13 April 2011

புதுவருடம் பின்னோக்கிய நினைவுகள்

புதுவருடம் என்றாள் மனதில் எழும் சந்தோஸக் கனவுகள் எத்தனை நினைக்கும் போது மனம் சிலிக்கிறது அன்நாளில் புதுவருடம் என்றாள் வீட்டை சுத்தம் செய்வது பலகாரம் சுடுவது என்று அம்மா ஓரே அமர்க்களமாக திரிவா நாங்களோ அண்ணன்,மச்சான்,நான்,தங்கைகள்.நண்பர்கள் எல்லாம் யார் யாரிடம் கைவிசேஸ்ம் வாங்களாம் என்பதில் ஓரு மாநாடே போடுவம். வியாபார நிமித்தம் தொலைதூரத்தில் இருக்கும் அப்பா,மாமாமார்,சிற்றப்பா,தாத்தா எல்லோரும் மூட்டை முடிச்சுக்களுடன் ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுவார்கள்!
அவர்களின் வருவுடன் வீட்டில் கலகலப்புக்கு பாசத்திற்கும் பஞ்சம்மில்லை  தாத்தா எங்கள் ஓவ்வொருத்தருக்கும் தான் கொண்டு வந்த உடுப்புகளை பிரித்துத்தருவார் கூடவே சக்கர்வாணம் பொட்டியில் வயதுக்கேற்றவாரு அதிகமாக அண்ணனுக்கே கிடைக்கும் இரவில் அந்த சக்கரத்தை சுழலவிட்டாள் அனுமானின் வாலில் வைத்த நெருப்பு போல் சுழன்று பறக்கும் வெளிச்சத்தில் எங்கள் சந்தோஸ்க்களிப்புக்கு அளவு ஏது
மறுநாள் அதிகாலையில் எழுந்து மருத்து நீர் வைத்து கிணற்றில் அப்பா எங்களை குளிப்பாட்டிவிடுவார் அப்பா வாழியில் தண்ணி இழுக்கும் அழகே தனியானது 
அம்மா அடுப்படியில் மாமிமார்,சித்திகளுடன் சமையல் ஆயத்தங்களுடன் மூழ்கினாலும் எங்கள் மீதும் ஓருபார்வை எப்போதும் இருக்கும்.
நல்ல நேரம் என்றதும் தாத்தா எல்லாரையும் கோயில் போக அழைப்பார் யாரும் ஏதும் சொல்லாமல் எங்க வீட்டு வாத்தியார் பின் நடந்து வயில் பாதை தாண்டி முன்னால் உள்ள அம்மன் கோயில் நுழைந்தால் தாத்தாவின் வரவிற்கு காத்திருந்தவர் போல் ஐயர் வாங்கோ எப்ப பயணத்தால் வந்தனீங்க எல்லாறுக்கும் புதுவருடவாழ்த்துக்கள் கூறுவார் அவரின் அந்த வாழ்த்துக்களுடன் எங்கள் புதுவருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள் எல்லாருக்கும் பரிமாற ஐயர் பூசையை தொடங்க நான் ஓடிப்போய் அந்த ஆலய கண்டாமணியை அடிப்பேன் அது கீழ் வருவதும் மேல் எழும்பும் போது என்னையும் இழுத்துச் செல்லும் அந்த சுகத்தை எப்படி சொல்லுவது !
கோயில் ஐயருடன் வீட்டார் எல்லாரும் அடுபடியில் இருந்து அரசியல் வரை பேசுவதை சக்கரை பொங்களை சாப்பிட்ட வாரே நாங்கள் வலம் வருவோம் .
பின் தாத்தாவீட்டுக்கு வந்து பூசை அர்சனைத்தட்டை சாமி படத்தடியில் வைத்துவிட்டு  தன் இடுப்பு மடிப்பேசில் இருந்து காசு எடுத்து வெற்றிலையில் வைத்து ஓவ்வொருத்தருக்கும் கைவிசேஸம் தருவார் அன்று எங்களில் யார்கூடக்காசு வாங்குவதில் ஓரு ரகளையே நடக்கும்!
மதியம் அம்மாவின் கைவண்ணத்தில் உருவான சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடுவோம் .
மாலையில் மாமாவீடுகளில் எங்களுக்கு ராஜமரியாதை மாமாமார் வாங்கியந்த புது உடுப்பு பட்டாசு வெடிபது என கொண்டாடத்திற்கு குறையில்லை!
1983 இல் ஏற்பட்ட இனவாத செயல்பாடுகள் எங்கள் குடும்பத்தாரின் வர்தகநிலைய தீவைப்புக்களும் தூர்மரணங்களும் எங்களை ஆழாத்துயரில் ஆழ்த்தியது.
அதன் பின்பு குடும்பங்கள் இடப்பெயர்வு,புலப்பெயர்வுகள் காரணமாக புதுவருடம் என்றாள் யுத்த நிறுத்தம்  என்ற கோசம் வலுப்பெற்றது பின்னாலில் அண்ணன்.மச்சான்,என ஒவ்வொருத்தராக நாட்டுக்காகப்போக நான் புலம் பெயர்ந்து இன்று புதுவருடம் என்றாலே உறவுகளுடன் 
தொலைபேசியில் வாழ்த்துக்களை கூறுவதுடன் காலம்கழிகிறது.
அடுத்த சந்ததி  இதன் அர்தங்கள் தெரியாமல் புலம் பெயர்  தேசத்தின் சிறப்பான பண்டிகைகளை கொண்டாடும் இனமாகிக்கொண்டு செல்கின்ற வேதனையை யாரிடம் சொல்லி அழுவது.

3 comments :

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், ஆரம்பத்தில் புதுவருடம் பற்றிய அறிமுகத்தினை அழகாக்த் தந்து விட்டு, இறுதிப் பகுதியில் எங்கள் உள்ளங்களில் ஏற்பட்ட காலத்தால் துயரமும் எவ்வாறு புது வருடத்து நினைவுகளை நீர்க்கச் செய்திருக்கிறது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இப்போது உங்கள் எழுத்து நடையில் முன்னேற்றம் இருக்கிறது, கொஞ்சம் பந்தி பிரித்து எழுதினால் இன்னும் அழகாக இருக்கும்.

நிரூபன் said...

சீனா வெடி கொளுத்தும் நினைவுகளையும், புதுவருடத்தையொட்டி, ஊர்ச் சனசமூக நிலையங்களால்(வாசிகசாலை) நடாத்தப்படும் விளையாட்டு, கலை, கலாச்சார நிகழ்வுகளையும் சேர்த்திருந்தால் பதிவிற்கு இன்னும் அழகாக இருந்திருக்கும்.

Nesan said...

அதிகமான நினைவுகள் கூடவந்தாலும் என்ன செய்வது கடமை குறுக்கீடு செய்கிறது கணனியில் கண்ணுறங்காதே நீ என்ன கருனாநிதியின் பேரனா அவங்களுக்கு சொத்து இருக்கு உனக்கு ஓதுங்க ஒரு குடில் இருக்கா என்று!?