18 October 2011

நொந்து போகும் ஓர் இதயம்-7

//இந்தப் பாகத்தில் யாரும் தயவு செய்து அரசியல் சாயம் பூசி என் தொடரை திசைமாற்றி விடாதீர்கள் உறவுகளே!-//

:>>>>>>>>>>>>>>>$$$$$$>>>>>>>>>>>
செவ்வாணம் சேலைகட்டும் அந்தி நேர சந்திரோதயம் அவள் அழகு. பார்ப்போர் இவள் என்னுடன் கூட கைபிடித்து மஞ்சத்தில் தஞ்சம்  அடையாளா? என  ஏங்கும் வஞ்சி ஆம்பல் பூவை கையில் ஏந்தும் இளவரசி.

 ஆனாலும் ஏழைக் குடும்பத்தில் எல்லைக்கிராமம்  பூனாவையில் பிறந்த பியதாசவின் மூத்தமகள் சாலிக்கா.

 அக்ரம் வீட்டுக்கு அருகில் குடியிருப்பவள் அக்ரம் வீட்டுக்குப் போகும் பழக்கத்தின் பின்பு எனக்கு கிடைத்த நட்புத் தோழி மிகுந்த சிரமத்தின் மத்தியில் சாதரண


 தரம் படித்து உயர்தரம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தும் பொருளாதார இக்கட்டான நிலையில் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்திற்காக தன்னை தீபம் ஆக்கியவள்.


 எல்லைக்கிராமத்தில் பிறந்த ஒரு குற்றத்திற்காக இவர்கள் குடும்பம் போல் பலர் அந்நாட்களில் பாதிக்கப்பட்டார்கள் .

வெளிமாவட்டத்து சில காடையர்களின் வரவினால் பாலும் தேனுமான எல்லைக்கிராமத்து தமிழ்-சிங்கள உறவில் விரிசல் வந்து ஒட்ட முடுயாத வெடிப்பினை கொடுத்துவிட்டது.

 பூனாவையில் வாழ்ந்த இவர்கள் பின்னர் மதவாச்சிக்கு பின் நகர்ந்தார்கள்.
 பூனாவ வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் இருக்கும் அழகு இயற்கைப் பூமி.

 இங்கு விவசாயம் சிறுபயிர்ச் செய்கை செழிப்பாக இருந்தது.

அங்கு விற்கப்படும் தொதல் என்கின்ற  சக்கரைக்களிச் சுவை என்றும் எனக்குப் பிடிக்கும்.

பிரேமதாச அரசாங்கத்தின் ஆட்சியில் பாதுகாப்புப் படையில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பவும், மக்களிடையே இனவாதத்தை பெருக்கவும், கொண்டுவரப்பட்ட திட்டம் தான். ஊர்காவல் படைத்திட்டம்.

  மக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சாதார மக்கள் மனங்களில் பிரிவினை வாதத்தை எற்படுத்த காரணமாக இருந்த  அன்நாளைய பாதுகாப்பு அமைச்சர் பின் எப்படி அழிந்து போனார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

 அந்த திட்டத்தால் அதிகம் பாதித்தவர்கள் குடும்பத்தின் துயரங்களை மேட்டுக்குடி ஊடகங்களும் சரி இலக்கியங்களும் சரி இரு மொழியிலும் பதிவு செய்ததாக என் பார்வைக்கு எட்டிய தூரத்தில் இதுநாள் வரை நான் அறியேன்!

எல்லைக்கிராமத்துக்குள் புகுந்து வெட்டினார்கள் ,கொள்ளையடித்தார்கள் என்று சகோதர மொழி ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்தவர்கள்  இது உண்மையில் எந்தக்குழு

செய்தார்கள் அவர்களின் திட்டம் என்ன என்பதை ஆராய்தார்களா? நான் அறியேன் !

கொதி நிலை மக்களை அச்சத்திலும், சந்தேகத்திலும், இருக்கும் காரியங்களை கச்சிதமாக செய்தார்கள்.

 தங்கள் இனத்தவர்களாலே தங்கள்  மகளீர் வாழ்வை சூறையாடிய காடையர்கள் பற்றி எந்த செய்தியும் வராது.

 முக்கிய நாழிதலில் வந்தாலும் திரிவு படுத்தப்பட்டு மக்களிடம் போகும் போது அதற்கு புலிச் சாயம் பூசுவார்கள்.

 பல பெரும்பாண்மை மக்களுக்கு புலிகள் ஒரு போதும் பெண்களை சீரலித்தவர்கள்,வன்முறை செய்பவர்கள் அல்ல என்று புரிந்து கொண்டதால் அவர்களின் சில திட்டங்கள் தவுடு பொடியாகியது மறுக்க முடியாத உண்மை!

 பின் சமாதான தேவதை காலத்தில் இந்தப்படையில் சீர்திருத்தம் செய்வதாக செல்லியே இன்னும் நாறடித்த வரலாற்றை இந்தப்பூமியில் எல்லைக்கிராமத்தில் வாழ்ந்து,  இதே எல்லைக்கிராமத்தில்  வறுமையிலும் முன்னுக்கு வரும் இலக்கியவாதி ஒருவன் என் சினேகிதன்   எதிர்காலத்தில் நாவலாகப் பதிவு செய்வான்.

 அவன் படைப்புக்கள் மக்களிடம் போகுமா என்பதை காலம்தான் பதில் சொல்லனும்!

யுத்த செய்தியை தாங்கி வந்தோர் இங்கு வந்து. சில முக்கிய அமைச்சர்களும் அவர்கள் சேனைகளும் மூலச்சலவை  செய்து ஏழைகள் குமார்களையும், குமாரிக்காவினர்களையும், யுத்த பூமிக்கு யுத்த சேனையின் ஆளனியில்  அனுப்பி போன  வேகத்தில் பெட்டிகளிலும் ஒலித் தோடி இன்று மறைந்து வாழ்வோர் பலரின் சீரலிந்த ரெளத்திர வாழ்வை இலக்கியமும் பதிவு செய்ய தயங்குகின்றது.!

 சிங்களத்  திரை பதிவு செய்தாள் கத்தரிபோடுகின்றது.

 ஆனாலும் இவர்கள் எச்சங்கள் எதிர் காலத்தில் இலங்கை இலக்கியத்தை நடு நிலமையோடு ஆராய்ந்தால் !

நிச்சயம் இந்த எல்லைக்கிராமங்கள்   புதிய செய்திகள் பலதை இலக்கிய, சினிமா உலகத்திற்கு திடுக்கிடும் வண்ணம் கொடுக்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை  .

இதற்கு சாட்சி காட்ட முடியுமா  என்று  நீங்கள் யாரும் கேட்டாள் தனிமரத்தின் நண்பன் குடும்பத்திற்கு உயிர் உத்தரவாதம் கொடுத்தாள்!

 அவனை  சர்வதேசத்தில் நடுநிலை மன்றங்கள் .உண்மையில் இருந்தாள் அவனும் சமூகம் அளிப்பான் என்பதை தாழ்மையாக கூறிக் கொள்கின்றேன் .

அவன் தான் இந்தக்கதையின் தொடர் எழுதும் நாயகன் .
தனிமரம் வெறும் எழுத்தாணிமட்டுமே!

தோல்வியடையும் பொருளாதார நாட்டில். வறுமையாலும் தொழில் வாய்ப்புக்கள் சரியாக கிடைக்காத போது சாதாரன குடும்பத்தில் பிறந்து பொருளாதார தேடலுக்கு முகம் கொடுக்கும் இளைஞன் ,,யுவதிகளுக்கு, இரானுவத்தில் சேர்வதைத் தவிர வேறவழி இல்லை.

 இதை தடுக்க வேண்டியவர்கள் கைநாட்டு என்றாலும் பருவாயில்லை நீ பெரும்பாண்மையில் பிறந்தவன் என்றாள் ஓடிவா உனக்கு சூபிற்ச்சமான எதிர்காலம் இருக்கு.

 என்று உள்வாங்கியோர் மெத்தப் படித்த பண்டிதர்கள்.

 தவறுகள் நடந்த பின் தாங்கள் தப்புவதற்காக சாதாரன சிப்பாய் தவறு என்று பழி தீர்த்த வரலாறுகள் பலது இருக்கும் பூமி இந்த மண்.

 எல்லைக்கிராமத்தில் இருந்த யுவதிகளை அரசு இயந்திரம் பொருளாதார முன்னேற்றம் தருவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து ஊர்காவல் படையில் சேர்த்தது.

 நல்ல சம்பளம் என்று உள்சென்ற பெண்களில் சாலிக்காவும் ஒருத்தி.

தன் பொருளாதார தேடலுக்கு அவளுக்கு முன் இரு தேர்வு தான் இருந்தது துரிதமாக பணம் திரட்ட  .

ஒன்று எல்லைப்படையில் காவல்துறை பெண்ணாக சேர்வது அல்லது தன் மேனியலகை நட்சத்திர ஒளி வீசும் மாடாதிபதிகளின் நட்சத்திர விடுதியில் தன் சதையை விற்பது.

 அதுக்காக  அனுராதபுரத்தில் இருந்த விடுதிகளை முக்கிய அரசதுறை பெரியவர்களும் சமுகத்தில் பாரம்பரிய குடும்பத்தின் வாரிசுகள் பல சமுகப் பாதுகாப்புடன் அரச இயந்திரத்தை தம் கைகளில் வைத்திருந்தார்கள் .

.இங்கு தான் இரானுவத்தின் மிகப்பெரிய ஆளனித்தளம் இருந்தது.

 இங்கு நடந்த தாக்குதல் பின்நாளில் ஊடகங்களில் பார்க்க முடியும். .

ஓய்வில் வரும் இரானுவத்தின் உடல் பசியைத் தீர்க்க இங்கு எத்தனை விட்டில் பூச்சிகள் கண்ணீரில் கசந்து போனார்கள் என்று நன்றாக எனக்கும் தெரியும்.

 இவர்களின் வயதுக்கு இத்தனை நூறில் இருந்து இத்தனை ஆயிரத்தில்  என்று விலை வைக்கப்படுவது உலக சினிமாவில் மட்டும் காட்டப்படும் காட்சி மட்டும் அல்ல நிஜம்.

 என் தொழில் நிமித்தம் இந்த நட்சத்திர விடுதிகளில் தங்கி இருந்துள்ளேன் .

பல சகோதர நண்பர்கள் என்னுடன் வேலை செய்தவர்கள் போய் வந்து  என்னுடன் குடிபோதையில் கண்ணீர் விட்டு அழுத கதைகள், அவர்களின் உணர்வுகளை நன்கு நேரில் பார்த்து  அவர்களை தேற்றியும் இருக்கின்றேன்..

29 comments :

MANO நாஞ்சில் மனோ said...

மனதை உறைய வைக்கும் பதிவு, கண்ணீரை கொட்டுது கண்கள்...

தமிழ்வாசி - Prakash said...

மனதை உறைய வைக்கும் பதிவு...

Anonymous said...

இந்த பதிவில் நொந்துவிட்டேன் நேசன்....

மங்காத்தாடா said...

உறுப்பினர் 65

செங்கோவி said...

பதற வைக்கும் உண்மைகளுடன் நகர்கிறது தொடர்.

செங்கோவி said...

விபச்சாரத்தினால் நேரும் கொடுமைகளைப் படிக்கும்போது, பரிதாபமாய் உள்ளது.

சாலிக்காவின் முடிவு அந்த வகையில் பெட்டர் தான்.

shanmugavel said...

நெஞ்சை உருக்குகிறது,

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஅங்கு விற்கப்படும் தொதல் என்கின்ற சக்கரைக்களிச் சுவை என்றும் எனக்குப் பிடிக்கும்ஃஃஃஃ

உணர்வு தந்த இப்பதிவில் இந்த இடத்தில் வந்த சரியான தமிழ் மிக அழுத்தம் சகோதரா...

K.s.s.Rajh said...

////பூனாவ வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் இருக்கும் அழகு இயற்கைப் பூமி./////

ஆம் பாஸ் பூனாவ ஒரு அழகான பூமி அதன் அழகு சிறப்பானது

K.s.s.Rajh said...

பல விடயங்களை சொல்லியிருகிறீர்கள்..தொடர் சிறப்பாக செல்கின்றது..

சகோதரமொழி பொண்ணுங்களிடம் உண்மையில் பல சோகக்கதைகள் இருக்கின்றன..நானும் சில கதைகளை கேள்விப்பட்டுள்ளேன் பாவம் அவர்கள்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
தொடர் அருமையாகப் போகிறது.
அடியேனுக்கு ஒரு சந்தேகம்,
போன பகுதியில் சைக்கிளில் நீங்கள் ஏற்றிச் செல்லும் போது பாக்கட்டினுள் கை வைத்தாள் எனச் சொல்லியிருந்தீங்களே...
அப்போ மிகுதி தொடர்ச்சியைக் காணவில்லையே.

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி தமிழ்வாசி  வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரெவெரி  வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மங்காத்தாடா வருகைக்கும் இணைவுக்கும்.

தனிமரம் said...

நன்றி செங்கோவி வருகைக்கும் கருத்துரைக்கும் உண்மையில் சாலிக்காவின் தெரிவை நானும் வழிமொழிந்திருந்தேன்.

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மதிசுதா வருகைக்கும் கருத்துரைக்கும்.
நீங்கள் சொன்னால் அதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்களுக்கு சந்தேகம் இதில் ஒன்று!
இந்தப்பகுதியில் நான் இந்திரா தியேட்டர் முன்னால் நிற்பதாகத்தான் சொல்லியிருந்தேன்//
இதோ அந்தப்பதிவு.
//குழப்பத்தில் நான். பிரதான பாதையில் நிற்கும் போது .
ஐயே கோமத. மொக்கட்ட மெத்தனம் இன்னே?

(அண்ணா நலமா,என்னத்திற்கு இங்கே நிற்கின்றீர்கள்)  என்றவாரே என்  அருகில் தன் கரங்களை  நீட்டினாள் சாலிக்கா.
 . ஒரு நண்பன் வருவான் மதவாச்சிபோகனும் என்றேன் நிஜம் என்பதைப் போல் பாவனையில். அப்படியா! நானும் அங்காலதானே போறன் நீங்களும் வாங்கோ என்றாள் .நண்பனுக்கு கைபேசியில் அழைத்துப்பாருங்கள்.

" எங்கே இருக்கான் என்று கேளுங்கஎன்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின்  பொக்கட்  மீது  கைவைத்தாள்!//
 சகோ நான் இங்கு சைக்கிள் பாவிக்கவில்லை நண்பன் தான் என் மீது உள்ளகோபத்தில் சைக்கிள் பெடிலை மிதித்தான் என்று சொல்லியிருக்கின்றேன்.

தனிமரம் said...

சகோவின் சந்தேகம் இரண்டு- மிகுதியைக் கானவில்லையே என்பது!
நான் இந்தப்பதிவில் சாலிக்கா யார் என்பதைத்தான் சொல்லியிருக்கின்றேன் கைவைத்தாள் சஸ்பென்ஸ் இன்னும் முடிக்கவில்லை அது அடுத்த தொடரில் தெரியும்.
 
நண்றி வருகைக்கும் கருத்துக்கும் .

நீங்கள் செம்பை நெளிப்பீர்கள் என்ற பயத்தில் இருந்தேன் .முக்கியமானவர்கள் யாரும் இந்த தொடரை சீண்டதால் இனி வரும் பகுதியில் சாலிக்காவுக்கும் எனக்குமான உறவை துனிந்து சொல்லுவேன்!

ஹேமா said...

அனுபவப் பகிர்வு அசத்துகிறது நேசன்.தொடருங்கள் துணிவோடு !

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!ஒவ்வொரு பாகமும் வாசிக்க,வாசிக்க சுமை அதிகரித்தே செல்கிறது.இலங்கையில் இனவாதம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்றது என்று அனைத்து உறவுகளும் தெரிந்து கொள்ள இது ஓர் அருமையான சந்தர்ப்பம்.

Yoga.S.FR said...

பூனாவவா,பூனேவவா?சிங்களத்தில் "பூனேவ" என்று தானே அழைக்கிறார்கள்? நான் கூட சென்றிருக்கிறேன்.வளமான பூமி.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
இந்தத் தொடர் என் வேலையுடன் சம்மந்தப்பட்டது அந்தப்பகுதியில் பல ஆபத்தான காலகட்டத்தில் இருந்தன் விளைவு இனியும் பல விடயங்களை விரைவில் சொல்ல இருக்கின்றேன் இது என் கனவுத் தொடர் ஒரு பத்திரிகை என் தொடரை நிராகரித்தது அதைத்தான் மீளவும் கொண்டு வாரன்!
 

தனிமரம் said...

தமிழில் பூனாவா என்றும் சிங்களத்தில் பூனேவா என்று அழைக்கின்றனர் .
இங்கும் அருகிலும் அதிகம் குளம் இருப்பதால் சகோதர மொழியினர் குளத்தின்  பெயர் வரும் வண்ணம்( வவெ ) பெயர் வைத்தார்கள் பூனாவையில் சிறு குளம் இருந்த தாக மூத்தவர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார் அது 1969 முற்பட்டதாக இது செவி வழிக்கதையாக இருக்கலாம் என்றும் ஒதுக்க முடியாது காரணம் அதிகமான குளம்கள் அனுராத புரம் மாவட்டத்தில் இருப்பதை நேரில் பார்த்தவன்!
 மதவாச்சி, பூனாவை அனுராத புரமாவட்டத்தில் பின் இணைக்கப்பட்டது இது சர்ச்சை மிக்க விடயம்!  நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

shanmugavel said...

நெஞ்சை உறைய வைக்கிறது.

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.