13 June 2011

வாடகை இதயம்?!

பலர் தொழில் நிமித்தம் தனியாக இருக்க நேரும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் படிப்பு விடயம் காரணமாகவும் இத்தியாகி  பணி நிமித்தம் பிரியும் போது இருப்பதற்கு தேடுவது தான் வாடகை அறை(rooms) .

 இப்படி அறை தேடுவது என்பது பல புறக்காரணிகள் தீர்மானிக்கும் விடயங்களாக முதல் நாள் வெளியாகும் ரஜனிபடம் மாதிரி.

நானும் தொழில் நிமித்தம் பெரும் பட்டணம் கொழும்பில் 1999 இன் பிற்பகுதியில் ஒரு அறை தேடும் படலத்தை தொடங்கினேன். அது அவ்வளவு சுலமான விடயமாக இருக்கவில்லை. 

நாளிதழ்களில் ஒரு பக்கத்தில் ஏதாவது விபத்துச் செய்தி போல் இருக்கும் விளம்பரத்தில் தேடிப் பிடித்துப் போய் நோட்டம் இட்டால் அதிகமான கட்டணங்களும் புதுப் படத்திற்கு ஜஸ்வரியாவின் கால்ஸீட் கிடைப்பதை விட அதிகமான சட்ட திட்டங்கள் போடுவார்கள். 
நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் என்ற கொடிய வேதனையிலும் தமிழரிடம் அதிகமான வருமானத்தை ஈட்டும் வழிமுறை தெரிந்து ஆட்டை போட்டவர்கள் பல சகோத மொழி உறவுகள்.

 சில பெட்டிக்கடை ஓரங்களில் கவனிப்பார் அற்ற காஞ்சனா போல் ஏதாவது சிறு துண்டில் எழுதி ஒட்டப் பட்டிருக்கும்.சிலர் வீட்டுக்கு என்றே முகவர்கள் இருப்பார்கள் இவர்களிடம் தெரியாமல் அகப்பட்டால் ஆட்டோ செலவில் இருந்து அடுத்த நாள் சாப்பாட்டுச் செலவு வரை கணக்கு தேர்தல் நிதி  போல் அள்ளி வீசனும் அப்படிப் போனலும் இவர்கள் காட்டும் வீடுகள் புறாக்கூட்டை விட மோசமான தாக இருக்கும். சரியான தண்ணீர் வசதி,குளியல்/கழிவறை எதுவும் தொட்டால் ஏதோ சபலத்தில் போனவனை கட்டாயமாக தாலிகட்ட வைத்த நிலைதான்.

சில
நல்ல நண்பர்கள் தங்களுக்கு அருகில் மேல்தளத்தில் அறை உண்டு என்றதும் போய் பார்த்தேன். வீட்டு அறை சகல வசதியுடன் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள் குழாய் வழியே நீர் வந்து கொண்டிருந்தது. நீங்கள் வட்டமான இறப்பர் வாளியில் அள்ளிக் குழிக்கும் போது தண்ணீர் கீழ் வீட்டில் ஓடிப் போய் மூச்சு வாங்கும் .வீடு கட்டிக்கொடுத்த பொறியியளாலன்பின் கதவால் பல்கலைக்கழகம் புகுந்தவன் என்று நிருபித்திருந்தான். மின் இணைப்பு இல்லை. 

வீட்டுக்காரர் கூறினார் தம்பி கொஞ்சம் முற்பணம் அதிகமாகத் தந்தாள் கூடிய விரைவில் வேலைகளை முடித்து தம்பிக்குத் தரலாம் என்று. 

எவன் பொண்டாட்டிக்கு நகை வாங்கிக் கொடுக்க நான்  என்ன வெளிநாட்டுத் தூதுவனா?
ஜோசித்து சொல்கிறேன் என்று எடுத்தேன் ஓட்டம் செல்வமஹாலில் அப்பு படம் ஓடிய மாலைக் காட்ச்சிக்கு.

இருக்கும் அறைக்கு விரைவில் பிரியாவிடை பெறப்   போகும் இடம் மாறிப்போகும் தேசிய பாடசாலை அதிபரின் நிலையில் இருந்தது.வீட்டை உடைத்து
புதிய நவீன் தொடர் அங்காடி திறப்பதற்கு திட்டம் போட்டார் வீட்டு உரிமையாளர்..

இருந்த எங்களுக்கு கனிமொழிக்கு அனுப்பப் பட்ட பிடிவாராந்து போல் நேரத்திற்கே எழும்பச் சொல்லிவிட்டார்.அடுத்த கட்டம் என்ன செய்வது என கருணாநிதி போல் செயற்குழுவைக் கூட்டினால் வீட்டு உரிமையாளர் தனது நண்பர் ஒருவர் வாடைகைக்கு ஒரு அறை இருக்கு என்று கூறினார். 

அவரின் இலக்கத்தையும் தந்தார். 
நானும் அவரிடம் வாங்கி வீட்டு உரிமையாளருடன் தொடர்பு கொண்டேன் ஒரு ஞாயிறு பின் மாலைப் பொழுதில் நேரில் வரலாமா வாடகை அறை பார்க்க என்று அவரும் சரி என்றார் மறுமுனையில்!
விரைவில் ஞாயிறு மாலை அவரை நேரில் சந்தித்தேன் கல்கிசையில் அவர்கூறிய இடத்தைப் பார்வையிட சென்றேன் தொடர்மாடியில்  இரண்டாவது தளம் நன்கு  வேலைப்பாடுகள் செய்து அழகாக இருந்தது எதிர்  எதிரே மூன்று அறைகள் முதலாவதின் முன்பகுதியில் காட்சியகம் ஒன்றில்  வேலை செய்யும் சகோதர மொழி நண்பர் இருந்தார் இரண்டாவதை காட்டினார்  வாடகை 3000ரூபாய் ஒருவருடம் முன்பணம் கேட்டார்,
பிச்சைக்காரனிட்ம் பொன் கேட்டாள் 
என்ன செய்வான் ?

இன்னொரு நண்பனை சேர்த்துக் கொண்டுதான் என்னால் வாடகையை பிரிக்கலாம் என்றேன் அப்படி கொடுக்க முடியாது என்றார் நானும்  விடவில்லை ரியோவில் காசு கொடுத்து வாங்கும் ஐஸ் கட்டிகளை  செலவில்லாமல் அவர் இதயம் குளிரும் வண்ணம் பேசியதில் அவரும் உடன்பட நானும் அந்த அறையை நண்பனுடன் பகிர்ந்து கொண்டு வாடகைக்கு குடிபுகுந்தேன்!

என்நண்பன்  கொழும்புக்கு வந்தது புதிது ஊரில் படலை சாத்தாமல் படுத்தவன் ரூம் கதவை சாத்தாமல் மாப்பூ  மப்பில் மல்லாந்து படுக்க குடுராஜா அவன் உடுப்புக்கள் ,காசு ,பொலிஸ்பதிவு எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டான் நான் வந்துபார்த்தால்  ரூம் விரிச்சுப் போட்ட வைக்கோல் பட்டறைபோல் இருந்தது எதுவும் தெரியாமல் .

அதுவரை யாழ் தேவி புகைவிட்டது போல் குறட்டைவிட்டு நித்திரை பிறகு அவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்தது ஒருவாரம் கழிச்சு

அருகில் ஒர் அறைக்கு புதிதாக ஒரு  சகோதர மொழி  நங்கை வந்தாள்  சிரித்தால் சங்கீதா வீரரத்தன மாதிரி கண்ணத்தில் குழிவிழும் என்னுடன் அதிகமாக நட்பாக இருந்தாள்.எழுதுவிளைஞ்ஞர்(clack) வேலை அவளுடையது
என்னுடைய உடையை நல்ல வடிவாக அயன் செய்து தரும் வரை அவசரத்திற்கு பணம் வேண்டி கொடுத்தால் அது கோயில் உண்டியல்  போல்  ஆகிவிடும் என்றாளும் நல்ல தோழியாக இருந்தால் .

எனக்கு மாற்றம் வவுனியாவிற்கு வரும் காலம் வரை. 
அவளை நினைப்பது எல்லாம் என் கைவிரல் மோதிரம் அவளுக்காக அடைவுகடையை எத்தனை தரம் எட்டிப்பாத்திருக்கும் இன்றும் என் மைத்துனைர் என்னுடன் கோபமாக இருப்பது அவர் தந்த மச்சான் தோழன் மோதிரம் நான் தொலைந்ததால் மோதிரம் போல் அவளும் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணாக போய்விட்டாள் !

காலம் என்றாவது அவளை  மீண்டும் சந்திக்கவைக்கும் வைரமுத்துவின் பாடல் போல் இதயம் ஒரு வாடைகை வீடு இங்கு அடைமழை ஏது!

18 comments :

Ramani said...

அருமையான பதிவு
இடையிடயே நீங்கள் கொடுத்துப்போகும்
உவமைகள் மிக மிக அருமை
பாயாசத்தில் முந்திரி போல
அதற்காகவே இரண்டுமுறைப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

மைந்தன் சிவா said...

//வீடு கட்டிக்கொடுத்த பொறியியளாலன்பின் கதவால் பல்கலைக்கழகம் புகுந்தவன் என்று //

ஹ்ஹீஹிஹி

மைந்தன் சிவா said...

ஹிஹி பிரிவு??ம்ம்ம்

மைந்தன் சிவா said...

பாஸ்,என்னுடைய லிங்க் குடுத்ததற்கு நன்றிகள்
ஆனால் அதில் ஒரு பிழை இருக்கிறது..
ஆமாம் எழுத்து பிழை பாஸ்..
ப்லொக்ச்பொட் என்பதில் பிழை..அதனால் உங்கள் லிங்க் மூலமாக போக முடியாது என நினைக்கிறேன்

Nesan said...

நன்றி ரமணி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்  .

Nesan said...

இது உண்மையான சிரிப்பா இல்லை இப்படியும் இருக்கு என்ற ஆதங்கச் சிரிப்பா நண்பா  சிவா!

Nesan said...

கடந்து போனவை பல ம்ம்ம்  ஹி ஹி!!

Nesan said...

எனது தளத்தில் நீங்கள் சொல்வதை திருத்த முயற்ச்சிக்கிறேன் சிவா!

Anonymous said...

////அருகில் ஒர் அறைக்கு புதிதாக ஒரு சகோதர மொழி நங்கை வந்தாள் சிரித்தால் சங்கீதா வீரரத்தன மாதிரி கண்ணத்தில் குழிவிழும் என்னுடன் அதிகமாக நட்பாக இருந்தாள்.//// நடப்பு மட்டும் தான நம்பலாமா :-)

Nesan said...

நம்பலாம் அதனால் தானே உண்மையை எழுதினேன்  நாங்கள் உத்தம புத்திரர்கள் அண்ணா! உங்கள் வருகைக்கு நன்றி!

ஹேமா said...

அசத்தலான எழுத்து நடை நேசன்.இன்னும் சில சின்னப் பிழைகள் மட்டுமே.

நகைச்சுவை களைகட்டுது.
மோதிரத்தை அடைவு எடுத்துத் தராமலே போய்விட்டாவா.சரி சரி புது மோதிரத்தோட சந்திப்பா பாருங்கோவன் !

இன்று இரவு சனல் 4 இலண்டன் நேரம் 11.05 க்கு ஈழ அவலம் ஒரு மணித்தியாலக் காணொளி தவறாமல் பாருங்கோ.தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கோ !

Nesan said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அவளைப் பார்ப்பது இனி சாத்தியம் இல்லை .என்னால் தாய்நாடு போக முடியாது. உங்களுக்கு தெரியும் தானே அகதி விசாவில் இருப்பவன் குடியுரிமை பெறாமல் இலங்கையில் தடம் பதிக்க முடியாது.

Ashwin-WIN said...

//எவன் பொண்டாட்டிக்கு நகை வாங்கிக் கொடுக்க நான் என்ன வெளிநாட்டுத் தூதுவனா?//
ஹா ஹா அருமையான பதிவு நண்பரே.. அத்தனையும் நாங்களும் பேரு நகர் வந்த புதிதில் அனுபவித்தவை. நம்ம ஞாபகங்கலையே மீட்ட உதவியது பதிவு

Nesan said...

நன்றி அஸ்வின் நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

சென்னை பித்தன் said...

இப்போதெல்லாம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வந்து விட்டன. தனியாளுக்கு வீடு கிடைத்து விடுகிறது.அந்தக்காலத்தில்?
சுவைபட எழுதியிருக்கிறீர்கள்!

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் சென்னைப் பித்தன் நண்பரே!

நிரூபன் said...

பாஸ்...இறுதிப் பந்தியில் அவளைத் தவற விட்டு விட்டீர்களே,,

வாடகை லாட்ஜ் பற்றிய உங்களின் பகிர்வோடு, கை நழுவிப் போன உங்கள் காதல் உணர்வினையும் ரசித்தேன்.

மனசை கனக்கச் செய்திட்டீங்க சகோ.

Nesan said...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு அது காதல் அல்ல ஒரு நட்பு என்று மட்டும் சொல்ல முடியும் அதுதான் உண்மை!அதுதான் அவள் பறந்து போய்விட்டாள்!