14 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-3

நாங்கள் எல்லாரும் நண்பரின் காரில் ஏறினோம் 6 பேரையும் சுமந்து கொண்டு போய் நின்ற இடம்  கொழும்பு -12 ஜயும் மருதானையையும் இனைக்கும் மையப்புள்ளியான ஒல்கோட் மாவத்தையின் பின் புறவழியில் உள்ள சுவையான நட்சத்திர ஹோட்டலின் முகப்பில்!..

என் சகோதரமொழி நண்பர்கள் ஏதாவது தாகம் தீர்ப்பம் என்றார்கள் .இன்று என் பணம் காலி என்று உணர்ந்து கொண்டேன்.
அவர்களுக்கு நன்கு தெரியும் நான் மது அருந்துவதில்லை இருக்கும் சுவையூட்டிகளை முடித்து விடுவேன் என்பதுடன் எவ்வளவு அவர்கள் நிதானம் தவறினாலும் அவர்களின் இருப்பிடம் சேர்க்காமல் அகலமாட்டேன் என்று.
..
அன்றும் அப்படி என்னத்தில் தான் நானும் வாகணத்தை சரிபார்த்துவிட்டு அவர்கள் முன் செல்ல நானும் பின் தொடர்ந்தேன்.
நண்பர்கள் எல்லாரும் கடந்தவார செயல்பாடுகள், பிழைகள் , மாதமுடிவில் செய்ய வேண்டிய  நிர்வாக வேலைகளை எல்லாம் சாவாகாசமாக அலவலாவிய வண்ணம் அதிகமாக மதுவை சுவைத்தனர்.
..
நேரம் அதிகமாக நண்பர்களை  சாப்பிடும் படி வற்புறுத்தினேன் உண்மையில் எனக்குத்தான் அதிக பசி அவர்களுக்கும் சேர்த்து கொத்துப்பராட்டாவும் கோழிக்கறியும் தரும்படி கூறினேன் .பரிமாறுவரிடம் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் நிதானம் இல்லை விரைவில் போகனும் என்றேன் அவரும் கடைமூடும் நேரம் என்றுகொண்டே விரைந்து செயல்பட்டார்.
..
ஒருவாறு எழுப்பிக் கொண்டு வெளியில் வந்தால் மூவர் அதிகமாக மதுவுண்டதால் 
நிதானம் இல்லாமல் பாடிக்கொண்டு வர நான் காரை ஓட்டுகிறேன் என்ற போது சகோதரமொழி நண்பர் அடம்பிடித்து தான் செலுத்துவதாக கூற நானும் பாதுகாப்பு நிமித்தம் சரி ஓட்டும் என்று முன்னால் அருகில் ஏறி இருந்தேன் .கொஞ்சத்தூரம் போனால் முன்னால் பாதுகாப்பு சோதனைச்சாவடி நண்பரிடம் இடம் மாறியிரு என்றேன் .!அவனும் அசட்டை செய்யாமல் சோதனைச் சாவடியில் இடித்துவிட்டான்.!

இடித்ததும் இல்லாமல் காவலில் இருந்த இரானுவவீரன் கேள்விக்கு  அவதூறாக பதில் கூறிவிட்டான்!

சகோதரமொழி நண்பரிடம் பலமுறைகூறியிருந்தேன் !சிலவார்த்தைப் பிரயோகங்களை திருத்திக் கொள் என்று .அவன் வாழ்ந்த கொலன்னாவ வட்டாரத்தில்
மூன்றாம் தரமான வார்த்தைகள் மிகசர்வசாதாரனம். அவற்றை இங்கு எழுவது தரமற்றது.
.. தொடரும்!

7 comments :

ஹேமா said...

நேசன்....தொடருங்கள்.நிறைய எழுத்துப் பிழைகள்.
கவனிச்சுக்கொள்ளுங்கோ !

நிரூபன் said...

அவர்களுக்கு நன்கு தெரியும் நான் மது அருந்துவதில்லை //

சைட் கப்பில் புகுந்து விளையாடுறீங்களே...அவ்...

நிரூபன் said...

சுவாரசியமாக, இசை நிகழ்ச்சி பார்த்த அனுபவங்களை எழுதிக் கொண்டு செல்கிறீர்கள் சகோ.
இன்று இரவு மிகுதிப் பின்னூட்டங்களோடு வாறேன்.
ப்ளீஸ்...புரிந்து கொள்க.

Nesan said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கு முடிந்தளவு எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன் !.

Nesan said...

நன்றி சகோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்!

நிரூபன் said...

தமிழர்கள் என்றால், காரணம் தேவையில்லையே...

எப்படியாவது உள்ளே தள்ளலாம் எனும் நோக்கோடு தான் இவர்கள் அலைவார்கள்..

Nesan said...

அவர்களுக்கு அப்படி ஒரு பார்வையை உருவாக்கிய அந்த இனவாதிகளைத் தான் ஆட்சியில் அமர்வதற்கு வழி செய்தது அவர்கள் சட்டம்!நிரு!