24 August 2011

கடல் ஓரம் வாங்கிய காற்று! 

என் பாசக்கார பதிவுலக உறவுகளே சிறிய இடைவேளையின் பின் மீண்டும் தனிமரம் உங்களுடன் இணைகின்றது எல்லோரும் நலமா !?

 சிலரின் வலையை முடக்கிவிட்டார்களாம் என்று அவலக்குரல் கேட்டு ஓடிவந்தேன்.!

காற்றில் என் கீதம் தோழி ஒரு  அழகிய தேவதையை பெற்றெடுத்து அகிலவர்சினி என்று அழகிய நாமம் சூட்டியிருக்கிறார் .வாழ்த்துக்களும் நேசனின் ஆசிகளும் தேவதைக்கு.

  இனி உங்களுடன் என் விடுமுறையில் பார்த்து ரசித்தவையை பதிவிடுவதுடன் நண்பர்கள் வலையில் முடிந்தவரை பின்னூட்டத்துடன் சந்திப்பேன் நட்புடன்
       தனிமரம் நேசன்!
 இதோ புதிய பதிவு எல்லாரும் கொண்டாட

கடல் ஓரம் வாங்கிய காற்று!

 ..கடற்கரைக் கிராமத்தில் பிறந்த எனக்கு கடல்காற்று, சோகிபொறுக்கியது ,  கடலில் நீச்சல் அடித்த சுகமான
இளமைக்காலங்கள் என பலதும்  தொலைத்து  இப்போது புலம்பெயர் வாழ்வில் இயந்திரமாக ஓடுகின்றேன் .

பொருளாதார சுமைகள் மூச்சு முட்டினாலும். இரத்த அழுத்தம் ,

அதிகமானால் வேற இடத்தை மாற்றினால்.  கொஞ்சம் மனதிற்குப் புத்துணர்ச்சி வரும் .அதனால் பலகடல்களை நாடி ஒடிப்போய் காற்றுவாங்குவதும் கடலில் புரள்வதும் மனதிற்கு சாந்தியாகும் .

எதுவும் அருகில் இருக்கும் போது அதன் தாற்பரியம் புரிவதில்லை.

 நீண்ட தூரம் பிரிந்து வந்த பின்தான் இயற்கையின் கொடை தெரிகின்றது.
அடிக்கடி சென்னை போகும் என் பயணம் மெரினா கடற்கரையை பார்க்காமல் முடிவதில்லை.

கடற்கரையில் மாலையில் காலாறா நடப்பதும் சந்திரோயத்தை காண்பதும் சில பாடல்களுடன் மணலில் குழிதோண்டுவதும் மனதினை மீண்டும் இளமைக்கால்ங்களுக்கு இழுத்துச் செல்லும் ஒரு மார்க்கம்.


 இந்த முறை மனைவியுடன் கொஞ்சம் அதிகமாக கடலைப் பார்த்த வண்ணம் கடலை போட்டேன் .

எப்போதும் மெரினா பீச்ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாற்றத்தை எனக்குத் தந்து கொண்டிருக்கின்றது .

சுண்டல் விற்கும் சின்னப் பொடியன் .


தன் வாழ்வின் வெளிச்சம் தெரியாமல் ஊருக்கு வெளிச்சமான எதிர்காலத்தை துல்லியமாக சொல்வதாக சொல்லும் நரிக்குறவர் வழித்தோன்றல் ஜக்கம்மா சாஸ்த்திரம் .
நானும் பார்த்தேன் எனக்காக இல்லாட்டியும். ஒரு அன்புத்தாயை அலட்சியம் செய்ய மனசு வரவில்லை .

அதற்காக.

  ஆனாலும் அந்த தாயின் பில்டாப்பூ கொஞ்சம் ஓவர்தான் என் தலையில் ஐஸ் வைத்தா! தம்பி மகராஜான் ஒரு ஹோட்டலுக்கு முதலாளி ஜோகம் இருக்கு.

 என்று ஏற்கனவே சொந்த தொழில் செய்வது இல்லை என்று இருக்கும் எனக்கு இது தேவையா?

மனைவியைப் பார்க்கச் சொன்னேன் அவளோ தும்புத்தடி பிஞ்சு போய்விடும் என்றாள் .

ஆத்தா ஆளைவிடு என்று எஸ்கேப் ஆகி அடுத்த பக்கம் போனேன் என் பிரியமான பால் கோப்பிக்காரர் இருந்தார் .

கடல்கரைக்காற்றுக்கு இதமான சூடு வாங்கிக்கொண்டு நடந்தால் முன்னம் இதில் ஏறிய குதிரை அருகில் வந்தது ஒரு சுத்து சுத்த ஆசைதான் ஆத்துக்காரியை கேட்டேன் ஒரு ரவுண்டு போக!

 மொட்டையனுக்கு கொழுப்புக் கூடிப்போச்சு இன்னும் சின்னப்பிள்ளையோ?

 பிரான்ஸ்க்கு கைபேசி எடுக்கட்டா மாமிக்கு  என்று அம்மாவை ஞாபகம் ஊட்டினால். ஆத்தா!  வீட்டில் உதவாக்கரை இதுவேறா என்று என் ஆசைக்குப் போட்டேன் தடா சட்டம்,.

.அங்கிருந்து ஒரு சில நிமிட நடையில் கடல் அலைகளுக்கிடையில் இன்னும் ஒலிக்கின்றது.

 கடல்மீன்கள்  பாடல்  தாலாட்டுதே வானம் தல்லாடுதே மேகம்  அதையும் ரசித்து விட்டு நடந்தால் அருகில் என் செவியில் விழுந்த ஒரு சொல் திரும்பிப் பார்க்கின்றேன்!

.. தொடரும் காற்று

36 comments :

Anonymous said...

கடலை மனைவியுடன்னா ஒகே தான்...நல்லாயிருந்திச்சு...

மதுரன் said...

நீண்ட நாட்களுக்கு அப்புறம் வந்திருக்கிறீர்கள்

சாய் பிரசாத் said...

கடல் அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள் நண்பரே :)

Nesan said...

நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

இயந்திர வாழ்வில் மூச்சும் விடனுமே மதுரன். அதுதான் சிறிய விடுமுறைப்பயணம் போனேன்!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

நன்றி சாய்பிரகாஸ் உங்கள் இணைவுக்கும் கருத்துரைக்கும்.

மைந்தன் சிவா said...

பயபுள்ள சும்மா போகல ...விசயமாத்தான் போயிருக்காப்லே!!

Nesan said...

விடுமுறைக்கு மனைவியுடன்  கடற்கரைக்குப் போகாமல் கார்த்திகாவை டாவடிக்கப் போக நாங்க என்ன விஜய் ரசிகரோ மைந்தன் சிவா! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

செங்கோவி said...

தனி மரம் காத்து வாங்குதேன்னு பார்த்தா, நீங்க காத்து வாங்கப் போயிருந்தீங்களா..ஓகே..ஓகே!

ஆகுலன் said...

நல்லாத்தான் இருக்குது........
பயணம் எல்லாம் நல்லாதானே இருந்திச்சு.....

ஆகுலன் said...

//ஆனாலும் அந்த தாயின் பில்டாப்பூ கொஞ்சம் ஓவர்தான் என் தலையில் ஐஸ் வைத்தா! தம்பி மகராஜான் ஒரு ஹோட்டலுக்கு முதலாளி ஜோகம் இருக்கு.//

இதை மனதில் வைத்துக்கொண்டு முதலாளி ஆகி விடுங்க....

Nesan said...

நன்றி செங்கோவி அண்ணாத்தை உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .

Nesan said...

நல்ல இனிமையானதாக இருந்தது ஆகுலன் பயணம் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

ஆளை விடுங்க சாமி முதலாளி பதவி எல்லாம் முடியாது தனிமரம் இப்படியே இருக்கட்டும் ஜாலியாக!

மதுரை சரவணன் said...

nalla eluthi irukkeengka ...vaalththukkal

Nesan said...

நன்றி சரவனன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

துஷ்யந்தன் said...

பாஸ் நல்லாத்தான் காத்து வாங்கி இருக்கீங்க , அழகான எழுத்து..... வாழ்த்துக்கள் பாஸ்.

காட்டான் said...

என்ன மாப்பிள்ள போட்டோவெல்லாம் தலை கீழா இருக்குது.. மனிசி பக்கத்தில இருக்கான்னோன சமத்து பையனா நடந்திட்டு பிரான்ஸ்சுக்கு வந்தவுடன் எல்லாத்தையும் சேர்த்து போட்டுட்டியோ..!!??

பயண அனுபவங்கள் அருமை அதிலும் இந்தியாவில் கேட்கவா வேண்டும்.. இனி நாங்கள் பக்தி பரவச பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கலாமா..??

காட்டான் குழ போட்டான்..

காட்டான் said...

மைந்தன் சிவா கூறியது...
பயபுள்ள சும்மா போகல ...விசயமாத்தான் போயிருக்காப்லே!!

24 ஆகஸ்ட், 2011 9:53 am


மாப்பிள்ள இவரு பெட்டிய கொழுவி பத்து வருசமாச்சு நம்மளுக்குதான் புது மாப்பிள கணக்கா ரீலு விடுறார் ஏன்யா தனிமரம் உன்ர நாலாவது பிள்ளைக்கு என்ன பேரையா..??

Nesan said...

நன்றி துஷ்யந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

நன்றி காட்டான் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! படங்கள் ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்றுதான்!

Nesan said...

பப்ளிக்கில் காட்டான் இப்படி எல்லாம் உள்குத்து குத்தக்கூடாது ! தனிமரம் தாங்காது!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமை..
கடல் அனுபவம்..

Nesan said...

நன்றி வேடங்தாங்கள் கருன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

vidivelli said...

நீண்ட இடைவெளியின் பல அனுபவங்களோடு .....
நல்லாயிருக்குங்க...
வல்ல அனுபவப்பகிர்வு..
பாராட்டுக்கள்..

Nesan said...

நன்றி விடிவெள்ளி வருகைக்கும் கருத்துரைக்கும்!

புலவர் சா இராமாநுசம் said...

காணோமே என்று பார்த்தேன்
சென்னைக் கடற் காற்றும்
சிறப்பு! கண்டு களித்த
விதமும் சிறப்பே!

புலவர் சா இராமாநுசம்

Nesan said...

நன்றி புலவரே உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.s.FR said...

இந்த முறை மனைவியுடன் கொஞ்சம் அதிகமாக கடலைப் பார்த்த வண்ணம் கடலை போட்டேன்./// நல்ல எதுகை மோனையெல்லாம் வருகுது!கங்கிராட்ஸ்!

Yoga.s.FR said...

சும்மா கிடந்த சிங்கத்த சீண்டிப் பாத்திட்டீங்க!இனிமே விளைவுகளைப் பாக்கப் போறீங்க!§§§§§Nesan said...
எங்கே ஊடகப்பேச்சாளர் yoga.fr ஓட்டைவடையிடம் ஒடிவிட்டாரா! கும்மியடிக்க அவரை தனிமரம் விடாது கடிக்கும்!§§§§§"தனிமரம்"எப்படிக் கடிக்கும்?(எரிமலை எப்படிப் பொறுக்கும்?என்பது போல் இல்லை?)

Yoga.s.FR said...

சரிங்க,அது ஏன் திறந்த உடனையே பச்சப் பசேலுன்னு கண்ணப் பறிக்குது,உங்க ப்ளாக்கு?

Nesan said...

வாங்க யோகா.fr எப்படி நலம் தனிமரத்துடன் இணைவதில் மகிழ்ச்சி!
கடலை பார்த்ததில் எதுகை மோனை ஒடிவருகின்றது!

Nesan said...

தனிமரத்தில் அதிகம் கம்பளிப்பூச்சி( மசுக்குட்டி ) இருக்குது அதனால் கடிக்கலாம் யோகா தாங்குவீர்களா என்று பார்ப்பம்!

Nesan said...

தனிமரத்தின் வண்ணம் பச்சைதான் எங்கள்  ஊரில் யோகா அதனால்தான் கண்ணைப்பறிக்கின்றது. வருகைக்கு நன்றி!

சக்தி said...

hm... nalla vithyaasamaana muyarchi..

Nesan said...

நன்றி சக்தி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!