14 June 2011

காதல் சொல்ல வந்தேன்!!


என் பாசத்துக்குரிய வலைப்பதிவு ஆசான்களே! இந்த பச்சப்புள்ள தனிமரம் இதுவரை சொல்லாத விடயங்களை உங்களுக்கும்!
 ஆங்கில, தமிழ், ஹிந்தி,சிங்களம், பிரென்ஸ் இயக்குனர்களைத் தாண்டி புதிய கதை கிடைக்காதா என ஜோசித்து முடி கொட்டிய கதை ஆசிரியருக்கும் .

எதிர் கால இயக்குனருக்கும் சொல்லும் ஒரு காதல் கதை இது!

யுத்த மேகங்கள் கொஞ்சம் களைந்து சமாதான ஒப்பந்தம் போட்டு A- 9 பாதை திறந்ததும் .

முன்னரங்க காவலரண்களை பின்னகர்த்த பிந்திய அரசாட்சியில் பல்தேசியக் கம்பனிகள் தமது சந்தைப்படுத்தல் பணியாளர்களை வேகமாக யாழிற்கு முன் நகர்த்தி தங்கள் விற்பனையை கோடிகளில் புரல விட்டது.

நானும் என் நண்பர்கள் பலரும் எங்கள் சொத்தான சாரமும் வேட்டியும், நீள்காற்சட்டையும், வேலியில் காய்ந்த தையும் வேகமாக எடுத்துக்கொண்டு ,தலையயனியையும் மெத்தைக்கட்டிலையும் காசிக்குப் போறவன் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டுப் போவதைப் போல் அயலவர்களிடம் அரைவிலையில் வித்துவிட்டு.
 புதிய சந்தைப் படுத்தல் உத்தியுடன் உள்நுழைந்து ஒவ்வொரு இடங்களில் ஒட்டிக்கொண்டு மாதங்கள் 6 ஓட புதிய ஆண்டு வந்தது.

வழமை போல் வேலை முடிய கொட்டடிச் சந்தியில் என் வகுப்புத் தோழர்களுடன் சும்மா கும்மியடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னைத் தேடி ராகுல் வந்தான். .ராகுலின் பூர்வீகம் திருகோணமலை அவனுடன் என் நட்பு வவுனியாவில் தொடங்கியது .உதவியாளனாக இருந்தவனை சந்தைப்படுத்தல் பிரதிநிதி என்ற கெளரவப் பதவி கொடுத்து கெட்டுப் போக வழிகாட்டி விட்டதில் அவனுக்கு நான் அண்ணன் .
என் நண்பன் அவனுக்கு மேல் அதிகாரி.

அன்று மலர்ந்த தாமரை போல் இருப்பவன் அரலிக்கொட்டை அரைச்சு சாப்பிட்ட அடுத்த வீட்டு கோமதி போல் வாடியிருந்தான்.

என்ன ராகுல் முகம் ஒரு மாதிரியா இருக்கு யாழ் விற்பனை அரசியல் புரியாத புதிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய்காந் போல் முழித்தான் .
உன்னோடு தனியாய்ப்பேசனும் என்றான்!
எல்லாரும் கருனை மனுவை அவர்கள் மேலதிகாரிக்கு அனுப்ப முதல் என்னிடம் குறுக்கு வழி கேட்பினம் .
எனக்குத் தெரியாதை நான் நிரூபனிடம் நாடி ஓடுவதைப் போல்.!

நானும் ராகுலும் போனம் 5 சந்தியில் அப்ப திறந்த அழகிய ஹோட்டலுக்கு பெயர் ஞாபகம் இல்லை .இங்கு நல்ல சுவையான சப்பாத்தி .
சென்னை சரவணபவன் இவர்களிடம் கற்றுக்கொள்ளனும்.!
இந்த கடையின் ஆரம்பத்தில் தொடங்குவது ஸ்டாலிங் வீதி என்பது கொசுறு தகவல்
 .எதிரே ஒரு கராச் இருக்கும் இப்போது எப்படியோ செம்பனியா எனத்தெரியாது ?
எப்போதும் ராகுல் பணம் செலவழிப்பதில் காமராஜர் போல் கணக்குப் பார்பவன்!

எந்த வெய்யில் வந்தாலும் தோளகட்டி நெல்லி ரசம் கேட்கும் அவன் எப்போதும் மாறாத எனக்கு பால் கோப்பி வரவலைத்தான் என் முன் அனுமதி இல்லாமல்!

இத்தனை செயலும் எனக்கு Rkநாராயணன் போல் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து கீழ் இறக்கின உணர்வு எனக்கு .சொல்லு ஏதோ பேசனும் என்றாய் என்ன !

உன்னட்ட எப்படியும் சொல்லனும் உன்னைவிட்டா எனக்கு இங்கு யாரையும் தெரியாது என்று இவன் என்னை விஜய் நம்பியார் போல் தெரியாது என்றே வாதாடிவிட்டு விடயத்திற்கு வந்தான்.

"இருண்டு கிடந்த இதயத்தில் ஒளியேற்றி

காதல் பூவை பூக்கவைத்தாளாம் தன் முகவர் இடத்தில் கணக்கு எழுதும்

கன்னியவள்."கணக்கு வழக்கைப் பார்க்கும் போதே இவனையும் கணக்குப் பண்ணி .
அவள் மனம் என்ற பேரேட்டில் வரவு வைத்தாளாம்!

இதை எப்படி சொல்லுவது என்று என்னிடம் ஆலோசனை கேட்க வந்தான் .நான் என்ன எரிக்சொல்ஹைம் போல தூது செல்ல .
ராகுல் உனக்கு எப்படி ?இப்படி ஒரு வீபரீத பூதம் வந்தது.!
நீ என்னையும் சேர்த்து சுனாமி ஆக்கப் போறாய்.
இங்க காதல் என்று சொன்னாலே கலாசாரக்காவலர்கள் இராவணன் போல் பொங்கி எழுவார்கள்.

இந்தவிடயத்தில் என் பெயரும் அடிபட்டால் ஏற்கனவே பொருளியலானுக்குத்தான் பெண் குடுப்பன் என்று கொப்பில் இருக்கும் மாமிக்கு .அடித்துத் துவைக்க கிடைத்த சேப்-எக்சல் ஆகிவிடும் என் நிலை.

ராகுல் என்னை விடவில்லை ஊரில் உள்ள தெய்வங்களாக என்னை ஆக்கிவிட்டான் .பங்கிமூனே செய்யக்கூடியதை செய்ய வில்லை இந்த பண்ணாடை எப்படி நளனுக்கு தூதுபோன அன்னம் ஆகமுடியும்?

எதுக்கும் நாளை ஒரு தரம் உன் முகவர் நிலையம் வருகின்றேன் என்று வாக்குறுதி தந்தேன்.

மறுநாள் வேலை முடித்து விட்டு என் தேரான சைக்கிலை ஒருதடவை தூக்கிக்குத்திவிட்டு.
 என்னை யாரும் குத்துவாங்கலோ ?கல்லுண்டாய் வெளியில் காணாமல் போவேனோ ?என்று உள்ளுக்குள் பாதுகாப்புச் சபை கூடிக்கொண்டிருந்தது.

விரைவாக ராகுலின் முகவர் இருப்பான அந்த காங்கேசன்துறைக்கு வழிகாட்டும் முதல் பாதையான கொட்டடி சந்தியின் முதல் வளைவைத்தாண்டி மின்சார வீதியில் போகாமல் நேரே போனேன் .அங்கே ராகுல் வரவில்லை என்றாள் எதிர் கண்ணாடி அறையில் இருந்த ராகுலின் நெஞ்சாங்கூட்டில் கல் எறிந்த கண்டவர் மயங்கும் ஹாசினியைப் போன்ற நிசா!


வாங்க அண்ணா என்றே என்னையும் பெரியண்ணா ஆக்கும் பலரில் இவளும் ஒருத்தி .
நிசா இருப்பது கொக்குவில் பகுதியில் எப்படி இருக்கிறீங்க என்று குசலம் விசாரிப்பதில் தொடங்கி எதிர்காலம் என்ற கப்பல் போகும் திசையை நோட்டமிட்டேன்.

சிலரின் பேச்சில் தெளிவு இருக்கும் நிசாவின் மனக்கோட்டையில் இராணுவத்தின் பாதுகாப்பு கவச வாகணத்தை போன்று ராகுல் இருப்பது தெரிந்து கொண்டேன்.

வேலை முடிந்து வந்தான் ராகுல் நானும் நிசாவும் கடலைபோடுவதை கண்டவாரே தனது புகையிலையை (ரை-tie) கழற்றினான்.
என்ன
சொல்லுறாங்க உங்க சினேகிதி ?என்னத்தைச் சொல்ல நீ ஒழுங்கா பில் போடுவது இல்லையாம் .சரியான இருப்பு இல்லையாம் .என்றேன் சில இடங்களில் மேலதிகாரியின் வேலையையும் செய்கின்ற நிலையை என் நண்பர்கள் என்னிடம் தருவது இவனுக்கு நன்கு தெரியும் .

நிசாவும் வெளியேற நானும் அவனும் இருந்து கதைத்தோம் மறுநாள் வெள்ளிக்கிழமை வழமையாக நாம் வவுனியா போகும் நாள் இப்படியிருக்கும் போது தான் ஒரு முறையில் தன் காதலைச் சொல்லப்போறன் என்றான்.!

அது என்ன தீர்வுத்திட்டமோ ?என நானும் உசாரானேன் அவன் சொன்ன படியும் செய்து வெற்றி பெற்று எனக்கு முன்னே கலியாணத்தில் எனக்கு அண்ணனும் ஆகி இருபிள்ளைகளுக்கு அப்பாவும் ஆகிவிட்டான்.!

நானும் காத்திருக்கிறேன் 16 வயதினிலே மயிலு எப்போது வெளியில் வருவாள் கடல்தாண்டி என்று.!

நீங்கள் திட்டுவது புரிகிறது. அவன் செய்தது வெள்ளைக் கடுதாசியில் நான் உண்னை கலியாணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேன் என்று எழுதி அதை தொலைநகல்(fax) செய்தான் அவளுக்கு!

அன்நிறுவனத்தில் அவள்தான் அந்த இயந்திரத்தை இயக்கும் வித்தை தெரிந்தவள். அதனால் அவளிடமே நேரடியாக காதல் கடிதம் போய் சேர்ந்துவிட்டது.!
அனுப்பியது நான் என்பது அவனைத் தவிர !யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம்!

17 comments :

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் சொல்றீங்க??உங்களுக்கு பல கதைகள் ஒளிந்திருக்கு போல??
இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா வருது ஹிஹி

Nesan said...

நன்றி சிவா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் செய்த பல குறும்புகளைப் பதிவு செய்யும் ஒரு முயற்ச்சி!

Tamil Unicode Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சென்னை பித்தன் said...

வாங்க!சொல்லுங்க!

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கு. காதல் சொல்லிய பிறகும் சொல்லுங்கள் என்றாள் எப்படி பெரியவரே!??

நிரூபன் said...

நானும் என் நண்பர்கள் பலரும் எங்கள் சொத்தான சாரமும் வேட்டியும், நீள்காற்சட்டையும், வேலியில் காய்ந்த தையும் வேகமாக எடுத்துக்கொண்டு ,தலையயனியையும் மெத்தைக்கட்டிலையும் காசிக்குப் போறவன் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டுப் போவதைப் போல் அயலவர்களிடம் அரைவிலையில் வித்துவிட்டு.//

அட்ரா...அட்ரா....பாஸ் நம்மளோட யாழ்ப்பாண கொடியில் உடுப்பு காயப்படும் அழகினை எப்பிடி வர்ணிக்கிறார் பாருங்க...
கலக்கல்.

வேலியில் அயல் வீட்டுப் பொண்ணுங்க பார்க்கட்டும் என்று தானே போடுவீங்க.

நிரூபன் said...

எல்லாரும் கருனை மனுவை அவர்கள் மேலதிகாரிக்கு அனுப்ப முதல் என்னிடம் குறுக்கு வழி கேட்பினம் .
எனக்குத் தெரியாதை நான் நிரூபனிடம் நாடி ஓடுவதைப் போல்.//

அடிங்....இதென்ன கொலை வெறி..

அப்போ நீங்க இதில சொல்ல வரும் காதலும் நான் அளித்த உபயமா?
சொல்லவேயில்ல.

நிரூபன் said...

இந்த கடையின் ஆரம்பத்தில் தொடங்குவது ஸ்டாலிங் வீதி//

பாஸ்...அது ஸ்ரான்லி வீதி பாஸ்.

நிரூபன் said...

நண்பனுக்காக தூது சென்ற சிகரம்! வாழ்க உங்கள் பணி!

நிரூபன் said...

காதல் அருமையாகத் தான் சொல்லியிருக்கிறீங்க.

Nesan said...

வேலியில் இருந்து விழுந்தால் பாதுகாப்பாக நிலத்தில் இருக்கும் கொழும்பில் வெளியில் போட்டால் குடுராஜாக்கள் சுட்டுக்கொண்டு போய்விடுவினம் நிரூபனே!

Nesan said...

காதல் உண்மை உதவி என்பதுக்குத்தான் உங்களை உவமை கூறினேன்!

Nesan said...

உண்மைதான் நண்பா அது ஸ்ரான்லி வீதி நான் தவறாக எழுதிவிட்டேன் !சில பெயர்கள் மறைந்து போவது போல் பாதைகள் குறியீட்டையும் மாற்றும் காலம் அல்லவா?

Nesan said...

இப்போது சொன்னது போல் அப்போது சொல்லியிருந்தால் விளக்குமாறு தேய்ந்திருக்கும் நண்பரே!

Nesan said...

நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நிரூ!

ஹேமா said...

விஞ்ஞான உலகில் காதல் சொன்னவிதம் புதுமை அழகு.யதார்த்தமான ஒரு காதல் கதையை எங்கள் மொழிநடையில் கோர்த்தது உங்கள் திறமை.

தோலகட்டி நெல்லிரசம்.பால்கோப்பி வாயூறுது நேசன்.இதுபோல எங்களூரை நினைவு படுத்தும் நிறைய விஷயங்கள் இந்தக் கதைக்குள் அடக்கியிருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்க்கள் !

Nesan said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும்!
 புலம் பெயர்ந்து பெற்றதை விட இழந்தவை அதிகம்.
 நான் விரும்பி உண்ட சுவைகளை  என் பதிவுகளில் வெளிப்படுத்துகின்றேன்!