27 October 2011

நொந்து போகும் ஓர் இதயம்-11

//இந்தத் தொடரில் யாரும் அரசியல் கண்ணோட்டத்தில் கருத்துக் கூறி இத்தொடரின் திசையை மாற்றி விடாதீர்கள் உறவுகளே!
//
இனி உள்ளே போவோமா????


--///////______---
காலம் விரைவில் ஓடிவிடும்! ஆனால் வருவன் என்று சொல்லிப் போனவன் இன்னும் கார்காலம் முடிவிலும் வரவில்லையே என்று ஒருத்தி குறுந்தொகையில் நெஞ்சோடு புலம்புவாளே !

அப்படித்தான் ஒரு வாரம் என்ற என் பயணம் .நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடி, சிலரின் வெளியேற்றம் ,என என் திருகோணமலைப் பயணம் மூன்று மாதங்கள்  கடந்தது.

 இரண்டு இடங்களையும் அதிகம் கவனிக்கனும் என்பதால் நண்பர்களுடன் அதிகம் நெருக்கம் பேன முடியவில்லை.

  புதிய வருடம் விரைவில் சில வாரங்களை கடந்த நிலையில் மீண்டும் அமைதியாக வவுனியாவில் வேலையில் கவனம் செலுத்தும் போது!

 ரவி என்னிடம் வந்தான் .
"என்ன துரை கோபம் தீரலையோ? வீட்டுக்கு வாரதில்லை ஏன் ?"

"இல்லடா ஒரே வேலைப்பளு இடையில் வேலையில் பிரச்சனை.

 என் உயர் அதிகாரி வெளியேறிவிட்டார் அதனால் கொஞ்சம் அதிகமான ஓட்டம்..

சந்தைப்படுத்தலில் முதல் 5 வருடங்கள் மிகவும் அதிக விற்பனையை முன்னேற்றி எங்கள் திறமையை நிறுவனத்திற்கு வெளிக்காட்டி.

 அவர்களின் நன்மதிப்பைப் பெற்று ஏதாவது ஒரு அதிகாரியாக நிறுவனத்தின் சொகுசு அறையில் ஒரு அலுவலகத்தைத் திறந்து நம் இருப்பைத் தக்க வைப்பது என்பது!

 கல்லில் நார் உரிக்கும் செயல்.

 ஊழியர்களின் வேர்வையை உறிஞ்சி விட்டு காலகாலம் சாதாரண  நிலையில் அனுபவம் மிக்கவர்களை சில நிறுவனங்கள் ஊக்கிவிப்புத் தொகை கொடுத்து முன்னேற்றிவிடாமல் விட்டால்!

 எதிர் கம்பனிகள் இப்படியான சிலரை வலைவீசீ  தங்களின் நிறுவனத்தில் கொஞ்சம் உயர் பதவி கொடுத்து .

அவர்கள் திறமையை பயன்படுத்தி தங்களின் விற்பனையை அதிகரிக்கும் செயலில் இறங்கும்.

  அப்படியான போது அந்த நிறுவனங்கள் கார் வசதி,மேலதிக வருவாய் ஈட்டும் வசதி ,தங்குமிடம் வசதி என பல வகையில் பணம் புரலும் செயலைச் செய்து தம் திறமையைக் காட்டும்!

 தன் உழைப்புக்கு இன்னும் அங்கிகாரம் கிடைக்காத போது நேர்மையானவர்கள் மனதில் சஞ்சலம் வரும்.

 மூத்தவர்கள் பலர் இருக்க பின்னால் வந்தவர்கள் பின்கதவால் முன்னே செல்ல  அவர்களின் கீழ் வேலை செய்ய சிலருக்கு சங்கடமாக இருக்கும் போது அவர்கள் மாற்றுவழியில் வேறு நிறுவனத்திற்கு இன்னொரு பதவிக்குப் போவார்கள்!

 அப்படிப் போகும் போது தமக்கு இசைவானவர்களையும் அழைத்துச் செல்வார்கள்.

 என் மேலதிகாரியும் அப்படி மன உளைச்சலில் வேறு நிறுவனத்திற்கு முகாமையாளராக போனார் .

பதிவுலகில் சிலர் தமிழ் மணத்தில் இருந்து வெளியேறியது போல!

 என்னையும் வரும்படி அன்புக் கட்டளை இட்டார் .

எப்போதும் அவரின் பின்னால் சந்தோஸத்துடன் வேளை செய்பவன் நான்.

 சம  மட்டத்தில் வரும் சில புல்லுருவிகளின் போட்டி குழிபறிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள எப்போதும் அவரே பார்த்தசாரதியாக இருந்து என் விற்பனைப் பிரதிநிதி பதவியை பாதுகாதவர்.

 என் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு!

 அவருடன் நாமும் வெளியேறினால் இன்னும் ஒரு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் இலங்கையின் பொருளாதார தொடர் வீழ்ச்சியில் புதிய கம்பனிகள் தொடர்ந்து சந்தையில் நின்று பிடிப்பது கடினமான செயலாக இருந்து கொண்டிருந்தது. ஒரு புறம் என்றால் !

அவர்கள் போகும் நிறுவனம்  சந்தைப்படுத்தலில்  மொத்தமாக சகோதர மொழியினர்களையே வைத்திருந்தார்கள் .

இந்த நிலையில் நானும் முகமூடி  போடனும் சகோதரமொழிக்காரனாக .

காக்கைக் கூட்டில் நான் ஒரு குயிலாக இருக்க  விருப்பம் இல்லை எனக்கு.

 இந்த ஜோசனைகள் ஒரு புறம் என்றால்!நானும் என் நிறுவனத்திற்குத் தெரியாமல் ராஜாவைப் போல் ஒரு இன்னொரு வியாபாரத்தை மூவராக இருந்து செய்து கொண்டிருந்தோம்.

 நிறுவனச் சட்டப்படி இச்செயல் தவறு.


  அதுதான் கொஞ்சம் என்னை கட்சிதாவவிடாமல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு மசோதா.

 இந்த வியாபாரம் ஒரு லாட்ரிச் சீட்டுப் போல்தான்!

 .அரச கட்டுப் பாட்டுப்பகுதியில் இருந்து வன்னிப்பகுதிக்குச  செல்வதற்கு (அரசகட்டுப்பாடு இல்லாத வன்னிப்பகுதிக்கு )
அத்தியாவசியத் தேவைகள் அடங்கிய உலர் உணவுகள் வினியோகம் செய்வதற்கு.

  அக்காலப்பகுதியில் பல  பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்(co-op) என்ற அமைப்புத்தான்.

 அதிகம் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் அனுமதியளித்து இருந்தது .

அவர்கள் சிலர் குழுவாக வந்து வவுனியாவில் தமக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை சிலரிடம் கொடுபார்கள்.

 எந்தப் பொருள் அதிகம் தேவை அதில் அவர்களுக்கு எத்தனை வீதம் விலைகழிவு கிடைக்கும்.

 தங்களுக்கு என்ன அன்பளிப்புக் கிடைக்கும். என அவர்கள் விலாவரியாக விசாரித்து விட்டு கொழும்பு செல்வார்கள்.

 சிலர் வவுனியாவில் கொள்வனவு செய்வார்கள். அப்படி வவுனியாவில் செய்பவர்களுக்கு சில மாத கடன் அடிபடையில் அதிகம் பொருள்கள் அனுப்புவது ஒரு வியாபாரம்.

 அது கொஞ்சம் ரிஸ்க் ஆனவிடயம் என்றாலும் பணம் மீளவும் வரும் என்பது உறுதி .

என்பதால்
 காரணம் பலநோக்குச் சங்கம் அரசாங்கத்தின் ஒரு அமைப்பு பெயரலவில்.

 நானும், தேவன் முதலாளி ,மொயூத் பாய் அதில் கூட்டனிக் கட்சிகள்.

 ஒவ்வொரு லொறியும் உயிலாங்குளம் ஊடாக பயணிக்கும் போது சில லட்சங்கள் சில ஆயிரங்கள் எங்கள் கைகளில் புரலும் .

அதன் மூலம் விற்பனை வருமானம் கிடைக்கும்.

 வியாபார மொழியில்  கொன்வே என்பார்கள்.

 பாதுகாப்புக் கண்கள் சில இந்த லொறிகளை அனுப்பும் போது சிலரின் முக்கிய கையொப்பம் இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் வைத்திருந்தார்கள்.

  அவர்கள் அதற்கு வாங்கும்  பொற்கிழிகளை    ஆங்கில நாளேடுகள் இரண்டாம் பக்கத்தில் எழுதினால்! அந்த ஆய்வாளர் வீட்டுக்கு கைக்குண்டு பரிசளிக்கப்படும் .வீட்டுக் கண்ணாடிகள் சந்தியில் சிந்து பாடும்.

   அனுமதிக்கப்பட்ட பொருள்கள் அளவு ஒரு துரும்பாவது அதிகம் என்றால்!  அவை பறிமுதல் செய்யப்படுவதும், சில லொறிகள் திருப்பி இராணுவத்தின் பகுதிக்கு அனுப்பப் படுவதும் வாடிக்கை .

ஊடகங்கள் இத்தனை லொறி போனது என்று செய்தி போடுவார்கள். திரும்பி வந்ததைச் சொல்லமாட்டார்கள்.

 இதுதான் ஊடக நடுநிலை??? அக்காலகட்டத்தில் இருந்து சமாதான காலகட்டம் வரும் வரை சிலர் இப்படி வியாபாரம் செய்தார்கள்.

 நானும் ஒரு முகமூடி மனிதர் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களை இனம் கானுவது தானே ஒரு வியாபாரியின் திறமை ?அதில் தவறு இல்லை .

அப்படி வியாபாரத்தில் முன்னேறியவர்கள் பலரில் பின்னாலில் சிலர் பாராளுமன்றம்  போனார்கள்.

 ஒருவர் அமைச்சரானார்.

 மாட்டுவண்டிப் பயணம் அவரை பத்திரிகையில் இன்னும் அதிகம் பிரபல்யப் படுத்தியது.

 . அப்படி இருந்த வியாபாரம் நிலையால் நானும் வெளியேறாமல்  மூப்பனார் பிரதமர் ஆகும் நிலமை இருந்தும் மெளனமாக இருந்த கலைஞர் போல்!


 என் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை.

  இவையாவும் தெரியாத ரவி.
"  அவன்  திட்டிய படியால் தான் நான் அவனுடன் சந்திபையோ, வீட்டுக்கோ  வரவில்லை என்று கேட்டது !
.
அப்புறம் சொல்லு எப்படிப் போகுது படிப்பு?

  தொடரும்

12 comments :

K.s.s.Rajh said...

அற்புதமாக இந்த தொடரை நீங்கள் கொண்டு செல்கின்றீர்கள்.....பல இடங்களில் நீங்கள் வழங்கியிருக்கும் உவமைகள் அருமை.....இந்தத்தொடர் இன்னும் சிறப்பாக வளரவேண்டும்.....வாழ்த்துக்கள் ஓரு வாசகனான.

தனிமரம் said...

வாங்க ராச் ஒரு பால் கோப்பி குடித்துவிட்டுப் போங்க!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.S.FR said...

வணக்கம்! நன்றாக தொடர்ந்து எழுதுகிறீர்கள்!இன்னமும் எழுதுவீர்கள்.அழகான நடை(எழுத்து!)

shanmugavel said...

//தன் உழைப்புக்கு இன்னும் அங்கிகாரம் கிடைக்காத போது நேர்மையானவர்கள் மனதில் சஞ்சலம் வரும்.//

ஆமாம் அய்யா! பல இடங்கள் சிந்தனையைத்துண்டும் சுவாரஸ்யம்.தொடருங்கள்.

ஹேமா said...

வாழ்வின் நீண்ட அனுபவக் குறிப்பைப் பார்த்தால் நேசனுக்கு எத்தனை வயசிருக்கும் ?!

Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள்...படங்களை பெருசாக்குங்களேன் நேசன்...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் . என் வயது மிகவும்
குறைவு 30+  தான் சந்தைப்படுத்தல் வியாபார அனுபவத்தின் வயது கொஞ்சம் அதிகம் என்பதுதான் கசப்பான உண்மை!

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும் . படத்தினைப் பெரிசாக்க இனி முயல்கின்றேன்.

ஸாதிகா said...

அழகிய எழுத்து நடை.தொடருங்கள்!

கவி அழகன் said...

கலக்கல் தொடர் திருப்தி