27 June 2011

பதில் இல்லை!!

அன்பே!
 இப்படி அழைக்க முடியாது !
இன்னொருத்தியின் கைபிடித்தவன் நீண்ட வருடங்கள் கழித்து நேற்று உன்னைப் பார்த்தேன்.
 தனிமரமாக!
உனக்காக காத்திருந்தேன்!
 ஒரு தலையாக காதல் கொண்டு நெஞ்சனையில் பூட்டி பஞ்சனையில் பள்ளிகொள்ள .
அதுக்காக விட்டேன் ஒரு தூது பெண் கேட்டு
உன்ற மோனுக்கு  என்ன தகுதியிருக்கு ?அவன் என்ன என்ஜினியரோ! ?
எடுத்தெறிந்து பேசினாளாம் உன் அன்னை .இது எல்லாம் உனக்கு தெரியுமா ?
என்று நானும் கேட்க காத்திருந்தேன். உன்னிடம்.


சிரிக்கும் போது விழும் கண்ணக்குழியில் நான் விழந்துகிடக்கும் யானை போல் !
நீ மேல் படிப்பு என்று ஊரைவிட்டுப் போனாய் !
நான் புலம்பெயர்ந்தேன் அகதியாக!

 என் ஆசைக் காதல் வருடங்கள் சில தாண்டும் வரை உன் மேல் காதல் உண்மையாகத்தான் .

இளவுகாத்த கிளியாக இருக்கப் போறியோ!
 ஊரில் என்னைப் பலபேர் உனக்கு கலியாணம் பேசலையோ?
 என்று போகும் இடமெல்லாம் கேட்கினம் என்று நச்சரிக்கும் ஆத்தாவிற்கு  வதிவிட அனுமதி கிடைக்கட்டும் என்று சாட்டுச் சொல்லியே போனது தலைமுடியும் வாலிபவயசும்!

உன் ஆத்தா இறங்கிவராத இலங்கை பாதுகாப்புச் சட்டம் விசாரனையில்லை தூக்கிப் போடு என்பது போல் என்னையும் குறிப்பையும் .

கடவுள் துணைக்கு வந்தார் வதிவிட அனுமதி தந்து.
 தட்டுங்கள் திறக்கப் படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று வேதாளம் போல்  7 வருட என் காதல் சொல்லி கைபிடிக்க என்னியதும் உண்மை.

உன் விருப்பம் தெரியாமல் இராவணன் போல் சிறைப்பிடித்து தூக்கிவர என் தன்மாணம் இடம்தரவில்லை.
 உன் இதயத்தில் இடம் பிடிக்க காத்திருந்து காலத்தில் உன்னிடம் சொல்ல நினைத்தவை எல்லாம் என் நாட்குறிப்பேட்டில் பதிந்தேன்.
 படித்தால் கொஞ்சம்  சாருவின் சாட்டிங்கும் ஒத்துப்போகும்.

பொறுமையாக இருந்தாலும் இந்தக் குளத்தில் கல் எறிந்தார்கள்.
 இந்த வருடம் கலியாணம் கட்டாவிட்டால் இனி உனக்கு
பிள்ளையார் கெதியேன சாஸ்த்திரி சொன்னார் என்று.
 உணவுமேசையில் உள்நாட்டுப் போர் !திட்டல்கள், அறிவுரைகள், கிண்டல்கள் ,குத்தல்கள்,
 எல்லாம் சேர
உன்மீதான காதலுக்கு ஒரு போத்தல் மெண்டிஸ் ஒரு இரவு போதவில்லை !என்றாளும் முடுவுரையாக்கினேன் குடியுக்கும்!
 கிட்டாத உன் காதலுக்கும்!

என்னைக் கரம்பிடித்த குலமகள் ராதையின் காதலில் கரைந்து.
 கலந்து!
 இரு பிள்ளைச் செல்வங்கள் என் தோழில் !
நீ இன்னும் காத்திருப்பது என்னைவிட ஒரு நல்ல என்ஜினியருக்கு!
எங்கிருந்தாலும் நலமாக வாழனும் நீ ஆசைப்பட்டவள் அனாதையாக போகக்கூடாது!

(இது ஒரு நண்பனின் குமுறல் அவன் என்னிடம் கேட்டான் நல்ல குனமா ? நல்ல தொழிலா? கலியாணத்திற்கு தேவை பதில் எனக்கும் தெரியாது)

17 comments :

MANO நாஞ்சில் மனோ said...

மனசு லேசா வலிக்குதுய்யா...!!!

துஷ்யந்தன் said...

லேசாக ஆரப்பித்து போக போக மனசு வலிக்குது பாஸ்

துஷ்யந்தன் said...

நெகிழ்ச்சியான மனம் தொட்ட பதிவு பாஸ்
உங்கள் நண்பர் கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை

Nesan said...

நலமா மனோ அண்ணா !
ஊர்விட்டு வந்து மனசு ஊரில் வாழ்வது தானே நம் வாழ்க்கை.!
இந்தப் பதிவுக்கும் சில வலிகளைப் பார்த்து க் கொண்டு இருக்கிறன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Nesan said...

உங்கள் வருகைக்கு நன்றி துசி கால ஓட்டத்தில் நாம் இழப்பது அதிகம் நண்பா!

மைந்தன் சிவா said...

என்ன பதில் சொல்றதுன்னே தெரியல..இப்படி இக்கட்டான சூழ்நிலையில் பலர் இருந்திருக்கார்கள்...

Nesan said...

உங்கள் வருகைக்கும் கருத்துத்துரைக்கும்  நன்றி நண்பா.

நிரூபன் said...

சிரிக்கும் போது விழும் கண்ணக்குழியில் நான் விழந்துகிடக்கும் யானை போல் !//

உவமை தளை தட்டுதே, உவமை ஒன்றை ஒன்று தொடர்பில்லாமல் முட்டுதே?
ஏன்?

நிரூபன் said...

இளவுகாத்த கிளியாக இருக்கப் போறியோ!//

இலவு காத்த கிளி....

நிரூபன் said...

உன் விருப்பம் தெரியாமல் இராவணன் போல் சிறைப்பிடித்து தூக்கிவர என் தன்மாணம் இடம்தரவில்லை.//

பாஸ், எழுத்துப் பிழைகளை நீக்கி எழுதினால், உங்கள் படைப்பு எல்லோர் மனங்களினையும் வெல்லும்.

விக்கியுலகம் said...

மாப்ள என்னமா சொல்லி இருக்க!

Nesan said...

நண்பா நிரூ 
கண்ணக்குழியில் மோகம் கொண்டு இருந்தவன் யானைபோல் வீழ்ந்து கிடந்தான் என்பதால் தான் அப்படி எழுதினேன் உங்களைப் போல் எனக்கு அணி சேர்க்க முடியாது என்பதும் உண்மையே!பெரும் புலவரே!

Nesan said...

மீண்டும் எழுத்துப்பிழை வந்துவிட்டதே மன்னியுங்கள் தவறுகள் திருத்திக் கொள்கிறேன்!

Nesan said...

நன்றி நண்பா உங்கள் ஆலோசனைக்கும் கருத்துரைகளுக்கும் .முடிந்தவரை எழுத்துப் பிழைகளைத் திருத்துகின்றேன்.

Nesan said...

நன்றி விக்கி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

ATHAVAN said...

அந்த பெண்னின் தாய் ஒரு (எஞ்சினியருக்காய் ...?)முதிர் கன்னியை உருவாக்கிறார்..! அது சரி மாப்பிள உண்மையைச் சொல்லுங்க..!நான் என்று இருக்கவேண்டிய இடத்தில் நன்பர் என்று மாறி விட்டதா பதிவேற்றமுன்னர் கண்ணில் விளக்கெண்ணையை ..!!?

Nesan said...

ஆதவா அது நண்பர் தான் என்னிடம் கூறியது பதிவு ஏற்றும் போது கொஞ்சம் தூக்கம் அதனால்தான் தவறு ஏற்பட்டுள்ளது விரைவில் சரியாகிவிடும்.