29 October 2011

நொந்து போகும் ஓர் இதயம் -12

 வாழ்வில் வசந்தமான காலகட்டம் எது என்றால்?
 எல்லோரும் கைகாட்டும் திசை பள்ளிக்காலம்.

 பலர் சிரித்து, மகிழ்ந்தும்,  சிலர் இதயத்தை தொலைத்து ,சிதைந்த ஓவியமான வடுக்கள் கொண்ட காலகட்டமும் இந்தப் பள்ளி வாழ்க்கையில் தான்.


பள்ளியில் கல்வியைத் தவிர ,விளையாட்டுக்கும் முன்னுரிமை கொடுக்கனும் என்பதில் இருக்கும் சூட்சுமம்!

 கல்வியில் பின் தங்கியோர் விளையாட்டில் சரி நல்ல திறமைசாலியாக உருவாகலாம் என்ற கனவினால்.

 அதனால் தான் பள்ளிகளில் புதிய வகுப்பு ஆரம்பத்தில் முதல் தவணையில்  பாடசாலையில்.விளையாட்டுப் போட்டி வைப்பார்கள்.

 ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு உதவியாக உயர்தர மாணவர்கள் மாணவிகளை குழுவாகப் பிரித்து தலமைப்துவப் பொறுப்புக்களை பகிர்வார்கள்.

 சிலர் திறமை இருந்தும் பின்னடிப்பார்கள் நண்பர்களிடையே கருத்து மோதல் ஏன் காலம் எல்லாம் சுமுகமாகவே இருப்போம் என்று

இப்படியான நேரங்களில் இருபாலரும் ஆண்கள் ,பெண்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நிலை பள்ளியில் வருவது இயல்பு .

விளையாட்டுப்போட்டிக்கு சில பாடசாலையில் விரும்பிய வர்ணம் கொடுத்து குழுப்பிரிப்பார்கள்.

 இன்னும் சிலர் பாடசாலையில் தமிழ்
வளர்த்தோர் பெயர் கொடுத்து நான்கு குழுவாக பள்ளியில் விளையாட்டுப் போட்டி வைப்பது இயல்பான ஒருவிடயம் .

விளையாட்டில் விருப்பம் இல்லாத புத்தகப்புழுக்கள் விளையாட்டு முன் ஆயத்தம் நடக்கும் நாட்களில் நூலகத்திலும் ,திரையரங்கிலும் கடலைபோட்ட பல மாணவர்களை நானும் பார்த்திருக்கின்றேன் .

உள்ளூர் விளையாட்டில் இருந்து கோட்டம் ,மாவட்டம் ,மாகாணம் தேசியளவில் என  விளையாடில் முன்னேற்றம் அடைய முதல்படி இந்த பள்ளி விளையாட்டுத்தான் .

மட்டைகள் சிலரின் பண வியாபாரக் குடையின் மோகக்தில் மற்ற விளையாட்டுக்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் தேசத்தில்!

 பல்துறை விளையாட்டில்  தங்கம் வாங்குவோர் பலருக்கு தேசத்தின் செங்கம்பளம் விரிக்கவேண்டியவர்களை விடுத்து ஒரு சிலரிடம் விளம்பர மோக ஒளியைப் பரவவிட்டு   பாமரமக்களின் கனவுகளை சிதைத்து வேலைவாய்ப்புக்களை உருவாக்காத,  ஒரு குட்டையில் ஊறவிடும் மட்டைகள் மேல் எனக்கு எப்போதும் வற்றாத  ஜீவநதிக் கோபம் .


விளையாட்டு ஒழுங்கமைப்பில் ரவியும் பார்திமாவிடம் அதிகம்  உரிமையுடன் தொடர்பைப் பேனவேண்டிய பொறுப்பினை பள்ளியின் விளையாட்டுப் போட்டி ஒழுங்கமைப்பு நிகழ்வுகள் கொடுத்த படியால் அவர்கள்   நட்புப்பரிவர்த்தனை அதிக சுழச்சி முறையில் இடம் பெறலாகியது .

விருப்பு வெறுப்புக்கள் தெரிந்து கொண்டதால்!

 ரவி தன் முதல் காதலை பார்த்திமாவிடம் சொல்வதற்கு எங்களிடம் ஆலோசனைக்கு வந்தான் .

.
வழமைபோல வவுனியா பஸ்தரிப்பு நிலையத்தின் கம்பி வேலியில் .அரட்டையில் இருக்கும் நம் நண்பர்களில் சிலர் அவனுடன் படித்துக் கொண்டிருப்போர்.

 எனக்கும் ஒரு இடம் அவர்கள் கூட்டணியில் எப்போதும் இருக்கும் .காரணம் எதிர்கால வேலை தேடல் பற்றி அவர்களுக்கு சில விடயங்களைப் பகிர்வதால்.

என்னுடன் சுரேஸ் ,முருகன், சந்திரன் என தொழில்துறை நண்பர்கள் இருக்கும் போது விக்னேஸ் அருகில் இருந்தான் .

இவன் ரவியுடன் ஒரே வகுப்பில் படிக்கின்றவன்.
"என்ன இன்று அவசரமாநாடா வேலை முடிந்தும் இங்க இருக்கிறீங்க நண்பர்களே என்றான்" ரவி.

வழமையாக நேரம் போக்கின்றோம்." நீ எங்க போறாய் மச்சான்"

" நானும் உங்களுடன் கதைக்க வந்தன்".

 டேய் தனிமரம் இப்ப எல்லாம் நம்மாளு அதிகம் நம்ம கூட கதைக்கின்றாள்!

 இந்த நேரத்தில் என் காதலைச் சொல்லப் போறன் .எப்படிச் சொல்ல முடியும் நண்பர்களே  ஜோசனை சொல்லுங்கள்!

அவனவன் வேலையில் இருக்கும் பிரச்சனைக்கே முடிவு தெரியாமல் ?இருக்கும் போது இனப்பிரச்சனைக்கு தீர்வுத்திட்டம் ஜோசிக்கும் அரசியல் கட்சிகள் போல் காதலுக்கு ஒவ்வொரு ஜோசனை சொன்னார்கள்.

 இதில் எப்போதுமே எதிர்க்கட்சி நான். எதிரிக்கட்சியும் கூட என்னிடம் தீர்வு கேட்கும் சின்னப்பையன் ரவியுடன் மீண்டும் மோதல் எதற்கு என்று சுயேட்சை வேற்பாளர் போல்  நடுநிலமை காத்தேன் .

மற்றவர்கள் தொலைபேசியில் சொல்லு
,கடிதம் வரை, நேரடியாகச் சொல்லு ,முகம்பார்க்காமல் சொல்லு என அப்போதைய சினிமா உலகநியதில் ஆலோசனை சொன்னார்கள்

".எனக்குல் வீரப்பா சிரிப்பு "அதைப்பார்த்த
 ரவியுக்கு கடுப்பு"

" டேய் இப்படிச் சிரிக்காத தனிமரம்."
" நீ வில்லண்டா இந்த விசயத்தில் எனக்கு முதல் எதிரி நீ தாண்டா"

 இரண்டு வீட்டையும் தெரிந்து வைத்துக் கொண்டு நம் காதலுக்கு வழி சொல்லவில்லையே!"ரவி உன் காதல் என்று சொல்லு" ஒருதலைக் காதல். பொருந்தாக் காதல் ."இது பார்த்திமா ஏறுக்கொள்ள மாட்டால்!

" நீ தமிழ் படிக்கவில்லை மடல் ஏறுவது? என்று.
 கடைசியில் அதுதான் நடக்கப் போகுது."

" போடாங்.. என் வாயைக் கிண்டாத தனிமரம் "

"ஆமா இவர் வாயி  பேராதனிய பூங்கா "நான் கிண்டி மூங்கில் மரம் நடப்போறன் !

" போய் படிக்கிற வழியைப் பார் தம்பி."

 என்றுவிட்டு .

நானும், நண்பர்களும் படம் பார்க்க இந்திரா தியேட்டருக்குள் நுழைந்தோம்.


 தேவதை என்  உயிரே !
என் மனதில் நீ ஒரு தொங்கள் கணக்கு.
தமிழ் படிக்கும் உனக்கு கலிங்கத்துப்பரனியில்
காடுபாடுதல் ஒரு  குறிப்பு!
 அதில் என் நினைவுகள் வெந்த நெருப்பு !
புவியியல் படிக்கும் என் நேரங்களில் எரிமலைக்குழம்பாக உன் எண்ணங்கள்!
பொருளியலில் நீ ஒரு சந்தைப் பொருளாதாரம்!
 நான் ஒரு கேள்வி உன் இதயம் என் நிரம்பல்!
வியாபாரத்தில்  நீ தனிக்கம்பனி.
 நான் ஒரு கூட்டனி  நாம் இணைந்தால் அது பொதுக்கம்பனி!
கையிருப்பு எப்போதும் சொத்துத்தான்  நீ என் மனசுக்குள் !
          காதலுடன் ரவி !

 இந்தக் கவிதை பின் ஒரு காலத்தில் பிரதி எடுக்கப்பட்டு  சந்தையில் நகர் வலம் வரும் என்று என்னாத வாலிபக் காதல்!

27 comments :

மைந்தன் சிவா said...

நினைவுகளின் மீட்டல் ம்ம்...சில சந்தோசங்களும் சொகங்களுமாய்!

கணேஷ் said...

அழகான எழுத்து நடையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

சண்முகம் said...

அருமை.
பள்ளி பருவம் இனி நினைத்து பார்க்க தான் முடியும்.

மகேந்திரன் said...

நினைவுகள் கரைதேடும் அலைகளாய்
சுழலிட்டு வருகிறது உங்கள் வார்த்தை
கோர்ப்புகளில்.

செங்கோவி said...

//பல்துறை விளையாட்டில் தங்கம் வாங்குவோர் பலருக்கு தேசத்தின் செங்கம்பளம் விரிக்கவேண்டியவர்களை விடுத்து ஒரு சிலரிடம் விளம்பர மோக ஒளியைப் பரவவிட்டு பாமரமக்களின் கனவுகளை சிதைத்து//

நிதர்சனமான உண்மை..மற்ற விளையாட்டுகளுக்கு இங்கு மரியாதையே இல்லாமல் போய் விட்டதே..

செங்கோவி said...

ஆஹா..ரவியின் கவிதை சூப்பர்..அதுக்கே அந்தப் பொண்ணு அல்றி அடிச்சு ஓடியிருக்குமே...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையா எழுதிரிங்க ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?

MANO நாஞ்சில் மனோ said...

மலரும் தேன் நினைவுகள் படைப்பாக, அழகு....!!!

அந்த வாலிபகவிதை அசத்தல் மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

வார்த்தை கோர்வை சூப்பர்ப்...!!!

கோகுல் said...

இன்னைக்கு சுவாரஸ்யம் கூடுதல்!

வைரை சதிஷ் said...

arumai

K.s.s.Rajh said...

நினைவு மீட்டல் அருமை பாஸ்...அவர்கள் காதல் கைகூடியதா?...என்று அறிய ஆவலுடன் காத்து கொண்டிருக்கேன்.....பெரும்பாலும் கைகூடியிருக்காது என்றுதான் நினைக்கின்றேன்

ஹேமா said...

கவிதையும் கலந்த தொடர் !

தனிமரம் said...

நீண்டநாட்கள் நண்பனைக்கானவில்லை முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மைந்தன் சிவா!

தனிமரம் said...

நன்றி கனேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும் 

தனிமரம் said...

நன்றி சண்முகம் வருகைக்கும் கருத்துரைக்கும் 

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும் 

தனிமரம் said...

நன்றி செங்கோவி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும் !
மற்றவிளையாட்டுக்கள் திட்டமிட்டு புறக்கனிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது.

தனிமரம் said...

நன்றி என் ராஜாபாட்டை ராஜா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி மனோ வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி வைரை சதீஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்!

N.H.பிரசாத் said...

பள்ளிக்காதல் என்றுமே பசுமையானது. பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

பள்ளி பருவ நினைவுகள்...காதல்...ம்ம்ம்ம்ம்ம்...