16 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-4

இரானுவவீரனுக்கு கோபம் வந்துவிட்டது !உடனே கார்சாவியை பறித்துவிட்டு தன் குணத்தைக்காட்டத் தொடங்கினான்!
..
தேசிய அடையாள அட்டை ,  வாகனப்பதிவு ,இத்தியாதிகள் தேடிக்கொண்டிருக்கும் ,போது பொலிஸ் அதிகாரியும் வந்தார் அவன் இவர்கள் தன்னிடம் அதிகமாக கதைப்பதாகவும் மரியாதை தரவில்லை என்றான் .என் நண்பனோ இன்னும் அதிகமாக சிக்கலாகினான் .சிலவார்த்தைகளை பாவித்து.
..
என்னிடம் பொலிஸ் அதிகாரி தேசிய அடையாள அட்டை கேட்டான் நான் எனது வேலைத்தள அட்டையை கொடுத்தேன் நீ (புலியா). இவன்கள் கூட ஏன் போனாய் என்று தன் கற்பனைகளை அடுக்கிக் கொண்டே போனான்.
.
பாதுகாப்பு என்ற சீருடையில்  இருக்கும் எவருமே தமிழன் என்றாள் முதலில் (புலிகள் )என்றே கேட்பான் அதிகாரம் இனவாதப் பேய்களைத்தானே ஊக்கிவிக்கிறது.எடு பொலிஸ்பதிவு என்றான் காரணம் வேலைத்தள அட்டையில் இருப்பது எல்லாம் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் பெயர்களை உச்சரிக்க சிலருக்கு முடியாது !.இன்னொன்று ஆங்கிலம் அவர்களுக்கும் வேப்பங்காய்தான் பல இடங்களில் இதை உணர்ந்து இருக்கிறேன்.!
 
என் தேசிய அடையாள அட்டை கொடுத்தாள் நான் யாழ்ப்பாணம் என்பதை இலகுவில் அறிந்துவிடுவான் .இதனால் இன்னும் சிக்கல் கூடும் என்பதால் முடிந்தளவு சாமாதானமாக கதைத்துக் கொண்டு நண்பரை இரானுவ வீரனிடம் மன்னிப்புக்கேள்  இத்துடன் முடிந்துவிடும் நான் நாளைக்கு வேலைக்குப் போகனும் என்றேன்!
..
அவனுக்கு ஏற்கனவே போதை அதிகம் !மற்றவர்கள் போகட்டும்
நீயும் அவனும் இருங்கள் என்றுவிட்டு பொலிஸ்க்காரன் உள்ளே போனான்.
நண்பர்கள் முழிசிக்கொண்டு நிற்க நாம் வருவோம் நீங்கள் காரைக்கொண்டு போங்கள் .என்று சொல்ல சகோதரமொழி நண்பனும் அமைதியாகி அவர்களிடத்தில்  ஆவனங்களை கொடுத்தான் இரானுவ வீரன் சாவியை  இவர்களிடம் கொடுத்தான். நான் அவனுக்கு நன்றி சொன்னேன் .உண்மையில் அவனுடன் சமாதானமாகத்தான் இதுவரை நான் உரையாடிக் கொண்டிருந்தேன் .பொலிஸ்காரன் தான் என்னை தவறாக நடத்துகிறான்.

.உள்ளே போனவர் வெளிவந்து எங்கள் இருவரையும்  பொலிஸ் ஜீப்பில் ஏறும்படி கூறிவிட்டு அவன் முன்னால் அமர்ந்து கொண்டான்.
எல்லாப் பாதையும் ரோமிக்கே என்பது போல் என்பயணம் பொலிஸ் காவல் வரை .
சில நிமிட ஓட்டத்தில்  கொழும்பு-12 இற்குப் பொறுப்பான காவல் நிலையத்தில்
இறங்கினோம் .எனக்கு நம்பிக்கை இனி விடுதலை ஆகலாம் என!
..
இங்கு தான் எனது பூர்வீக விபரங்கள் அடங்கிய பொலிஸ்பதிவு இருக்கிறது நான் பல இடங்கள் சென்றாலும்  இங்கு உள்ள பதிவை சரியாக புதுப்பித்து விடுவேன்!

கடவுள் உள்ளே தெரிந்த மேல் அதிகாரிவடிவில் இருந்தார் .மற்ற பொலிஸ்காரன் இவரிடம் நாங்கள் போதையில் வாகனத்தை மோதிவிட்டதாகவும் ,இரானுவவீரனை மரியாதை செய்யவில்லை என்றான் அப்படியா என்றுவிட்டு என்னருகில் வர நான் கூனிக்  குறுகி நின்றேன்.
..

என்னையும் நண்பரையும் பார்த்துவிட்டு ஏன்? என்ற பார்வைக்கு நான் நடந்ததைக்கூறி மன்னிப்புக் கேட்டேன்!
அவருக்கு மாதாமாதம் நானும் சம்பளம் கொடுக்கிறனான்.!  ஒவ்வொரு முறையும் என் பதிவு புதிப்பிக்கும் போது காணிக்கையாக பல வாசனைத்திரவியங்கள் இலவசமாக கொடுப்பதைதான் சொல்கிறேன்.
..
சரி அவங்களை அனுப்பு எனக்கு தெரிந்தவர்கள் என்றதும் பொலிஸ்காரன் முகம் கறுத்துவிட்டது.
.
கடவுளே என்று என் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வெளியில் வரும் போது 
முன்னால் என் மேலதிகாரி வந்து கொண்டிருந்தார்!
.. .... தொடரும்

4 comments :

ஹேமா said...

போலீஸ்,இராணுவம் பிடிபட்டுக் கேள்வி பதில் என்றாலே மனம் படபடப்புத்தான் !

Nesan said...

உண்மைதான் தோழி எத்தனை அவமானங்களையும் அவமரியாதையும் தாங்க வேனும் அனுபவித்தது அதிகம் .
 நன்றி உங்களின் ஆதரவுக்கு! உங்களின் அதிக பணிகளுக்கு இடையிலும்  என் பதிவுக்கு கருத்திட்டதுக்கு!

நிரூபன் said...

கட்டுரை அருமையாக இருக்கிறது, கொஞ்சம் திரிலிங்காகவும் இருக்கிறது, அடுத்த பாகத்தைப் படிப்பதற்காக காத்திருக்கிறேன்.

நிரூபன் said...

http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

சகோ, இந்த இணைப்பில் சென்றால், தமிழிஸ் தமிழ் மணம், முதலிய தளங்களில் உங்கள் பதிவினை இணைப்பது தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.