14 September 2011

அழகர் அழகு. !

ஓவ்வொரு கிராமத்துக்கும் ஒருவர் காவல்காரணாக இருந்தவர்கள் பற்றி வரலாறும், புராணங்களும் பலதையும் பதிந்து வைத்திருக்கின்றது.


 பாடசாலை நாட்குறிப்பைப்போல். எனபயணங்களின் குறிப்பையும் சில பதிவுகளில் சொல்லனும் என்ற ஆசைகள் பல.

 அதில் ஒன்று நான் எப்போதும் பிரமிப்போடு பார்க்கும் பெருமாள்!

பெருமாளை மதுரையில் அழகர் பெருமாள் எல்லைச் சாமி,குலதெய்வம் காவலர்,எனச் சொல்கின்றனர் மதுரைவாசிகள்.

மதுரைக்குப் போனாலும் அழகர் ஐயாவை போய் சேவித்தாயா என்று என்னோடு ஆன்மீகத்தில் கலந்து என்னை வழிநடத்தும் என் குரு கேட்பார்

 .ஒவ்வொரு முறையும் அழகர்சாமியின் தருசனம் நல்ல கதை இருந்தும் தயாரிப்பாளர் கிடைக்காத இயக்குனர் போல் போக முடியவில்லை .

பயன நாள் குறைவு என்று ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லிவிடுவேன்.

 இந்தச    மாசியில்    நாம் ஒன்றாக மதுரைபோவம் அழகர் சாமியின் உற்சவவிழாவைக்கான என நிநைத்து குருவிற்கு வாக்குறுதி கொடுத்தேன்

. அம்மாவை நம்பிக் கெட்ட வைக்கோ போல் அவருடன் இவ்வருடம் போகும் வழிகிடைக்கவில்லை.

 தொழில் மாற்றம் அதையும் தாண்டி சில வேறு தேடல்கள் என்னை அசைத்துக்கொண்டிருந்தது

.ஆனாலும் அழகர்சாமி ஆற்றில் இறங்கும் நாளுக்குப் பதிவு போட்டிருந்தன்.இங்கே( http://nesan-kalaisiva.blogspot.com/2011/02/blog-post_17.html?m=1

அண்ணன் மதுரை சரவணன் அதற்கு பின்னூட்டம் இட்டு என்னையும் ஒரு சகவலைப்பதிவாளராக ஏற்றுக்கொண்டு அந்த நிகழ்வை பதிவு செயுங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார்.

 ஆனால் முடியவில்லை. அதன்பிறகு பெருமாள் அழகர் சாமியின் சிந்தனை என்னை ஆட்கொண்டது. அவரின் அருமைக்கோயிலை ஒரு தடவை சரி பார்த்துவிடனும் என்ற ஆதங்கம் முற்பயனின் பேறில் இப்போது அதிகமான தருசனங்களை பெருமாள் கண்குளிரும் வண்ணம் என்னையும் அப்போதே சொலிவைத்த ஆண்டாள் போல் சின்னவன் யானும் இல்லறத்தில் நல்லறம்போல் இருவருமாக அழகர் சாமிக்கோயிலுக்குப் போனோம்,

மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 7Km தூரத்தில் ஆழகர்சாமிகோயில் இருக்கின்றது.

நாங்கள் போனபோது பக்தர்கள் கூட்டம் அலைமோதியது தருசனத்திற்கு வெள்ளிக்கிழமைவேறு மக்கள்கூட்டம் அதிகம்

.அழகர்சாமி சித்திரையில் உலாவந்து வைகை ஆற்றில் நீராடி மீண்டும்செல்வதற்கு முன்று நாட்கள் தேவை.அயல்கிராமத்தவர்கள் உண்டியல் காணிக்கை மாற்றிக்கொள்வது ஒவ்வொரு வீட்டிலும் பவனிக்காக தருசனம் கொடுக்கவரும் போது லட்சகணக்கில் மக்கள் மதங்கள் தாண்டி கூடும்விழா என்பது சிறப்பு.

 அந்த மாதத்தில் வெளியில் வரும் கள்ளழகர் ஆவணியில் தான் மூலப்பிரகாரத்திற்குப் போவார்.


 அதுவரை ஆலயத்தின் வெளிப்பகுதியில் வீற்றிருப்பார் தேர்பவனி மிகநேர்த்தியாக இருக்கும். தேரடிவீதியில் போய் தருசித்தோம் .

கோவில் பிரகாரம் எங்கும் பக்தர்கள் அங்கேயே நீராடிச் செல்கின்றார்கள்.


 சிறப்பு தருசனம்


ஊடாக நாம் மூலவரை தருசித்து மஞ்சல்வாங்கினோம். பெருமாள் கோவிலில் மஞ்சல் ஒரு பிரசாதம் ஆண்டாள் மேனியின் தீயினை மஞ்சல் நீட்சியாக்கும் (குளிர்விற்கும் )தன்மை கொண்டது .பெருமாள் மீதான பக்தியின் வெளிப்பாட்டை பாசுரங்களில் காணலாம் .இது ஆன்மீகத்தின் உணர்வை சிலர் நளினமாக்கும் போது  என்ன செய்வது.?

ஒவ்வொரு ஆலயத்திலும் முதலில் உடல்சூட்டினைத் தனிக்க மஞ்சல் அபிசேகம் நடைபெறும் ,சில பெருமாள் ஆலயங்களில் துளசித் தீர்த்தம் கொடுப்பதுடன் முடிந்து விடும் நிகழ்வுகள்.

 அழகர் சாமிக்கு மாமிசங்கள் பலிகொடுக்கப்பட்டு படையல் நடக்கின்ற காட்சியையும் கண்டோம்.

அழகர்சாமியைத் தருசித்துவிட்டு மலைக்கோயில் போனோம்.இந்த அழகர் மலையின் பழைய பெயர் திருமாலிருஞ் சோலை ஆகும் நம்மாழ்வார் திருவாய் மொழியில் இதன் பெருமாளைப் பற்றி அதிகம் பாசுரங்கள் பாடியுள்ளார்!
    (ஆதாரம் சுஜாத்தா நாளும் ஒரு பாசுரம் பக்கம்-43)

 மலைக்கோயில் மிகவும் சிறப்பு மிக்கது என பக்தர்கள் பலர் கூறினார்கள். வந்த கையுடன் அதனையும் பார்ப்போம் என்றாள் 2km தூரம் மலைப்பகுதியில் அமைந்திருக்கின்றது .


அழகர்சாமி கோயில் வாகனம் கட்டணம் செலுத்தினால் மேலே போய்வர முடியும் .

ஆனால் அதிகமான கூட்டம் நிற்கின்ற அழகு  கம்பன் சொன்ன ராமன் அயோத்தி மீண்ட போது பரதன் சேனைகளும் அஸ்த்தினாபுர மக்களும் கூடி நிற்பதைப் போல் !

. எனக்கு வரிசையில் நிற்பதிலும் பார்க்க நடந்தே போவது மனதிற்கு இனிமையானதாக இருக்க .இருவரும் நடந்தே போய்ச் சேர்ந்தோம்.

மலையின் எழில் கொஞ்சம் மனதில் கிலசத்தை உண்டாக்கும் மனம் ஒத்தவர்களின் நடைப்பயணத்தில் முதியவர்கள் பலர் இணைந்து கொண்டார்கள் தாம் முற்காலத்தில் நடந்த அளவு இப்போது இருக்கும் தலைமுறையினர் நடப்பது இல்லை என்றார்கள்.

 எல்லோரும் மோட்டார் வண்டியிலும்,வாகனத்தை விரும்புகின்றனர் என்றாள் ஒரு பாட்டி .உண்மையில் அந்த ஆச்சியின் நடைக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே நிஜம்.

முருகனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் தேவாரத்துடன் போகும் முதியவர்களின் பக்தியைப் பார்க்கும் போது மனதில் நாம் எங்கு நிற்கின்றோம் என்ற உணர்வு வருகின்றது.

 மலையில் இருப்பவர் அழகு என்றாள் தமிழுக்கு இலக்கணம் கொடுக்கும் முருகனின் ஆறுபடை வீட்டின் இன்னொரு மலைக்கோயில்தான் இந்த அழகர்சாமி மலைக்கோயில் என்பது.தெரிந்து கொண்டேன் .

முருகன் வள்ளி+ தெய்வானை சகிதம் மலையில் காட்சியளிக்கின்றார் வெற்றிவேல் கொடுத்த சக்திவேல் என்ற சரபவண ஒலி மந்திரம் என்கின்ற திருமந்திரம் ஒலிக்கின்றது.

 முடி காணிக்கை கொடுத்தவர்கள் பூசை பொருட்கள், மாலைகொடுத்து வெற்றி வேலாயுதம் முருகனை வழிபடுகின்றனர். இங்கு சிறப்புத்தரிசனம் மிகவும் பக்திப்பரவசத்துடன் சரனாகர ரட்சதகர் முருகனை இல்லத்தரசிகளுடன் இனிமையாக உருகிப் பரவசத்துடன் பிராத்தனை செய்ய முடிகின்றது.

 கருணை உள்ளம் கொண்ட முருகனைத் தருசித்தபின் கீழே வாகனத்தில் வந்தோம் அங்கிருந்து!

கோயில் தருசனத்தின் பின் அண்ணனுக்கு ஒரு பால் கோப்பி போடும் அழகு பாருங்கள்!

  எமது பயணம் தொடரும்!  

இன்னும்  சில  படம்
36 comments :

துஷ்யந்தன் said...

பயணங்களை அழகாக தொடர்கின்றீர்கள்.
நீங்க ஒரு உலகம் சுற்று வாலிபன்தான் பாஸ் ஹீ ஹீ

துஷ்யந்தன் said...

சரக்கை கை நிறைய வைத்து கொண்டு பகுதி பகுதியா விடுறீங்களோ???? ஹா ஹா புகைப்படம் எல்லாம் தங்கள் கை வண்ணம் தானே

துஷ்யந்தன் said...

உங்கள் தொடர் பயண பதிவு மூலம் இந்தியா செல்லும் என் ஆசையை அதிகப்படுத்தி விட்டீர்கள் பாஸ்

K.s.s.Rajh said...

மிகவும் அழகான பயண அனுபவங்கள்..பாஸ்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்கள் பயண அனுபவம் சூப்பர்.,

Nesan said...

நன்றி துஷ்யந்தன் .உலகத்தை சுற்றமுடியாது கொஞ்சம் சென்னையைச் சுற்றுவம்! ஹீ ஹீ

Nesan said...

ஒன்றாக எழுதினால் வாசிப்பார்களா ? புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் கண்களுடே சிக்கிக்கொண்டவை அவை!

Nesan said...

நிச்சயம் இந்தியாவில் பார்பதற்கு அதிகம் இருக்கு.நன்றி கருத்துரைக்கும் வருகைக்கும் துஷ்யந்தன்!

Nesan said...

 .நன்றி ராச் கருத்துரைக்கும் வருகைக்கும்! 

Nesan said...

நன்றி வேடங்தாங்கல் கருன் வருகைக்கும் கருத்துக்கும்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அழகர் போலே உங்கள் பதுவும் அழகு, எங்க ஊர் சாமிய பத்தி எழுதியிருகீங்க வாழ்த்துக்கள்..

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

முந்தைய கமெண்ட்-இல் பதுவு என்று தவறாக டைப் செய்துவிட்டேன் அது பதுவு அல்ல பதிவு

Nesan said...

நன்றி ரமேஸ் பாபு உங்கள் இணைவுக்கும் கருத்துரைக்கும் வரவிற்கும்! நீங்கள் அவரை தொடர்ந்து சேவிக்கின்றீர்கள் நான் தொடர்ந்து சேவிக்க முடியாத தூரத்தில் இருக்கின்றேன் மனதில் அவர் நாமம்!

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

//நன்றி ரமேஸ் பாபு உங்கள் இணைவுக்கும் கருத்துரைக்கும் வரவிற்கும்! நீங்கள் அவரை தொடர்ந்து சேவிக்கின்றீர்கள் நான் தொடர்ந்து சேவிக்க முடியாத தூரத்தில் இருக்கின்றேன் மனதில் அவர் நாமம்!

உங்களின் நிலை தான் எனக்கும், வருடம் ஒரு முறையோ இல்லை இருமுறையோ ஊருக்கு வர இயலும் அதுவும் 2 - 3 நாட்கள் பயணமாக, எனக்கு தெரிந்து அழகரை தரிசித்தது 2 ஆண்டுகளுக்கு முன், அதற்கு பிறகு இயலவில்லை!!

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் யாவும் அருமையா இருக்கு நேசன், வாழ்த்துக்கள்....

Nesan said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்!

Anonymous said...

பயணங்கள் தொடரட்டும் ...

எனக்கும் ஆசை தான் அந்த பக்கம் வர வேண்டும் என்று ஆனால் இப்போதைக்கு முடியாது.. வாழ் நாளில் என்றோ ஒருநாள் தமிழ் நாட்டில் கால் பதிக்கவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று ...

சி.பி.செந்தில்குமார் said...

ரவுண்டிங்க்லயே இருப்பீங்களா?

காட்டான் said...

என்னையா தனிமரம் கொஞ்ச காலத்துக்கு பதிவ தேத்திட்டா போல.. விமான பயணத்தில எத்தின பதிவு எழுதுனீங்கையா.. ஹி ஹி

போன வருடம் நானும் அங்கு சென்றிருந்தேன்.. இயற்கை கொஞ்சும் அழகான இடங்களையா.. அதுவும் சோளப்பொரிக்கு அடிபடும் குரங்குகள் இராக்காயி கோவில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு சென்னையை தவிர எல்லா இடமும் பிடிக்குமையா தமிழ் நாட்டில..!!!! 

Anonymous said...

பயணங்கள் தொடரட்டும்...

Nesan said...

நன்றி கந்தசாமி வருகைக்கும் கருத்துக்கும் கண்டிப்பாக ஒருநாள் உங்களுக்கும் போய்வர சந்தர்ப்பம் கிடைக்கும் அதுக்காக நானும் அழகர்சாமியை சேவிக்கின்றேன்!

Nesan said...

நன்றி சி.பி.அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் உலாத்துதல் தனி இன்பம் எனக்கு ஊரில் சொல்வார்களே ஊர் சுற்றியவன் திருந்துவான் என்று நானும் அப்படி எனலாம்!

Nesan said...

நன்றி சி.பி.அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் உலாத்துதல் தனி இன்பம் எனக்கு ஊரில் சொல்வார்களே ஊர் சுற்றியவன் திருந்துவான் என்று நானும் அப்படி எனலாம்!

Nesan said...

நன்றி காட்டான்  வருகைக்கும் கருத்துக்கும் .சென்னை ஏன் பிடிக்காது என்று ஒரு பதிவு போடுங்கள் கும்மியடிக்கலாம்!

Nesan said...

நன்றி ரெவெரி   வருகைக்கும் கருத்துக்கும் .

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

அழகரைத் தரிசித்த அழகான நினைவலைகளைப் பதிவாக்கியிருக்கிறீங்க.

எனக்கும் இந்தியா போக வேண்டும் எனும் ஆவல் வருகின்றது..

எங்களின் மூதாதையர்களின் படத்தினையும் போட்டிருக்கிறீங்க.

பதிவு: சுவாரஸ்யம் கலந்த, கலக்கல் வர்ணணைகளை உள்ளடக்கிய நினைவு மீட்டல்

Ramani said...

மத்ரைவாசியான எனக்கே இதனை தகவலகள் தெரியாது
மிக மிக அழகாக விவரித்து போகிறீர்கள்
படங்களும் அருமை
தொடர்ந்து வருகிறோம்
சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

உங்கள் பதிவு அழகு

Nesan said...

வணக்கம் நிரூ!
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நேரம் கிடைக்கும் போது போய்வாருங்கள் தமிழக உறவுகளிடம் நம் மூதாதையர்கள் என்னை கொஞ்ச நேரம் ரசிக்க வைத்தார்கள் பல்டி அடித்து!

Nesan said...

நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

இராஜராஜேஸ்வரி said...

முருகன் வள்ளி+ தெய்வானை சகிதம் மலையில் காட்சியளிக்கின்றார் வெற்றிவேல் கொடுத்த சக்திவேல் என்ற சரபவண ஒலி மந்திரம் என்கின்ற திருமந்திரம் ஒலிக்கின்றது./

எங்கள் மனதிலும் ஒலிக்கவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Thanimaram said...

நன்றி இராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்!

Anonymous said...

அண்ணா chane illai ...eppuidi அண்ணா ivvalvu azhagaa solli irukeenga ..migavum ரசித்தேன் ...நானும் அழகர் கோவிலுக்கு poittu வந்தது மாறி இருந்தது ...சுப்பர் அண்ணா

தனிமரம் said...

ஏதோ அழகர் கண்திறந்ததில் நானும் பார்த்து ரசிக்கின்றேன் கலை.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.