03 June 2011

இன்று ஒரு தகவல்!!

 எப்படி இருக்கனும் என்ற பெற்றவர்களின் ஆசைகள் பல .அதில் விலகிப் போகும் போது அவர்கள் செல்லமாகவும், சில நேரங்களில் காட்டமாகவும் திட்டும் வார்த்தைகள் பலதாக இருக்கும்!

 இப்படித்தாங்க வீட்டில் சினிமா பார்த்து கெட்டுப்போனவன் என்று திட்டுகிறார்கள் என்றால் ! நேற்று என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் கொஞ்சம் அதிகமாக காதால் இரத்தம் வரும் அளவுக்கு வடிவேலுவைப் போல் எகிறிக் குதித்தான்!
மனோவின் அருவாள் அருகில் இல்லை!பயபுள்ள தப்பித்தான்!

அவன் சொல்லிவிட்டுப் போன வேலையை நான் செய்யவில்லை அதுக்கு அவன் சொல்லியது உதவாக்கரை என்று. பின் வைரவரின் வாகனத்தையும் சேர்த்துச் சொன்னது சுட்டுப்போட்டுது மனசில்!

அப்பதாங்க நான் வடை அண்ணாவுடன் பாசம் பொழிந்து கொண்டிருந்தன்.  அவர் நம்ம தோஸ்த்து .இவனுக்கு என் வலையைப் பற்றித் தெரியாது!கொசுவலை தெரியும் அவனுக்கு google வலை தெரியாது.

 நானே எவ்வளவு கஸ்ரப்பட்டு ஒவ்வொருத்தராக நட்புக்கரம் தேடி வரவைக்கிறன் என்று புரியாமல் என்னை உதவாக்கரையாம்! இப்பதாங்க வீட்டைத்தாண்டி தெருவிற்கு வந்தால் இண்ட்லியில்,தமிழ்மணத்தில்,தமிழ் -10,  என பாசக்காரப்  உறவுகள் ஓட்டுப் போட்டு என்னையும் தூக்கிவிட்டுக் கொண்டு இருக்கும் நிலமை தெரியாமல் உதவாக்கரையாம்! 

இதுக்கு விளக்கம் கேட்டேன் நீ ஒன்றுக்கும் 
பயன்படாமல் இருப்பவன் என்று எகத்தாளமாக பதில் சொன்னான் .நானும் வானம்  படத்தில் நம்ம தம்பி சிம்பு சொல்லுவது போல் அடக்கடவுளே  என்று விட்டுவிட்டாலும் இதன் உண்மையான சான்று தேடினேன்!
 இந்தப் பெரிசுகள் திட்டும்போது வராத இரத்த அழுத்தம் .இப்ப எல்லாம் மூக்கு மேல  கோபம் வருகுது கோடைகால வெய்யில் தாங்கமுடியாமல்!

ஆத்தாடி இந்த பச்சப்புள்ள உதவாக்கரையா பதில் யாரு சொல்லுவா? 
நம்ம ராஜா  அப்படித்தாங்க நான் ராகதேவன் இசைஞானியை விளிப்பது ! எங்கே சொன்னார் விளக்கம் எனக் கேட்கும் நண்பர்களே!

ஆற்றுக்கோ,ஏரிக்கோ கரைகட்டும் போது பெருங்கற்களைக் கீழே போட்டு அதன் மேல் மண்ணைக் கொட்டி கரை எழுப்புவார்கள்.மழையாலோ,
வெள்ளத்தாலோ மண் அரிக்கப் பெற்று கற்களுக்கிடையே இடைவெளி தெரியும் படி ஆகிவிட்டால் அதன் வழியே பெரும்பகுதியான நீர் கசிந்து வெளியேறிவிடும். எந்த இலக்கை நோக்கி ஆறு ஓடுகின்றதோ ஆற்றின் முழுத் தண்ணீரும் அந்த இலக்கை நோக்கி ஓடுவதற்கு உதவாத கரையாக அது ஆகிவிடுவதால் அதன் பெயர் உதவாக்கரை.

மேலும் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு நீந்தியோ படகிலோ போய் இறங்கினால் இறங்கக் கூடிய கரை புதை சேறு இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். கரைக்கு அப்புறம் விலங்குகள் வாழும் காடாக இருக்கக் கூடாது. புதை சேறாக இருந்தால் புதைந்து விடுவோம்! விலங்குகள் இருக்கும் பகுதியில் இறங்கினால்  விலங்குகளுக்கு இரையாகிவிடுவோம் அப்படிப்பட்ட பகுதியில் இறங்கினால் அந்தக்கரை உதவா கரை ஆகிவிடுவதால் அதுவும் உதவாக்கரைதான்.

உதவாக்கரை என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது இலக்கணக் குறிப்பு. இது கரையைக் குறிக்கும் போது மட்டும்தான் !

மனிதரை குறிக்கும் போது இலக்கணக் குறிப்பு ஆகுபெயர் ஆகும்!

இப்படி இலக்கண விளக்கத்தை ராஜா கவிஞர் முத்துலிங்கத்திற்கு விளக்கியிருக்கிறார்( கொசுறுத்தகவல் கிழக்கே போகும் ரயில் படத்தில் மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ என்று ஜெயச்சந்திரன் பாடுவது  அவர்  எழுதியது)

இந்த விளக்கத்தை  இளையராஜாவின் படைப்புகள் என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்  கவிஞர் முத்துலிங்கம்.இன் நூலாசிரியர் பிரபல கவிஞர் ,முனைவர்  .கருணாநிதி . ஆய்வு செய்த நூலாகும்!
முடிந்தால்  நீங்களும் படியுங்கள் இசையானியின் இலக்கிய அறிவைத் தெரிந்து கொள்ள முடியும்!  நன்றி முகம் தெரியாத தமிழ் ஆசிரியருக்கு!

11 comments :

நிரூபன் said...

அடப் பாவி, ஒரே கல்லில் இரண்டு மாங்காயா,
உதவாக் கரை பற்றிய விளக்கம் அருமை சகோ.

இளையாராஜா பற்றிய கொசுறுத் தகவலும் கலக்கல் சகா.

நிரூபன் said...

உதவாக்கரை எனும் சொல் பற்றி நான் இவ்ளோ நாளும் திட்டுவதற்குத் தான் பயன்படுத்துவார்கள் என்பதனைத் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இன்று ஒரு புதிய விளக்கம் தந்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி சகோ.

எழுத்துப் பிழைகளற்ற அருமையான பதிவு மாப்ளே.

Nesan said...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு!

Nesan said...

எழுத்துப் பிழைகளை ஒரு தோழி திருத்தி உதவி வடிவமைத்தா  அதனால்தான் நீங்கள் சொல்வது போல் சரியாக அமைந்திருக்கு இந்த வாழ்த்துக்கள் அந்தத் தோழிக்கு உரியது!

Nesan said...

மன்னித்துவிடுங்கள் ஹேமா நீங்கள் இட்ட பின்னுட்டம் வலைப்பதிவை திருத்தும் போது தவறு நேர்ந்து விட்டது !எனக்கு வேறு மார்க்கம் தெரியாது தெரிந்த வழி பின்வருமாறு!ஹேமா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்" இன்று ஒரு தகவல்.!!": 

வைரவரின் வாகனம்...சிரிச்சு முடியேல்ல நேசன்.பேச்சு வாங்கினாலும் அதிலயும் ஒரு கௌரவம் !

உதவாக்கரைக்கு விளக்கம் புதுசா இருக்கு.அறிந்துகொண்டேன்.நன்றி.அப்பஇனி உதவாக்கரை எண்டு திட்டலாமோ இல்லையோ ! 

வெளியிடு 
நீக்கு 
ஸ்பேம் என குறி 

இந்த வலைப்பதிவின் கருத்துரைகளை மதிப்பாய்வு செய்யவும். 

3 ஜூன், 2011 2:01 pm அன்று தனி மரம் இல் ஹேமா ஆல் உள்ளிடப்பட்டது

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க உதவாக்கரை'ன்னு சொன்ன நண்பன் ஒழிக....

MANO நாஞ்சில் மனோ said...

மனோவின் அருவாள் அருகில் இல்லை!பயபுள்ள தப்பித்தான்!///


அவ்வ்வ்வ்வ்வ் நான் பச்சைபிள்ளை அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி இணைப்பு குடுங்க....

Nesan said...

பாவம் மாப்பூ அவனுக்கு வீட்டில் செம்பு நெளிஞ்சிருக்கும் அதுதான் என்னை நெளிச்சிட்டான்!

Nesan said...

நான் கைப்புள்ள மாமா!

Nesan said...

இனைப்பில் கோளாறு நண்பா line கிடைக்கமாட்டேன் என்கிறது.