15 November 2011

முகம் தெரியாத உறவுக்கு!

வணக்கம் என் வலையுலக உறவுகளே!

 கடந்த சில நாட்களாக தவிர்க்கமுடியாமல் அதிகம் தொடரினை தொடர்ந்து எழுதி உங்களை எல்லாம் கொஞ்சம் சிரமப் படுத்தி விட்டேன்.


 உங்கள் ஆதவுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் .

பின்னூட்டம் இட்ட சகல சகபதிவாளருக்கும் தனிமரம் நேசனின் தாழ்மையான நன்றிகள் மீண்டும் ஒருமுறை!

உங்களுடன் என் உள்ளத்தின் சில உணர்வுகளைத் தொடராக நகர்த்திய போது.

 எதிர்பாராமல் ஒரு முகத்தை மூடிக்கொண்டு ஒரு நண்பர் என் தனி மின்னஞ்சல் ஊடாக வந்து முன்று கேள்வியைக் கேட்டு விட்டு மிகவும் நாகரிகமாக தன் தனிமின்னஞ்சலை பகிரங்கப் படுத்த வேண்டாம் என்று கேட்டு விட்டு போய்விட்டார்.

விபூசணன் அடைக்கலம் நாடி வந்த போது ராமன் சொல்வான் நம்மளை நாடி வந்தவனுக்கு உதவுவது நம் கடமை என்று.அதனால் உங்கள் தனி மெயிலினை குப்பையில் போட்டு விட்டேன்.
 கருத்தினை நெஞ்சில் நிறுத்தி விட்டேன்.

முதலில் உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
 இந்தத் தொடரை தொடர்ந்து எழுதிமுடிக்க நீங்கள் வார்த்த வரிகள் தான் காரணம்.
இனி உங்களிடம்

1) முதலாவது சாடல்-ஹிட்ச் ,ஓட்டுக்காக பிரதேசத்தை வைத்து தொடர் எழுதுவது தேவையா?

ஐயா நீங்கள் சொல்லும் ஓட்டு ,ஹிட்ச் பற்றி எதுவும்தெரியாதவன் தனிமரம்.

  ஓட்டுக்கள் அதிகம் வாங்கும் நண்பன் என் குரு நிரூபனிடமும் .


 200000 அதிகமான ஹிட்ச் கொடுத்து  தொடரும்  செங்கோவி அண்ணாச்சியிடமும் கேட்க
 வேண்டும் இது எப்படி சாத்தியம் ஆகின்றது என்று.

  அந்தப்பட்டியலில் நான் இல்லை..

பிரதேசத்தை வைத்து எழுதுவது தேவையா?-

 நிச்சயம் தேவை என்பது என் வாதம். ஒரு கதைக்களம் எங்கு நடக்குது என்று தெரியாமல் ஊகத்தின் அடிப்படையில் எழுதுவது தொடரினை முழுமையாக்காது.

 விழிநிலை மக்களின் உயிர் அச்சத்தை நேரில் பார்த்தபோது மூவின மக்கள் மனநிலையை  தெளிவாக சொன்னேன் .

ஆகவே இதில் தவறு இல்லை .

கிராமத்து வாழ்க்கையை அமெரிக்காவில் நடப்பதுப்போல காட்டும் சினிமா அல்ல இது என் வாழ்க்கையில் சில உணர்வுகள் பகிர்ந்த பதிவு புரிந்து கொள்ளுங்கள் நண்பரே.!


 என் பின்னூட்ட நண்பர்கள் யோகா ஐயா, ரெவெரி ,நண்பன் ராச் இந்தப் பகுதியில் நான் தொடரினை திசைமாற்றி விட்டதாகவும்.


 உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியபோது! அந்த பின்னூட்டங்களுக்கு இன்னும் பதில் கொடுக்காமல் காலம் தாழ்த்தியது தொடரினை  முழுமையாக புரியட்டும் என்பதற்காக..!


.ஆகவே என் முகாம் பற்றிய பார்வையில் சமுகசீர்கேட்டை பார்த்தவன். பொறுக்கமுடியாமல் தான் அந்த எண்ணங்களைப்பகிர்ந்தேன் .
அதில் பலபதிவு தனியாக போடலாம் ஆனால் யாவருக்கும் சங்கடங்கள் வரும்.

  என் மீதான அனுதாபம், கோபம் ,தேவையற்றது.!

 நான் பதிவுலகில் எல்லைக்கிராமத்தைப் பற்றி சொல்ல வேண்டியதை சொல்லிய சந்தோஸம்
எனக்குப் போதும்.

 கருத்துச் சொல்லி முட்டி மோதுவதில் தனிமரம் எப்போதும் பின் நிற்காது  பயமும் .இல்லை!

உங்களின் இரண்டாவது சாடல்-2) வடக்கில் இருந்து வந்துவிட்டு புத்தவிகாரைக்கு சிங்களத்தி கூடப் போவது அருவருப்பா இல்லையா?

ஏன் இந்த மதவெறி /இனவெறி உங்களுக்கு நண்பரே-?

புத்தவிகாரைக்கு போகவேண்டாம் கிரிஸ்தவ ஆலயம், மசூதி,என எங்கும் போக வேண்டாம் என்று என் மதம் என்னைக் கட்டுப்படுத்தவில்லை.

 நான் மதவாதி அல்ல!

 என் பதிவில் பல பாடல்கள் என் சுயசிந்தனையைச் சொல்லியிருக்கின்றேன்.  முடிந்தால் படித்துப் பாருங்கள்.

நல்ல தோழியுடன் அவளுக்கு பிடித்த இடத்திற்குப் போவதற்கும் அருவருப்புக்கும் என்ன சம்மந்தம் நண்பரே ?

உங்களைப் போன்றோரின் இனவாத என்னத்திற்கு எதிராகத்தான் நான் பதிவுலகில் சிங்களம் என்பது சகோதரமொழி நண்பர்கள் நண்பிகள் என்று கருத்தாடலை வைப்பது!

  நாஞ்சில் மனோ ஒரு பதிவில் மலையாளிகள் என்பதைவிட கேரளா தோழி என்று தான் காத்திரமாக தன் மனஉணர்வை வைத்திருக்கின்றார் அவரிடம் கேட்களாமா? மலையாளதத்தவர்கள் தண்ணீர் தராமல் பாலாறு அணைக்கட்டை வைத்து எத்தனை அரசியல் செய்கின்றார்கள். நீங்கள் போய் இப்படி ஒரு தோழியின் (சகவேலையாளியின் )மனதில் சஞ்சலம் வரும் வண்ணம் நட்பாக இருக்களாமா? என்று.
 முடியாதே!
 யாரோ சிலர் செய்யும் செயலுக்காக எல்லாரையும் குற்றவாளிக் கூட்டில் ஏற்றலாமா?

 அதையும் தாண்டி தொழில் நிமித்தம் இன்று பலர் ஆணோ/பெண்ணோ பலருடன்  பழகும் நிலையில் நட்பு என்பது தவிர்க்க முடியாது.

 அப்படி இருக்கும் போது என் தொழில் நிமித்தம் அல்லது வியாபார தந்திரத்திற்காக(நான் வெட்கப்படவில்லை ) ஒரு பெண்ணுடன் பழகுவது எப்படி தவறு நண்பரே!

3) சாடல்-சாலிக்கா உங்க???????

 இது தான் என்னை என் தொடரில் இருந்து திசைமாற்றிய ஆதங்கமான மனவேதனையைத் தந்த விடயம் நண்பரே!

  நான் என் பதிவுகள் எதிலும் எங்கேயும் சிரிராமன் என்று சொல்லியது இல்லை.
 சராரி வாலிபன் ஆனாலும் எனக்குள் சுயகட்டுப்பாடு எப்போதும் இருக்கின்றது .

யாருடன் கட்டிலைப்பகிரனும் என்று என் பெரியோர்கள் எனக்கு தெளிவாக புத்தி புகட்டி வளர்த்திருக்கின்றார்கள்!  தாய்லாந்து .சிங்கப்பூர்,லண்டன் பாரிஸ் என  பல இடங்களில் தனியாக  இருப்பவன் காமம் மட்டும் என்றால்  எத்தனையோ பேர்களுடன் போயிருக்கலாம்..

 என் தந்தை விற்பனைப்பிரதி நிதியின் தொழிலில் உள்ள சகல விடயங்களையும் தெரிந்த ஒரு கணக்காளர்.

  அவருக்குத் தெரியும் தன் மகன் எப்படியானவன் என்று ஒரு தந்தையை விட யாரும் தன் பிள்ளையின் எதிர்காலத்திற்காக சுகதுக்கங்களை இழக்கமுடியாது.
 அதுதான் தந்தையின் கடமை என்று இதிகாசங்கள் கூறி நிற்கின்ற நெரிமுறை .
இந்த இடத்தில் என் தந்தையின் கணிப்பைத்தவிர வேறயாரும் எனக்கு நற்சான்றுதல் தரனும் என்று விரும்பிய மகன் இல்லை நான்.

 என் மனைவிக்குத் தெரியும் நான் எப்படியான கணவன் என்று.
 என் உறவுகளுக்குத்தெரியும் என் ஜோக்கியம்.

 அதனால் தான் என் விற்பனைப்பிரதி நிதி வாழ்வில் சில வருடங்கள் இலங்கையில் மட்டக்களப்புத் தவிர சகலபகுதியிலும் என் நேரத்திலும் எப்போதும் தனியாக பயணிக்கும் ஒரு மகனாக இருக்க முடிந்தது .

யார் மீதோ சேறு பூசுவதாக நினைத்து என் தாய்தமிழ்மீது இப்படியான மொழிவாதத்தத்தையும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூவாதீர்கள் என்பதை பணிவாக வேண்டுகின்றேன்.

 சாலிக்கா ஒரு  எல்லைப்படை வீராங்கனை என்றாலும் அவளும் ஒரு பெண்.
 நல்ல தோழி எனக்கு! மரணித்தவர்கள் மீது சேறுபூசக்கூடாது என்பதற்காகத்தான் என் தொடரின் இடையில்  இந்த விடயத்திற்கு பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியது

.மரணங்கள், யுத்தங்கள் எங்களை சுயமாக நடுநிலையுடன் சிந்திக்காதவண்ணம் கொதிநிலையைத் தந்தது நிஜம்.

  நானும் இரு பகுதியிலும் வாழ்ந்தவன் என்றாளும் எதிர்கால சந்ததிக்கா என்றாலும் நாம் அப்புகாமியின் மகளும் சுந்தர் லிங்கத்தின் மகனும் நல்ல நண்பர்களாக ஒரே எல்லைக்கிராமத்தில்  வாழும் சுபீட்சத்திற்காக பொதுவான இறைவனைப் பிரார்திப் போம்.!

என் திறந்த மடலில் உங்களுக்கு மனம் புன்பட்டால் தயவு கூர்ந்து மன்னியுங்கள்.

 யாரையும் தவறாக குற்றம் சாட்டாதீர்கள் நான் மொழி,மதம் கடந்த வியாபாரி எப்போதும்.  இது அகங்காரம் இல்லை தன்நம்பிக்கை என்றாவது ஒரு நாள் மீண்டும் பூனாவ என்ற எல்லைக்கிராமத்திற்குப் போக விரும்பும் ஒரு சாமனியன்.

 நன்றிகள் உங்களுக்கு என் தொடரினை பல எழுத்துப்பிழைகளையும் தாண்டி வாசித்ததற்கு!

முகம் தெரியாத நண்பனுக்கு
நட்புடன்
தனிமரம் பதிவாளர்
தி.நேசன்.
//////

14 comments :

Anonymous said...

உங்கள் தொடர் சகோதரர் நிரூபன் தொடர்கள் போல உணர்வுகளோடு நிகழ்வுகளை புரிதலோடு தந்தது...

திசைமாற்றம் என நான் குறிப்பிட்டது முந்தய அத்தியாயங்களில் இருந்து திடீரென கள மாற்றத்தை மட்டுமே...

வாழ்த்துக்கள் நேசன் ...மற்றுமோர் தொடருக்கு...

செங்கோவி said...

சொந்த வாழ்வைப் பொதுவில் வைக்கும்போது, இத்தகைய கேள்விகளை நாம் சந்தித்தான் ஆக வேண்டியுள்ளது..

செங்கோவி said...

ஒரு நல்ல தொடரை அளித்த நேசருக்கு நன்றி.

அப்பு said...

தனிமரம்,
செங்கோவி சொன்னதி போன்று,
சில விடயங்கள் பொதுவில் வைக்கப் படுகின்ற போது, எதிர்பார்க்காத கேள்விகள், புரிந்து கொள்ளாத பார்வைகள் எல்லாம் பல பக்கங்களில் இருந்து வந்து சேரும். அவைகளுக்கு விளக்கம் சொல்லுகிற மன நிலை நமக்குப் போதும். அதனால் மனதொடிந்து போக வேண்டிய அவசியமில்லை நேசரே!
கருத்துப் பகிர்வும், அனுபவப் பகிர்வுகளும் எல்லாரையும் ஒரே மாதிரி உடனே சிந்திக்க வைக்கும் என்பதில்லையே...
பல கேள்விகள் வரும் அதனை எதிர் கொல்லிம் பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் உங்களிடம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

வாங்க ரெவெரி முதலில் ஒரு பால்கோப்பி குடியுங்கோ !

தனிமரம் said...

நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி செங்கோவி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.புரிந்துகொள்கின்றேன் உங்கள் வழிகாட்டலுக்கு.

தனிமரம் said...

நன்றி அப்பு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.புரிந்துகொள்கின்றேன் உங்கள் அறிவுரையை 

Anonymous said...

விட்டுத் தள்ளுங்க இவர்களை ...

Anonymous said...

ஒரு பிரதேசத்தை பற்றி எழுதுவது எப்படி பிரதேசவாதம் ஆகும் என்று அந்த அன்பரிடம் கேட்கிறேன்.. அப்படி பார்த்தால் தென்னிந்த சினிமாவில் பிரதேசங்களின் பெயர்களை கொண்டு வெளிவரும் படங்களும் பிரதேசவாதத்தை தூண்டுபவையா ?

K.s.s.Rajh said...

////உங்களின் இரண்டாவது சாடல்-2) வடக்கில் இருந்து வந்துவிட்டு புத்தவிகாரைக்கு சிங்களத்தி கூடப் போவது அருவருப்பா இல்லையா?


ஏன் இந்த மதவெறி /இனவெறி உங்களுக்கு நண்பரே-?

புத்தவிகாரைக்கு போகவேண்டாம் கிரிஸ்தவ ஆலயம், மசூதி,என எங்கும் போக வேண்டாம் என்று என் மதம் என்னைக் கட்டுப்படுத்தவில்லை.

நான் மதவாதி அல்ல!

என் பதிவில் பல பாடல்கள் என் சுயசிந்தனையைச் சொல்லியிருக்கின்றேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

நல்ல தோழியுடன் அவளுக்கு பிடித்த இடத்திற்குப் போவதற்கும் அருவருப்புக்கும் என்ன சம்மந்தம் நண்பரே ?

உங்களைப் போன்றோரின் இனவாத என்னத்திற்கு எதிராகத்தான் நான் பதிவுலகில் சிங்களம் என்பது சகோதரமொழி நண்பர்கள் நண்பிகள் என்று கருத்தாடலை ////

இந்தக்கேள்வியை கேட்டவருக்கு பெரும் இனவாத நோக்குடன் இதை கேட்டு இருக்கார் இப்படி இனவாதம் பேசித்திரிவர்கலால் தான் வீண் பிரச்சனைகள் .....

இந்தக்கேள்விக்கான உங்கள் பதில் மிக சிறப்பானது தனிமரம் அண்ணா

எனது கருத்தும் இதுதான்
அது புத்தரோ,அல்லாவோ,
யேசுவோ,சிவனோ,என்னை பொருத்தவை எல்லோறும் கடவுள்தான் எந்த மதக்கடவுளும் எனக்கு ஒன்றுதான்.

ஓவ்வொறு மதத்தை சேர்ந்த நண்பர்களுடன் செல்லும் போது அவர்களின் மதத்தலங்களுக்கு செல்வதில் தவறு ஏதும் இல்லை.நானும் அப்படி போய்யிருக்கின்றேன் எனக்கு அவர்களின் வழிபாட்டு முறை தெரியாதபோது நான் எனக்கு தெரிந்த வகையில் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வருவேன்.

MANO நாஞ்சில் மனோ said...

தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும், நாங்கள் தனிமரத்தை போற்றுகிறோம்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லில இணைப்பு குடுத்துட்டேன் மக்கா....!

அம்பலத்தார் said...

இனம், மதம் எல்லாவற்றையும் தாண்டியது மனிதநேயம். மனிதநேயத்தையும் மானிடமேன்மையையும் தொலைத்தன் பலனை எமது நாட்டில் போதிய அளவு அறுவடை செய்துவிட்டோம். போதும் இந்தக்கொலைவெறி. நல்லபல்விடயங்களை சொல்லிச் சென்றிருக்கிறியள்.