07 April 2011

திரும்மிப் பார்க்கிறேன் நிறைவுப் பகுதி.

எங்கள் தேசத்தில் சுதந்திரக்கட்சி  கொண்டுவந்த தாய்மொழிவழிக் கல்வியினால் ஆங்கிலமொழி பின் தள்ளப்பட்டதும் போதிய திறமையாளர்களின் வழிகாட்டல் கிடைக்காமல் நாம் பலர் ஆங்கிலப் பாடத்தை ஓரு  வித மாற்றந்தாய் மனப் பக்குவத்தில்  இப்பாடவேளையில் விளையாடுவதும், வெளியேறுவதாலும் அருமை புரியாமல் இருந்துவிட்டு சாதாரன பரீட்சை நெருங்கும் போது படும் திண்டாட்டம். தனிக்கதை.நாங்கள் எல்லோரும்  தெரிந்தவகையில் சமைத்து சாப்பிடுவோம் இடைக்கிடை இருவராக வெளியே போய் இடங்களை தெரிந்து கொண்டு வருவோம் .கிழமைக்கு ஓருதடவை முகவர் நேரில் வருவார் .தொலைபேசியில் கதைக்கும் போது விரைவில் அனுப்புவதற்கு ஆவனை செய்வதாக கூறும் அவரின் வார்த்தைகளில் எங்களுக்கு நம்பிக்கையீனம் தொடங்கியது! வாரங்கள் மாதங்களாக ஓடியது. நாங்கள் சட்டவிரோதமாகத்தான் தங்கியிருக்கிறோம்  .எங்கள் கடவுச்சீட்டு பிரதிகள் மட்டுமே நம்மிடம் மூலப்பிரதி உடனடியாகவே வாங்கிக்கொண்டார் .முகவர்.சில நாளில் ஒருவரை அழைத்துச் செண்றார் அதன் பின் அவரின் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது .எங்களுக்கு செய்வது புரியவிலலை. நாட்டுக்கு புதியவர்கள் கையில் போதிய பணம் இல்லை .அனுமதியில்லை என்ன செய்வது என ஆளாளுக்கு கேள்வியுடன் தடுமாற்றம் !ஜரோப்பாவிற்கு தொடர்பு கொண்டால் நீங்கள் கவனமாக இருங்கள் அவர் வருவார் என கூறினார்கள் .எங்களிடம் சாப்பிட ஏதும்மில்லை ஒவ்வொருத்தவரின் கையிருப்பும் காலியாகிவிட்டது 3மாதங்கள் முடிந்துவிட்டது .நாளிதலில் நம்நாட்டில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்துகொண்டிருந்தது .இனியும் தாமததிப்பதில்  பலன் இல்லை என்ற முடிவு .அனைவருக்கும் நல்லது நாட்டுக்கு போவதற்கு தயாரானோம் .எங்களின் நல்லநேரமோ தெரியாது.
மலேசியாவில் ஆட்சிமாற்றத்திற்கு இசைவாக மஹதிர் முகமட் வழிவிட்டு அஹமட் படாபி பதவி எற்பதற்கு வழி கிடைத்தது.அவரின் முதல் நடவடிக்கை தேர்தல் பிரச்சாரமும் நாட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்கள் 3மாததிற்கு உள் வெளியேறுங்கள் சகல மார்க்கமும்  விசாரனை எதும்மின்றி போவதற்கு வழி செய்திருப்பதாக அறிவித்தல்கள் தேசிய நாளிதல்களில் வந்த வண்ணம் இருந்தது.
நாங்களும் நமது உறவுகளுக்கு  ஜரோப்பாவிற்கு அறிவித்து .அங்கிருந்து பணம் பெற்று நாட்டைவிட்டு வெளியேறி ஊர் போய் சேர்ந்தோம்.
இருந்த பணத்தையும் தொலைத்து மன உளைச்சலையும் பெற்று  ஏமாற்றப்பட்டதுதான்  அனுபவப் பாடமாக அமைந்தது.
என்னைப்போல் எத்தனை உள்ளங்கள் வெளிநாட்டு  மோகத்தால் சீரலிந்திருப்பார்கள்!?

2 comments :

நிரூபன் said...

எங்கள் தேசத்தில் சுதந்திரக்கட்சி கொண்டுவந்த தாய்மொழிவழிக் கல்வியினால் ஆங்கிலமொழி பின் தள்ளப்பட்டதும் போதிய திறமையாளர்களின் வழிகாட்டல் கிடைக்காமல் நாம் பலர் ஆங்கிலப் பாடத்தை ஓரு வித மாற்றந்தாய் மனப் பக்குவத்தில் இப்பாடவேளையில் விளையாடுவதும், வெளியேறுவதாலும் அருமை புரியாமல் இருந்துவிட்டு சாதாரன பரீட்சை நெருங்கும் போது படும் திண்டாட்டம். //

எங்களுக்கு எல்லாமே தமிழில் வேண்டும் என்பதற்காகவும், ஆங்கிலம் மீதான வெறுப்புணர்வை, அல்லது ஆர்வமின்மையினை எங்கள் மூதாதையர்கள்(எனக்கு முதல் வகுப்புக்களில் படித்த சகோதரர்கள்) தந்த காரணத்தால் நாங்களும் இதே மாயையில் உழன்று கொண்டிருந்தோம்.

ஆங்கிலப் பாடம் என்றால் பாட்டுப் பாடுவது, வாங்கில் மேளம் தட்டுவது என்று பல விளையாட்டுக்கள் செய்திருக்கிறோம்.
இதன் பயனினை பல்கலைக் கழகத்திற்குச் சென்று திக்கு முக்காடும் போது தான் உணர்ந்து கொண்டேன்.

நிரூபன் said...

இருந்த பணத்தையும் தொலைத்து மன உளைச்சலையும் பெற்று ஏமாற்றப்பட்டதுதான் அனுபவப் பாடமாக அமைந்தது.
என்னைப்போல் எத்தனை உள்ளங்கள் வெளிநாட்டு மோகத்தால் சீரலிந்திருப்பார்கள்!?//

நான் நினைத்தேன், இறுதியில் நீங்கள் வெளி நாடு போவதாகவும், முடிவு சுபமாக அமையும் என்றும். ஆனால் ஏமாற்றத்தில் முடித்து விட்டீர்கள் சகோ.

இப்படி எத்தனை, எத்தனை உள்ளங்கள் பணங்களினையும்,தமது எதிர்காலத்தினையும் தொலைத்திருக்கின்றன.
எதிர் கால சந்ததிக்கு இப் பதிவு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பதிவினைக் கொஞ்சம் அழகாக்கி, பந்தி பிரித்து எழுத வேண்டுகிறேன்.