26 August 2011

காற்றின் மொழியே ..!

சில மொழி உச்சரிப்புக்கள் எவ்வளவு தூரத்திலும் காதில் விழுகின்ற போது ஒர் ஈர்ப்பு வருவது தவிர்க்க முடியாது !

அதுவும் தெரிந்த மொழியை பேசும் போது இன்னும் ஒரு சுகம் கூடவரும் .
அப்படித்தான் நானும் காற்றுவாங்கிக் கொண்டு செல்லும் போது நல்ல அழகு என சகோதர மொழி குரல் கேட்க நானும் திரும்பிப் பார்த்தேன் !

பீச்சுக்கு தாயகத்தில் இருந்து வந்திருந்த இரு சிங்களக் குடும்பத்தினர் கடல் அலையோடு விளையாடினார்கள். கம்பஹா மாவட்டத்தில் இருந்து அவர்களின் புதல்வி சென்னையில் நடக்கும் சிறுவர் விளையாட்டில் பங்கு பெற வந்திருந்தார்கள்

.மறுநாள் விளையாட்டு இன்று மாலையை சந்தோஸமாக கழிக்கவும்  குடும்பத்துடன் வந்திருந்தார் .மெரினாவிற்கு.

அவருடன் நானும் விடுப்புக்கு பேச்சுக் கொடுத்தேன்.

அண்ணா சுற்றுலா வந்தீர்களா சென்னைக்கு!?

மகளின் விளையாட்டைச் சாட்டி எல்லாரும் வந்தோம் !

பரஸ்பர அறிமுகத்தின் பின் எங்களின் உரையாடலை உங்களுக்காக.

சந்திரசிரி ஒரு சிறைச்சாலை கணக்காய்வாளர். யாழ் சிறை மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் கடமை புரிந்தவர். இப்போது அவிசாவளையில் கடமையாற்றுகின்றார் .

 நீங்கள் எங்கிருந்து வாரீர்கள். தம்பி?

நான் பிரென்ஸ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றன்.


சந்திரசிரி- இந்த புலம் பெயர் மக்கள் இன்னொரு யுத்தம் வரும் என்று நினைக்கிறார்கள் போல?

நேசன் - நிச்சயமாக இல்லை உங்களுக்கு சில தவறான எண்ணங்களை யாரோ திணிக்கிறார்கள்!

சந்திரசிரி- உண்மையில் எனக்கு இறுதியுத்தம் மனவேதனையைத் தருகின்றது .இதன் பிறகாவது நாம் ஒரே நாடு என்று வளர்ச்சிப்பாதையில் போகனும்  இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்க்ள்.?

நேசன் - உறவுகளின் பிரிவையும் சோகங்களையும் இழப்புக்களையும் மறக்க முடியுமா? இன்னும் நமக்கு விடிவு வரவில்லை .! இத்தனை துயரங்கள் சொத்து இழந்து ஒவ்வொரு குடும்பமும் பலதிக்கில் பிரிந்து வாழும் வேதனையை அனுபவித்தால் தான் புரியும் ஒரே நாடு என்ற கொள்கை வெறும் கோஸம் அல்ல நமக்கு ஏதாவது கிடைக்கனும் நிம்மதியாக வாழ.!

சந்திரசிரி-  இப்படியே அடிபடுவதுதான் தீர்வா தம்பி ?
நிச்சயமாக இல்லை.!நீங்கள் நல்லா சிங்களம் பேசுகின்றீர்கள் ஏதாவது அரச உத்தியோகம் பார்த்தனீங்களோ?

என்னைப் பார்த்தா ரத்துரோசா கமல அத்தாராட்சியா பொய் சொல்ல?!புலி என்றே சந்தேகத்தில் பாதி படிப்பு முடிக்கல!

சந்திரசிரி- இப்ப நாடு அமைதியை நோக்கிப் போகின்றது எப்ப தாய்நாடு வரும் எண்ணம்?

எல்லாரும் அப்படித்தான் சொல்லிரீங்க! இன்னும் வெள்ளைவானும் ஊடக சுதந்திரமும் இல்லையே !
!நாட்டுக்கு வாரவங்க விமான நிலையத்திலே காணமல் போறாங்களே!


சந்திரசிரி  -வெளிநாட்டில் இருந்தாலும் நல்லா உள்ளூர் விடயங்களை அவதானிக்கிறீங்க போல சிவா!

ஒவ்வொரு நாட்டுக்காரனும் தன் நாட்டின் மீது ஒரு பாசமும் பற்றும் வைத்திருப்பார்கள் என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்தந்த நாட்டில் அவனும் வெளிநாட்டு வாசியே!

சந்திரசிரி - உண்மைதான் சிவா நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன் !அவுஸ்ரேலியாவில் வாழும் என் தம்பியும் உங்களைப் போல்தான் சொல்லுவான்!

சந்திரசிரி - சென்னை வரும் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது இங்கு இருக்கும் சிலர் காடைத்தனமாக  நடந்து கொள்வது  சரி என்று எண்ணுகின்றீர்களா தம்பி?

நிச்சயமாக கண்டிக்கணும். சாதாரன மக்கள் மீது செய்யும் வன்முறை கலாச்சாரம்  எந்த நாட்டில் என்றாலும்  எனக்கு உடன்பாடு கிடையாது  .நம்நாட்டிலும் ஜே.வி.பி யும் சிங்கள உறுமையையும் ஏன் குடுராஜாக்களும் சேர்ந்து  செய்கிறார்கள் அண்ணாவுக்குத் தெரியாதோ?


சந்திரசிரி- மிகவும் சூடாக இருக்கிறீங்க போல தம்பி! அரசியல் மீது வெறுப்போ?

அரசியல் மீது வெறுப்பு இல்லை. அரசியல் வாதிகளிலும் அரச அதிகாரிகள் மீதும் தான் கோபம் வருகின்றது அண்ணா! நம்நாட்டை இப்படி சீரலித்ததால் நாம் எத்தனை நாடுகளில் சீரலிகின்றோம்!

 சந்திரசிரி- உண்மைதான் சிவா!

 சந்திரசிரி- இப்போது ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கின்றது நீங்கள் என்ன வேலை செய்கின்றீர்கள்?

முன்னர் போல் இல்லை !வேலை தேடுவது மிகவும் சிரமம்! நம்மவர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள்!
நான் ஒரு சமையல் உதவியாளனாக இருக்கின்றேன்!

 சந்திரசிரி- நல்ல சமையல் செய்வீர்கள் போல மனைவிக்கு வேலைச் சிரமம் இல்லை என்கிறீர்கள்?

அப்படி எல்லாம் பெரிசாக சமைக்கமாட்டன் ஆனால் இதுவரை யாரும் என் சாப்பாட்டை சாப்பிட்டு மரணிக்கவில்லை?

இருவரும் கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தோம்!

நாட்டுக்கு  ஒரு நாள் கண்டிப்பா வருவன் உங்களை தேடி வந்து சந்திப்பன் !
சந்திரசிரி!! உங்களைச் சந்தித்தது மிகவும் சந்தோஸம்  அவரிடம் இருந்து விடை பெற்றேன் !

இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி  சிறிது தூரம் கடந்த பின் என்னிடம் சொன்னால் இப்படி அவருடன் கொழும்பில் கோல்பேஸ் கடற்கரையில் நின்று  பேசினீங்கள் என்றாள் நாலாவது மாடியில்  இருந்திருப்போம் இரண்டு பேருமாக  இல்லை என்றாள் வெள்ளைவான் வந்திருக்கும். வாயை வைத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே! பாருங்கள் நண்பர்களே சுதந்திரமாக பேசக்கூடமுடியுது இல்லையே நண்பர்களாக?
இது யாரின் பிழை?

காற்று வீசும் ...

23 comments :

விக்கியுலகம் said...

மாப்ள உருக்கமான பதிவு....இந்த நிலை மாறும் நண்பா...விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன் பகிர்வுக்கு நன்றி!

மைந்தன் சிவா said...

சந்திரசிறி என்று யாழ் மாவட்டத்துக்கான இராணுவ கட்டளைத்தளபதி ஒருத்தரும் இருந்தவர்!!

ஜீ... said...

//மைந்தன் சிவா சொன்னது…
சந்திரசிறி என்று யாழ் மாவட்டத்துக்கான இராணுவ கட்டளைத்தளபதி ஒருத்தரும் இருந்தவர்!!//
ஆமா! அவர்தான் இப்போ வடமாகாண ஆளுநர்!

ஜீ... said...

நல்ல பதிவு பாஸ்!

ஆகுலன் said...

மனிதர்களில் பல விதம்..............
ஒரே கடற்கரையில தான் நிக்குரியல்...

Nesan said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

சகோதரமொழியில் ஒரே பெயர் பலருக்கு வரும் ஆனால் பரம்பரையின் முதல் எழுத்து மட்டும் மாறும் என்பது சூறப்புயல் சிவாக்குத் தெரியா ஆடிட்டர் சார்!

Nesan said...

ஆளுனரையும் இரானுவத்தளபதியையும் சாதாரன மனிதர்கள் சந்திக்க முடியுமா ஜீ !வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Nesan said...

நன்றி ஆகுலன் வருகைக்கும் கருத்துரைக்கும் கடல்கரை என்பது மனிதர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி வாழ்வின் தத்துவத்தை கடல் அலைகள் புரியவைக்கக் கூடிய இடம் அதுதான் காற்றை அதிகம் வாங்குகின்றேன்!

MANO நாஞ்சில் மனோ said...

இந்நிலை மாறி விடியல் கண்டிப்பாக வரும் மக்கா நம்பிக்கை கொள்வோம்...

Nesan said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

துஷ்யந்தன் said...

பதிவு உங்கள் நல்ல என்னத்தை காட்டுகிறது.மொழி இனம் மறந்து ஒற்றுமையாக இருக்கும் காலம் மிக விரைவில் வரும் பாஸ்

Nesan said...

நன்றி துஷ்யந்தன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நிலை மாறும். விடியல் வரும் சகோ..

Nesan said...

நன்றி வேடங்தாங்கள் கருன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

இந்த நிலை மாறும்.. உங்களைப்போல் எண்ணற்றோர் என் நண்பர்கள்..உறவுகள்...

Nesan said...

அந்த நம்பிக்கையில் தான் நாங்களும்  ஏதிலியாக இருக்கின்றோம் நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

காட்டான் said...

மாப்பிள நீ எங்க போனாலும் உன்ன சகோதர மொழிக்காரங்க விடமாட்டாங்கபோல..!? இல்லாட்டி நீயா போய் ஒட்டிகிறாயா..?


காட்டான் குழ போட்டான்..

Nesan said...

காட்டான் வாங்க சகோதரமொழிக்காரர்கள் பலர் என் நட்பு வட்டத்தில் இருப்பதால் தேடிப்போவதும் தேடிவருவதும் இயல்பான ஒன்று வருகைக்கு நன்றி!

கவி அழகன் said...

அருமையான உரையாடல்

Nesan said...

நன்றி கவி அழகன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

மதுரை சரவணன் said...

good post..vaalththukkal

Nesan said...

 நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!மதுரைசரவணன்!