06 April 2011

Tirumpippargiran-6

மலேசியா போனதும் எங்கள் முகவர் மறுநாள் வந்தார் தமிழ்சினிமாவில் வில்லனின் அடியாள் போல் வாட்டசாட்டமான உருவம் பாதிதமிழும் மீதி மலாய் மொழியும் கலந்து பேசினார் தான் மற்றவர்கள் போல் இல்லை உங்களை விரைவில் சேரவேண்டிய  இடத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார் இதைத்தானே எல்லா முகவர்களும் தவறாமல் உரைக்கும் வாசகம்.  எங்கள் (15)அனைவரையும் அவரின் காரிலும் அவர் நண்பர் காரிலும்  ஏற்றுக்கொண்டு நீண்ட சாலையில் பயனித்தார்  மனதில் சற்று அமைதி குடிகொண்டது எப்படியும் போய்ச்சேரனும் என்று என்குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே மலேசியாவின் சாலையை நோட்டமிட்டேன் நீண்ட அழகிய வேலைப்பாடும் அகலாமான நீளமான ஓரே தடைவையில் இரண்டு  பக்கமும்  5வாகணம் போகக்கூடிய விசாலமான இடம் அமைதியாக வாகணங்கள் போய்க்கொண்டிருந்தது இங்கு நான் பார்த்த இன்னொரு அம்சம் சாலையை கடந்து செல்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இலங்கையில் இது நான் அறிந்ததில்லை. உயர்ந்த கட்டிடங்கள் எங்கள் தேசம் போல் இரானுவ தடைகள் முகமறைப்புகள் கானவில்லை. 
-/...................       நீண்ட பயணத்தின் பிறகு நாங்கள் (15)  பேரும் தொடர்மாடி கட்டிடத்தை தாண்டி அந்த முகவர் போகும் வழியூடாக நாங்களும் எங்கள் மூட்டை முடிச்சுக்களுடன்  பின் தொடர்ந்து 5வது மாடியில் இறங்கினோம்.
......அழகான வேலைப்பாடு உடைய 5 அறைகள் கொண்ட தொடர்மாடி வீடு அது எங்களை உள்வாங்கிக்கொண்டது.   கொழும்பில் இதை பார்திருக்கிறேன் அதனால் எனக்கு வியப்பில்லை நண்பர்கள் தனிவீடுகளில் வாழ்ந்தவர்கள் சிலர் முதல்முறையாக பார்ப்பதால் அதிசமாக பார்த்தார்கள். எங்கள் முகவர்  எங்களுடன்    
நாட்டுச்சுழ்நிலையை  கேட்டு அறிந்து கொண்டார் அவரின் நண்பர் எங்களுக்கு சூடாக தேனீர் தந்தார் அது எங்களுக்கு தேவையானதாக இருந்தது பயணக்களைப்பில் இருந்ததால்.
மீண்டும் முகம்கழுவிக்கொண்டு எங்களில் 5பேரை  தன்னுடன்   வரும்படி கூறினார் சாப்பாட்டுச்சாமான் வாங்கித்தருவதாகவும் எல்லாரும் சேர்ந்து சமைத்து சாப்பிடச்சொன்னார்.  நண்பர்கள் யாரும் வீட்டில்  குசுனிப்பக்கம் போனவர்கள் கிடையாது என்பதை அவர்களின் முக அசைவில்  தெரிந்து கொண்டேன். என்னுடன் மற்றவர்கள் வந்தார்கள் அந்த முகவருடன் நாமும் இனைந்து  குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடியில் நுழைந்து தேவையானவற்றை    வாங்கிக்கொண்டு வரும் வழியில் எங்களை  
புகைப்படம்  எடுக்கும் படி அறிவுத்த இது என்ன ரானுவ தலையாட்டியின் மறுவடிவமோ என ஓருகணம் சிந்தனை சலசலத்தது.புகைப்படம் எடுத்தோம் இந்த இடத்தில் ஆங்கிலமொழியின் அவசியத்தை கூறியாக வேண்டும் நண்பர்கள் பலருக்கு தமிழைத்தவிர பிறமொழித்தகராறு அதனால்தான் இங்கே என்னை முதன்மையாக்கிறேன்.

2 comments :

நிரூபன் said...

பயண அனுபவங்களையும் சுவை பட எழுதுகிறீர்கள். எனது ஒரு நண்பனுக்கும் ஒரு ஏஜென்சி, இந்தா, ஏத்துறேன், நாளை ஏத்துறேன் என்று சொல்லி ஆறேழு மாதம் மலேசியாவில் வைத்து ஏமாற்றியிருக்கிறார். அவர் கொண்டு போன காசெல்லாம் முடிந்த நிலையில் ஊர் திரும்பி வந்து விட்டார்.

ஊர் திரும்ப முன்னர் ஒரு நாள் என் நண்பர் தன் அறையினுள் இருந்து பாடினாராம்
‘’அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா....

அதனைக் கேட்டு, புல் மப்பில் இருந்த ஏஜென்ஸி பாடத் தொடங்கினாராம்..
‘’உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்....

அந்த நண்பர் இதனை அடிக்கடி சொல்லிச் சொல்லி சிரித்துக் கொள்வார்.

நிரூபன் said...

அடுத்த பாகத்தில் பயணம் போகிற காட்சிகள் விரியும் என நினைக்கிறேன். இப்போதே அடுத்த பாகத்திற்கு வருகிறேன்.

புகைப்படம் எடுக்க இராணுவ தலையாட்டி போல அழைத்தார் எனும் உவமை.....
நன்றாக இருக்கிறது.