02 July 2011

நீ போகும் பாதை என் பூங்காவனம்

 நம்மவர் பாடகிகள் பலர் சந்தன மேடைக் கலைஞர்கள் தாண்டி. பலரை பதிவு செய்யனும் என்ற ஆவல் கம்பன் சொல்வது போல ஆவலில்  கடல்நுரையை பருகும்  செயல் !

.புலம்பெயர் தேடலையும் கடந்து எனக்குப் பிடித்தவர்கள் தொடரை முடிந்தவரை கூடவரும் பயணம் போல் எப்போது முடியும்!?

சில இசைக்குயில்கள் பல சோதனைகளைக் கடந்து பாடகியாகிறார்கள். அவர்களில் நம் தேசத்தில் மும்மொழியில் பாடுபவர்களை விரல்விட்டு என்னலாம்.அந்தவகையில் முதலில் என் பார்வை நிரோசா வீராஜினி!அதையும் தாண்டி ஹிந்திப் பாடல்களையும் பாடக் கூடியவர் என்பது சிறப்பான விடயம்.
(  என்னைத் தெரியுமா)
சந்திரிக்கா  சமாதான தேவதை என்ற மயக்கம் போய் இனவாதப் போரை நடத்தி யாழ்ப்பாணம் வெற்றி கொள்ளப்பட்ட பின் .1996  ஆண்டுஎனக்கு (சகோதர மொழி நண்பருக்கு)  அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்).

இந்தப்பாடல் பலதேர்தல் மேடைகளிலும், ரூபவாஹினியில் செய்திகளுக்கு முன் 5 நிமிடங்கள்  இப்பாடலுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

 அன்நாட்களில் ரூபவாஹினியின் தமிழ் பிரிவுத் தலைவர் வசந்த ராஜா( இவர் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை பின் செவிவழி கேட்டிருக்கிறேன்).
 யுத்த மேகம் கலைந்து ரனில் பல விளம்பரங்களில் பட்டலந்த வதைமுகாமின் சூத்திரதாரி என்று மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் தீட்டப்பட்டிருந்தது.

அந்தப்பாடல் மிகநேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருந்தது
அதனைப் பாடியவர் இந்தக் குயில்தான் .

(இப்பாடல் ஒரு மீள்கலவை)

.இதனை பின்னாளில் எனக்கு சொன்னவர் ஒரு சகோதரமொழி நண்பர்.

மூத்த சகோதரமொழி பாடகிகளில் லதா வல்பொல இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு புதுமையான குரல் தேடும்போது ரூபவாஹினி இசைக்கலைஞர் பிரெமசிரி ஹேமதாச விடம்  பாடல் ஆசிரியர்   M.H.M சாம்ஸ் அவர்கள்  வழிமொழிந்தது நிரோசாவை !

பாடல் பதிவு செய்து வெளியானதன் பின்பு அதுவரை  இசை மேடைகளில் அதிகம் பிரபல்யமாகதவர்(1989இன் காலப்பகுதியில் சகோதர மொழியில் பாடிக்கொண்டிருந்தார்) பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமானார்.

1997  அதுவரை வெறும் ஊடகங்கள் முலம் வந்த இவரின் குரல் எனக்கு அறிமுகமானது கொழும்பில் ஒரு மேடை நிகழ்ச்சியை நேரில் பார்த்தது ரசித்த பின்தான்.

 சகோதரமொழியில் பிரபல்யமான பலருடன் மேடையிலும் குறுவட்டிலும் சின்னத்திரை மட்டும்மல்லாது சிங்கள் திரையுலகிலும் பின்னனி பாடிக் கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் தமிழ்சினிமாப் பாடல்களை சகோதர மொழி மேடைகளில் வெளிவந்த காலகட்டத்தில்.
 தன் இஸ்லாமிய /தமிழ் மொழி ரசிகர்களுக்காகவும், மலையகத்தில் இசை நிகழ்ச்சியை செய்யும் போது அப்பிரதேச இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் பாட வெளிக்கிட்டார். அதன் பின்பு பல ரசிகர்கள் இவரின் குரலில் மயக்கம் கொண்டு அதிகமான பாடல்களை ரசிக்க வெளிக்கிட்டனர் .

எனக்கு இவரின் குரலில் பிடித்தது .
இசைஞானி  மெல்லிசை மன்னர் கூட்டு இசையில் வெளிந்த மெல்லத்திறந்த கதவு படத்தில் ஊருசனம் தூங்கிருச்சு என்று ஜானகி அம்மா பாடலை இவர் மேடைகளில்  இனிமையாக மொழியை சிதைக்காமல் பாடுவார் இப்பாடலை இவர் சகோதர மொழியில் ஒலிநாடாவாக(tape) வெளியிட்டார்.
இப்பாடல் தொகுப்பில் சகோதரமொழியில் சின்னத்தம்பி பாடல்கள் முழுவதும் அத்துடன் உதயகீதம் படத்தில் வரும் பாடுநிலாவே தேன்கவிதை பாடலும்  சேர்த்து அழகிய முகப்படம் போட்ட (நிரோசா) குறுவட்டாக வெளிவந்து .


இருந்ததை நான் பலமாதங்களாக .பத்திரமாக வைத்திருந்ததை சகோதரமொழி  நண்பன் பாடல்களை கேட்டுவிட்டுத்தருவதாக எடுத்துக்கொண்டு
அவன் வீட்டில் அதிகமான ஒலியில் ஒலிக்கவிடுவான்.
 அவனின் தங்கை அங்கிருந்து பாட நான் அடுத்த அறையில் இருந்து எதிர்பாட்டு பாட இந்தக் குளத்தில் கல்லெறிந்தாள் ஹான்சிஹாவை விட அழகானவள் நல்ல தோழியாக இருந்தால்.

நிரோசா தமிழில் சினிமாவில் பாடியது  இசைப்பயணம்
படத்தில் உன்னிக்கிருஸ்னனுடன் உதயா இசையில் பிரபல்யமான பாடல். இதனை  இனைக்க முடியவில்லை (பாடல் கேட்க தென்றலக்கு தபால் அட்டை அனுப்புங்கள்.)


 பின் புதிய பாடல் ஏதும் பாடியது நான் அறியேன்  அவரின்  வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக வெளிநாட்டுக்கு இசைக்கச் சேரிக்குப் போனதில் அவருடன்  ஒரு பாடகர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் படித்தேன்.

 சில  சகோதரமொழிப் பாடல் இவரின் குரலில் கேட்கும் போது மறந்து போன நண்பர்கள்  கூடவருவது போன்ற உணர்வு.
இன்னும் பாடனும் பல பாடல்கள் இந்தக் கானம் பாடும் கவிதை.நன்றி நிருபன்  உங்கள்  மூலம்  நல்ல  ஒரு  பதிவை  மீள  பதிவு செய்கின்ர  உணர்வு  நன்றி  பிழையை திருத்திய  நிருபனுக்கு .

6 comments :

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
மீள் பதிவு கலக்கலாக வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

Nesan said...

நன்றி நண்பா எல்லாம் உங்கள் ஆலோசனைகளும் வழிநடத்தலும் தான் காரணம்

ஹேமா said...

இசையை உயிரோடு இணைத்திருக்கிறீர்கள் நேசன்.
நானும் அப்படியேதான்.

இசைக்கு மொழி தேவையில்லை.நானும் சிங்களப்பாடல்கள் நிறையவே கேட்டிருக்கிறேன்.அந்த மொழியும் பாடகர்களின் மென்மையான குரலும் எத்தனையோ தடவைகள் என் கவனத்தை ஈர்ந்திருக்கிறது.ஆனால் பாடலின் சில சொற்களைத்தவிர வேறேதும் தெரியாது.அதுவும் இரவு நேரத்தில் ஒலிக்கும் பாடல்களை மிகவும் ரசித்திருக்கிறேன்.மீளவும் கேட்கத் தந்தமைக்கு நன்றி நேசன் !

Nesan said...

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Nesan said...

வார்த்தைகளைத் தாண்டி அவர்களின் கலாச்சாரத்தில் சில காலம் ஊரியதில் அவர்களின் நல்ல உள்ளம்களை கண்டதன் விளைவே நானும் சில பாடல்களை கேட்பது.

ஸ்ரீராம். said...

கேட்டேன், ரசித்தேன். ஆமாம், ஸ்விஸ் ஹேமா எங்கே, ஆளையே காணோம்?