21 June 2011

இசை விழா!

இன்று தொடங்கும் கோடைகாலம் !
பிரென்ஸ் வாழ் மக்களுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும்!  கோடைகால விடுமுறைகளை கொண்டாடுவதற்கு  முன்னோட்டமாக நாடு தழுவிய ரீதியில் இன்று இரவு மிகப் பிரமாண்டமாக விழா ஆரம்பமாகப் போகுறது ஆம் !இசைச் சங்கமம் இது.(fete du music)


 இது காலவரையில் மாரி காலத்தின் பனிக்குளிரிலும், இளவேனிக்கால இதமான குளிர்காற்றிலும்,  வீட்டுக்குள் ஒளிந்துகிடந்த உள்ளங்களையும் ,உறவுகளையும் வாசல் தாண்டி வாருங்கள் இசையின் ஆதார   சுருதியில் கலந்து கரைந்து போய் மகிழ்ச்சியடையுங்கள் .என்று  கலாச்சார அமைச்சகம் 1981 இல் தொடங்கப் பட்ட இந்த இசைக் கான மக்கள் மனம்குளிரும் திட்டம் இன்று தனது 30 ஆண்டு விழாவை  சிறப்பாககொண்டாட  உள்ளது.

இவ்விழாவிற்கு ரஸ்சியாவின் பிரதமர் விளாமிர் புட்டின் வந்து சிறப்பிக்கிறார்.

மக்களிடம் இலைமறை காயாக இருக்கும் இசைக்களைஞர்களை பட்டி தொட்டி எங்கும் கொண்டே சேர்க்கவும்  தமக்கான சந்தையை உருவாக்கவும் இந்த விழா பலருக்கு ஒரு உறவுப் பாலமாக இருக்கிறது.

பிரென்ஸ் மக்களிடம் முத்தம்,வைன் போன்ற குடிவகை, உணவு முறைக்கு அறிமுகம் என இந்த விழா முன்றுக்கும் ஒரு பொதுவானதாக இருக்கிறது.

அரசின் மக்கள் மகிழ்வூட்டும் திட்டத்தில் இன்று மதியம்.. 12 pm முதல் நாளை மாலை  17 p.m வரை பொதுப் போக்கு வரத்துக்கள் யாவும் சிறப்பு விலைக்கழிவு 3 euro செலுத்தி வாங்கும் பயணச் சீட்டுப் பயன்படுத்தி  விரும்பிய இடத்திற்குப் போய் இசையை பலருடன் கண்டு களிக்க வசதியாக சேவையினை வழங்குகிறது.

புறநகருக்கும், நகருக்கும் இடையில் மக்கள் தடையின்றி சென்று வர விசேட பொதுச் சேவைகள் கடமையில் ஈடுபடுத்தப்படுகிறது.

பிறமாநிலத்தில் இருந்தும் பிற நாடுகளிலும் இருந்தும் இந்த பிரென்ஸ் தேசத்தின் இனிய இசையை ரசிப்பதற்கு பலர் பாரிஸ் நகரை நோக்கி படையெடுக்கின்றனர்.

அரச/தனியார் அச்சு,இலத்திரனிய ஊடகம்கள் அனுசரனையில் பிரபல்யமான கலைஞர்கள் பலர் பல இடங்களில் இசை ரசிகர்களை நேரடியாகவும் மகிழ்விப்பதுடன். வானொலியில்ஒலிகளாகவும் /தொலைக்காட்சியில் ஒலி/ஒளியாகவும் மக்களிடம் சேர்ப்பதற்கும் தயாராகி இருகின்றனர்.

பிறநாட்டுப் புகழ்வாய்ந்த பாடகர்/பாடகிகள்/இசை விற்பனர்கள் பிரென்ஸ் கலைஞர்களுடன்   சேர்ந்தும் பல இசைக்கோலங்களை இசைத்து மக்களை இன்ப வெள்ளத்தில் தொடர்ந்து ஆழ்த்திவருவதுடன்.
 தம் ஒற்றுமையையும் ஒரே நாடு என்ற கொள்கையில் ஒற்றுபட்டு நிற்கும் போது நம் தேசம் அமைதியிழந்து அடிமை கொள்ளும் மனம்
கொண்ட வெள்ளரசுகளுடன் எப்படி ஒன்றுபடுவது!

இளைஞர்/யுவதிகள் இன்று பரவலாக தமக்குப் பிடித்தவர்களுடன் குழுவாகவும்  ,ஜோடிகளாகவும்  துள்ளல் இசைக்கு நகரங்களில் நடனம் புரிவதைக் காணமுடியும்.
 அதிகமான கூக்குரலில் அதிகமான சந்தோஸத்தை தொடர்ருந்துகளிலிலும் சுரங்கவழி தொடருந்துகளில் விழிப்பதைக் கானும்  போது ஒருவித  தவிப்பு  வருகிறது நம் இனத்தின் விடிவற்ற பொழுதை என்னி!

உணவகம்களில் இன்று சிறப்பான விலைகளில் சிறப்பான சிற்றுண்டிவகைகள் மக்களுக்காக தயாராகிவிடும் .
இசையுடன்
இன்சுவையையும் சுவைப்பதுடன் இனிய வைன் மற்றும் மதுபானங்களும் அதிக அளவில் பரிமாறப்படும் ஆட்டமும் பாட்டமும் அன்பின் வெளிப்பாடுகளையும் ஒரு சேரக்காண முடியும்.
 ஆண்டுக் கொருமுறைவரும் இந்த இசைவிழாவில்.பாரிசின் முக்கிய இசைக்களியாட்டம் நடக்கும் பகுதியான bercy,bastel,monparnasse, parc de la villette,அதிகமாக களைகட்டும் .

நம்மவர்களும் சிலவருடங்களுக்கு முன் இசைக்கச்சேரி செய்தார்கள் .இனக்குழுவிற்கு இடையில் ஏற்படும் வன்முறையால் இசை ஆவலர்கள் பாதிக்கப்பட்டதன் விளைவால் இப்போது தடைப்பட்டுள்ளது.

இவ்வருடமும் நடைபெறுமா என்பது  இதுவரை தகவல் யாதும் பெறவில்லை.காத்திருக்கும் இசைரசிகர்கள் பலர் என்பது மட்டும் உறுதியாக கூறமுடியும்.
 இப்படி நம் தேசத்தில் இப்படி ஒரு இசை விழா நடக்குமா?
  நம்மில் எத்தனை பேருக்கு முத்துசாமி, கனேஸ்வரன், திருமலை பத்மநாதன்,மோகன் -ரங்கன் என இசை அமைப்பாளர்கள் பாடகர்கள் முத்தழகு,கலாவதி, ரகுநாதன், சிறிதர் பிச்சையப்பா, ரானி ஜோசப் நிலுக்சி ஜெயவீரசிங்கம் என பல திறமையானவர்கள் இருப்பது தெரியும் ?

முற்றத்து மல்லிகையைவிட்டு அடுத்த வீட்டு ரோஜாவை நாடப் போறமா?நமக்கான இசையின் வடிவம்தான் என்ன எப்போது நமது மெல்லிசைகளும் உலகை ஆளப்போகிறது.மீண்டும் ஈழத்துப் பொப் இசையும் புத்தொளிகாட்டுமா?

12 comments :

நிரூபன் said...

மேலைத்தேய இசை விழாவின் அறிமுகத்தினைத் தந்து, பின்னே ஈழத்து இசையின் இன்றைய நிலையினைம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறீங்க. நீங்கள் சொன்ன அத்தனை கலைஞர்களையும் தெரியும்,
ஒரு சிலரின் பாடல்களும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஆனால் காலவோட்ட மாற்றத்தில் ஈழத்து இசை மறைந்து விட்டது,

யார் தான் அதனை மீண்டும் புத்துயிர் கொடுத்து உயிப்பிக்கப் போகிறார்களோ தெரியவில்லை சகோ.

நிரூபன் said...

மேலைத்தேய இசை விழாவின் அறிமுகத்தினைத் தந்து, பின்னே ஈழத்து இசையின் இன்றைய நிலையினையும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறீங்கள். நீங்கள் சொன்ன அத்தனை கலைஞர்களையும் தெரியும்,
ஒரு சிலரின் பாடல்களும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஆனால் காலவோட்ட மாற்றத்தில் ஈழத்து இசை மறைந்து விட்டது,

யார் தான் அதனை மீண்டும் புத்துயிர் கொடுத்து உயிப்பிக்கப் போகிறார்களோ தெரியவில்லை சகோ.

Nesan said...

அதே தேடல்தான் எனக்கும் நண்பா!வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

ஹேமா said...

மண் இனப் பற்றோடு வாழும் நமக்கு ஒரேவிதமான ஆதங்கங்கள்தான் நேசன் !

Nesan said...

உண்மைதான் தோழி ஆதங்கம் தொடர்கின்றது. !வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

vidivelli said...

நல்ல ஆதங்கமான பதிவு,,,,
உங்கள் இனப்பற்றுக்கு வாழ்த்துக்கள்.....

!!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவைப்பற்றி தொடர் ஓடிக்கொண்டு இருக்கிறது நீங்களும் ஓடிவாங்கோ

துஷ்யந்தன் said...

நல்ல பதிவு அண்ணா

vidivelli said...

!!நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........!!

Nesan said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் நேசன்!

மியூசிக் ஃபெத் பற்றி இவ்வளவு விரிவாகச் சொன்னமைக்கு மிக்க நன்றிகள்! நான் கடந்தவருஷம் லா ஷபேல், 2000 சந்தியில் நடந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்!

ஆனால் இம்முறை நேரம் கிடைக்கவில்லை! வேலை!

நேசன் ஏன் இப்பதிவை இண்ட்லியில் இணைக்கவில்ல! இன்னமும் கணக்கு தொடங்கவில்லையா?

விரைவில் தொடங்குங்கள்!!

நன்றி!

துஷ்யந்தன் said...

//தனி மரம்
திருநங்கைகள் திருவிழா!
4 மணி நேரத்திற்கு முன் //

இப்பதிவு உங்கள் வலைப்பதிவில் காணவில்லை அண்ணா

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். 
இந்தவாரம் திரட்டிகள் தொழில்நுட்பக் கோளாறு பலதடவை பதிவை இனைக்க முயன்றும் ஒன்று சரியானால் மற்றது காலை வாரிவிடுகிறது. அதனால் சிலரின் பதிவை படிக்க முடியவில்லை !
கிடைப்பது சில நிமிடங்கள் அதையும் பிரஜோசனப் படுத்த முடியவில்லை.என்ன செய்வது புலம் பெயர் பொருளாதார தேடல்   விரட்டுகிறது.