25 May 2011

கேட்டாளே ஒரு கேள்வி!!!

 நீண்டகாலத்தின் பின்பு நேற்று என்னுடன் முன்னர் வேலை செய்த பிரென்ஸ்சுக்காரி பின்னிரவில் சாப்பிட என் வேலைத்தளத்திற்கு வந்தாள்.


 சாப்பாட்டுக்கடையில் பிறகு எதற்கு பின்னிரவில் வருவாள் என்று குதர்க்கேள்வி  வேண்டாம்! குடிக்கவும் ஆடவும் வசதியுண்டு!
  என்னக்கும் நேற்று அதிகம் வேலையில்லை .என்னுடன் பலவிடயங்கள் கதைத்துக் கொண்டிருந்தாள் .இந்த 4 வருடங்களில் என் வாழ்வில் பலமாற்றங்கள் நடந்து முடிந்துவிட்டது என்றேன்!
 முக்கியமாக கலியாணம் செய்ததைக் கூறும்போது நீ மிகவும் இனவாதி என்றாள் (அவர்களில் சிலர்  நமது கலாச்சாரம் ,சம்பிரதாயங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை )இங்கே எத்தனையோ பெண்களில் ஒருத்தியை பார்க்காமல் உன்நாட்டில் கலியாணம் ஏன் கட்டினாய் என்றாள் !. ஏன் ஒருவருடத்தில் விவாகரத்து  எடுக்கனுமா? என்றேன் நீ ஒருநாளும் திருந்தமாட்டாய் இவளும்  இப்படித்தான் என்னைச் சொல்லுகிறாள் '!மனதுக்குள் திட்டிக்கொண்டேன்.

நீ எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய் ?என்றேன்!  புதிய இடத்தில் வேலை மெதுவாகப் போகின்றது தன் காதலன் தான் கொஞ்சம் மோசம் என்றாள் !

இருக்காதே .!அவன் நல்லவன் என்றேன் !நானும் அவனும் இந்த வேலையில் 3வருடங்கள் ஓன்றாக பணியாற்றினோம் .அவன் போனதன் பின்பே நான் அந்தப் பதவியில் இருக்கின்றேன் .

அவனிடம் எல்லாம் பிடிக்கும் எனக்கு .ஆனாலும் அவனிடம் அதிக பொறுமையும்,இறுதி நேரத்தில் புகை ஊதும் பழக்கத்தாலும்  மேலதிகமாக நேரம் பணி நீண்டுபோய்விடும்  அதனால் நான் ரயிலை தவறவிடும்  அவலம் சில நாட்களில் ஏற்பட்டது .அதன் பிறகு நானும் கருத்து வேறுபாடு கொண்டு இருக்கும் போது அவனும் அதிக சம்பளம் என்று கூறி வேறு இடத்திற்கு சென்று விட்டான். இருந்தாலும் இடைக்கிடை தொலைபேசியில் கலாய்ப்பான்!  

களியாட்ட  விடுதிக்கு (டிஸ்கோத்தைக்)போகுபோது மறக்காமல் எனக்கு ஊசுப்பேத்துவான். நீ வா நான் காசு கொடுக்கிறேன் .என் நண்பிகளை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்  .வாழ்க்கையை அனுபவி .என்று  இந்தப் பச்சப்புள்ள கெட்டுபோக வழி சொல்லும் அளவிற்கு நல்லவன்! சிலகாலத்திற்கு முன் களவாடப் பட்ட என் கைபேசி போனதுடன் அவனின் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

இங்கு ஆண்கள் பெண்கள் எல்லாவற்றையும் ஒழிக்காமல் பேசுவதால் சிலவேளையில் சங்கடமான தருங்களில்  நான் ஒன்றும் கூறுவதில்லை  பள்ளிக்கூடம் விட்டால் மதில் மேல் ஏறி இருந்தால் மாமா சொல்லுவார் தம்பி கோழி மேய்த்தாலும் கோபுர மெந்தையில் மேய்க்கனும் என்று பிறகு எப்படி நாங்கள் தெரிந்து கொள்வது அர்த்தங்களை!

ஏன் அவனுடன் கருத்துமோதல் என்றேன்!  எனக்கு குழந்தை வேணும் பலகாலமாக சொல்லிப்பார்த்திட்டன் காலம் கடத்துரான் !நான் அவனைப் பிரியப் போறன் என்றாள் ஒரு போத்தல் வைன் உள்ளே போனதன் பின்பு !அடிப்பாவி மூன்றாம் பேர்வழி என்னிடம் உள்வீட்டு விவகாரத்தை சொல்லும் இவளுக்கு நான் என்ன தீர்வை கூறுவது.

சிவா என் பெயரை  அவள் கூப்பிடும் அழகு ஒரு வித்தியாசமானது( உண்மை நம்புங்கோ) நீயே சொல்லு எங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு  இரைட்டைப் பிள்ளை பொறக்கப் போகுது .இந்த வயசிலும் அவர்(தொடர்ந்து கூறியது ஆபாசமானது)  எப்படி இருக்கிறார் .இந்த விசயம் எல்லாம் உனக்குத் தெரியாதா ?  என்ற நமீத்தாவின் தங்கையிடம் (கானும் யாரையும் மச்சான் என்பாள் இவளும்) தப்புவதற்கு இடையில் தொண்டமானாறுவில் தீர்த்தம் ஆடி வந்துவிடுவன்!
 உனக்கு என்ன சாப்பாடு தயார் செய்ய என்று கதைப்போக்கை மாற்ற நினைத்தேன். அவளின் வைன் போத்தல் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது .உனக்கு எப்பவும் அவசரம்  .இல்லாடாச் செல்லம்( இப்படிச் சொன்னால் அவள் சிரிப்பில்  ஹாசினி தோற்றுவிடுவாள் அட பாய்ஸ் படம் பார்த்து வந்த வினை).


என் நேரம் முடியுது உனக்கு சாப்பாடு வேனுமா?  சிவா உனக்கு என் மேல் அன்பு இல்லையா?உள்ளே போன வைன் பேசுகிறது. அடிப்பாவி !மனிசி நாட்டில் இருக்கிறாள் நான் அன்பு வைக்க.  உன் மேல் அன்பு  வைத்தால் என் குடும்பத்தில் அனுமான் அன்று இட்ட தீ போல் ஆகிவிடும் என் வாழ்வு. என்ன ஜோசிக்கிறாய் இல்ல நாங்கள் பணங்காட்டு நரிகள் பிரென்ஸ்சுக்காரியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டம்!

 ஆத்தாடி இவள் இன்று எனக்கு அலுப்புக்கொடுக்க வந்திட்டாளே! உன் காதலன் கைபேசி இலக்கம் சொல்லு நான் கதைக்கிறன் என்ற பின் அமைதியானாள்!
எனக்குப் பசியில்லை என்றாள் எனக்கும் சுகமாப்போச்சு  வேலையில்லை முதலாளியிடம் நான் போகிறேன் என்றேன் .
அவனுக்கும் இவளின் அறுவை தாங்க முடியவில்லை.  உன்னுடைய செல்லத்தைக் கூட்டிக் கொண்டு போ ! இங்கு வேலைத்தளங்களில் அதிகமாக ஆபாசம் பேசப்படும். அதன் பின் எடுதேன் ஓட்டம் ரயிலைப் பிடிக்க  கிழக்கே போகும் ரயில் வரும் நேரம் பின் இரவு 1.10 நிமிடம். 

15 comments :

நிரூபன் said...

நீண்டகாலத்தின் பின்பு நேற்று என்னுடன் முன்னர் வேலை செய்த பிரென்ஸ்சுக்காரி பின்னிரவில் சாப்பிட என் வேலைத்தளத்திற்கு வந்தாள்.//

பாஸ் கனவிலையா இல்லை, நிஜமாகவா...
ஆஹா..நடக்கட்டும், நடக்கட்டும்!

நிரூபன் said...

யோ
மாப்பிளை
தமிழ் மணத்தில்
இணைக்க முதல்
21+++
நீக்கய்யா
தமிழ் மணத்தின்
புதிய விதிப்படி
21+++
எல்லாம் சேர்க்க மாட்டாங்க
18+++
ம் உம் சேர்க்க மாட்டாங்க

நிரூபன் said...

சாப்பாட்டுக்கடையில் பிறகு எதற்கு பின்னிரவில் வருவாள் என்று குதர்க்கேள்வி வேண்டாம்! குடிக்கவும் ஆடவும் வசதியுண்டு//

இப்பிடிச் சொன்னாப் பிறகு குறுக்கு கேள்வி கேட்க நாம என்ன சின்னப் பசங்களா பாஸ்..

நிரூபன் said...

தன் காதலன் தான் கொஞ்சம் மோசம் என்றாள்!//

அவ்...அவ்...
இதிலை இரட்டை அர்த்தம் இருக்குமே என்று எண்ணிக் கொண்டு கீழே படித்தால், கவிழ்த்திட்டீங்களே சகோ.

நிரூபன் said...

இந்தப் பச்சப்புள்ள கெட்டுபோக வழி சொல்லும் அளவிற்கு நல்லவன்!//

இதை நாம நம்பணுமா சகோ. இல்ல நம்பித்தான் ஆகணுமா. சாட்சிக்கு ஓட்ட வடையைத் தான் அழைக்கனும்..
அவ்....

நிரூபன் said...

சுவாரசியமான சம்பவமாக, வெளி நாட்டு விடயத்தினை எங்களோடு பகிர்ந்திருக்கிறீர்கள். பதிவு அருமை சகோ.
எழுத்து நடையும் சிறப்பு. ஆனால் எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் திருத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோ.

Nesan said...

சில வேலைத்தளங்களில் தங்கும் வசதியுண்டு  ஆனால் வேறு வேலை செய்யமுடியாது அதனால் தான் குதர் கேள்வி கேட்கவேண்டாம் என்றேன்!

Nesan said...

நீண்ட வருடங்கள் தாய்மொழியை எழுதவில்லை அதனால்தான் இந்தப் பிழைகள் வருகிறது முடிந்தளவு முயற்ச்சிக்கிறேன் திருத்திக்கொள்ள!

Nesan said...

கனவு இல்லை அவளுடன் நான் இங்கு வந்த ஆரம்பத்தில்2 வருடங்கள் வேலை செய்தேன் இப்போது பிறமாவட்டம் போய்விட்டாள்!நிரு!

Nesan said...

கெட்டுப்போகலாம் ஆனால்  வலிகளை தாங்கிவந்தவர்கள் இப்படி பாதை மாறிப்போக மாட்டினம்.மாறிப்போவதால்தான் ஏற்படும் விளைவுகள் குழுமோதல்கள் இதை அழகாக இக்பால் செல்வம் தனது பதிவில் கூறியுள்ளார். பாரிஸ் ஊடகங்கள் ஜனவரியில் இதை அதிகமாக கூறியுள்ளது!நண்பரே!

மைந்தன் சிவா said...

ஹிஹிஹி சுவாரசியம் பாஸ்..ரசித்தேன்...
இன்று முக்கிய பரீட்ச்சை..அதனால் இத்துடன் ஜூட்டு

Nesan said...

வருகைக்கு நன்றி பரீட்ச்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல வேடிக்கையான பதிவு நேசன்..... கொஞ்சம் பார்த்து கவனமாகவே இருந்துகொள்ளுங்கள் :) இப்படி கவனம் கலைக்கும் மோகினிகள் எங்குமே உண்டு :)))))

Nesan said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கு எந்த மோகினியும் இந்த தனிமரமிடம் கிட்டவராது!

ஹேமா said...

நேசன்...இந்தப் பதிவுக்கு நேற்று இரவே பின்னூட்டம் போட்ட ஞாபகம்.வராம போச்சா ?