29 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3

அழகிய மலர்களினால் மிகவும் சாந்த நிலையில் கேதீஸ்வர நாதருக்கும் ,கெளரி அம்பாளுக்கும் ,அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சியைக் கான! கோடி கண்கள் வேண்டும் என்ற பேராசை குடிகொண்டது !விபரிக்க முடியாத தரினங்களில் கண்களில் நீர்த்துளி வருவது பேராணந்தத்தின் வெளிப்பாடு  !தேவாரத்தில் வருமே! "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி""  .. நாதன் நாமம் நமச்சிவாயவே!"
...
பூசைகளை சிறப்பாக ஆச்சாரியர்கள் மந்திரங்களுடன் முடித்த ,மறுவினாடியில் கணீர் என்ற குரலில் வசாந்தா வைத்திய நாதனின் கதாப்பிரசங்கம் தொடங்கினார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வந்த இந்துக்கலாச்சார அமைச்சின் அதிகாரிகளின் ,அருளுரைகள் விளக்கங்களின் பின் அறிமுகத்தின் பின் .
..மடைதிறந்த வெள்ளம்போல் அம்மையாரின் மெய்யான விளக்கம் தொடர்ந்தது!(இவர் ஒரு ஈழத்தின் அறிவுச்சுடர், வானொலியில் தொடர்ந்து நற்சிந்தனை உரைக்கும் வித்தகி) ..
.. 
இன் நிகழ்ச்சிகள் ஏககாலத்தில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணம் நேரடி அஞ்சல் செய்துகொண்டிருந்தது! அங்கே என் ஊர்காரர் மு.ரவீர்ந்திரனுடன் ரா.ஜோகராஜன் இருவரும் அறிவிப்பு  செய்து கொண்டிருந்தனர், வானொலி நேரஞ்சலை அங்கேதான் நேரடியாக பார்த்தேன்!..


முன்னர் சாமியை தரிசிப்பது என்றாள் தோல்களில்  ஏறியும், முட்டிமோதியும் பார்த்தோம் என்றார் என்னருகில் இருந்த முதியவர்..
..  
அம்மையாரின் சொற்பொழிவு   நிரைவுரும் வேளையில் அவருக்கு அதிகாரிகளின் கரங்களால் பொண்ணாடை போர்த்து கெளரவிக்கப் பட்டது!  நேரமோ அதிகாலைப்பூசைக்கு கட்டியம் கூறியது மடங்களில் சூடாக கோப்பி,பால்   பரிமாறப்பட்டது,! 
.. 
கோப்பி என்றாள் எனக்கு  தனிப்பிரியம்  !பின்னாளில் சென்னையிலும், கேரளாவிலும் அவஸ்தைப்பட்டது தனி ஒரு ஆவர்த்தனம்!..

அதிகாலைப் பூசையின் பின் அடியார்கள் பாலாவியின்  புண்ணிய தீர்த்தம் ஆட அதன் குளத்தில் இறங்கினோம் !பாலாவி ஆறு போரின் விளைவால் குளம்போன்றே  சிறு வட்டத்தினுள் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்பர்களுக்கு  சரியான பனியில் நீர் குளுமையாக இருந்தது !
...
ஊரில் திருவிழா என்றாள் தீர்த்தத் திருவிழா கடலில் ஆடிய எனக்கு இது புது அனுபவம். ஆசைதீர குளிக்கலாம் என்றாள் எங்களுக்கான கால அவகாசம் முடிந்ததாக  இரானுவம் ஒலிபரப்பியது. விரைவாக எழுந்து மீண்டும் கோயில் சென்று வழிபட்டுவிட்டு  பிரசாதத்தை வேண்டிக்கொண்டு வாகனத்தை நோக்கி நடந்து போகும் போது இலக்கத்தகட்டை பத்திரமாக சரிபார்த்துக்கொண்டோம்!..
மீண்டும் நாதரையும் அம்பாளையும் எப்போது தரிசிப்போம் என்ற ஆதங்கம் எனக்குள்!
..
விரைவாக இரானுவத்தின் கன்கானிப்பின் ஊடே வாகனத்தில் ஏற்றப்பட்டோம் .எங்கள் உருமறைத்த வாகனத்தை தொடர்ந்தது இரானுவ இராட்சத கவசவாகனம்!.

வேகமாகப் போன வாகனத்தின்  முன்னே டமார் என்ற வெடிச்சத்தம்!
...
தொடரும்!

No comments :