04 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-17

ரிஸ்வானாவின் நிக்கா முடிந்த  கையோடு தன் காதல் என்ற படலத்தை தொடங்க இருக்கும் .

பார்த்திமாவின் செயல்களை உணர்ந்து கொண்ட மொயூத் வாப்பா.


 எண்ணங்களை மெளனம் ஆக்கி எதையும் சமாதான பார்வையாளர் பாதுகாப்புப்படை போல் அமைதிகாத்தார்.


மறுநாள் மாலை  என்னைத் தேடி என் நிறுவனத்திற்கு வந்திருக்கின்றார்.

 நான் எங்கே இருப்பேன் என்பதை அவருக்குத் தெரியும்.!

  வசந்தியில் உலகம் பிறந்தது எனக்காக படம் பார்த்து விட்டு வெளியில் வரும் போது தன் மோட்டார் சைக்கிளுடன் எனக்காக காத்திருந்தார்.

 என்ன வாப்பா இங்க நிற்கிறீங்க? பைக் வேலை செய்யலையா? என்று நோட்டம் இட்டேன் .

வழமைக்கு மாறாக அவர் முகம் வாடியிருந்தது.

 எந்தச் சூழ்நிலையிலும்
நான் அவரை அப்படிப் பார்த்ததில்லை !

இந்த வியாபாரம் தொடங்கிய காலத்தில் இருந்து குழந்தை போல் சிரிப்பும் வெண்தாடியும் அவரை நடிகர் திலகனை ஞாபகப் படுத்துவார்.

 எனக்கு அப்படியான
அந்த முகத்தில் கவலை ரேகை இராமகாவியத்தில் வாலி மடிந்ததும் அங்கதன் அழுத காட்சி போல் இருந்தது.

 .என்ன வாப்பா உடம்புக்கு ஏதும் முடியலயா?

 இல்ல மவன் உன்கூட கொஞ்சம் மனம் விட்டுக்கதைக்கனும். என் கூட வாரியா?

 அவர் பின்னே ஏதும் கதைக்காமல் நானும் ஏறிச் சென்றேன் .

 மோட்டார்  சைக்கிளை ஹொரவப் பொத்தானை சாலையோரம் திருப்பி ரோயல் தியேட்டர் முன்னாடி இருக்கும்  சந்தியில் நிறுத்தினார்.

 நாங்கள் மாலையில் அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர் கடையில் தான் கோப்பியும் வாய்ப்பானும் சாப்பிடுவது!

 நல்ல இறால் வடை சுடச் சுடக் கிடைக்கும்.

எனக்கு வாப்பா கோப்பியை வரவலைத்தார்!


சொல்லுங்க வாப்பா என்ன பிரச்சனை?

 எப்படிச் செல்லுவது மவன்! என்ன பிழைவிட்டன் நான்.

 மார்க்கம் தவறாமல் இத்தனை தூரம் என் பிள்ளைகளை வளர்த்தன். இப் நடக்கக் கூடாத செயல்கள் நடந்து விடுமோ என்று பயமா இருக்கு.

 என்ன சொல்லுறீங்க பாய்?  எப்படிச் செல்லுவது மவன் .    காலையில் பானுவும் ,மருமவனும் வந்தார்கள்!


  எனக்குப் புரிந்துவிட்டது அக்ரம் அவசரப்படுகின்றான்.

 இந்த விடயத்தில் என்று.

 ஆனாலும் மெளனம் காப்பது நல்லது .


பார்தாவில் காதல் தீ
 அது முகத்தினை மூடிக் கொள்ளாது. குங்குமம் வாங்குவதற்கும்
  வேலிதாண்டடும்
  என்பதை உணர்ந்தவன்.
 குங்குமம் வைக்கும் விரல்கள் வேட்டையாடப்படும் விபரீதம்
 புரியாத விடலைப்பருவக் காதல் ஜோடிக்கிடையில்
 பேர்லின் சுவராக என் நிலை!

வாப்பா என்னாச்சு!

 விளக்கமாக சொன்னால் தானே!

 ரிஸ்வானா நிக்காவில் ஏதும்  பணப்பிரச்சனை என்றாள் என்னிடம் விடுங்க எல்லாம் வெல்லலாம்.

.அவர் கண்களில் நீர்த்துளி.

 நல்லவர்கள் கண்ணீர்த்துளிகள் நிலமகள் மீது விழதல் நியாயமோ!

 என்று எங்கோ படித்த ஞாபகம் வந்து என் நினைவுகளை சீண்டியது.

 வாப்பாவுக்கு இப்படி ஒரு நிலையை அல்லா ஏன் கொடுத்தார்!

 என்று புரியவில்லை.

வாப்பா ஏதாவது பேசுங்க என் கோப்பி ஆறுது .

உங்களுக்கே தெரியும் நான் சூடான கோப்பி குடிப்பவன் என்று இப்படி இடிவிழுந்தது போல் இருந்தால் என்ன விசயம்.

 மனம் விட்டுப் பேச வந்துவிட்டு முகட்டைப்பார்த்தால் நிமிடங்கள் நரகமானது.

 எப்போதும் நல்ல பாடல் போடும் அந்தக்கடையின் வானொலியும் இன்று பாடவில்லை.

  நீண்ட ஜோசனையின் பின் வாப்பா சொன்னார்.

 மவன் நம்ம
பார்த்திமா யார் கூடவோ அதிகம்
பழகின்றாலாம்.

 அதை அக்ரம் பார்த்தாராம் இங்கு படிப்பை தொடர்வது நல்லது இல்லையாம் !

.உங்ககூட ரெண்டு நாள் முன்னாடி பேசினாராம் என்று எனக்கும் இது தெரியும் என்பதை பூடாக மாக தெரிவித்தார் வாப்பா!


என்ன செய்வது மவன். நான் என்ன செய்ய நம்ம மவ வாழ்க்கையில் இப்படி ஒரு விதி !

நீங்க என்ன நினைக்கின்றீங்க? உங்க நண்பனாமே அந்தப்பையன்!

  என்று அவர் இழவையில் எங்கள் வியாபாரத்தையும் சம்மந்தப்படுத்துவது எனக்கு விளங்கிவிட்டது.

வாப்பா முதலில் தெளிவாக இருங்க வியாபாரம்
வேறு, குடும்பம் வேறு ,

நான் இரண்டையும் ஓடும் புளியம் பழம் போல பார்க்கின்றவன்.

 முதலில் தெளிவா ஜோசியுங்க பாய் பார்த்திமா போறபாதை தவறு.

 ஆனால் இப்ப படிப்பை இடை நிறுத்துவது சரியல்ல இந்தக்கட்டத்தில் தான் நல்ல குருவைப்போல் வழி நடத்தனும்!

தொடரும்!
    

13 comments :

K.s.s.Rajh said...

அண்ணே ஊரில் டபுள்கேம் ஆடுறது என்று ஓரு வார்த்தை சொல்வாங்க உங்க நிலைமையை பார்க்க நீங்க ஆடாவிட்டாலும் விதி உங்களை டபுள்கேம் ஆடவச்சிருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

டபுள் கேம் ஆட்டம் உங்களையே ஆடவச்சிருச்சே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி'ல இணைப்பு குடுத்துட்டேன்...

கோகுல் said...

நல்லவங்க கண்ணீர் நிலமகளை நனைக்கக்கூடாது தான் என்ன பண்றது.?
ஆனா அப்படி நடக்குறது இல்லையே.

Anonymous said...

மார்க்கம் தவறாமல் இத்தனை தூரம் என் பிள்ளைகளை வளர்த்தன். இப் நடக்கக் கூடாத செயல்கள் நடந்து விடுமோ என்று பயமா இருக்கு//

யதார்த்தம்...

Yoga.S.FR said...

நடத்துங்க,நடத்துங்க!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் டவுல்கேம் ஆடியதன் விளைவு இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்வீர்கள்

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி  வருகைக்கும் கருத்துரைக்கும் .விதி யாரை விட்டது மனோ அண்ணாச்சி!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி  இண்ட்லி இனைப்புக்கு!

தனிமரம் said...

நன்றி கோகுல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்! என்ன செய்வது புரட்சி என்கிறார்கள்?????

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா  வருகைக்கும் கருத்துரைக்கும்.. நடத்தினது என் குலதெய்வம் நான் இல்லை!

நிரூபன் said...

அடடா, வீட்டாருக்குத் தெரிந்தது விட்டதே..
அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

பார்த்திமாவின் நிலை என்ன ஆகப் போகிறதோ?