10 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-22

நீ ஒரு துரோகிடா! கூட இருந்தே இப்படி குழிப்பறித்துவிட்டாய்.
 ஏன் வீட்டுக்குப் போனாய்? நீ மனிதனே இல்ல நான் லவ்பண்ணினா உனக்கு என்னடா?

 என்று சகோதரமொழியில் மூன்றாம்தரமான வார்த்தைகளை நிலைகெட்டு தூற்றிக் கொண்டிருந்தான் ரவி.

"  .எனக்கோ சிரிப்பு ஒரு புறம் அவன் மீது பரிதாபம் இன்னொரு பக்கம்."

 சிரிக்காத உன் சிரிப்பே வஞ்சகச் சிரிப்பு. கடைசியில் என்னை இப்படி பார்த்திமாவை தேடும் படி விட்டு விட்டாய்.

" நீ என்ன சொல்கிறாய்? பார்த்திமா எங்க என்றேன் இயல்பாக தெரியாதது போல்

  நீ நடிக்காத.
 "உன்னைமாதிரி எனக்குப் பொய் சொல்லத் தெரியாது.

 ஏன்டா நீங்கள் எல்லாம் இப்படி இருக்கின்றீர்கள்.

 எங்கள் உணர்வு உனக்கு விளையாட்டாப் போச்சோ?

 "இங்கபார் ரவி நீ இப்படி எல்லாம் ஏன் குழம்பிப்போனாய்.

எனக்கும் உனக்கும் என்னடா பிரச்சனை .படிக்கின்ற வயசில் இந்த நிலை கூடாது மற்றும் படி பார்த்திமா விடயம் எனக்கு ஏதும் தெரியாது.

 உன் பிரட்சனையில் ஏன் நான் தலைபோடப்போறன். நீ போறவழி பிழை என்று ஒரு நண்பனாக தடுத்தன்.

கேட்கும் நிலையில் இல்லாத போது அம்மாவிடம் கண்டிக்கச் சொன்னன் .அவங்க என்னைத் திட்டினாங்க .

சமாதனப்படுத்த வேண்டிய நீயே இப்படி மூன்றாம் தரமான சகோதரமொழியை உமிழ்வது வேதனைடா!

 நான் இந்த வார்த்தைகளை வியாபார ரீதியில் உதிர்க்கும் போது கூட சங்கடப்படுபவன்.

 நீ நல்ல நண்பனாக இருக்கனும் என்று எதிர் பார்த்தேன் சீச்சீ நீயும் என்னை ஒழுங்காப் புரிஞ்சுக்கிடலையே.

 இப்படி ஒருத்தனோட பழகியதை நினைச்சு இன்னொரு கிளாஸ் ஜின் அடிக்கனும்.

 போடா போய் படிச்சு  நல்ல குளிர் அறையில் இருந்து சம்பாதிக்கப் பாரு.

  காதலிக்கலாம் எத்தனை வயசிலையும் .படிப்புப் போனால் முடியாது மச்சான் புரிஞ்சுக்க!

" நிதானமாக ஜோசி அம்மா உன்னை ரத்தரங் பட்டியோ என்றாங்க பாரு!

 அந்த நம்பிக்கையைச் சரி காப்பாற்றப்பாரு.

 என்னை விட்டா உனக்கு இன்னும் ஆயிரம் பேர் வருவாங்க.  வேனும் என்றாள் ஒரு பீர் அடித்து இச்சைக்   காதலை இன்றுடன் விட்டு விடு.

  வார்த்தைகள் தடித்து விட்டால் மீண்டும் ஒட்டவைக்க இது ஒன்றும் சைக்கிள் ரியூப் கிடையாது நட்பு. என்னாலும்  மும்மொழியிலும் உன்னுடன் மூர்க்கமாக பேசமுடியும் என்பதைக் கூட மறந்து போகும் அளவுக்கு நீ தடுமாற்றத்துடன் இருக்கின்றாயே!


 இதில் இருந்தே தெரியலையா அம்பஜாலுவக் கியன்னே மொக்கத்த கியல!

 உனக்கெல்லாம் என்னடா தெரியும்? துரோகி,குழிபறிப்பவன் பற்றி!

 வார்த்தைகளின் தாற்பரியம் தெரியாமல் வாயில் வாரது எல்லாம் பேசுவதா .

வாழ்க்கையில் இன்னும் படிப்பு முடிக்கவில்லை. வேலைதேடவில்லை. ஆனால் காதலி மட்டும் தேடுவீங்க.

 நீங்களே ஒரு தனித்துவமகா இல்லாத போது!

 இன்னொரு அன்னக்காவடியையும் தூக்கி வீட்டுக்கு பொறுப்பை அல்லவா கூட்டுறீங்க.

 போடா ரவி போய் எந்த நடிகர்  எந்த நடிகைக்கு சோப்பு போடுகின்றார் என்று காலத்தை ஓட்டுங்க.


 நாட்டின் நிலை என்ன? வேலைவாய்ப்பு பற்றி ஆராயாதீங்க!

 போடா டேய் உன்னுடன் பேசி என் வியாபாரத்தை கெடுக்க விரும்பவில்லை.

 புரிந்தும் புரியாததுமாக வேகமாக வந்தவன் என்னுடன் கதைத்து ஏதும் நடக்கப் போவது இல்லை என்பதை உணர்ந்தவன் போல்!

இனிமேல் நீ நண்பன் இல்ல. உனக்கும் ஒரு காதல் வந்து இப்படி அல்லாடும் போது என் உணர்வு தெரியும்.

" நீ நல்லா இருக்கமாட்டாய் தனிமரம் உன்னைமாதிரி ஒருத்தனை சந்தித்தது என் கஸ்ரகாலம்.

 உன்னை இனி சந்திக்கக் கூடாது எனக்கு எப்படி பார்த்திமாவை தேடுவது  என்று தெரியும் !

. ரவித் தம்பி! உன்னை மாதிரி எல்லாம் நான் இல்ல சாபம் போடாமல் போய் படி!

போதையில் போவோர் போல தளர்ந்த படி தன் சைக்கிளில் அங்கிருந்து கடந்து போனான்.

 அப்போது அருகில் தியேட்டரில் இருந்து ஒலித்தது. இந்தப்பாடல்

 அவன் போன பின்னாடி அசங்க வந்தான் இவன் சாலிக்காவுடன் பணியில் இருக்கும் நண்பன்.vain

தொடரும்!

////:////

ரத்தரங்க பட்டியோ
-தங்கமகன் என்று செல்லமாக/பாசமாக சொல்லும் சகோதரமொழி வார்த்தை.
அம்பஜாலுவக் கியன்னே மொக்கத்த கியல- இனைபிரியாத நண்பர்கள் என்றால் என்ன வென்று சொல்வது!
(இந்தவார்த்தைக் கோர்வை சகோதரமொழியில் மிகவும் புனிதமான இலக்கிய இலக்கனம்.)

18 comments :

Anonymous said...

காதலிக்கலாம் எத்தனை வயசிலையும் .படிப்புப் போனால் முடியாது மச்சான் புரிஞ்சுக்க//

நடுவில் நச்சுன்னு அட்வைஸ்...

இன்னொரு கிளாஸ் ஜின் அடிக்கனும்.
//

விட மாட்றீங்களே...தொடருங்க நேசன்...

Anonymous said...

இன்றும் முதல் கோப்பி எனக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா எங்களையும் சிங்களம் பேசவச்சிருவீங்க போல...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு கோப்பி வேண்டாம் ஒரு ஜின் பாட்டல் போதும் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இன்னைக்கும் தமிழ் பத்து இணைப்பு நான்தானா அவ்வ்வ்வ்வ்...

தனிமரம் said...

வாங்க ரெவெரி முதல் பால்கோப்பி இன்றும் உங்களுக்குத்தான் இனியமாலைப் பொழுதில் அருந்துங்கள்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

மொழிகள் பலதும் கற்போம் நம் பொருளாதார தேடலை உயர்த்துவோம் அண்ணாச்சி .

தனிமரம் said...

பாரிஸ் வைனுக்குத்தான் பிரபல்யம் ஆகவே நல்ல வைன்(பழச்சாறு கம்பன் சொல்வான் இராவணன்படைகள் மயக்கத்தில் கிடந்தபோது அனுமன் இலங்கையில் பூந்தான் என்று அப்படித்தான் இருக்கும் வைன் குடித்தால் மயக்கம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லுவார்!) அதை அனுப்பி வைக்கின்றேன்!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணாச்சி திரட்டிகளில் இணைத்துவிட்டு ஊக்கப் படுத்துவதற்கு போதியளவு நேரம் கிடைப்பது இல்லை வேலைப்பளுவால் கணனி முன் இருக்க.
மீண்டும் நன்றிகள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

செங்கோவி said...

ரவி உணர்ச்சிவேகத்தில் பேசுகின்றார்..ஆனாலும் உங்கள் நிதானம் பாராட்டத்தக்கது நேசரே.

செங்கோவி said...

பெற்றோரின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது தான் பிள்ளைகளின் முதல் கடமை.

ஹேமா said...

என்ன நேசன் எப்பவும் சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரிப் பாட்டும் வருது !

கவி அழகன் said...

Kathai arumai valthukal

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.
பாடல் தான் சில காட்சிகளை மெருகூட்டும் உணர்வைச் சொல்லும் என்பது என் கருத்து அதனால் தான் இசையையும் சேர்த்து தொடர்கின்றேன்!

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

K.s.s.Rajh said...

காதல் மயக்கம் ரவியின் கண்ணை மறைந்துவிட்டது தனிமையில் இருந்து யோசிக்கும் போது உங்களை திட்டியது தவறு என்று நிச்சயம் உணர்ந்து கொண்டிருப்பான்....

பலருக்கு நீங்கள் காதலை பிரித்த வில்லானாக தோன்றினாலும் நான் சொல்வேன் அண்ண நீங்கள் செய்யது 100% சரியானது சரியான அட்வைஸ் அந்த பையனுக்கு

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...