26 May 2011

வேலிகளைத் தாண்டி !!

எங்கள் ஊரில் வீட்டைச் சுற்றிய எல்லைகளை வரையறுப்பது வேலியாகும் . வேலி போட அதிகமாக கிளுவங்கதியால். சீமேற்கிளுவை, பூவரசம் கதியால், பயன்படுத்தப் படும் சில இடங்களுக்கு காவோலையுடன் கூடிய கருக்கு மட்டையாளும் அடைக்கப் படும் .

சுற்றிய பகுதிகள் நாலுபுறமும் வேலி என்றாள் அதை அடைப்பதற்கே படும் பாடு சொல்லிமுடியாத ராமாயணம் அப்படி அதிகமான வேலைப்பாடு. 

எங்கள் ஊரில் கோடைகால தொடக்கத்தில் ஆதாவது பங்குனி காண்டாவன வெய்யிலைத் தொடர்ந்து வேலியில் கைவைப்படும்! முன்னரே கதியால்கள் தயாராகிவிடும்   ! இந்த நேரத்தில் தான் சுவாரசியமான காட்சிகள் அரங்கேறும்.
..
வேலிபோட அதிகாலையில் அதற்கான ஆட்கள் இருவர்,சமயத்தில் மூவர் என வருவார்கள் இவர்களிடம் பளபளப்பான கூரிய கத்தி கொண்டுவருவார்கள் கதியாலை இவர்கள் வெட்டும் அழகே தனி ஆவர்த்தனம்!
.
அவர்களுக்கு பால் கோப்பியைப் கொடுத்து குடித்த பின்னர் தொடங்குவார்கள் வேலையை .வடக்கு வேலியில் தொடங்குவதுதான் சம்பிரதாயம் ஏன் என்று நானும் கேட்டதில்லை சிறுவயதில் .இன்றும் தெரியாது சிதம்பர ரகசியம்.உக்கிப்போன கதியால்கள் விறகாகும் அவை புடுங்கப்படும் (பிறகு ஆமி வந்தப் பிறகு வேலியே போட்டதில்லை).

புடுங்கிய பகுதியில் அலவாங்கு மூலம் (இரும்பில் செய்த கூரான சிரிய ஆயுதம்)ஓட்டைபோடுவம் மண்ணில் ( 
பிறகு இந்த வேலையை செல் செய்தது) அதன் இடுக்குள் கிளுவம் ,கதியால், சீமேற்கிளுவை, பூவரசு என மாறிமாறி வருமாறு கதியாலை நடுவம் இந்த நேரத்தில் தான் பக்கத்து வீட்டுக்காரன் பங்கி மூன் போல் நித்திரை கொள்ளாமல் கண்ணுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு கண் கொத்திப் பாம்பாக  அவதானித்துக் கொண்டிருபார்கள். ஏன்? என்றால் ஒவ்வொரு முறை வேலி போடும் போது சிலர் ஒவ்வொரு அடியாக எல்லையை பெருப்பித்து விடுவார்கள் . பிறகு சொல்ல வேண்டுமா இரான் இராக் போர் எல்லாம் வெறும் தூசு குடிமிச்சண்டையும் குத்து வெட்டுக்கும் குறைச்சல் இல்லாத பூமி . அந்தளவு பாசக்காரப் புள்ளையிங்க ஆனால் நல்லது கெட்டதுக்கு இவங்கதான் அடுப்பில்  சமையல் செய்வதில் முன்னுக்கு நிற்பது.நான் அறிந்தவரை ஒரு கதியாலுக்கு வழக்குப் பேசியவர்கள் பலர் .ஒரு அடி கதியால் குட்டி போட்டது என்று பிறகு தீர்ப்பும் வந்தது (ஆதாவது நட்டகதியால் பெருப்பது இயல்பல்லவா வழக்கை நீடிக்காமல் இருக்க அப்படி செய்தாராம் நீதிபதி)கமநல கோர்ட்டில் .இது உண்மை முன்னர் மாட்டு வண்டியில் பாராளுமன்றம் போன அமைச்சரின் பரம்பரைக்கதை இது.  இதை என்றும் எங்கள் ஊர் பெரிசுகள் பேசும் .
 இப்போது அந்தப் பகுதி எல்லாம் கடற்படை ஆத்துமீறீ அரனாக்கி எங்களை அகதியாக்கினது உலகறிந்த கதை.
 

வேலிபோடும் போது பாதிக்கப் படுவது எங்க ஊர் ஆடுகளும் சின்னவர்கள் நாங்களும் தான்.ஆடுகள் பொட்டுக்கலால் பூந்து போய்விடும் ,எங்க வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றாள் அடுத்த வீட்டு அடுப்படியில் போய் நின்றாள் சோறு ஊட்டிவிடுவினம். போகாமல் இருக்க ஆடுகளுக்கு முக்கோன வடிவில் தடியை கழுத்தில் மாட்டிவிடுவார்கள்.ஆடுகளால் பூந்துபோக முடியாது! பொட்டை அடைத்தால் வெளிப்படலையாள் போகனும் அப்போது வீட்டில் உள்ளவர்கள் கண்டுவிடுவார்கள்.பிறகு எப்படிப் போவது!

நாங்கள் வேலி போடும் போது குத்தூசி எப்படி(இரும்பினால் ஆன மெல்லிய ஊசி பெண்களிடம் சேட்டை புரிந்தாள் கொக்குத்தடிச் சத்தகமும், இந்த ஊசியும் தான் முதலில் வரும் ஆயுதங்கள்) இந்தப்பக்கம் இருந்து மறுபக்கம் சரியாக வருகுது என்பதில் ஆராட்சியில் இருபம் பிறகு புரிந்து கொண்டோம் இப்பக்கத்தில் உள்ளவர் கையை குத்திக்காட்டும் இடத்தில் மறுபுரத்தில் இருப்பவர் துழை இடுவார் என்று.

சிலகனங்கள் கவனம் தவறினால் குத்தூசி கண்ணை காவு வாங்கிவிடும் பிறகு ஊசிகுத்திய என்ற அடைமொழி அவனுடன் சேர்ந்து விடும் . இன்று எங்களுக்குள் சிலரை அறிமுகம் இல்லை என்றாள் இப்படியான சம்பவங்களைச் சொன்னால்  சுலபமாக ஞாபகம் வந்துவிடும்!

வேலி அடைக்கும் போது பாட்டுப் பெட்டி(redio) இப்படித்தாங்க நம்மூரில் சொல்லும் வட்டார பாசை! அதுவும் வேலியில் எங்காவது தொங்கும் அப்ப பற்றிதான் அதுவும் எவரெடி .

இலங்கை ஒலிபரப்பு,திரைகடல் ஆடிவரும் தென்றல் -திருச்சிராப்பள்ளி வானொலி, இப்படிதான் எங்கள் காதில் தேன்பாயும்!

அப்போது புதிய பாடல் வரிசையில் "" ஓமானே மானே உன்னைத் தானே" பாடல் பிரபல்யம் இப்பாடல் ஒலிக்கமுன் k.s ராஜாவின் குரலில் குறியிசையைத் தொடர்ந்து பாடல் வரும் அதையும் மீறி அடுத்த வீட்டில் இருந்து ஒரு குயில் பாடும்
எனக்கு விஞ்ஞானப் பாடத்தில் சோடியத்தின் இராசாயனக் குறீயீடு பாடம் இல்லை இந்தப் பாடல் அத்துப்படி இதற்கு காரணம் !..

..தொடரும்!

4 comments :

ஹேமா said...

நேசன்...வேலி ஒழுங்கா அடைச்சிருக்கீங்க.அதான் அப்பிடியே சொல்லி பழைய நினைவுகளோடு எங்களையும் அடைச்சுப்போட்டீங்கள்.

கொஞ்சம் சுவாரஸ்யமும் கவலையுமா இருக்கு பதிவு !

ரேடியோப்பெட்டியும் கே.எஸ்.ராஜாவும் பிரிக்கமுடியாதவர்கள் !

Nesan said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கு உண்மையில்  எத்தனை இயல்பான வாழ்க்கை எம் கைகளை விட்டு கடந்து போய்விட்டது!

மைந்தன் சிவா said...

யோவ்...சூப்பரா நெசமாலுமே!!!நல்லா இருக்கு பழைய ஞாபக மீட்டல்கள்!!

Nesan said...

நன்றி நண்பா உங்கள் வருகைக்கு உண்மையில்  எத்தனை யாதார்த்தமான வாழ்க்கை எம் கைகளை விட்டு கடந்து போய்விட்டது!