25 October 2011

நொந்து போகும் ஓர் இதயம் -10

படம் பார்க்கப் போனோம்.
 எனக்குப் பிடித்த படம் அவளும் மிகவும் ஆசைப்பட்டாள். தனியாக மதவாச்சித் திரைக்கு ஒரு பெண் போகேலுமோ ?

ஏற்கனவே தியேட்டரில் இரண்டு காட்சி தான் ஓட்டுவாங்க. எல்லாம் வாரது பொடியங்கள் செட்தான் .

எப்படி எல்லாம்  நோண்டி பண்ணுவாங்க என்று உனக்குத் தெரியாதா.?
 முன்னர் பள்ளிக்கூடத்தில் யார் யாரோ பின்னால் வீட்டு வரையும் காவலுக்குப் போனதில்லையா?

 ஒரு அன்பு, பாதுகாப்புத் தானே  ?அதற்காக காதல் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் நல்லாவா இருக்கும் .

ஒரு மதினி கூட படம் பார்க்கப் போனால் உடனே தப்பா பேசுவதா ?ஏன் புரிந்துணர்வு இல்லாமல் வெறும் இச்சை என்பதா !

 விகாரைக்குப்  போவது எல்லா பிக்குமாரும் இனவாதிகள் அல்ல என்பதற்காக .

இங்க இருக்கும் பிக்கு நல்ல போதனைதான் சொல்கிறார் .

அன்பு, பாசம் கடமை ஒழுக்கம் என்பதை பக்குவமாக விளக்குகின்றார்.

 நான் புத்தன் போதனையை மதிக்கிறவன்.  சமயத்தை நேசிக்கிறவன். பிக்கு காலில் விழுவது அவரின் ஆசீர்வாதம் என்னை நல்வழிப்படுத்துகின்றது என்பதால் .

"மனதில் எனக்கு வன்மம் இல்லை சாலிக்கா ஒரு தேர்ந்த புத்தன் சிந்தனையை உள்வாங்கியவள் ."அதனால் தான் போயா நாட்களில் நாம் போவது.

" நல்ல தோழியாக ஒருத்தி இருக்க முடியாதா?
" அவள் யுத்த நெறிதவறும் போர்க்கால எல்லைப்படையை விட்டு .

வெளியில் வந்து.
 சிறுவியாபாரத்தை நடத்தட்டும் என்பதால் கடன் உதவிக்கு தெரிந்தவரை வைத்து சிபாரிசு செய்தேன் .

"அக்கரையான ஒருத்தன் என்பதால் பியதாச ஐயா என் மீது மரியாதையாக பேசலாம் என்ற கோணத்தில்" நீ ஏன் சிந்திக்க வில்லை ?

.மூத்தவள் உழைப்பில் பேயரன்- லவ்லி பூசிக்கொண்டு.  வழிகளில் நின்று போறவாரா பெண்களை நையாண்டி செய்யும் இளசுகளுடன் ஊர் சுற்றாமல்  குடும்பப் பொறுப்பை ஆண்மகன் தாங்கட்டும் என்று பண்டார தம்பியை வேலையில் சேர்த்துவிட்டன்.

 அவனுக்கு படிப்பு வரல தெரிந்ததைக் கொண்டு வீட்டுக்கு நல்லவனாக தன்  எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும் என்று எண்ணும் ஒரு மூத்தவனாக ஏன் சிந்திக்க கூடாது பாய்?

"நீ அதிகம் புத்தகம் வாசிப்பது இப்படி மற்றவர்களை மடக்கும் செயலுக்கா தனிமரம்""

 என் ஜோசனை சாலிக்காவை நீ எல்லைப்படையில் வேலை செய்பவள் என்பதால் அவமதிக்கின்றாய்.

 இல்ல சிங்கள இனம் என்று பயப்பிடுகின்றாய் என்கிற எண்ணம்! இதில் ஏதாவது ஒன்று தான் சரியான காரணமாக இருக்கனும் .

ஏண்டா அக்ரம் இப்படி குதர்க்கம் செய்கிறாய்?

" அவள் எனக்கு நல்ல தோழி மட்டும் தான். காதலி இல்லை .இருக்கவும் முடியாது !உறவுகள்  வன்னியில் என்ன நிலை, எப்படி இருக்கு ,என்று அதிகம் கவலையுடன் விடியும் பொழுதுகள் அதிகம்."

 "தந்தை என்னை நம்பித்தான் இந்த வேலைக்கு விட்டவர். அவரை துன்பத்தில் ஆழ்த்தும் எந்த செயலிலும் நான் இறங்க மாட்டன்.

 "காதல் என்ற பூம்பாறையில் பொட்டு வைக்கும் எண்ணம் எனக்கில்லை. கடமை இருக்கு,  கனவுகள் இருக்கு ,இந்த வேலையில் உயர் பதவிக்குப் போகனும் என்ற தேடல் இருக்கு புரிஞ்சுக்க" அக்ரம்.

" சும்மா நீயா ஏதும் கற்பனை செய்துக்காத"

 வா நாங்கள் போகலாம் திருகோணமலையில் ஒரு வாரம் வேலை செய்யனும்.

" மேல் அதிகாரி வருவார் அதன் பின்புதான் நான் திரும்பிப்போகலாம்!".


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் அவர்கள் உறவுகளுக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்நாள்(26/10/2011)  எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்!

 தனிமரம் நேசன் குடும்பம் சகிதம் வாழ்த்துகின்றோம் .

19 comments :

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

நிரூபன் said...

Happy Dipavali Boss

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
காலையில் மொபைலில் இருந்து கமெண்ட் போட முடியலை..


தொடரில் ஆண் பெண் நட்பிற்கு இடையேயான சமூகத்தின் மாறு பட்ட கண்ணோட்டத்தினைச் சாடி,
நல்ல நட்பு என்றால் என்ன என்பதனை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறீர்கள்.

வைரை சதிஷ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

MANO நாஞ்சில் மனோ said...

மனமார தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்பா.....

K.s.s.Rajh said...

ஆண் பெண் நட்பின் சமூக சிக்கல்களை அழகாக சொல்லியிருக்கீங்க......

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

Anonymous said...

நல்ல நட்பு...நட்பின் சிக்கல்களை அழகாக சொல்லியிருக்கீங்க...தொடருங்கள் நேசன்...

தங்களுக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்  வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி வைரை சதீஸ் வருகைக்கும்   வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி மனோ வருகைக்கும்   வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்   வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்   வாழ்த்துக்கும்!

ஹேமா said...

எங்கள் அரசியலால் சில நல்ல உள்ளங்களைக்கூட இழக்கும் நிலை.குடும்பம்,கடமை,நட்பு,தடுமாறும் காதலென அழகாக நகர்த்துகிறீர்கள் நேசன் !

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
தீபாவளி வாழ்த்துகள்

தனிமரம் said...

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரத்னவேல் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சென்னைப்பித்தன் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.வாழ்த்துக்கும்.