12 September 2011

மதுரை உலா!

மதுரைக்குப் போகலாம் விடுமுறையில் என்ற என் ஆசைக்குக் காரணம் மதுரையில் மல்லிப்பூ வாங்க அல்ல .

மதுரையின் சிறப்புக்களை அறிந்து கொள்வதுடன் .பார்த்தும் விடனும் என்ற ஆவல்.

 தூங்காத நகரம் மதுரைக்கு இலக்கியம், ஆன்மீகம், அரசியல் ஏன் ரவுடிசம் எல்லாத்திற்கும் தனி இடம் உண்டு .

மதுரையில் பார்க்க பல இடங்கள் இருந்தாலும். பலதடவை தனியாகப் போயிருந்த போது எப்படியும் மனைவியையும் கூட்டியந்து காட்டனும். அன்னையையும் பார்க்கவைக்கனும் என்ற உள்ளூணர்வு ஏற்படும்.
 அன்னையின் வதிவிட அனுமதி முடியவில்லை என்பதால் இம்முறை மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து பயணித்தேன்.

 கோயம்பேடு பஸ்தரிப்பில் மதுரைக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் ஏறினோம்.

 நல்ல வெயிலில் அவர்கள்  வரும் வராது என்பது போல் குளிர்சாதனத்தை இயக்கவில்லை .என்ன செய்வது ஏறியபின் இறங்கவா முடியும்?(அண்ணா மனோ இந்த ஹோட்டல் பேரணியூரில் இருக்கு சாப்பாடு மிகவும் பேஜார் உங்க வாளை ஒருக்கா பட்டையை த்தீட்டுங்க சார்)
 அதற்காக அண்ணன் அழகிரியிடமா போகமுடியும் அட்டாக் பண்டியை விட்டு பஞ்சாயத்துப் பண்ணு என்று சொல்ல.  அதிகமன உளைச்சலுடன் எங்களின் பயணம் மதுரையை இரவுப் பொழுதுடன் தொடங்கியது

. மதுரை பேருந்து நிலையைம் மிகவும் சுறுசுறுப்புடனும் துப்பரவாகவும் இருந்தது. அங்கிருந்து ஆட்டோவில் நாம் மதுரையில் குடிகொண்டிருக்கும் தாய் மதுரை மீனாச்சியை தரிசிக்க அருகில் இருக்கும் ஒரு வாடகை விடுதியில் தங்கினோம்.

 தமிழக்கத்தில் தங்கும் விடுதி எங்கிலும் இலங்கை என்றால் ஒசாமா பின்லாடனைப் பார்ப்பது போல் கடவுச் சீட்டை பலதடவை புரட்டிப்பார்ப்பது மட்டும் இன்னும் மாறவில்லை.

 காரணம் எனக்கும் புரியவில்லை. ஒரு வேளை அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதாலா?

சென்னையை விட மதுரையில் கொசுத்தொல்லை மிகக்குறைவு.

  இரவுப் பொழுதில் நல்ல இட்லி குஸ்பூவைப் போல் குளுகுளு என்று இருந்தது. மிகவும் ரசித்துத்துச் சாப்பிட்டோம் இட்லியை.

 சாப்பிட்ட பின் கோப்பி குடிக்கும் பழக்கம் எனக்கு எப்போதும் உண்டு அதற்காக பலகடைகளில் சாப்பிடாமல் வருவதும் உண்டு.

 இரவு 8 மணியின் பின் கோப்பி இல்லையாம் அதுக்காக டாஸ்மார்க்கா  போகமுடியும்

 . சாப்பிட்ட உணவகத்தில் விசாரித்த போது  அருகில் ஒரு கோப்பி/பால் / சாயாவிற்கு என்றே தனிக்கடை இருக்கு என்றார்கள். உண்மையில்  நல்ல கோப்பி மதுரையில் குடித்தேன்.

விடுதியில் காவலாளியாக இருப்பவர் நம்நாட்டைச் சேர்ந்தவர் 15 வருடமாக மதுரைவாசியாம்.(மதுரைநாயக்கர்- பற்றிய விளக்கம் இங்கே  பார்க்கலாம்-http://naickernaidu.blogspot.com/2011/05/blog-post_7271.html)

 தாய்நாட்டை விட்டுவந்த வலிகள் மட்டும் எல்லாருக்கும் ஒன்று போல்!  என்ன செய்வது என்ற கேள்வியைத் தவிர பதில் இல்லை..!
 
முன்னர் பெரியவர்கள் சொல்வார்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று,

 இப்ப எல்லாம் சின்னத்திரையும் சினிமாவும்  கணனியும் பலரை வீட்டிலேயே முடமாக்கிவிட்டது. 

எனக்கு எப்போதும்  ஆன்மீகத்தில் தனியான ஆர்வம் உண்டு .

மதுரை மீனாச்சியை பார்க்க பலதடவை முயன்றும் குழுவாக செல்லும் பயணங்களில் அவர்கள் இங்கு போவதை விரும்பமாட்டினம் அதனால் இம்முறை தனியாக மனைவியுடன் மதுரையில் முதலில் மீனாட்சியை தரிசிக்க .நினைத்து.

மறுநாள் அதிகாலை5.30 உள்நுழைந்தோம் .நாங்கள் உள்நுழையும் தருணம் நடைதிறந்து அதிகாலைப் பூசை ஆரம்பமாகியது .அருகில் இனிய கதாப் பிரசங்கம்  ஒலிபரப்பிக்கொண்டிருந்தது என் நினைவில் வசந்தா வைத்தியநாதனும்,க.நாகேஸ்வரனும் ..ஞாபகத்தில் வந்து போனார்கள் .

சிவனின் திருவிளையாடல்கள் நாலாபுர கர்பக்கிரகத்தின் வெளிப்புறத்தில் அழகாய் சிற்பிகள் செதுக்கியிருக்கின்றார்கள்.

 முதலில் வடக்கு வாசலால் உள்நுழைந்தால் கொடிக்கம்பம்  வரவேற்கின்றது! 

இன்று பலர் விதிமுறை தெரியாமல் கோயில் நந்தியின் பிரகாரத்தில் வீழ்ந்து அஸ்டாங்கம் செய்வது  கானும் போது இவர்களை வழிநடத்த ஒழுக்கமான சமயத்துறவிகள் வரமாட்டார்களா?

 என்று ஆதங்கம் வருகின்றது .கோயிலில் நுழைந்தால் .

கொடிக்கம்பத்திற்கு முன்னால் அஸ்டாங்கம் செய்யனும் நந்தியை வழிமறித்து நிற்கவோ, வீழ்ந்து வணங்குவதோ ,கூடாத செயல்.

 இன்று பல ஆலயங்களில் வருமானத்தை எதிர் பார்ப்பவர்கள் புகைப்படம் எடுக்க காசு ,வீடியோ புகைப்படம் எடுக்க காசு ,வசூழிக்க நினைப்பவர்கள் ஆலயத்தில் செய்யக்கூடாத காரியங்களை வலியுறுத்த இல்லாத நிலை நம் இந்து மதகோவில்களில் இருக்கும் குறை பாடு!

 சிறப்புத்தரிசனம் வழியாக நாங்கள் உள்நுழைந்தோம் தமிழ்நாட்டு இந்து ஆலயங்களில் இந்த கட்டண வழிமுறைகள் பக்தர்களை விரைவாக தரிசனம் பார்ப்பதற்கு வழிகாட்டினாலும் இது முறையா? 

நாவுக்கரசர்"

 காதல் மடப்பினியோடு களிருவருவனக்கன்டேன் அவர் திருப்பாதம்
கன்டறியாதனைக் கண்டேன்  "என்பார் .
இங்கு  முதலில் மீனாச்சியம்மனிடம் குங்குமம் வாங்கி அன்னை தரிசித்தோம்.
 கர்பக்கிரகத்தில் தாயின் கருணை உள்ளம். கண்முன்னே .!

அதிக நேரம் நிற்கமுடியாது பக்தர்கள் முண்டியடிக்கின்றார்கள் .அர்ச்சனை அதி வேகமாக செய்யும் அந்தனர்களுக்கு புரிவதில்லை மீனாட்சியைத்  தரிசிக்க. கடல்கடந்தும் , பல தூரத்தில் இருந்தும் எவ்வளவு பக்திப்பரவசத்துடன் வருகின்றார்கள் என்று.

""உன்னையே தேடுகின்றேன் உன்பாதம் நாடுகின்றேன் இந்த சிறுவனாகிய என்னைக் காத்தருள்வாய் என் தாயே
இந்த ஏழைக்கு இரங்கியே!


 தாயின் தருசனத்தின் பின்.

 மீனாச்சி சுந்தரேசரைத் தரிசித்தோம். 

சிவனின் கற்பக்கிரகம் ஒரு நிமிடம் பார்க்கும் போது சிவலிங்கத்தின் மகிமையை சொல்வது இன்னும் பலபதிவு போடலாம் .படிப்பார்களா?
 தென்னாடுடைய சோதிப்பிழம்பைப் பார்ப்பது வாழ்வில் பயனுடை செயல் .

அங்கிருந்து பிரகாரங்களை வலம் வந்தாள் பிரகாரத்தில் முக்கியமாக சிவனின் வலது கால் தூக்கியாடும் (வெள்ளி அம்பலம்) இங்கு இருப்பது சிறப்பாகும்.(இதுபற்றிய சிறப்பான விளக்கம் இங்கே-http://www.aambal.co.uk/magazine/issue-3/hindu-temples-madurai-meenakshi.html)


 நாம் எப்போதும் சிவனின் கூத்தில் இடது காலைத்தான்  தூக்கியாடும் காட்சியினைத்தான் கான்கின்றோம்.

பிரகாரத்தின் மேற்புறத்தில் .(மேல்சுவரில்)அழகிய தாமரைப் பூக்களை தீட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு கருங்கற்களும் சொல்லும் சிற்பத்தின் பெருமையை.

 அங்கிருந்து   தெற்பக்குளத்தையும் பார்வையிட்டேன் இக்குளத்தின் வரலாற்றை சொல்வதும் முக்கியம் தானே !

திருவள்ளுவரின் திருக்குறள் சங்கப்பலகையாக மிதந்தது இங்குதான்.  குளத்தின் அகளம் நல்லூர் தீர்த்தக் கேணியின் மூன்று மடங்கு  நீளமும் ஆழமும் அருகில் அழகிய நந்தியாவட்டை ,மல்லிகைப் பூக்கள் அலங்கரிக்கின்றது.

.தீர்த்தக்கேணியில் நின்று பார்த்தால் நான்கு  பெரிய கோபுரமும் சிறிய 8 விமானங்களும் தெரிகின்றது.

 யாணைப் பாகன் பக்தர்களின் தலையில் யானையின் தும்பிக்கையால் ஆசிர்வதிக்க விட்டு விரும்பிய காணிக்கையை வசூலிக்கிறார்.


 பின் அங்கிருந்து வெளியேறி அழகிய ஆயிரங்கால் மண்டபம் பார்த்தோம். 

மதுரை உலா தொடரும்!
 நன்றி- வலைப்பதிவாளர்களுக்கும், இப்படியும் செய்லாம் என்று அறிவுரை கூறிய நண்பன் நிரூபனுக்கு!ம


....... .

 

38 comments :

Nesan said...

என்னால் படக்காட்சியினை இணைக்க முடியவில்லை இனையம் தொடர்ந்து இம்சை செய்கின்றது படத்தை வரும் பதிவில் இணைக்கின்றேன்!

அம்பாளடியாள் said...

அனுபவித்து எழுதிய சுற்றுலாப் பயண நிகழ்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .நன்றி பகிர்வுக்கு ........

Anonymous said...

படிக்கும் போது இரண்டு வருடம் மதுரையில் சுத்தியிருக்கிறேன்...மறுபடி நினைவுகளை கிளருவதுக்கு நன்றி நேசன்...

Anonymous said...

நகர் வல நடை கலக்கல்... தொடருங்கள்..தொடர்கிறேன் நண்பரே...

K.s.s.Rajh said...

////
இரவுப் பொழுதில் நல்ல இட்லி குஸ்பூவைப் போல் குளுகுளு என்று இருந்தது. மிகவும் ரசித்துத்துச் சாப்பிட்டோம் இட்லியை////

புரிஞ்சுபோச்சு...புரிஞ்சுபோச்சி..அன்னைக்கு இந்தம்மா(குஸ்பு)மேட்டர் சாயலில் பதிவு போட்டதுக்கு ஏன் அந்த கும்மு கும்முனீங்கனு

K.s.s.Rajh said...

சுவாரஸ்யமாக செல்கின்றது........அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

MANASAALI said...

மதுரையிலேயே இருந்தாலும் கோவில் பக்கம் அடிக்கடி போனாலும். உள்ளே செல்வதில்லை. முன்பெல்லாம் கோவிலுக்கு செல்பவர்கள் நேரடியாக மீனாக்ஷி சிலை இருக்கும் அறைக்கு செல்லலாம். இப்பொழுது சுற்றி செல்ல வேண்டியுள்ளதாம். எல்லாம் காசு.

ஆகுலன் said...

ஓட்டு போட்டேன் பிறகு வாறன் வசிக்க...

நிரூபன் said...

வணகக்ம் நண்பா,
மதுரைக்குப் போக வேண்டும் எனும் ஆவலினைத் தூண்டும் வகையில் உங்களின் கட்டுரைப் பகிர்வு அமைந்துள்ளது.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான பயணக் கட்டுரை..

Nesan said...

நன்றி அம்பாளடியாள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

நன்றி ரெவெரு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! அழகான இடத்தில் வாழ்ந்திருக்கிறீங்க!ம்ம்

Nesan said...

தம்பி ராச் அந்தவிடயத்தை ஆன்மீகப் பதிவுடன் கலக்குறீங்களே! சாமி கும்பிடும்போது சரன்யாவை நினைக்கக்கூடாது! அவ்

Nesan said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துக்கும் விரைவில் தொடரை தருகின்றேன்!

Nesan said...

நன்றி மனசாலி வருகைக்கும் கருத்துக்கும் அப்படித்தான் நண்பரும் கூறியிருந்தார் என்ன செய்வது காலம் அப்படி!

Nesan said...

நன்றி ஆகுலன் வருகைக்கு!

Nesan said...

வணக்கம் நிரூபன்.
நன்றி  வருகைக்கு!கருத்துக்கும்

Nesan said...

நன்றி வேடந்தாங்கள் கருன்  வருகைக்கு!கருத்துக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

வர்ணனை சூப்பரா இருக்கு மக்கா....
!!!

MANO நாஞ்சில் மனோ said...

(அண்ணா மனோ இந்த ஹோட்டல் பேரணியூரில் இருக்கு சாப்பாடு மிகவும் பேஜார் உங்க வாளை ஒருக்கா பட்டையை த்தீட்டுங்க சார்)//


எவம்லேய் அது சாப்பாட்டை பேஜாராப் போட்டது, பிளேட்ல போடாம....?? எட்றா அந்த வீச்சறுவாளை, எட்றா வண்டியை....

MANO நாஞ்சில் மனோ said...

அதற்காக அண்ணன் அழகிரியிடமா போகமுடியும் அட்டாக் பண்டியை விட்டு பஞ்சாயத்துப் பண்ணு என்று சொல்ல.//

ஹா ஹா ஹா ஹா அவிங்க எல்லாம் மதுரையை காலிபண்ணி பலமாசம் ஆச்சு மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு..

துஷ்யந்தன் said...

அனுபவ கட்டுரை நல்லா இருக்கு பாஸ், நான் இதுவரை இந்தியா போனது இல்லை.இந்தியா போகும் ஆவலை தூண்டி விட்டது உங்கள் கட்டுரைகள்.
இனி இந்தியா போனால் நீங்கள் போன இடத்துகேல்லாம் போக வேண்டும் ஹீ ஹீ அதில் மதுரை முக்கியம்...

N.Manivannan said...

மதுரையை பற்றி அருமையாக எழுதிருக்கிறீர்கள்,நன்றி

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

ஏன் சார் தமிழ் 10 லும், இண்ட்லியிலும் இணையல?

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

மதுரைக்குப் போய்வந்த மாதிரியே இருக்கு சார்!

Nesan said...

நன்றி அண்ணாச்சி மனோ!

Nesan said...

நன்றி அண்ணாச்சி மனோ!

Nesan said...

சாப்பாடு நாட்டைக்குழப்பி விட்டது நல்ல வேளை விரைவில் திருச்சியில்  ஒரு பிரேக் போட்டான் ./இல்லை/ ஹீ ஹீ

Nesan said...

தனிமரம் போகுது என்று பந்தோ பஸ்தாக்கும் அவங்களை காலிபண்ணியது /ஹீ ஹீ/

Nesan said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

நன்றி துஷ்யந்தன்  வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

நன்றி மணிவண்ணண்  வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

வணக்கம் ஐடியாமணிசார்/
கும்பிடுகுன்றேன் நானும் உங்களை பெரியவராக நினைத்து!
இண்ட்லியில் இணைத்திருக்கின்றேன் தமிழ்-10 தனிமரத்தை தனியாக விட்டுட்டுது   இணையத்தில் குளறுபடி சார்!

Nesan said...

வணக்கம் ஐடியாமணிசார்/
கும்பிடுகுன்றேன் நானும் உங்களை பெரியவராக நினைத்து!
இண்ட்லியில் இணைத்திருக்கின்றேன் தமிழ்-10 தனிமரத்தை தனியாக விட்டுட்டுது   இணையத்தில் குளறுபடி சார்!

Nesan said...

வணக்கம் ஐடியாமணிசார்/
கும்பிடுகுன்றேன் நானும் உங்களை பெரியவராக நினைத்து!
இண்ட்லியில் இணைத்திருக்கின்றேன் தமிழ்-10 தனிமரத்தை தனியாக விட்டுட்டுது   இணையத்தில் குளறுபடி சார்!

Nesan said...

நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Samantha said...

madhurai madhirai taan..