன் குடிபெயர்கிறேன்!   .........
              பெற்றவர்களைப் பிரிந்து கூடப்பிறந்து கும்மாளம்,குடிமிச்சண்டை,போட்டாலும் பாசத்தின் உறைவிடங்களான சகோதரிகளைப்பிரிந்து நேற்றுவந்து உறவாகிப்போன கைபிடித்த கணவனுடன் கடல்கடந்து குடித்தனம் நடத்த நாடற்றவனின்பின் நானும்போகிறேன்!
.......,,,,,,
நான் பிறந்த இந்தவீட்டை இனி எப்போது பார்ப்பேன் எப்போதும் தனிமையில் என்னுடன்பேசும் இந்த வேப்பமரம் தாங்கிய     தூப்பாக்கிச்  சன்னங்கள் இன்னும் மறையாத முற்றத்தை விட்டுப்போறன்!
:::;;
முகம் தெரியாத மணிதர்களாக வந்து முன்னேரி காவல்காத்த அந்த தெய்வங்கள் வாழ்ந்த ஓழுங்கையை மறந்து எப்படி இருப்பேன் தனிமையில்......,
--//////
அயல்கிராமங்கள் எல்லாம் ஓடிவந்து சாப்பிட்ட கோயில் மடத்தை எப்படிப்பிரிவேன்!-//
--/////
ஓர் இரவுக்குள் கையில் கிடைத்ததுடன் மழையில் நனைந்து மறுகடல்தாண்டி வந்தாரைவாழவைத்த வன்னியைவிட்டு  வீட்டுக்காவலுக்கு விட்டுப்போன நான் வளர்த்தமாடு காணாமல் போனது போல் !
........----/
உறவுகள் எல்லாம் உணவின்றி உடுதுணி இன்றி உறக்கம் தொலைத்து கொத்துக்கொத்தாக குண்டுபோட்டு குதறியெறியப்பட்டு குற்றுயிர்போன பேரவலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வல்லரசுகள் தேசத்துக்குப் போனாலும் வற்றாத காயங்கள் மனதில் அலையலையாய்!
--/
என் அண்ணா நீ என் மடியில் மரன ஓலமிட்டு மறைந்து போன தருனத்தில் தவித்த தவிப்புக்களை எல்லாம் எல்லாத்தையும் என்னுள் புதைத்துவிட்டு புலம்பெயர்ந்து இன்று புதுப்பயணம்போனாலும் நான் மரணத்துள்ளும் வாழ்வேன் என் இனத்தின் விடிவைப்பார்பதற்காக என்னுள் கனவுகளுடன்!
----
இவளையும் மன்னியுங்கள் வேர்களைவிட்டு வேறுதேசம் போவதற்கு நான் தப்பிக்கவில்லை சாட்சியாக வேண்டும் சில
சம்பவங்களுக்கு!

6 comments :

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஇவளையும் மன்னியுங்கள் வேர்களைவிட்டு வேறுதேசம் போவதற்கு நான் தப்பிக்கவில்லை சாட்சியாக வேண்டும் சில
சம்பவங்களுக்கு!ஃஃஃஃ

தங்களின் பற்றுதலான பிரிவு மயிருறு வேர்கள் போல் என்றும் நிலைக்கும் சகோதரா....

Nesan said...

 நண்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், அருமையான கவிதை ஒன்றைத் தந்துள்ளீர்கள்.

ஒரு தேசத்தைப் பிரிந்து செல்லும் பெண்ணின் மன ஓட்டத்தில் கடந்த காலங்கள் எவ்வாறு இருந்தன என்பதனை வலிகளின் பிரதிபலிப்பினூடாக அருமையாகச் சித்திரித்துள்ளீர்கள்.

கவிதையினை Enter key இனை அமைத்து வரிக்கு வரி பிரித்து எழுதினால் என்ன கை நோகுமா?
இல்லைத் தானே?
(ஒரு வாசகனின் வேண்டு கோள், கொஞ்சம் பந்தி பிரித்து, வரிகளைப் பிரித்து எழுதலாமே?)

நிரூபன் said...

ஓர் இரவுக்குள்
கையில் கிடைத்ததுடன்
மழையில் நனைந்து
மறுகடல்தாண்டி
வந்தாரை வாழவைத்த
வன்னியைவிட்டு
’’வீட்டுக்காவலுக்கு விட்டுப்போன
நான் வளர்த்தமாடு
காணாமல் போனது போல் !//

அருமையான உவமை சகோதரம், வீட்டுக் காவலுக்கு மாடுகளை மட்டும் விட்டு விட்டுப் போன துயர் இப்போதும் வந்து தொலைகிறது.

எங்களின் கடந்த காலங்கள், கண்ணீர் நிறைந்த வாழ்க்கை கோலங்களை அற்புதமாகச் சொல்லியிருக்கலாம்.

கவிதையில் கை தேர்ந்த கவிஞனின் சொல்லாடல்கள் இருக்கின்றன. கூடவே யதார்த்தமும் தெரிகிறது. கொஞ்சம் வரிகளைப் பிரித்து எழுதினால் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள் சகோதரம்.

Nesan said...

நண்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.கண்டிபாக முயற்ச்சிக்கிறேன் பந்தி பிரித்து எழுதுவதற்கு போதிய அவகாசம் சில நேரங்களில் கிடைப்பதில்லை புலம்பெயர் நாட்டில் ..(உங்கள் அளவுக்கு எழுதுவதற்கு முயற்ச்சிக்கும் சாதாரமானவன் நான் நீங்கள் என் வாசகன் என்பது குருவியின் தலையில் பனங்காய் வைப்பது போல் உள்ளது.)

நிரூபன் said...

// நீங்கள் என் வாசகன் என்பது குருவியின் தலையில் பனங்காய் வைப்பது போல் உள்ளது.)//

சகோ.. இது ரொம்ப ஓவரு.. நீங்க மட்டும் என் கையிலை கிடைச்சா...
பவர் ஸ்டாரோடை லத்திகா டீவிடியை பத்து தடவை பார்க்க வைச்சு அழப்பண்ணிடுவன்.. பிச்சுப் புடுவன், பிச்சு...