05 October 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் -2

 பாரிஸ் குளிரில் நடுங்கும் உள்ளங்களே என்னிடம் வாருங்கள் !
வெப்பத்தின் வேர்வையில் குளியுங்கள் உங்கள் நிறம் கொஞ்சம் வெளுக்கட்டும் என்பதைப்போல் மதியவெய்யில்!

  வைரமுத்துவின் வரிகள் சொல்லும் பசிகொண்ட நேரத்தில் தாளிக்கும் ஓசை சங்கீதம் என்பது போல்!  மதியம் சாப்பிடும்  மேசையில் இதமான காலநிலை மனதில் சந்தோசம் என படகில் மதியசாப்பாடு சுவை அதிகம் காரம் குறைவு என்றாலும் ரசித்து உண்டோம்!

 எத்தனை நட்சத்திரவிடுதிச் சாப்பாடும் இதுபோல் சுவையைத் தரவில்லை .இத்தனைக்கும் நானும் ஒரு சமையல்காரன் என்று அவர்களுக்கும் தெரியாது!

அதன் பின் கடல் ஏரியில் படகு மெதுவாக மிதந்து செல்கின்றது .

தென்றல் காற்றில்  உண்டகளைப்பைப் போக்க நித்திரைவந்தாலும் இயற்கையை ரசிக்க இத்தனை தூரம் வந்து விட்டு நித்திரை கொள்வதா ?

ஊரில் பெருசுகள் சொல்லும் முதல் இரவிற்குப் போனவன் முகட்டைப்ப்பார்த்துக் கொண்டிருந்தானாம் !
அதைப்பார்த்துக் கொண்டிருந்தவள் தூங்கிவிட்டால். என்பதைப் போல் அல்லாமல் இயற்கையின் அழகினை விவசாய நிலத்திற்கு இடையில் அழகுமிக்க தென்னைமரங்கள் .வாழைமரங்கள் இன்னும் எழில் கொஞ்சுகின்றது

.கேரளா ஏன் இத்தனை வளம்மிக்க தேசம் என்பதை பார்த்த பின்பு புரிகின்றது.

 இங்கு இருக்கும் தென்னை மரத்தில் தான் ஜீவா ஏறி நின்று நளினம் செய்வார் சத்யா கூட டுஸ்யூம் படத்தில்.

அங்காங்கே பல படகுவீடுகள் அருகில் வந்து அன்பாய் மற்றவர்களுக்கு கையசைப்பைச் செய்கின்றது .

கண்களில் இவர்கள் எந்த நாட்டவர் என்கின்ற தேடல்கள் ஒரு புறம் ,பெரியவர்கள் மனம் துள்ளும் முதுமை அழகு .
புதுத்தம்பதிகளின் சில்மிச ஊடல்கள் காதோரம் மூச்சுக்காற்றில் முத்தங்கள் என இயற்கையின் படகுவீடு பலகதைகளை தன்னகத்தே கொண்டு செல்கின்றது .

சூரியன் முதுமையடையும் நேரத்தில் சூடாக ஏதுவேண்டும்   என்ற பணியாளுக்கு பால்கோப்பி இருக்கா என்றேன். உங்கள் விருப்பமே எங்கள் சேவை என்று இனியதான சூடான பால்கோப்பியை மனைவியுடன் ரசித்துக் குடித்தேன்.

 இந்த இடத்திலும் உங்களுக்கு கோப்பியை விடமா இருக்க முடியாதா? என்ற அவளின் ஏளனப்பார்வையின் அர்த்தம் நான் எப்போதும் சூடான கோப்பியைப் பருகுவதால் உடல் நலத்திற்கு கேடு என்று யாரோ மருத்துவக்குறிப்பில் சொன்னார்களாம்! என்பதே!

ஆலப்புழா ஏரி அழகு நடனம் புரிகின்றது. கப்பல் காற்றின் வேகத்திற்கு இசைந்தாடுகின்றது.

எதிரே வருகின்ற வீட்டைக்கைகாட்டி மாலுமி சொன்னார் கேரளா கட்டிப்பிடி வைத்தியம்  இருக்கும் வீடு. என்று !

என்ன ஜோசிக்கின்றீர்களா நண்பர்களே அது மூலிகை வைத்தியம் மாசாஸ் செய்கின்றார்கள். மூட்டுவலி/கால்வலி,முதுகுவலிக்கு சர்வரோக நிவாரனி.

 நானும் முதுகுவலிக்கு எண்ணெய்யில் முட்டிபோட்டேன்.நல்ல மென்மையாக இதமாக இருந்தது அவர்களின் வைத்திய முறை. .

இங்கு அருகில் ஒரு சுவாரசியம் நடந்திச்சு. இன்னொரு ஐரோப்பிய தேசத்தில் இருந்து நம்மவர்கள் குழுவாக வந்தார்கள்.

 அதில் ஒருவரும் மசாஸ் செய்யப் போனார் வெளியில் வந்தால் அவரின் பணத்தினை யாரோ ஆட்டையைப் போட்டுவிட்டார்கள் .

.பிறகு  பார்த்தால் களவு எடுதவர் மசாஸ் செய்த ஆண்மகன்.
 அதன் பின்பு  பொலிஸ்போய் அலைபட்டார்கள்  .

இப்படியும் நடக்கின்றது நாம்தான் கவனமாக இருக்கனும் அதன் பின் நாங்கள் மறுகரைக்குப் போனோம். அங்கே நாம் விரும்பினால் மீன்பிடித்துக் கொடுத்தால் நல்ல வடிவாக பொறித்துத் தருவார்கள். அந்திமாலை போய் எங்கள் படகு வீடு கரையை ஒதுங்கியது.

  அவர்களிடம் இருக்கும் தொலைக்காட்சியில் விரும்பியதைப் பார்க்கலாம் சாட்டலைட் பூட்டியிருக்கின்றார்கள் நாம் கொஞ்சம் நடைபழகினோம்.

 இருவரும் சேர்ந்து நடந்து வருடங்கள் ஓடிவிட்டது .இருவரும் கொஞ்சம் வயல்பக்கம் காற்றுவாக்கில் கதை பேசினோம் ..விவசாய நிலம் பாதுகாப்பு வலயத்தில் சிறைவைக்கப்பட்டு வருடங்கள் 21 கடந்துவிட்டது அதனை ஞாபகப்படுத்தும் வயல்கள் மனதில் மீண்டும் கிராமத்து வாழ்வை என்னிகூத்தாடியது.!


 அதனைப் பார்வையிட்டு ஏங்காவது கிளிகள் தெரிகின்றதா! என்று பார்த்தாள் கேரளத்து பைங்கிளிகள் மாலை வேளையில் மஞ்சள் நீராட குருவாயூரானை அழைப்பது போல்  நீராடும் அழகைப் பார்க்கனுமே!

  இரு கரைகளிலும் ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒருபுறம் என நீர் ஏரியில் குளியலைப் பார்க்கும் போது அனுராதபுரம் பகுதியில் குளத்தில் சகோதர மொழி நண்பர்கள் நண்பிகள் குளிக்கும் ஞாபகம் வந்து போகின்றது.

பாக்யராஜ் ஒரு படத்தில்  தென்னமரத்தில் தென்றல் அடிக்குது வண்ண வண்ணக்குயிலே அடி புண்ணைவனக்குயிலே என்ற ஞாபகம் ஒலிக்க நானும் நீந்த வெளிக்கிட்டேன்.

 என்னவள் வேண்டாம் குளிர்த்தண்ணி உடம்புக்கு ஒத்துவராது என்றாலும்
நீண்டநாள் ஏரியில் இறங்காத ஏக்கத்தை தீர்த்துக் கொண்டேன் .

எங்களுக்கு இரவுச் சிற்றுண்டியும் தயாரானது மாலுமி விரும்பிய அலைவரிசையில் பாடல் ,படம் பார்க்கச் சொன்னார். இயற்கையைத் தேடிவந்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் போக விருப்பம் இல்லை எங்களுக்கு!

தொடுவானத்தின் இரவில் கதைகள் பேசுவதில் அதிக சுகம் .பலகாலம் சில நாவல்கள் பற்றி மீள்வாசிப்பு இல்லாத குறையை இந்த இரவு தீர்த்துவைத்தது.

 கொஞ்சம் கொசு தன் லீலையைச் செய்தது .நீண்ட உறக்கம் கப்பல் வீட்டில்.
 அதிகாலைச் சூர்ய உதயத்தைக் கானும் அழகு இருக்கே வார்த்தையில் கூறமுடியாத ரவிவர்மன் ஓவியம்.!

 இதமான அந்தக்காட்சியை பார்த்ததும் புத்தம் புதுக்க்காலை பொன்னிற வேலை அலைகள் ஓய்வதில்லை ஞபகம் எட்டிப்பர்க்க இனிக பால்கோப்பியை பரிமாறினார் உதவியாளர்!அதிகாலையில் மீண்டும் எங்கள் படகு வீடு மறுகரையை நோக்கி நீரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மெது மெதுவாக ஓடியது .

ஒரு நாள் பொழுதை கொண்டாடிய நம் பயணத்தைப்போல் பலருடைய படகு வீடுகளும் பின் தொடர்ந்தது கரைசேர.

 மனதில்  இப்படி நம்தேசத்திலும் இருக்கின்றது  .நுவரெலியாவில் வாவி இருக்கின்றது,கண்டியில் தெப்பக்குளம் இருக்கின்றது திஸ்ஸமகராம்வில் இப்படியான இயற்கையுடன் கூடி வசதிகள் இருந்தும் நம்தேசத்தின் புதல்வர்களுக்கு நாட்டை சுற்றுலா மையம் ஆக்குவதை விட சுடுகாடு ஆக்குவது தானே சிந்தனை !

.இந்த இயற்கையை விட்டு நீங்கிப் போகின்றம் என்ற ஆதங்கம் வந்தாலும் வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது தானே வாழ்வின் சாரம் !

மனைவியுடன் இனிய இன்னொரு காலை வேலையில் படகு வீட்டில் இருந்து  மாலுமி,உதவியாளருக்கு விடைகொடுத்து வெளியேறும் போது அவர்களின் பயனாளர் குறிப்பேட்டில் எங்களின் அனுபவங்களையும் பதிவு செய்து விட்டு வெளியேறினோம்..!

 திரும்பி வரும் போது எமக்காக எமது வாடகைக் கார் தயாராக இருந்தது..

 நமது அடுத்த சுற்றுலாவுக்கு தயாராக!

......,,,,,,,,,

Oriyinal

49 comments :

Yoga.s.FR said...

அருமை!பயணக்கட்டுரை எழுதும் ஆற்றலும் உண்டென்று நிரூபித்து விட்டீர்கள்!வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி நாண்டு@நொரண்டு  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு அங்கே அநேக நண்பர்கள் இருக்கிறார்கள், கண்ண்டிப்பா அடுத்த லீவுக்கு அங்கே போகிறேன், பதிவும் போடுறேன்...

-----நன்றி பகிர்வுக்கு-------

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு...

Anonymous said...

Awesome...You rock...World tourist..!!

செங்கோவி said...

மனதை வருடும் பயணப் பதிவு. நானும் கேரளாவில் வேலை பார்த்திருக்கிறேன். மீண்டும் அந்த நினைவுகலை அசை போட வைத்தது உங்கள் பதிவு.

நன்றி நேசன்.

செங்கோவி said...

// இந்த இடத்திலும் உங்களுக்கு கோப்பியை விடமா இருக்க முடியாதா? என்ற அவளின் ஏளனப்பார்வையின் அர்த்தம் நான் எப்போதும் சூடான கோப்பியைப் பருகுவதால் உடல் நலத்திற்கு கேடு என்று யாரோ மருத்துவக்குறிப்பில் சொன்னார்களாம்! என்பதே!//

அவங்க அப்படித் தான் எதையாவது சொல்வாங்க..இதைத் தின்னா அது வரும், அதைத் தின்னா இது வரும்னு ஒன்னையும் சாப்பிட விட மாட்டாங்க..நீங்க என்சாய் பண்ணுங்க நேசன்.

செங்கோவி said...

//இயற்கையுடன் கூடி வசதிகள் இருந்தும் நம்தேசத்தின் புதல்வர்களுக்கு நாட்டை சுற்றுலா மையம் ஆக்குவதை விட சுடுகாடு ஆக்குவது தானே சிந்தனை !//

உண்மையில் வருத்தத்திற்குரிய விஷயம் தான்..அழகான நாடு, இப்படி ஆகிவிட்டதே..

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்! நிச்சயம் போய் வாருங்கள் நம் உறவுகளுடன் அதிகம் சேர்ந்திருப்பது இவ்வாறான பயணங்களில் தான்.

தனிமரம் said...

நன்றி இணைப்புக்கும் ஒட்டுஅளித்ததற்கும் மனோ அண்ணா!

தனிமரம் said...

நன்றி ரெவெரி உங்கள் கருத்துரைக்கு கடவுள் கொடுத்த கொடை சுற்றுலாப் பயணங்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து!

தனிமரம் said...

நன்றி செங்கோவி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்! அழகான இடம் அது !

தனிமரம் said...

அனுபவஸ்தர் நீங்கள் சொன்னால் சரிதான்!

தனிமரம் said...

சுற்றுலா போகும் போது அப்படியான உணர்வுகள் வருகின்றது தாயகத்தின் நிலையை நினைத்து!

கோகுல் said...

நானும் ஓணம் சமயத்துல கேரளா போயிருந்தேன்!

நீங்க பதிவிட்டிருந்ததில அந்த நினைவுகள் திரும்பவும்!

தனிமரம் said...

நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும் இணைவுக்கும்!

காட்டான் said...

அட பயணக்கட்டுரை நீங்க எங்கள பொறாமைப்பட வைக்கிறீங்க வாழ்த்துக்கள் நேசன்..

kobiraj said...

பயணக் கட்டுரை அருமை .ரசித்து எழுதி இருக்கிறீர்கள்

K.s.s.Rajh said...

////அதனைப் பார்வையிட்டு ஏங்காவது கிளிகள் தெரிகின்றதா! என்று பார்த்தாள் கேரளத்து பைங்கிளிகள் மாலை வேளையில் மஞ்சள் நீராட குருவாயூரானை அழைப்பது போல் நீராடும் அழகைப் பார்க்கனுமே!/////

அண்ணே அண்ணி பக்கத்துல இருக்கும் போதே கேரளக்கிளிகளை தெரிகின்றதா என்று பாத்து இருக்கீங்க என்னா தில் உங்களுக்கு ஆமா அண்ணி அடிக்கலையா?

K.s.s.Rajh said...

நீங்கள் சொல்வது போல நம்நாட்டிலும் இருக்கின்றதுதான் ஆனால் அதை யார் கவனத்தில் எடுக்கின்றார்கள்

K.s.s.Rajh said...

நல்ல ஒரு அனுபவப்பதிவு பாஸ் கேரளா போய் வந்தமாதிரி ஒரு உணர்வு.

புலவர் சா இராமாநுசம் said...

பக்கத்தில் உள்ள கேரளாவில்
இவ்வளவு அழகா
உடனே பார்க்கத்தூண்டுகிறது
உங்கள் கட்டுரை

புலவர் சா இராமாநுசம்

shanmugavel said...

//ஆலப்புழா ஏரி அழகு நடனம் புரிகின்றது. கப்பல் காற்றின் வேகத்திற்கு இசைந்தாடுகின்றது.//

கலக்கறீங்க அய்யா!

தனிமரம் said...

நன்றி காட்டான் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி கோபிராச்  வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

தம்பி ராச் என்னவளுக்குத் தெரியும் ரசனையுள்ள கணவன் ரசிப்பானே தவிர ருசிக்கப் போகமாட்டான் என்று! புரிந்துகொண்டவள் அதனால் எப்போதும் ஜாலிதான்!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.சுற்றுலாவிடயத்தை அவர்கள் கவனம் எடுக்கனும் என்பதே என் ஆசையும்!

தனிமரம் said...

நன்றி புலவரே வருகைக்கும் கருத்துக்கும் அழகான இடம் அருகில் இருக்கும் தேசம்!

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் ! எல்லாம் உங்களைப் போன்ற  பெரியவர்களின் ஆசிர்வாதம் தான் காரணம்!

M.R said...

அருமையான தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி .படித்தறிந்தேன் தகவலை.

அம்பாளடியாள் said...

மிகவும் ரசித்து எழுதி இருக்கின்றீர்கள் அருமை !..மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 9

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பயணகட்டுரை ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

மகாபாரதத்தில் மங்காத்தா

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

உங்கள் பதிவு என் வலையின் டாஷ்போர்ட்டில் தெரியவில்லை, செங்கோவி பாஸ் ப்ளாக்கில் பார்த்து தான் உங்கள் பதிவிற்கு வந்தேன்,

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

பதிவு போட்டதும் ஒரு மெயில் போடுங்களேன், ஆட்சேபனை இல்லைன்னா. ஒன்லைனில் இருந்தா
நானும் வந்திடுவேனில்ல.

நிரூபன் said...

அண்ணே ஆசையைக் கூட்டுறீங்க.

எனக்கும் மூலிகை மசாஜ் வேண்டும், ஆனால் காவலுக்கு நீங்க வரூவீங்க என்றால் நானும் வாரேன்.

அப்புறமா இலக்கிய வர்ணனைகளையும் சேர்த்து இனிய தமிழில் வித்தியாசமான மொழி நடையில் கேரளா போகனும் வலையுலகப் நண்பர்களும் எனும் நோக்கில் எழுதியிருக்கிறீங்க.
கலக்கல் பதிவு.

நீண்ட நாட்களின் பின்னர் வழுக்களற்ற ஓர் பதிவு.

இப்படி நிறைய எதிர்பார்க்கிறே.
பூர்த்தி செய்வீங்க என்று நினைக்கிறேன்.

தனிமரம் said...

நன்றி M.R வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி அம்பாளடியாள் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி என் - ராயாபாட்டை ராஜா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இரவு வணக்கம் பாஸ்
மன்னிப்பு தேவையில்லை நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்!
 நிச்சயம் இனி மெயில் போடுகின்றேன்!

தனிமரம் said...

நன்றி நிரூ வருகைக்கும் கருத்துரைக்கும்!
நிச்சயம் இன்னொரு முறை போவோம் ஒன்றாக முலீகை மசாஜ் செய்ய!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிக அருமையான சுற்றுலா கட்டுரை, கேரள படகு வீட்டிற்கு போகனும்னு முன்னே நினைச்சதுண்டு, இப்போ அந்த ஆர்வத்தை ரொம்பவே தூண்டி விட்டுட்டீங்க......!

Anonymous said...

கேரளா எண்டாலே அழகுதானே

தனிமரம் said...

மிகவும் சந்தோஸம் அண்ணா பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் தனிமரத்தின் வலைக்கு வருவது!நன்றி உங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

நன்றி நாராயணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

இராஜராஜேஸ்வரி said...

ஆலப்புழா ஏரி அழகு நடனம் புரிகின்றது. கப்பல் காற்றின் வேகத்திற்கு இசைந்தாடுகின்றது.


அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தனிமரம் said...

நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்!