22 September 2011

சுடர்க்கொடியின் மணாளன்!

எப்போதும் பாசுரங்களில் பாடு பொருள் பெருமாள் மீது அளவற்ற காதலையும் ,வேண்டுதலையும் இனியதாக கூறும்.!

 எனக்கும் பாசுரங்களை அதிகம் பாராயம் செய்யனும், ,கருத்துக்களை கற்றறியவேண்டும், என்று தீராத ஆசையுண்டு.!

 கால ஓட்டம் பொருளாதார தேடலில் அதை மீட்டிப்பார்க்க முடியாத நிலை. என்றாளும் பெருமாள் மீது தீராத காதல் எப்போதும் எனக்கு!

சிறிரங்கம் என்றாள் பெருமாள் ஞாபகம் வரும். பாடல்  அசிரியர் வாலி ,சுஜாத்தாவின் சிறிரங்கத்து தேவதைகள் என பலதும் பின் தொடரும் அலைகள்.

பலதடவை குழுவாகப்போகும் போது பள்ளி கொண்ட பெருமாளின் வாசலை எட்டுப்பார்த்துவிட்டு விமானத்தை பிடிக்க ஓடும் கடைசிநேர பயணிபோல் ஓடிவிடுவம்.

 இம்முறை தனியாக மனைவியுடன் போனதால் பெருமாள் பள்ளிகொண்ட சிறிரங்கத்தானை மிகவும் ஆற அமர இருந்து சேவித்தோம்.

 குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா என்று மனம் உருகி பிரகாரத்தில் அமர்ந்திருந்துவிட்டு.

 பெருமாளின் சயன நிலையைக் காண சிறிரங்கப் பெருமாளைச் சேவிக்க சிறப்புத்தருசனம் ஊடாக சிறிரங்கநாதனைப் பாதம் பணிய பக்தர்கள் கூட்டத்துடன் வரிசையில் உள்நுழைந்தோம்!

 .பக்தர்களின் பெருமாள் நாமத்தில் வேங்கடாவா கோவிந்தா என நாமம் பக்திப்பரவசத்தை தூண்டுகின்றது.

 அங்கங்கே ஆழ்வார் வழித்தோன்றல்கள் புராணங்களை பட்டாச்சாரிகள் உதாரணங்கள் காட்டியும் பாசுரங்களை விளக்கவுரை சுருக்கமாகவும்!கொடுத்தும் படித்தும் பரந்தாமன் நாமத்தை ஓதுகின்றார்கள்.

 நூழைவாயில் தோறும் பெருமாளின் திவ்ய தேசங்களின் விளக்கங்களும் பெருமாளின் திருவிளையாடல்களையும் ஒவியங்கள் உட்சுவர்களில் பொன்னொளியாக மின்னும் வண்ணம் தீட்டியிருக்கின்றார்கள்.

 பக்தர்கள் ஒவ்வொருத்தராக மதுசூதனை சேவித்து நகர்ந்து செல்ல நம் தருசன வேளையும் வந்தது.

 பரம்பொருள் மூவுலகை தன் பாதத்தால் அளர்ந்த நம்பிரான் கர்ப்பக்கிரகத்தில் நித்திரைக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்".

 பாம்பனை  மேல் பள்ளிகொண்ட ரங்கா சிறிரங்கத்தில் அவதரித்தாய் ரங்கா ரங்கா! உன் திருவடியால் உலகலளந்த அச்சுதானந்தா!

 உன் திருவடி தருசனம் நாடி வந்திருக்கும் ஏழைகள்  சேவிக்கின்றோம் .இப்பிறப்பில் உன் வழி கால நதியில் பக்திக்கடலில் கலந்திட உன் நாமத்தை கயிறாக பற்றுகின்றோம்.

  பலிபீடத்தின்   முன் பாதம் பணிந்து சேவித்த பின் பெருமாளின் நாமத்துடன் துளசியையும் தீர்த்தமும் வாங்கியவுடன் நாம் சென்றது.

 சூடிக் கொண்ட சுடர்க்கொடி ஆண்டாலின் கண்ணாடித் தருசனம் கான்பதற்கு.

 ஒவ்வொருமுறையும் பூமாலை சூடிக்கொடுத்த பெரியாழ்வார் சுடர்கொடி அழகிய திருவுருவம் கண்ணாடி கவசத்தில் ஜொலிக்கின்ற அழகைப்பாடுவதற்கு மீண்டும் ஆண்டாலே அவதரிக்கனும் .

அங்கிருந்து யாசோதை நாச்சியாரை தருசித்தோம். கோவலன் நம்பியின் தாயைச் சேவிக்காமல் வருவது முறையோ? தாயிற்காக உலகை வாயில் தொண்டைக்குள் எழலகங்களையும் காட்டியவர் அல்லவா பெருமாள்.!

 அதன் பின்னே நாம் தருசனம் செய்தது ராமாவாதாரத்தில் இராமன் சீதை இலக்சுமணன் அனுமானுடன் இருக்கும் கலியாணக்கோலம்.

 திருமணம் முடிக்காதவர்களும் தொழிலில் உயர்வு தேடுவோரும் இவர்களைச் சேவித்தால் மங்களம் என்கிறார் பட்டாச்சாரியார்

.இங்கு இன்னொரு சிறப்பு அனுமானுக்கு தலையில்தான் வால் இருக்கின்றது.

அனுமன் சங்கு சக்கரத்துடன் தமிழ்நாட்டுல் இருக்கும் இன்னொரு தலம்
ஆதனூர் ஆகும். இது சங்கரன் கோவில் போகும் வழியில் இருக்கின்றது.


அங்கிருந்து இலங்கைவேந்தனின் தம்பி விபூசனன் சன்னதியும் பார்த்தோம்.

 .அவற்றைத் தாட்டினால் ஆயிரங்கால் மண்டபம் அழகுற காட்சியளிக்கின்றது. சிற்பத்தொழிலின் மகத்துவத்தை பறைசாற்றுகின்றது

.சிற்பக்கலை மாணவர்கள் பலர் இதனை ஆய்வு செய்கின்றனர். பாரிஸ் நங்கை ஒருத்தியும் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆய்வு செய்வதற்காக .

என் படத்திணை அவள்தான் எடுத்துத்தந்தாள்

.அங்கிருந்து வெளியேறினால் பெருமாளின் கடைத்தெருவில் பல நூல்கள் அலங்கரிக்கின்றன. இனிய கடவுளின் சித்திரங்கள், வடிவமைக்கப்பட்டுருக்கின்றது.அருகில்
பல்சுவையில் சைவச் சிற்றுண்டி காத்திருக்கின்றது .

.பெருமாளின் வாசல் கோபுரம் தெரியும் மட்டும் வாகனம் தங்கிச் செல்கின்றது .
 பெருமாள் தருசனம்  இனி எப்போது கிட்டுமோ?4batom

22 comments :

Powder Star - Dr. ஐடியாமணி said...

தமிழ்மணத்தில் இணைத்து முதலாவது ஓட்டும் போட்டிருக்கேன்!சிறிரங்கம் போய்வந்த உணர்வு! நேசன் அண்ணா ரொம்ப பக்தி உள்ளவரா?

Mahan.Thamesh said...

மெய் சிலிர்கிறது சார் . ஸ்ரீரங்கநாதனின் மகிமையை படிக்கும் போது

Ramani said...

படங்களுடன் பதிவும் அருமை
நாங்களும் அந்த புண்ணிய ஸ்தலத்தை
தரிசித்ததுபோல் உணர்ந்தோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

மதுரன் said...

சிறிரங்கம் பற்றிய அருமையான பதிவு

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

ஸ்ரீரங்கப் பெருமாளின் பெருமைகளை அழகுறச் சொல்லி, பாசுரங்கள் மீதான உங்களின் தீராக் காதலையும் வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

தற்போது ஆன்லைனில் பாசுரங்களைப் படிக்கலாமே பாஸ்.

K.s.s.Rajh said...

அருள் மணக்கும் பதிவு...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு போட்டாச்சு...

சென்னை பித்தன் said...

ரங்கநாதனின் தரிசனம் அருமை!

shanmugavel said...

நல்ல அனுபவ பகிர்வு,வாழ்த்துக்கள்.நானும் சென்று ஏழெட்டு மாதங்கள் ஆகிறது.

Anonymous said...

ஸ்ரீரங்க நாதனின் தரிசன பதிவு அருமை...

Anonymous said...

ரங்கநாதனின் தரிசனம் அருமை.

வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..

தனிமரம் said...

நன்றி பவுடஸ் டாக்டர் ஐடியாமணி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தமிழ்மணத்தில் இணைத்து அன்புக்கரம் நீட்டியதற்கு!
ஆன்மீகத் தேடல் மிக்கவன் அதனால்தான் கோபுரதருசனத்தின் தேடலை பதிவுசெய்கின்றேன்!

தனிமரம் said...

நன்றி மோகன் தோமேஸ் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ரமனி சார் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி மதுரன் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி நிரூபன் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!
பாசுரங்களை ஒன்லைனில் படிக்க நேரம் வரவேண்டுமே சகோ!

தனிமரம் said...

நன்றி ராச் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி மனோ உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி சென்னைப்பித்தன் ஐயா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி நாராயணா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!
முடிந்தளவு உங்கள் தளம் வந்து ஆதரவு நிச்சயம் தருவேன் பதிவு போடும் போது மெயில் போடுங்கள் சார்!