17 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-5

எனது மேலதிகாரி உண்மையில் கடமையில் ஒரு சூறப்புலி .அவரிடம் பலர் நொந்து நூடில்ஸ் ஆனவர்கள் .எனக்கும் அவருக்குமான உறவு ஒரு தகப்பன் மகனுக்கான நிலையில் எப்போதும் அவர் வீட்டின் சாப்பாட்டு மேசையில் உரிமையுடன் அமரக்கூடியதாக இருந்தது ..அவரின் தாயார் சமைக்கும் அந்த பலாக்காய்க்கறிக்கு எந்த மாத்தறை ஹோட்டல் சாப்பாடும் ஈடாகாது!
..
எனது நண்பர்கள் நாம் பொலிஸ் வண்டியில் ஏற்றப்பட்டதும் அவருக்கு உடனடியாக கைபேசியில் தொடர்பு கொண்டு எங்களை மீட்கும் படி கூறியதால் அவரும் பின்னிரவுப் பொழுதிலும் நித்திரைக்கு கூட விடைகொடுத்து எங்களைத் தேடிவந்தது அவரின் இனவாதப் பார்வையைத் தாண்டிய கடமையுணர்ச்சியில்!பாசப் பினைப்பில்!
..
வந்தவர் நாங்கள் வெளிவருவதைக் கண்டதும் சிறிது புன்னகையூடே நீ ஏண்டா இவனுடன் போனாய்? உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கிறன் இவனுடன் பார்களுக்கு போக வேண்டாம் என்று!
சரி ஏறுங்கள் என் காரில் என்றதும் ஏறிக்கொண்டோம் !அவரே காரை நண்பரின் வீடுவரை செலுத்தியவர் அவனை இறக்கிவிட்டார். நானும் விடைபெற்றேன் அவனிடம். .பலமுறை மன்னிப்பு கோரினான் எங்களிடம். இப்போது போதை தெளிந்து விட்டது அல்லவா!
..
என்னை தன்னுடன் வீடுவரை வரும்படி கூற நானும் மீறமுடியாமல் பின் செண்றேன் .என் இருப்பிடம் இப்போது போனால் என் வீட்டுக்கு  பலபக்க குற்றச்சாட்டுடன் என்னைப் பற்றி என் சிறிய தந்தை நல்ல தகவல்களை தொலைபேசியில் கூறுவார் .இதில் இருந்து தப்புவதற்கு நல்லவாய்ப்பு!
..
இரவு நேரவானொலியில் இனிமையான ஹிந்திப் பாடல்களை சிரச  ஒலிபரப்பிக் கொண்டிருந்தது!
"சிவா நான் பயந்து வந்ததே உன்னக்காகத்தான் .உன்னை பூசாவிலோ , பொல்கொடவாவியிலோ தேடும் நிலை உன் குடும்பத்துக்கு வரக்கூடாது .நாட்டு நிலமை புரியாமல் இப்படி நடக்கலாமா என்ற அவரின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் அமைதிதான் .!
..
இல்லை சேர் நானும் இப்படிவரும் என்று எதிர்பார்க்கல. பழி ஒரு இடம் பாவம் ஒருஇடம் என நினைத்துக் கொண்டேன்!
அவரின் வேகமான கார் ஓட்டம் ஊடே நீ இன்று வேலை செய்யல ஏன் என்ற போது என் தில்லுமுள்ளு தெரிந்துவிட்டார் என்பது
புலனாகியது!
..
உண்மையில் நான் வேலை செய்வதாக என் முன் திட்டமிடல் அறிக்கையில் நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்தேன் சிறப்பு நாள் எனக்கில்லை நானோ இந்து .எனவே வேலை செய்வதற்கு  நினைத்திருந்தேன். கொழும்பு வாழ்க்கை நகர வாழ்க்கை .நரக வாழ்க்கை. பணம் போகும் வழி தெரியாது தொட்டதிற்கு எல்லாம் பணம் தேவை அடிப்படையில். என் பொருளாதாரமும் நாட்டைப்போல் ஆதால பாதளத்தில் போய்க்கொண்டிருந்தது.
.
இதனால் ஒரு நாள் விடுமுறை போதும் என்ற நிலையில் முன் திட்டமிடலில் அவரிடம் கொடுத்திருந்த அறிக்கை காரின் மேல் தட்டில் என்னைப் பார்த்து ஸாகிலா பட காட்சி போல் சிரித்துக் கொண்டிருந்தது  என்னை சிதறடிக்க!
..
தொடரும்...

2 comments :

மைந்தன் சிவா said...

பாஸ் உங்கட முதன்மையான ப்ளாக் எது???
அத்துடன் அடிக்கடி பதிவு போடுங்க...

Nesan said...

வருகைக்கு நன்றி .நேசன் -கலைசிவா தான் இனி எப்போதும் பதிவை தொடர இருக்கிறேன் முடிந்தளவு முயற்ச்சிக்கின்றேன்.நண்பரே நான் பாஸ் கிடையாது சாதாரன ஏதிலி!