24 May 2011

 ஜாலியான சமையல் நண்பர்களுடன்!

நீண்ட நாளாக தனியாக சமைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமரத்திடம் என்ன சமையல் நீங்க செய்வீர்கள் என்று புலத்தில் இருந்து கேள்வி வந்தது?  என்னடா இப்படி எல்லாம் ஜோசிப்பாங்களா !என மதியிடம் தொடர்பு கொண்டேன் !
கொஞ்சம் பொறுங்க மதி   என் மேலதிகாரி! நீங்க தப்பாக மதிசுதாவிடம் போய்விடாதீர்கள்! அவர்பாவம்  மிகவும் வடைகிடைக்கிது இல்லை என்று கடுப்பில் இருக்கிறார்!
 அவர் சொன்னதை அவருக்குத் தெரியாமல் வலையில்  இடுகிறேன் உலையில் போடுவது நீங்கள் தான்!
  ஸ்பையின் சோறு(riz espagnol)
......,,,
தேவையான மூலப் பொருள்கள்
 1   கிலோ முத்துக்கருப்பன் வெள்ளைப் புழுங்கள் அரிசி.
 3 குடைமிளகாய் சிவப்பு
3குடைமிளகாய் பச்சை 
3குடைமிளகாய் மஞ்சல்

5 பெரிய வெங்காயம் (தேவை அதிகம் என்றாள் வாஜ்பாயிடம் கேளுங்கள்) 
 1 ..தேக்கரண்டி  மஞ்சல் தூள் (தேக்கரண்டி மதிசுதா தம்பியிடம் அதிகமாக கிடைக்குதாம் கொசுறு தகவல் )
200 grame பதப்படுத்திய பண்டி இறைச்சி (கொஞ்சம் பொறுங்கோ பரந்தனுக்குப் போட்டுவாரன்,  நித்தியண்ணாவின் பாடல் வருகிறது காற்றில்! கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! அண்ணா நான் நல்ல பொடியன் இறைச்சிக்குத்தான் போறன்)!
 3   தேக்கரண்டி ஒலிவ் எண்ணை (கூடினால் கொலஸ்ரோல் வருமாம் நிசமா தோழி ஹோமா!)
       
........செய்முறை -: 
                 
     அகண்ட சோற்றுப் பானையை அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடேறியதும் ஒலிவ் எண்ணையை ஊற்றுங்கள் பானையுள் .அடுப்பில் அல்ல .பின் சிறுக வெட்டிய வெங்காயத்தை கலக்கவும் அதன் பின் குடைமிளகாயை சிறுதுண்டுகளாக வெட்டியதையும் கலக்கவும். அத்துடன்  அரிசியையும்  சேர்க்கவும் .பின்  பண்டி இறைச்சியையும் கலந்துவிட்டு இறுதியாக அரிசிப்பானையில் அரிசியின் அளவில் 2 இஞ்சியளவு உயரமாகுமாறு  பச்சைத் தண்ணீரில் மஞ்சலை கலக்கிவிட்டு  சோற்றுப் பானையுள் ஊற்றிவிட்டு மெல்லிய  சூட்டில் 45 நிமிடங்கள் அவியவிடவும் .(ஓட்டைவடை நாராயணனுக்கு நாதஸ்வரம் தொடர் நாடகத்தின் ஒரு அங்கத்தை நிம்மதியாக பார்த்துவிட்டு வலையில் ஒரு லிங்கை கொடுக்கலாம்) பின் நீங்கள் விரும்பிய வண்ணம் அவித்த மீனுடனோ! பொறித்த இறைச்சியுடனோ சாப்பிட்டு ருசியுங்கள் ! 

இதற்குப் பெயர்தான் ஸ்பானிஸ் நாட்டு 
சோறு என்று சொல்லுவார்கள் பாரிஸ் நண்பர்கள்( மைந்தன் சிவா இதைத்தானே மதியம் கல்கிஸ்சை லயன் பப்பில்  கோழிப்புரியானி என்று சாப்பிடுவதாக ஒரு செய்தியை இலியானா  எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் இன்று அதிகாலையில். இன்னொரு பிரதியை நிரூபனுக்கும் அனுப்பியதாக கூறியிருந்தார் இன்று இரவு இதை விசாரிக்கனும் நிரூபனிடம்). 

இதுதான் எங்கள் சிறப்பான சாப்பாடு வீடுவரை வினியோகம் செய்வோம் அதற்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு முந்துங்கள் திஹார் ஜெயில் அடுத்த இலக்கம் 10 எனக்கு வேண்டாம் மனோ அண்ணா!

10 comments :

ஹேமா said...

சரியாப்போச்சு....சமையல் ஆர்வத்தில என் பெயரே மாறிப்போச்சா.

பெயரைப் பார்க்கத்தான் நல்ல வடிவு.இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தானே நாக்கே செத்துப்போய்க் கிடக்கு.
உறைப்பா புளிப்பா எதையும் சொல்லுவம் எண்டில்லை.இதில கொலஸ்ரோல் எங்க இருக்கு நேசன்...!

Nesan said...

மன்னித்துவிடுங்கள் தோழி தவறு நடந்துவிட்டது! அவசரத்தில் பதிவை எழுதி  வலையேற்றிவிட்டேன் அதனை பிரதி யெடுக்கவும் இல்லை பதிவை திருத்துவதற்கு! இனிமேல் கவனமாக இருக்கின்றேன்! மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கோறுகிறேன்!
 நட்புடன் நேசன்!

மைந்தன் சிவா said...

//( மைந்தன் சிவா இதைத்தானே மதியம் கல்கிஸ்சை லயன் பப்பில் //
யோவ் லயன்ஸ் பாப்பா??எனக்கொரு பாப்பும் தெரியாது மாப்பு..
நான் ரொம்ப நல்ல பையன் ஹிஹி

மைந்தன் சிவா said...

இறுதியில் எல்லாரையும் தாளித்துவிட்டீர் போல!!
ம்ம் ஆனால் இன்ட்லியில் சமர்ப்பிக்கவில்லையா??

Nesan said...

நன்றி நண்பா உன் வருகைக்கும் கருத்துக்கும் இது ஜாலியான கலாய்ப்புத்தானே யாரையும் நோகடிக்காத ஒரு குறும்பு!

நிரூபன் said...

அடப் பாவமே, எல்லோரையும் வைச்சு கடி கடி என்று கடித்துக் குதறி விட்டீர்கள். வித்தியாசமான சிந்தனையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்திருக்கிறீர்கள். சமையல் குறிப்பும் பகிர்ந்து, எங்களையும் நாலு சாத்துச் சாத்தியுள்ளீர்கள்.

நிரூபன் said...

யாரையும் நோகடிக்காத குறும்பான சமையல். உண்மையிலே நாங்கள் இந்த ஸ்பானிஸ் சோற்றில் உள் குத்து இல்லையே, நிஜமாகவே இதனைச் சமைக்கலாம் தானே.

Nesan said...

உங்கள் வருகைக்கு நன்றி உண்மையில் இந்த சாப்பாடு சுவையானது கொஞ்சம் மினக்கேடு பிடிக்கும் சமயத்தில் அடிப்பிடிக்கும் தண்ணீர் அளவு குறைந்துவிட்டாள் இன்னொன்று  நல்ல தூக்கம் வரும் சாப்பிட்டாள்!

கார்த்தி said...

/* தேவையான மூலப் பொருள்கள்
1 கிலோ முத்துக்கருப்பன் வெள்ளைப் புழுங்கள் அரிசி. */

கட்டாயம் முத்துக்கருப்பன்தான் போடணுமா??? கஞ்சாகறுப்பு போட ஏலாதா?

Nesan said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே ! நீங்கள் சொல்லும் அரிசியில் முயற்ச்சிக்கவில்லை எனக்கு பார்சலில் அனுப்புங்கோ பிறகு வெளியில் இருந்தால் சொல்கிறன்!