20 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-இறுதிப் பகுதி!!

உண்மையில் வவுனியாவில் இருப்பிடம் எனது பணியை போர்ச்சூழ்நிலையிலும் சிறப்பாகத்தான் கொண்டு சென்று கொண்டிருந்தது. வாழ்வில் 
பலதுயரமான இடப்பெயர்வுகளைத் தாண்டி சிலகால அமைதியில் மீண்டும் ஒரு புயல்

 1999 இன் பிற்பகுதிக்காலத்தில் மறு புறத்தில் (புலிகளின் கட்டுப்பாட்டில்)இருந்து வந்த ஒரு தொலை நகல் எல்லாரையும் பலபகுதிக்கு இடம் பெயரவைத்தது. அதனூடே நானும் கொழும்பிற்கு  வீட்டாருடன் வேலையும் விட்டுவிட்டு வந்தேன் .
 அப்போது என்னுடன் இருந்த நண்பர்களில் சிலர் பலதிக்கிற்குப் போய்விட்டார்கள்.இனிய நண்பர் ,இரு தோழிகள் அன்று விடைபெற்றவர்கள் !

மீண்டும் 2003இல் எதிர்பாரத விதமாக ஒரு தோழியை  புளியங்குளம் சோதனைச்சாவடியில்  எனது பாஸ் எடுப்பதற்கு படிவம் நிரப்பிக் கொடுத்த போது வாங்கியவள் பார்வையில் இருந்தது அமைதியா  ஆத்திரமா? தெரியாது !எழுந்து சென்றுவிட்டாள் அருகில் இருந்தவளிடம் என் படிவத்தை கொடுத்துவிட்டு!

அக்கனம் மற்றவர்களை விசாரிக்காதது என் பலகீனமா தெரியாது !சிலவாரத்தில் வீட்டார் வவுனியா செல்ல நான் மட்டும் தொழில் நிமித்தம் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருந்தேன்  15 மாதங்கள் அப்படிக்கழிந்தது ! அதில் என் வேலைகளை சிறப்பாக செய்தாலும் என் வெளிநாட்டுப் பயணம் சரியாக அமையாதாலும் வவுனியா போவதில் எனக்கு உடன் பாடுகிடையாது!

மேலதிகாரியின் கட்டளையை மீறவும் முடியாது வேலையில் சேரும் போது போடப்பட்ட நிபந்தனையில் இதுவும் ஒன்று அவரின் முகாமைத்துவத்தை தாண்டி மற்றவர்களிடம் வேலை செய்வதில் எனக்கு கருத்து வேறுபாடுகள்   அதிகம் . 

உடனடியாகப் போகனுமா சேர் இல்லை இந்தவாரம் என்னிடம் வேலைமுடித்து புத்தாண்டு முதல் அங்கதான் அனுப்பச் சொல்லியிருக்கிறார் எங்கள் பெரியவர் .என் மேலதிகாரிக்கும் மேலதிகாரி அந்த நிறுவனத்தின் முகாமையாளரும் ஒரு தமிழர்!ஆனாலும் உன்பகுதியும் எனக்குத்தான் தந்திருக்கிறார் இதுவும் உனக்கு நல்லதுதான் எதுக்கும் பக்கபலம் நான் இருக்கிறன் என்ற  அவரின் வார்த்தைகள் ஒரு தந்தையின் கருனையைப் போன்றது!
கடமைகள் சரியாக செய்வதற்கு ஒழுங்கான சுதந்திரம் இருந்தால் எந்த சாவாலும் சமாளிக்கலாம் என்பதை அவரிடம் கற்றதால் தான் இன்று நல்ல சமையல் கலைஞர் என்ற பதவியில் மற்ற நாட்டவருடன் என்னால் பணிபுரிய முடிகிறது!
..
அவரின் வழிகாட்டலில் மீண்டும் வவுனியாவிற்கு 2001  ஆண்டு ஜனவரி முதல் கடமைக்குச் சென்றேன்!
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளிடையே இந்த இசைக்கச்சேரி என் பயணங்களில் ஒரு கதை .
மீண்டும் சங்கரின் இசையை நேரில் இதுவரை பார்க்கமுடியவில்லை! இனி பார்க்கப்போவதும்மில்லை! என்றாலும் அவர் குரல் பிடிக்கும்!

2 comments :

ஹேமா said...

3 பகுதிகளை இப்போதான் வாசிக்கிறேன்.தொடருங்கள் !

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கு இந்த நிகழ்ச்சி என் முக்கியமான காலகட்டத்தில்  வாழ்க்கையை உலுக்கிய  ஒரு பகுதி அதனால்தான் இத்தனை நீண்ட பதிவு!