28 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-2

நீண்ட பாதுகாப்பு வலயங்களைத் தாண்டி எங்கள் வாகனம் கேதீஸ்வரத்தின்  முகப்பு வாசலில் நுழைந்தது எங்கள் வருகையை முன்னரே அறிந்த வானரப்படைகளின் காவலர்கள் போன்ற ரானுவத்தினர் எங்கள் வாகனத்திற்கு அருகில் வந்தனர் இங்கு வந்த நீங்கள் எங்களின் கன்கானிப்பில் இருக்கவேண்டும் யாரும் இந்த அனுமதிசீட்டை தொலைக்கக்கூடாது என்று கூறியவர்கள் எல்லாருக்கும் இலக்கத்தகடு தந்தார்கள்  !

நாளைக்காலை 8 மணிக்கு இவ்விடம் வந்துவிடவேண்டும் என்ற அறைகூவலுடன் எங்களை விட்டு தம்பணியில் சென்றனர் ஆட்டுக்கு வேலிபூராமல் இருக்க கிராமத்தில் தடி கட்டுவது போல் எங்களின் பூர்வீக கேதீஸ்வர நாதரை தரிசிக்க எங்களுக்கு இலக்கத்தகடு என ஒருவர் முனுமுனுத்தது காதில் விழுந்தது!
...
நீண்ட காலம் பராமரிக்காத பாதைகள் ஓரே கந்தர்வ ராஜானின் கோட்டைபோல் சுக்கிரிவன் முன்னுரைத்த கதை ஞாபகம் ஒரு பக்கம் என்றாள் இன்னொருபுறம்  என்னைச் சீராட்டிய அன்னையின் வீடும் 12வருடங்களில் இப்படித்தான் இருக்குமோ!
..
நாங்கள் விளையாடிய நாவல் மரத்தடி வளவும் இப்ப என்னை இனம்கானுமா! என்ற உணர்வுகள் என்னை சூழ்நிலைக் கைதியாக்க  மாந்தோட்டம் என்ற புரதாண நகரின் அழகைப் படிப்பித்த சமயப்பாட ஆசீரியை நினைவில் வந்துபோனார்!
..
ஓருகாலத்தில் வடக்கில் இருந்து  பாதையாத்திரையாக பூநாகரிப்பாதை யோரம் திருக்கேதீஸ்வரம் வந்தவர்கள் நம் முத்தோர்கள் காலத்தச்சன் இனவாதத்தை தைக்க தொடங்கிய 1979  இன் பின் யாத்திரைகள் தடைப்பட்ட தாக என்னுடன் 
வந்த முதியவர் தன் அனுபவங்களை பகிர்ந்தார்!
..
சுற்றுவட்டாரம் ஒரே காடுப்பத்தையாகவும் முற்கள் நிறைந்து போர்கால வடுக்களை சூடி கலிங்கத்துப்பரனியை ஞாபகப் படுத்தியது!
...
நாங்கள் அழகிய கேதீஸ்வர் நாதரின் கோபுரத்தைக்கண்டதும் கைகூப்பித் தொழுதோம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற  மந்திரத்தை மறக்கலாமா?
அவர்ரவர்கள்  வலப்புற வாசல் ஊடாக நாதரையும் கெளரி அம்பாளையும் தரிசித்தோம்! 
முதலில் அப்பன் கணபதியை கும்பிட்டுவிட்டு    பின் முருகன் தம்பியை தொழுது எங்கள் பிறவிப்பயன் பெற வேண்டி அம்மையப்பன் கேதீஸ்வர நாதரையும் கெளரி அம்பாளையும்  ஒரு பரவச நிலையில் வழிபடும்போது அங்கே ஆச்சாரியார்கள் நடுச்சாம பூசையின் தீபாராதனை ஒருசேர எல்லாக்கடவுளுக்கும் காட்டப்பட்டது .
"யாரும் சுவடுபடாமல் ஜய்யா என்றழைக்கும் போது காதல் மடப்பினி"" என் தேவாரத்துடன் என் பாராயணம் ..
...
தொடரும்

No comments :