21 July 2011

நொந்து போகும் ஒர் இதயம் -3

இதன் தொடர்  1/7.10/7/௨௦௧௧ பார்கவும் 
 பல கனவுகளுடன் நுழைந்தான். ஏற்கனவே சாதாரண  தரமும் அப்பாடசாலையில் படித்த காரணத்தால் மாற்றம் ஏதும் இல்லை அவனிடம் .

வகுப்பறையில் தான் புதிய சில அறிமுகம்கள். உயர்தரப் படிக்க உள்நுழைந்தார்கள் .இவர்களில்


 வடக்கில் இருந்து என்னைப் போல் ஒவ்வொருத்தருக்கு யாரையாவது பிணைவைத்துவிட்டு வந்த சில வேலிதாண்டிய வெள்ளாடுகள் அடக்கம் .

புதியவர்கள்  எல்லாரையும் அதே பாடசாலையில் சாதாரண தரம் முடித்து உயர்தரம் என்ற புதிய பதவிக்கு வந்தவர்களுக்கு ஆசிரியர் ஒவ்வொருத்தராக  உங்களைப் பற்றி அறிமுகம் செய்யுங்கள் என்று கூறவும் !
ஒவ்வொருத்தரும் தமிழ் படத்தில் அன்நாளில் ஸ்ட்மன் கலர் படத்தில் எழத்தோட்டம் போடுவது போல்! அறிமுகத்தை செய்யும் தருனத்தில் தான் !பிரபுவின் காந்தப் பார்வையில் விழுந்தாள் !

சித்திரை நிலவு வெள்ளையாடை உடுத்தி முகத்தை

மட்டும் திறந்து ,
உச்சி முதல் உள்ளம் பாதம் மூடிய சொப்பன சுந்தரியோ!
இந்திரன் மயங்கிய மோகினியா !
முன்னம் படித்த தமயந்தியின் தங்கையா !
என என்னும் விதமான குளிர்ந்த பார்வை பார்க்கும் பார்த்திமா !என்ற மொயூத்தின் ஐந்து அழகான மங்கையர் செல்வத்தில் கடைசிமகள் இந்த பார்த்திமா!இவள் மன்னாரில் இருந்து புதிதாக இங்கு வந்தாள்.
வசந்தவள்ளி பந்தாட   பிரபுவும் காதல் கல்வியில் கடிதம் வரைந்தான்
 .பின் வந்தான் தனிமரத்திடம் ஆலோசனைக்கு.

 மச்சான் இன்றைக்கு ஒரு தேவதையைப் பார்த்தேன் !என்னடா பிரபு கனவு கண்டாயா பள்ளிக்குப் போய் வந்து இன்னும் ஒரு நாள் முடியல!.

 இன்றைக்கு எப்படியும் வாத்திமார் படிப்பித்திருக்கமாட்டினம். நானும் ஒரு காலத்தில் கடைசி வாங்கில இருந்து தானே வந்தேன் பிரபு.

உனக்குத் இதெல்லாம் தெரியாது .நான் ஒருத்தியை விரும்பப்போறன் .
அவள்தான் என் தெரிவு.  எனக்கு உன் உதவி வேனும் !என்று என் மீது சகடையில் போட்டான் குண்டு. ஒரு கனம் நானும் ஆடிப் போனேன் .

இதுவரை காதல் என்றாள் என்ன வென்று தெரியாத உதவாக்கரையிடம் உதவி கேட்கும் சின்னப்
பொடியன்.

முதலில் ஆள் ஆரு  அவர்கள் விபரத்தை தேடுவம் என்றேன். உதவி தேடுபவனை உதவுவதுதானே நட்பின் இலக்கணம் என இலக்கியம் கூறுகிறது. கர்ணன் துரியோதனனுக்கு அடிமையாகினானே ?தேர் ஓட்டி என்று சபை இகழ்ந்த பின் தானே.!

நானும் ஆவலாக விசாரித்தேன் பிரபுவிடம் பொட்டையாரு, எங்க இருக்கிறாள் ,என்னமாதிரி! இதில் ஆயிரம் பொருள் கொள்வார்கள் நம் கிராமத்துப் பெரிசுகள் .அவர்களின் சிலஇயல்பு இன்றும் மாறவில்லை தனிமரத்திற்கும்!

 அது கிராமத்தானுக்குள் ஊறிப்போன ரத்தம். செங்கோவி  சொல்லுவார் ஒரு பதிவில் நாங்கள் கோட்டுப் போட்டாலும் இன்னும் கிராமத்து கோவனம் என்று அது மனசைக் கூறுவதாக தனிமரம் என்னுகிறது.

அவன் கூறியது அவள் ஒரு இஸ்லாமிய மங்கை பெயர் பார்த்திமா இதுவரை என்கண்ணில்  விழவில்லை .இன்று தான் முதன் முதலில் பார்த்தேன் பைத்தியம் பிடிக்குது! இன்று ஏன் பள்ளி முடிந்ததோ என இருந்தது( .அவள் ஒரு எளக்கிரி-))நீதானே ஒவ்வொரு வீதியாக வியாபாரம் என்று உழுகிறாய்!

 ஒருக்கால் பார்த்துச் சொல்லன். இது கூட எனக்கு செய்ய மாட்டியா உன்னோட நட்பாகி இப்ப ஒரு ஆறுமாதம் ஓடியதில் நான் ஏதாவது கேட்டிருப்பனா என்று அவன் ஏய்தியது.

 என்கூட அவன் வந்து ஓட்டிக்கொண்ட காலத்தைக் குறிப்பால் உணர்த்தியது. சரி ஒன்று  செய்யிறன் நாளைக்கு பள்ளி முடியும் தருனம்  நீ வரும் பாதையில் என் வாகனத்தை நிறுத்திவிட்டு  நிற்கின்றன் .ஜாடை மட்டும் காட்டு பிறகு  உதவுவதா எனத் தீர்மானிக்கின்றேன் என பிரபுவிடம் விடை பெற்று.  போனது வசந்தகாலப் பறவை படம் ஓடிய இந்திரா திரையரங்குக்கு!

நண்பர்களே
அக்காலகட்டத்தில் இப்போது போல் ஒரே நேரத்தில் பல சினிமா கொட்டைகளில் திரைப்படம் ஓடுவது இல்லை! இது நீங்கள் சிலர்  அறிந்த விடயம் நவீன தொழில் நுட்பம் வரமுன் ஒவ்வொரு ஊராக படம் ஓடி. வவுனியாவிற்கு பிரபல்யமான படம் வருவதற்குள். படம் மீதான ஆர்வம் போய்விடும்.

என் சிந்தனை இஸ்லாமியர்கள் வெளியேறிய சின்னவயது ஞாபகம்கள்.   அவர்கள் பற்றி அறிந்த கதைகள்.

அக்காலத்தில்  என் பாட்டி  வட்டகச்சியில் பல்பொருள் வியாபாரக்கடை வைத்திருந்தா நான் வாரவிடுமுறையில் கடையில் இருந்த போது  அவர்கள் கலக்கத்துடன் விற்றுப் போன நகைகள், பாட்டி விரும்பாமல் அவர்கள் அன்புக்கு கட்டுப் பட்டு வாங்கிக்கொண்டு நகைக்கு  பணம்கொடுத்த காட்சிகள் என பலது ஓடிக்கொண்டிருந்தது! அக்காலத்தில் பாட்டியின் கடைக்கு தோல்பை வியாபாரச் சாமான்கள் கொண்டுவரும் ஹாசிம் காக்காவும். வார இறுதியில் நான் போய் நின்றாள் என்னோடு தாயம் உறுட்டி விளையாடும் முகம் மட்டுமே தெரிய கறுப்புப் பேய் எனச் சொல்லி பாட்டியிடம் புகார் சொல்லி அடிவாங்கித்தந்த  ரிபூஸாவும் .குடும்பத்துடன் எங்களிடம் விடை பெற்ற காட்சியை வர்னிப்பது என்னிடம் வார்த்தைகளை  தேடுகின்றேன் !

.பின்னாலில்  நாங்களும் இது போல் 1995இல் ஒர் இரவுக்குள் இடம்பெயர்ந்து  நாவற்குழிப் பாலத்தில் நகர முடியாது .நின்று அழுத துயரம் கண்டு  வானம் எங்களுடன் சேர்ந்து அழுதது!

அப்போது விட்டுப் போனவர்கள்  இழந்து போன உறவுகள்.  நீயாவது நல்லா வாழனும் என்று வழியனிப் பின உறவுகள்  .என்னை மறக்க மாட்டியள் தானே!

  என்று அக்கட்டத்திலும் நம்பிக்கையுடன் கேட்டவள் முகம் தொலைத்து விட்டு !இப்போதும் சில நிமிடங்கள் பனிமழைக்குள் மூடிவைக்கும் அடையாள அட்டை போல் பத்திரமாக நினைவுகள் இருக்கிறது.
 அவளத்தான் பின் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போனவள்.

 காலம் பலருக்கு நினைவுகளை தந்து தீர்க்கமாக சிந்திக்க முடியாமலும் .,தடுமாறுகின்றோம்..
 இதை எல்லாம் நானும் என்னிக் கொண்டு வரும் போது எதிர் பாராமல் முன்னால் வந்தான் அக்ரம்.

 இவன் சிலகாலம் தான் வவுனியாவிற்கு புதிதாக வந்த சந்தைப் படுத்தல் அதிகாரி .இவனுக்கு தமிழ் கொஞ்சம் தூரத்து உறவு அதிகம் கற்றது சகோதர மொழியில்.(சிங்களம்)

    சில வர்த்த நிறுவனம்கள் இஸ்லாமிய  நண்பர்களை  சந்தைப்
படுத்தல் அதிகாரியாக்கி தமிழ் மக்களின் வேலை வாய்ப்பை கிடப்பில் போட்ட கருணை மனுவாக்கிவிடும்.

 இது நான் உணர்ந்து கொண்ட யாதர்த்தம் .இப்படித்தான் சில தேசிய வர்த்தக நிறுவனங்கள் கடைப் பிடிக்கும் கொள்கை .
 இதற்கு அவர்கள் கூறும் சப்பைக்கட்டு பாதுகாப்புக் காரணம்.

 இவன் உயர் அதிகாரியுடன் ஒரு இரவு பூராகவும் வவுனியா வாடி வீட்டுல் பனம் சாரயம் குடுத்துக் கொண்டு  சண்டை போட்டதன் பின்பு தான்  நானும் நாளை முதல்குடிக்க  மாட்டேன் சத்தியம்மடி தங்கம் என்று திருந்தியது.

 அக்ரமும்  கை குழந்தையாக இருக்கும் போது யாழில் இருந்து வெளியேறி மதவாச்சியில்  குடிப்யேறியவர்கள். அவனின் வார்த்தை களில் அதனால் ஏற்பட்ட  பகையுணர்வை சமயம் வரும் போதெல்லாம் கூறுவான்  எனக்கு .

 திருமணம் முடித்து இவன் மனைவியுடன் தனிக்குடித்தனம்     நடத்தும் மதவாச்சிப் பகுதிக்கு நானும் பலதடவை போய் இருக்கின்றேன் ஒரு நல்ல நண்பனாக  .

இன்று மத்திய கிழக்கில் இருந்தாலும் அடிக்கடி தொடர்பில் வந்து போகும் பாய் எனக்கு

.நாங்கள் இருவரும் ஒரே முகவர் நிலையத்தில் வேறுவேறு நிறு வனங்களுக்கு கடமை புரியும் சந்தைப் படுத்தல் அதிகாரிகள்! பலஇடங்களுக்கு ஒன்றாகப் போவது அப்போதைய பாது காப்புக் காரணங்களுக்காவும் தான்.

வெள்ளிக் கிழமைகள் எபோதும் புனிதம் தான் புது படங்கள் வெளியாகும். சைவஹோட்லில் பாயாசம் பந்தி வைக் படும் தூர இடத்தவர்கள் இரானுவத்தின் பாஸ் முடிந்துவிடும் அதநாள் வெளியேறனும்!

தொடரும்

எளக்கிரி-தமிழில் ஆட்டுப் பால்
சகடை-யுத்த விமானம்

No comments :