07 September 2011

கன்னி.. காதலி!!

 கிறிஸ்தவர்களின் தேவாலயம் போகும் பழக்கம் .என்னுடன் உயர்தரத்தில் படித்த தோழியின் நட்பாள் ஏற்பட்டது.

 எனக்கு தேவையான சில உரைகளை (notes) எழுதுவதற்கு அவளிடம் கொடுத்தால் புன்னகையுடன் விரைவாக எழுதித்தருவாள்.

 .அவள் தேவாலயத்தாள் நடத்தப்படும் விடுதியில் தங்கிப் படித்தவள் .அதனால் அவளைப் பார்க்கனும் என்றாள்  விடுதிக்குப் போக முடியாது .

.தேவாலயத்தில் ஞாயிறுப் பொழுதில் அங்கே குழுவாகப் பாடுவோரில் அவளும் தேவ கீதம் பாடுவாள் .அது முடியும் வரை நானும் காத்திருப்பேன் .

என்னுடன் படித்த நண்பர்களுக்கு நான் தேவாலயம் ஏன் போகின்றேன் என்று குழம்பிப் போய் இருந்தார்கள்.

ஆனாலும் என் மனதில் எந்தச் சலனமும் இல்லை அவளிடமும் தான் காரணம்!அவளின் மனதில் கன்னியாஸ்திரியாகனும் என்றே ஆவலுடன் அந்தப் பாதையில் போய்க்கொண்டிருந்தால்.

 .உயர்தரத்தின் பரீட்சை நேரத்தில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் நாங்களும் வெளியேறினோம்.

அதன் பின் நான் அவளைக் கண்டதே இல்லை .
இன்று அவளின் லட்சியம் நிறைவேறியிருக்குமா? இல்லை கால ஓட்டத்தில் இல்லத்தரசியானாலா தெரியாது. ?

அன்று தொடங்கிய என் தேவாலயம் போகும் .வாடிக்கை தொழில் நிமித்தம் கொழும்பு வந்த பின் கொச்சிக்கடை அந்தோனியார்,கொட்டாஞ்சேனை ,மட்டக்குளி யாழ்ப்பாணம்,வவுனியா என பல தேவாலயங்களுக்குப் போக காரணமானவள்.

எங்கு போனாலும் அந்தோனியாரிடம் போகும் போது மனதில் ஏதோ ஒரு அமைதியிருக்கும். இப்படி மனதில் தேவாலயம் போகும் ஆசையை ஒரு பாடல் சொல்லும் அழகு தனித்துவமானது.

நான் மலேசியாவில் இருந்த போது(  இங்கே சென்றாள் அங்கு ஏன் போனேன் என்ற விளக்கம் கிடைக்கும்!)
http://nesan-kalaisiva.blogspot.com/2011/04/blog-post.html?m=0
.இப்பாடலை அங்கு இருக்கும் மலேசிய வானொலியில் (24 மணித்தியாலம் சேவைபுரிகின்றது) பின்னிரவில் கடமையாற்றிய S.R. பாலசுப்பிரமனியம் என்பவர் ,ஒலிபரப்பிய பாடல்தான் இது. .

இதனை பின் தாயகம் சென்றதும் தாய் வானொலிக்கு அஞ்சல் போட்டேன் நேயர் விருப்பத்திற்கு .
தீர்வுத்திட்ட பொதிபோல் பாடல் வரவில்லை .

பின் ஒரு நாள் கொழும்பு சர்வதேச வானொலியில் அன்பு அறிவிப்பாளர் முத்தையா ஜேகன் மோகன் ஒலிக்கவிட்டார் சில தடவை.

 மலையகத்தை பூர்வீகம்கொண்ட இவரின் திறமை பாராட்ட வேண்டியது. கண்டிசேவை ,மலையகசேவை ,வர்த்தக சேவையில் பலநிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்து  நடத்துவார்.

 விடைபெறும் போது அவரின் அறிவிப்பு  உச்சஸ்தாயில் போய் குறியிசையுடன் விடைபெறும் தருனம் நானும் அவர் போல் முயற்சி செய்து பார்ப்பேன் அன்நாட்களில்.

 தொலைபேசி மூலம் பாடல் கேட்கும் நிலைவந்த பின் வானொலியில் அவருடன் சிலதடவை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றேன் .இப்பாடலை எனக்காக அவர் ஒலிக்கவிட்டு என் அபிமானத்தை
அதிகமாக்கினார்.

புலம் பெயர்ந்த பின் இப்பாடல் என் இசைத் தொகுப்பில் தொடர்ந்து இடம்பிடித்திருக்கின்றது.


இப்பாடல் 1989 இல் வெளியான அறுவடைநாள் படப்பாடல்.  அதில்  பிரபு நாயகன் .
இப்படம் மூலம் தமிழ்திரை உலகிற்கு ,பிரபுவின் அண்ணன் ராம்குமார்+பல்லவி R.P.விஸ்வம்  அறிமுகமானவர்கள்.

கிராமத்துக் கதைக்களம் எனக்கு மிகவும் பிடித்த படம்.
 இதில் வரும் கதாநாயகி  போல்தான் என் தோழி ஸ்டெல்லா.
 இப்படத்திற்கு  இசையானி இசை மீட்ட தம்பி கங்கை அமரன் அழகு தமிழை எதுகை மோனையுடன் கவிப்பூங்கா வடித்திருப்பார்.

 கங்கை அமரன் அதிகம்  பல்திறமை இருந்தும் ஏனோ பெரிதாக வெற்றியடையவில்லை. நல்ல பலபாடல்கள் இவரால் இயற்றப்பட்டிருக்கு .

.சின்னக்குயில் சித்திரா இப்பாடலை மிகவும் ரம்மியமாக்கிப் பாடும் போது அழுதுவிடத்தோன்றும் மனது அந்தளவு இப்பாடலில் கருத்தாளம் இருக்கு

!ஒரு வழிப்பாதை !
இதயங்கள் எல்லாம் மறப்பதற்கு! மறந்தால் தானே நிம்மதி!! என்ற வரிகளில் கங்கை அமரன் திறமை மெச்சலாம் இன்னொரு வரியில் .
பிரிந்தே செல்லும் நதிக்கரை போல் தனியே!
நான் ஒரு இடிதாங்கி , !
அழுதிடத்தானோ கண்களில் நீருக்குப் பஞ்சம் !நானோர் கன்னி !காதலி!! என்ற வார்த்தையாலங்கள் ஒரு பாடலின் தரத்தை புடம் போடுது.

இசையானியின் மென்மையான இசையில் அவர்  தொடங்கிவைக்க சின்னக்குயில் கீதம் இசைக்கும் அழகு எனக்குப் பிடித்தது.

சின்னக்குயில் நம் ராசாவைப் பற்றி  சொன்னது

ஒலிவடிவமாக இதோ பாடல் முழுமையாக!

ஒலி/ஒளியாக படத்தில்  பாடல்காட்சி  முழுமையில்லை  இதையும் ரசியுங்கள்!

தனிமரம்  உங்களுக்கு லக்ஸ்பீக்கர் (குழாய்ப்புட்டு)  பூட்டியிருக்கு ! இது தனிமரத்தின் பண்பலையில் என்விருப்பமாக!

50 comments :

ஆகுலன் said...

இண்டைக்கு எனக்கு தான் கோப்பியா,,,,

நல்ல பாடல் கேட்டு கொண்டு இருக்குறேன்...

ஆகுலன் said...

பதிவின் தலைப்பு அருமை...

அப்ப நீங்களும் அறிவிப்பாளர் தானா.....

ஆகுலன் said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

/// கிறிஸ்தவர்களின் தேவாலயம் போகும் பழக்கம் .என்னுடன் உயர்தரத்தில் படித்த தோழியின் நட்பாள் ஏற்பட்டது.///

நீங்க என்னைவிட எவ்வளவோ பரவாஇல்லை நான் எனது மதக் கடவுளையே ஒரு பெண்ணால்தான் கும்பிடத்தொடங்கினேன்.ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

//என்னுடன் படித்த நண்பர்களுக்கு நான் தேவாலயம் ஏன் போகின்றேன் என்று குழம்பிப் போய் இருந்தார்கள்.///

ஹி.ஹி.ஹி.ஹி. பசங்க பெரிய துப்பு துளக்கி திரிஞ்சு இருப்பாங்க இல்ல....

K.s.s.Rajh said...

///ஆனாலும் என் மனதில் எந்தச் சலனமும் இல்லை அவளிடமும் தான் காரணம்!///

நம்பலாமா?ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

///இப்படத்திற்கு இசையானி இசை மீட்ட தம்பி கங்கை அமரன் அழகு தமிழை எதுகை மோனையுடன் கவிப்பூங்கா வடித்திருப்பார்.///

இப்படியான பாடல்கள் எழுதிய கங்கை அமரன்....ஒரு பாடல் எழுதினார் ......ஊ.ஊ.ஊ..ஊ..கோடான கோடி .........குஸியாகும் வாடி.....குதிப்போம் விளையாடி....ஊ.....ஊ...ஊ.........ஊஉ.............இந்தப்பாடலும் சேம கிட்டுதான் போங்க.......ஹி.ஹி.ஹி..ஹி

கங்கை அமரன் பாடல் ஆசிரியராக அதிகம் பிரபல்ய மடையாததுக்காரணம் அவர் பல்துறைதிறமை வாய்ந்தவராக இருந்தால்..அவரது கவனம் படம் இயக்குவதில் சென்றுவிட்டது.வெற்றிகரமான இயக்குனராக் சில கால இருந்தார் அல்லவா.காலத்தால் அழியாத பல படங்களைத்தந்தவர் அதில் முக்கியமானது கரகாட்டக்காரன் மறக்கக்கூடிய படமா அது...

ஆனாலும் பல சிறப்பான காலத்தால் அழியாத பாடல்களையும் எழுதியுள்ளார்.இன்னமும் எழுதுகின்றார்.

அப்பறம் இன்று இரவு ஒரு செம கும்மு கும்மும் பதிவு வெளியிடுகின்றேன் நேரம் இருந்தால் மிஸ் பன்னாமல் வாங்க

Nesan said...

வாங்க ஆகுலன் தம்பி முதலில்  வந்திருக்கிறீங்க பால்கோப்பி குடியுங்கோ !
பாடலைத் தொடர்ந்து கேளுங்கோ!

Nesan said...

நன்றி ஆகுலன் வருகைக்கும் கருத்துக்கும்! அறிவிபாளர் ஆக முயன்றேன் முடியவில்லை  என்பதே பதிலாக இருக்கும்!

Nesan said...

நன்றி கே.எஸ்.எஸ் ராச் வருகைக்கும் கருத்துக்கும்! கோயில் போவது அமைதியைத் தேடி மட்டுமல்ல! ஆட்களையும் சந்திக்கத்தானே சிலர் போவது!

Nesan said...

நண்பர்கள் நோண்டுவதில் கில்லாடிகள் தானே!

Nesan said...

நிச்சயமாக நம்பலாம் புனித சேவைசெய்யும் மனதைக் குழப்பக்கூடாது என்பதில் உறுதியுடையவன்!

Nesan said...

கொக்கரக்கோ கூவுற சேவலுக்கு என்ற கில்மா பாடலும் எழுதியவர் நிலவு தூங்கும் நேரல் நினைவு தூங்கிடாது என்றும் எழுதவும் செய்தவர்  கவிஞர் என்றாள் அப்படியும் செய்தால்தான் திரையில் நிற்கலாம்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராச் நிச்சயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
வலையுலகில் வருவேன்.

ஜீ... said...

//எனக்கு தேவையான சில உரைகளை (notes) எழுதுவதற்கு அவளிடம் கொடுத்தால் புன்னகையுடன் விரைவாக எழுதித்தருவாள்//
பார்ரா! இப்படியெல்லாம் இருக்கிறார்களா...!
நல்ல பதிவு பாஸ்! அந்தப்பாடல்களை வார இறுதியில் வீடு சென்றதும்தான் கேக்கணும்!!

Nesan said...

எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு சிலர் முன்வருவார்கள் நட்புடன் நிரூபன் ,ஹேமா உதவுவது போல் ஜீ!
பாடல்கேட்டுவிட்டு மறக்காமல் அஞ்சல் அட்டை போடுங்கள் சீச்சீ பின்னூட்டம் போடுங்கள் ஜீ/ ஹீ ஹீ/

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ!

உங்கள் மனதைக் கவர்ந்த ஒரு பாடலுடன் மேலும் சில சுவையான தகவல்கள் சொல்லி, அழகான பதிவு போட்டிருக்கீங்க! வாழ்த்துக்கள் சார்!

MANO நாஞ்சில் மனோ said...

மனசை பிசைந்தப் பதிவு நேசன், உங்க தோழி எங்கிருந்தாலும் வாழ்க....

MANO நாஞ்சில் மனோ said...

பாடல் மிகவும் அருமை...

செங்கோவி said...

உண்மை தான், கங்கை அமரன் நல்ல திறமைசாலி...ஆனாலும் ஏனோ அதற்குரிய மரியாதை அவருக்கு கிடைக்கவில்லை.

Nesan said...

வருக வருக ஐடியா மணி அவர்களே! ஒரு பால்கோப்பி குடியுங்கோ!
தனிமரத்துடன் இணைந்தது மகிழ்ச்சி!
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் நன்றி!  

Nesan said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நண்பியின் நினைவுகளை மீட்டிப் பார்த்து,
அவள் நினைவினைத் தூண்டும் பாடலோடு ஒரு பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

ரசித்தேன்,
என்ன சொல்ல..,.எம் காலம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டு விடுகின்றதே.

Nesan said...

வாங்க பாஸ் நிரூபன் !
பாடல் ரசித்து கருத்துடன் வந்ததற்கு நன்றிகள்! காலம் மறக்கட்டும் நினைவுகளை!

Anonymous said...

நல்லாயிருந்தது...அமரன் வாயால் கெட்டவர்...

துஷ்யந்தன் said...

நல்ல பகிர்வு பாஸ்,
மேலே நண்பர் சொன்னது போல் கங்கை அமரன் திறமை இருந்தும் தன வாயால் கெட்டவர், இன்னும் அவர் வாய் அடங்கவில்லை என்பது அவர் கலந்துகொண்ட சமீபத்திய விழாக்கள் சாட்சி.

துஷ்யந்தன் said...

நீங்கள் தந்த பாடை இப்போதுதான் முதல் முறையாக கேட்குறேன், நன்று

துஷ்யந்தன் said...

பாஸ் நீங்கள் ஒரு பாடல்களின் காதலன் பாஸ், ஹீ ஹீ

துஷ்யந்தன் said...

உங்கள் தோழி பற்றிய பகிர்வு அழகு,
அந்த தோழி திருமதியானாரா?? கனியாச்ரி ஆனாரா?? என்பதை
அறியும் போது ஒரு பதிவு போடுங்கள், எல்லாம் ஒரு ஆவல்தான் ஹீ ஹீ

துஷ்யந்தன் said...

///ஆனாலும் என் மனதில் எந்தச் சலனமும் இல்லை அவளிடமும் தான் காரணம்!///


உலக மகா ஜெனங்களே..
இவர் சொல்லுறதை.. நாங்க நம்பிட்டோம் ஹீ ஹீ

காட்டான் said...

வணக்கமையா உங்கட அனுபவங்களை சுவையா எழுதியிருக்கீங்க.. என்டாலும் அந்த நற்ப இவங்கெல்லாம் சந்தேகமா பாக்கிறது எனக்கும் சந்தேகத்த கொடுக்குதையா..!!? அப்பிடி ஒண்டும் இல்லைன்னு நீங்க அறிக்கைவிட்டா நாங்க நம்போனுமாங்கோ..!!??

காட்டான் said...

வணக்கமையா உங்கட அனுபவங்களை சுவையா எழுதியிருக்கீங்க.. என்டாலும் அந்த நற்ப இவங்கெல்லாம் சந்தேகமா பாக்கிறது எனக்கும் சந்தேகத்த கொடுக்குதையா..!!? அப்பிடி ஒண்டும் இல்லைன்னு நீங்க அறிக்கைவிட்டா நாங்க நம்போனுமாங்கோ..!!??

Nesan said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துக்கும்!கலைஞர்களுக்கு இருக்கும் வித்துவச் செருக்கு அமரனுக்கு அதிகம் என்கிறீர்கள்!

Nesan said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துக்கும்!கலைஞர்களுக்கு இருக்கும் வித்துவச் செருக்கு அமரனுக்கு அதிகம் என்கிறீர்கள்!

Nesan said...

நன்றி துஷ்யந்தன் வருகைக்கும் கருத்துக்கும்!கலைஞர்களுக்கு இருக்கும் திறமையில் சிலர் சபை மரபை தழ்த்தி விடுவார்கள் அவர்களில் ஒருவர் அமரன் என்கிறீர்கள் .காலம் அவரை நல்ல கலைஞராக பதிவு செய்யட்டும்!

Nesan said...

பாடல் வெளியாகிய காலத்தில் பிறந்த நடிகையின் மகளும் திருமணம் முடித்துவிட்டாள் காலம் பல நல்ல பாடல்களையும் வெளிச்சம் போடாமலே ஒதுங்கிவிட்டது நடிகையின் மகள் போல்!

Nesan said...

பாடல் ரசிகன் எனலாம் காதல் ஓடிவிடுவான் சமயத்தில் வேலை முடிந்ததும் கூடவருவான் ரசிகன்! ஹீ ஹீ

Nesan said...

மீண்டும் தாயகம் போய் அறிந்து வந்தால் பதிவு போடுகின்றேன் துஸ்யந்தா! 

Nesan said...

காட்டான் நட்பை புரிந்து கொள்வார்கள் சில்லரைகள்தான் குழுங்கும்  அதற்காக அறிக்கைவிடமுடியாது .நன்றி வருகைக்கும் கருத்துக்கும் காட்டான்!

M.R said...

பாடல் நன்றாக உள்ளது .சில நட்பு
மனதில் என்றும் நீங்காத பசுமையாய் இருக்கும் நண்பரே.

பகிர்வுக்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் எட்டு

சி.பி.செந்தில்குமார் said...

இசை!!!!!!!!!

கவி அழகன் said...

அருமை பாடல் இனிமை

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் M..R 

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் சி.பி!

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் கவி அழகன்!

அம்பாளடியாள் said...

நட்பின் பசுமையான நினைவுகளோடு வெளியிட்ட பாடல்கள்
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .உங்கள் வருகையினை
எதிர்பார்த்து நிக்குறது சகோ என் தளம் .வந்தால் மறக்காமல் உங்கள்
ஓட்டைப் போட்டுவிடுங்கள் சகோ .

Nesan said...

நன்றி அம்பாளடியாள் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

சீனு said...

அனைவரையும் இந்த பாடல் ரசிக்க வைப்பதில் வியப்பில்லை...

தனிமரம் said...

நன்றி சீனுசார் வருகைக்கும் கருத்துரைக்கும்.