27 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும்  தொலைத்த நிம்மதியும்!

எப்போதும் பயணங்கள் ஒவ்வொரு அனுபவத்தையும் இனிய நினைவுகளையும் சுமந்து செல்கிறது. அது நாவலாகுவதும் சிறுகதை ஆவதும் சிறந்த சிற்பியின் கையில் கிடைக்கும் சிலை போன்றது!
...
ஆன்மீகப் பயணங்கள் பல தத்துவங்களை விளங்கவைக்கின்றது! 
நம் தேசத்தில் ஓவ்வொரு கிராமத்தையும் தாங்கி ஊரின் பெருமையை பறை சாற்றுவது சிறப்பான கோபுரங்களை தாங்கும் ஆலயமும்!  பயணங்களை வழி நடத்தும் வேப்பமர சாமிகளும் தான் !அது அம்மன் ஆகட்டும், வைரவர் ஆகட்டும் ,ஈழத்தவரின் இன்னொரு இயல்பு எனலாம்!
...
இவை எல்லாம் ஒரு காலம் !இப்போது நித்தியானந்த சாமிகளின் கூடம் என்று ஓடும்  புதுயுகத்தவர்களுக்கு கோயிலின் சிறப்புக்கள் தெரியாதுபோல் பாவனை புரிகிறார்களா? ஆன்மீகம் அழிந்து போய்க்கொண்டிருக்கா என அலசவேண்டிய காலத்தில் இருக்கிரோம்!
...
இப்படியான விசயங்களை மூத்த பதிவர்கள்  
ஆராயட்டும்!
யுத்த அரக்கன் பல தொன்மையான ஆலயங்களை அபகரித்து பாதுகாப்பு வலயம் என்ற கோட்டையை  அகழவிரித்து நம் புகழ்பூத்த ஆலயங்களுக்கு போக அனுமதி மறுக்கப்படுகின்ற நிலையில்!
... 
பணி நிமித்தம் 2000 ஆண்டுகளில் மன்னார்மாவட்டத்தில் இருந்த போது
ஒரு சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் முதன்மையான திருக்கேதீஸ்வரம் போகும் வாய்ப்பினை அடியேனும் பெற்றேன்!
..
எதிர்பாராத பயணம் அது.   வழமையாக வேலை முடிந்து இருப்பிடம் போகும் போது வழியில் ஒரு முகம் தெரியாதவர் தம்பி ,கேதீஸ்வரம் போறவர்கள்  கச்சேரியில்  பெயர் பதியட்டாம் என்றவர் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார் .என் மனதிற்கு ஒருகனம்  தயக்கம்  ,பணி நிமித்தம்  உறவுகளுக்கு தெரியப் படுத்தாமல் மன்னாரில் இருப்பது .நாட்டு நிலைமையோ ஒவ்வொரு கனமும் எங்கேயும் எதுவும் வெடிக்கலாம்!
சித்தன் செயல் சிவன் செயல் .என் குடும்பத்தில் 3தலைமுறை தாண்டி எனக்கு கிடைத்த வரம்! என் சைக்கில் பேரூந்து நிலையத்தை தாண்டி வலது புற ஒழுங்கையில் உள்ள கச்சேரி(பட்டின சபையில்) க்கு.   முண்டியடித்தேன் எனக்கு முன்னே கேதீஸ்வர நாதர் அருட்பார்வை பெற 60 பேர்  பச்சை உடுப்புக்காரனிடம் பெயர்பதிந்து கொண்டு இருந்தனர்!
தில்லைக்கூத்தனின் நடனம்பார்க்க யாருக்கு கசக்கும் அன்பருக்கு அடியவன் எங்கள் ஈசன் என படித்திருக்கிறோம் !போய் பார்பதற்கு ஒரு சந்தர்பம்! எனது அடையாள அட்டையை கொடுத்தேன் அந்த  ஆமிக்காரனிடம்!..
என்னையும் எனது அடையாள அட்டையையும் பலமுறை பார்த்தான் என்னிடம் வயது கேட்டான் நானும் பதில் கூறினேன்!
...
85பேர்களுக்குத்தான் அனுமதியிருப்பதாக அறிவுருத்தல்கள் வந்து கொண்டிருந்தது  !வந்த வர்களில் நான் ஒருவன்தான் இளைஞன்
(பொய்யில்லை நியம் கேதீஸ்வர நாதர்மேல்)..
உங்களுடைய வேலைசெய்யும் அடையாள அட்டையை தாரும் என்றவன் தன் மேல் அதிகாரியிடம் போனான் மீண்டும் என்னை
உள்ளேபோகவிட்டு அவன் தன்கடமையில் முழ்கினான்.  ஒருகனம் மனதில் !""பல்மிருகம் ஆகி பறவையாய் பாம்பாகி என்ற சிவபுராணம் ""ஒரு புறம் யார் பெத்த புள்ளையோ!  இப்படி முகம் தெரியாமல் பிணம் போல் என ஒரே நடுக்கத்தினுடன்
உள்ளே போனால்! அந்த அதிகாரி  என்னுடன் பலமுறை  என்னுடைய வாகணத்தில் பலவாசனைத்திரவியங்களை சுட்ட லஞ்சப்பேர்வழி!..
..
என்ன தம்பி நீ அங்கே எதற்கு நிலமை தெரியும் தானே! அயனில் குசிபடம் போகுது போய் ரசிக்கிறதை விட்டிட்டு 'என்றவரிடம் நீங்கள் போயா தினத்தில் பண ஓதுவதைப்போல்தான்(புத்தரின் போதனை உதட்டளவில்)நானும் போக விரும்புறன் என்றேன்.  ஏதும் சொல்லாமல் அனுமதி தந்தான்  நன்றி கலந்த சிரிப்புடன் வெளியே வந்து வழியனுப்பினான்.இரவு 9மணிக்கு நிற்கவும் என்றான் ஒம் என தலையாட்டிவிட்டு  இருப்பிடம் வந்தேன்!...
......


இரவு இருவாகனத்தில் எல்லொரும் எற்றப்பட்டோம் விரைவான பரிசோதனைகள் முடித்து ஒவ்வொருத்தருக்கும் இரு உடையே
அனுமதி! நம்மிடம் இருப்பது எப்போதும் இரண்டு சோடிதான்!...
.....

வாகன தொடரனி பாதுகாப்பு வழங்க உருமறைக்கப்பட்ட வாகனத்தில்  பயணமானோம்!
கேதீஸ்வரம் பாடல் பெற்ற தலம் ஞான சம்பந்தர் " நத்தார்படை  ஞானன் பசு.....
..என்ற தேவாரம் வாகனத்தில் அமைதியாக.
ஒலித்து  விரைவான  வேகத்தின் ஊடே கேதீஸ்வரரிடம் 3ம் சாமப்பூசைக்கான மணியடிகும் போது நாங்களும் இறக்கிவிடப்பட்டோம்,!
.....தொடரும்

2 comments :

♔ம.தி.சுதா♔ said...

////நிரந்தர,தற்காலிக,3மாதம்,ஒரு வாரம்,ஒரு நாள், என்ற அட்டவணைக்கு ஏற்ப இரானுவம் செயல்படுத்தும் அனுமதிப்பத்திரத்திற்கு வரிசையில் காத்திருக்கனும் /////

எனக்க 8 வயதிலேயே இதை சொல்லித் தான் சாகடிச்சாங்க சகோ... உண்மையில் எனக்கு சிவராத்திரி தினத்தில் போவதை விட ஒரு சாதாரண நாளில் போவதே அதிக விருப்பம்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Nesan said...

நன்றி உங்கள் பின்னுட்டத்திற்கும் வருகைக்கும் இப்போது சிறப்பான நாளில் போவதைவிட மற்றைய நாளில் போனால் இன்னும் அமைதியாக தரிசனம் செய்யமுடியும் என நினைக்கிரேன் நாங்கள் இனி எப்போது தரிசிப்போமோ!