16 November 2011

ஒரு வாசகன் பார்வையில் ஒரு தொடர்!

ஒரு தொடரில் தான். பல விடயங்களைச் சொல்லமுடியும் என்பதன் மூலம் சிலவிடயங்களை காலத்தின் மீள்பார்வையாக.

 கடந்த சிலவாரங்களாக உங்களை நாடிவந்த நொந்து போன ஓர் இதயம் பற்றி பல வலையுலக நண்பர்கள் பின்னூட்டம் இட்டும் வாக்கு போட்டும் ஊக்கிவித்தார்கள் .

சிலர் இந்த நேரத்தில் நீ தொடர் ஏன் எழுதுகின்றாய் ?உனக்கு பதிவுலக அரசியல் தெரியவில்லை என்ற போது மைந்தன் சிவா சொல்வது போல் போற்றுவோர் போற்றவும் தூற்றுவோர் தூற்றட்டும்! விரும்பினோர் படிப்பார்கள் நேசன்னா என்று நண்பன் துசி பகிர்ந்து கொண்டான் ஒரு வாசகம் .அது  திருவாசகமாக கருதி  வேலைப்பளுவையும் தாண்டி எழுதிய போது எனக்கு மனப்பாரம் குறைந்தது .

நல்ல உள்ளங்களின் பின்னூட்டம் இன்னும் சிறப்பாக்கனும் என்ற ஆவலைத்தந்தது.

 இந்த இடத்தில் ஒரு சிறிய தெளிவைச் சொல்லி விடுகின்றேன்.

 இசை என் மூச்சு நான் கேட்ட பல கருத்தாளமிக்க பாடல்கள் பலரைச் சென்றடையனும் அதை தந்த வானொலிகள் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல விழைந்த ஒரு உத்திதான் கதையில் பாடலைச் சேர்த்தது .

.குத்துப்பாட்டில் பலநல்ல பாடல்கள் மறக்கப்படும் நிலையில் என் மனதில் இருந்த  அறிவிப்பாளர் கனவின் வெளிப்பாடுதான் நான் தெரிவு செய்த பாடல்கள்.

வலைபதிவில் அதிகம் பாடல் ஒலிக்கவிட்டு பதிவு போட்டது அடியவனாகத்தான் இருக்கும்.!

 பாடல்கள் பற்றிய சிலாகித்த ஹேமா,புலவர் ஐயா,ரெவெரி,துஷ்சியந்தன்,மனோ, செங்கோவிஅண்ணாச்சி,யோகா ஐயா  ,கோகுல்,மாயாஉலகம் நிரூபன் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.

தொடரினைத் தொடர்ந்து படித்ததுடன் பின்னூட்டங்களும் இட்ட பல சகபதிவாளர்களில் விதியாசமான சிந்தனையாளன் ஒரு சகபதிவாள நண்பன் இந்த தொடருக்கு. தன் பல வேலைப்பளுவிக்கு மத்தியிலும்  நீண்ட விமர்சனத்தை தந்து இந்த தொடரினை இன்னொரு பரிமானம் கூட்டியிருக்கும் செயல்.

 பதிவுலகில் இது இரண்டாவது முறை  என என்னுகின்றேன். (முதலில் என் பதிவுலக வழிகாட்டி நிரூபன் செங்கோவி அண்ணாச்சியின் மன்மதன் லீலைகள் தொடருக்கு வழங்கிய விமர்சனத்தை  அடுத்து)

  பதிவுலகில் எல்லோரையும் தன் தனித்துவமான எழுத்து நடைமூலம்  இந்த சிறிய வயதில் ஒளிவு மறைவு(பள்ளிக்கூட காதலை) இன்றி பதிவுலகில் காரசாரமான பதிவுகள்  தந்து கொண்டிருக்கும் என் சிறிய சகோதரன் நண்பர்கள் வலைப்பதிவாளர்  திருவாளர் கே.எஸ்.எஸ் .ராச் அவர்கள்  தந்திருக்கும் விமர்சனத்தை இங்கு பதிவு செய்கின்றேன்

பதிவுலகில் ஒரு தொடர் இப்படி ஊக்கிவிக்கப் படுவது இன்னும் பல காத்திரமான தொடர்களைத் தர ஒரு உந்து சக்தி.

மீண்டும் ஒரு இதயம் கனிந்த நன்றி ராச் .அதிக சிரத்தை எடுத்து நடுநிலையுடன் அலசிய உங்கள் விமர்சனப்பார்வைக்கு!

இதோ அவரின் பார்வையில்!


வணக்கம் தனிமரம் நேசன் அண்ணா
கடந்த சில வாரங்களாக நொந்து போகும் இதயம் என்னும் தொடர் மூலம்
மனிதவாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த சோகங்களையும்.வலிகளையும் சுமந்து கொண்டு நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.

இளம்வயதில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதலை சரியான முறையில் தெளிவுபடுத்தினால் சிலர் புரிந்து கொள்வார்கள் சில புரிந்து கொள்ள மாட்டார்கள் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் துரோகிகளாகவோ இல்லை காதலைபிரிக்கும் வில்லன்களாகவே தெரிவார்கள் இதனால் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு யோசிக்கும் போது அவர்களுக்கே விளங்கும் தாங்க செய்தது தவறு என்று.வார்த்தையை கொட்டிவிட்டு வருந்துவதைவிட வார்த்தையை கொட்டாமல் இருப்பதே மேல்.

ஆனால் உங்கள் நண்பனின் காதலைப்போல சின்னவயதில் பக்குவம் இல்லாதவயதில் காதலிப்பவர்கள் இதை உணர்ந்து கொள்வது இல்லை.அவர்களுக்கு தங்கள் காதலே பெரிதாக தெரியும்.

நட்பின் வலிகளை மட்டும் இல்லாமல் பல அரசியல் விடயங்களையும் இந்த தொடரில் பகிர்ந்து கொண்டீர்கள்

அதைவிட
மார்க்கெட்டிங் துறைபற்றியும்.வியாபார நிறுவனங்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளின் திறன்களையும் அவர்களின் சாமர்த்தியங்களையும்,அவர்களின் கஸ்டங்கலையும், உங்கள் தொடரில் சிறப்பாக அலசியிருந்தீர்கள்.

தொடரின் நிறைவில் மனதை கவரும் சினிமாப்பாடல்களை இணைத்து இசைமீதான உங்கள் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி அருமையான பாடல்களின் வீடியோக்களையும் பகிர்ந்து ஓரு இசை மழையுடன் இந்ததொடரை நகர்த்திய விதம் புதுமையானது சிறப்பானது.

இந்த உலகில் மாற்றம் ஓன்றுதான் மாறாதது.எதுவும் கடந்து போகும்.எனவே உங்கள் நட்பில் ஏற்பட்ட விரிசல்களும் கடந்து போகும் காலம் எல்லாக் காயங்களுக்கும் மருந்தாகும்..

உங்கள் எழுத்துநடை மிக அழகாக இருந்தது ஆனாலும் சில பகுதிகளில் திரைப்படங்களின் பெயர்களை வசனத்தில் இணைத்து நீண்ட வசனங்களாக எழுதியது வாசிக்கும் போது சலிப்பைத்தந்தது.ஆனால் புதுமையாக இருந்தது.

உங்கள் தொடரில் உவமை கலந்து எழுதிய விதம்.ஓவ்வொறு சம்பவங்களுக்கும் ஓவ்வொறு உதாரணங்களை சொல்லும் விதம் போன்றவை அருமை மொத்ததில் ஓரு சிறப்பான தொடருக்குறிய அத்தனை அம்சங்களுடனும் அமைந்திருந்த இந்ததொடரில் உங்கள் மனச்சுமைகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

நொந்து போகும் இதயம் என்னும் இந்ததொடரை போல பல சிறப்பான பதிவுகளை உங்கள் தளத்தில் எதிர்பார்கின்றோம் ஓரு வாசகனாக உங்களுடன் பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
அன்புடன்\
கே.எஸ்.எஸ்.ராஜ்

10 comments :

MANO நாஞ்சில் மனோ said...

எழுதுங்கய்யா எழுதி அசத்துங்க வாழ்த்துக்கள் வந்தனங்கள், எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு கூல்.......

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா "அது"லையும் இணைப்பு குடுத்துட்டேன் மக்கா என்ஜாய்...!!!

கோகுல் said...

இறுதி பகுதிகளை தவற விட்டு விட்டேன்.இப்போது தான் படித்துக்கொண்டிருக்கிறேன்!

தமிழ்வாசி - Prakash said...

இன்னும் தொடருங்கள் நண்பா.... சில நேரம் சில பகுதிகள் படிக்காமல் விட்டு விட்டேன். அதையும் படிக்கணும்... முடியுதான்னு பார்க்கலாம்


நம்ம தளத்தில்:
பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

Anonymous said...

வாழ்த்துக்கள்...

செங்கோவி said...

கிஸ்ராஜா அருமையாக, சுருக்கமாக அழகான விமர்சனத்தினை வழங்கியுள்ளீர்.

காட்டான் said...

Zadr

ஹேமா said...

இன்னும் இன்னும் அனுபவக் குறிப்புகளை தொடர்ந்தும் எழுதுங்கோ நேசன்!

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து அசத்துங்க

rishvan said...

வாழ்த்துக்கள்...எழுதுங்கய்யா எழுதி அசத்துங்க ... www.rishvan.com