22 April 2011

காற்றில் கலந்தது தொலைந்துவிட்டது!

நம்மவர் இசை,பாடல் என்றாள் என்ன வென்று தெரியாத ஓரு தலைமுறை எங்களுடன் பயணிக்கிறார்கள் .அவர்களுக்கு யுவன்சங்கர்,ரகுமான் தெரிகிறது ஆனால் முற்றத்து மல்லிகை வாசம் தெரியாத கடதாசிப்பூக்களை மலர் என்று பூசிக்கும் இயந்திர உள்ளங்கள்..

மெல்லிசையில் நம்மவர்கள் சிகரம் தொட்டவர்கள் .தேசம் அமைதியாக இருந்திருந்தால் !நமக்கு நல்ல இசைமுகவரி கிடைத்திருக்கும்.பிறர் தயவில் தாலாட்டுப்பாடியிருக்கமாட்டோம்!
"..சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் " 
என்ற பாடல் என்னுடன் பலகாலம் பாடல் புத்தகமாக இருந்தது.முகவரி இழந்த நண்பன் போல் எங்கோ தவரிவிட்டது. என்றாளும் அதன் நாதம் காதில் ஒலிக்கிறது. 
..இப்பாடல் மு.மதிவதனன் கற்பனைக்கு திருமலை பத்மநாதன் இசை மீட்ட இலங்கை வானொலி மெல்லிசை பாடல் நிகழ்ச்சி  அறிமுகப் படுத்திய பாடகர் N.கிருஸ்ணன் அடி எடுத்துக்கொடுக்க பின்னால் நம்குயில் கலாவதி சின்னச்சாமி சேர்ந்து ஆலாபனையுடன் சுருதி சேர்க்கும் போது தனிப்போட்டியே நடக்கும். 
..
இந்தப்பாடலை என் தந்தை அடிக்கடி முனுமுனுப்பார் அவருடன் சேர்ந்து நானும் தலையாட்டும் போது தந்தையின் கனிவு என்னை உச்சிமோர்ந்து  பாசம் பொழியும் வானொலியுடன் கழித்த நாட்களில் பிடித்த அறிவிப்பாளர் k.ஜெய்கிருஸ்ணா (இவரைப்பற்றி பின்னாலில் பதிவு செய்வேன்) என் விருப்பம் நிகழ்ச்சியில் இப்பாடலை ஒலிக்க விடுவார் .
.. 
கலாவதியுடன் கிருஸ்ணன் இதைப்பாடும் சரணத்தில் "" துள்ளிவரும் மானை அள்ளி" என்றபின் வரும் ஹம்மிங்  ஒரு பரவச நிலை அதேபோல் "பள்ளத்தில் வீழும் வெள்ளத்தினை" ஆணின் உச்சஸ்தாயில் பெண்குரல் கலாவதி செய்யும் ஹம்மிங் இன்னொரு உற்சாக  பாணம்....

எத்தனை பாடல்கள் கேட்டாலும் சில பாடல்கள் கண்கட்டிய குதிரைபோல் சிலபாடலின் பின் தான் செல்கிறது எத்தனை வானொலி வந்தாலும் இன்னும் தாய்வானொலி  இலங்கை ஒலிபரப்பே மெல்லிசைக்கு தாய் வீடு...
புதியவர்களுக்கு நாம் இப்பாடல்களை இறுவட்டுக்களாக கொடுக்கனும் ஆனால் இப்பாடல்கள் இறுவட்டுக்களாக வந்திருக்குமா?புலத்தில் இதை தேடுகிறேன் 
என் தாகத்திற்கு இன்னும் தருணம் வரவில்லை   தாயக உள்ளங்களே !எங்கள் மெல்லிசை பொக்கிஸங்களை வலையேற்றுங்களேன்!

2 comments :

Nesan said...

ஹேமா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"காற்றில் கலந்தது தொலைந்துவிட்டது!":

நேசன்...தேடல்கள் அருமை.
ஆதங்கம்.நீங்கள் பிரான்ஸில் இருப்பதால் I.B.C , I.L.C கேட்பீர்களானல் சிலநேரங்களில் ஈழத்து மெல்லிசை கேட்கக்கூடியதாக இருக்கிறது.தாசீசியஸ் அவர்களில்ன் வானொலியிலும் கேட்டிருக்கிறேன்.
சரியான நேரம் சொல்லத் தெரியவில்லை.எனக்கும் பழைய சில பாடல்கள் பிடிக்கும்.இனிக் கவனித்தால் கட்டாயம் சொல்கிறேன்!

பதிவு எழுதிவிட்டுத் திரும்பவும் எழுத்துக்களைச் சரிப்பார்த்துக்கொள்ளுங்கோ ஒருக்கா !

வெளியிடு
நீக்கு
ஸ்பேம் என குறி

இந்த வலைப்பதிவின் கருத்துரைகளை மதிப்பாய்வு செய்யவும்.

22 ஏப்ரல், 2011 2:06 pm அன்று நேசன் -கலைசிவா இல் ஹேமா ஆல் உள்ளிடப்பட்டது

Nesan said...

நன்றி தோழி  ஹேமா  உங்கள் கருத்துக்கு!தவறு நடந்துவிட்டது மன்னிக்கவும் மீண்டும் முயற்ச்சிக்கிறேன் திருத்துவதற்கு!