27 January 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -1

மூத்த குடியாம் வேடுவர் வாழும் துங்கிந்தைத் தாயே போற்றி!

வியாபாரிகளையும் வாழவைத்த ரொக்கில் தாயே போற்றி.


லயம் என்ற வீட்டுச் சிறைதனில்
 விட்டில் பூச்சி ஆகாமல்.
 வெளி உலகிற்கு வீரியத்துடன்
 வாழ்ந்து காட்ட கல்வி புகட்ட
பிரியத்துடன்
வடகிழக்கில் இருந்து வந்து குருத் தொழில் செய்வோருக்கும். .காலச் சுவடுதனில் கலியாணம் முடித்து  புலம் பெயர்ந்த முன்னால் ஆசிரியர்களுக்கும்.    


        ................சமர்ப்பணம்..

தமிழ் பால் ஊட்டிய அமலதயாவதி ஆசிரியர் பாதம் பணிந்து.

 தமிழ் மீது கொண்ட காதலில்
வலையில் தனிமரமாக  நிற்க வழி காட்டிய
நாற்று நிரூபன் மற்றும் காற்றில் என் கீதம் பதிவாளினி துணையுடன்.கூட வரும் உறவுகள் தோல் கொடுக்க

என் நண்பனின் கதையை வலையில் கொண்டுவாரேன்.  இலக்கனவழு  வராமல் காத்தருள்வாய்  தேவி.
///////////////////////////////////// / "இதோ........                                              பாரு....


 மலையகத்தின் அழகு தனைப்பாட கண்ணதாசனும், குறிஞ்சித் தென்னவனும் மீளவும் பிறக்க வேண்டும்!  என்ற ஜோசனையோடு. அந்த அழகு நகரம் பதுளையின் பஸ்தரிப்பு நிலையத்தில்.


1999 செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தின் ஞாயிற்றுப் பின் இரவுப் பொழுதில்.   நண்பர்கள் மூவருடன் ராகுல் நின்று கொண்டிருந்தான்.

 .எப்போதும் குதுகளிக்கும் நண்பர்கள்  முகத்தில். பிரிவின் வலிகள். யாரும் எதையும் பேசாமல் இருந்த போது. மக்கள் மயப்படுத்த போக்குவரத்துச் சேவை பஸ் தூர இடமான  நாட்டின் தலைநகராம் கொழும்பிற்குப் போகும் வழி என் 99 பஸ் தரிப்பிடத்திற்கு வந்து நின்றதும்.

 ராகுல் முதல் பயணியாக தன் தோல்பையை  சீட்டில் வைத்து  ஆசனத்தைப் பிடித்துக் கொண்டான்.

 இன்று திடீர் பயணம் போவதால் இந்த அவசரம்.

சீட்டில் தோல்பைவைத்த கையுடன் பற்றுச் சீட்டையும் பெற்றுக் கொண்டான். தன் பயணத்தில் உறுதியாக இருப்பதால்.

வெளியில் இருக்கும் நண்பர்கள் தயாளன்.சங்கர்,சுகுமார் முகங்களில் பிரிவின் ரேகைகள் .

சரிங்கடா.
 நீங்கள் கிளம்புங்க மச்சான்.
 நேரம் வரும் போது சந்திக்கலாம்!

.ராகுல் நீ எடுத்த எந்த விடயத்திலும் தலையிட்டது இல்லை யாரும். ஆனால் நீ இப்படி கல்பனா விடயத்தில் முரண்பாடாக இருப்பதைத் தான் பொறுக்கமுடியல என்றான் சுகுமார்.

 எதுவும் பேசாதீங்க. உங்க நட்புத்தாண்டா என்னிடம் இருக்கும் சொத்து .
அதையும் பிரியும் வண்ணம் நடக்க மாட்டீங்க! என நம்புறன்

.சரிடா இனிமே எதுவும் பேசல. சந்தோஸமாக போய்ட்டுவா

 .இல்ல மச்சான் சுகுமார். இனி நான் இந்த பக்கமே வரமாட்டன். என் வாழ்க்கையில் வலியும், வேதனைகளுக்கும் இன்றுடன் விடுமுறை.   துயரங்கள்  நிறைந்த இந்தப் பாதை இனி மூடப்பட்டது. என எண்ணிக் கொண்டுதான் வெளியேறுகின்றேன்.

 உங்க நட்பை ஒரு நாளும் மறக்க மாட்டன். நன்றிடா இந்தளவு தூரம் வந்து வழி அனுப்புறத்திற்கு .

போடாங்.., இவர் எல்லாத்துக்கும் நன்றி சொல்லுவார். ஏண்டா

 நாங்க நண்பர்கள் தானே?
இது கூடவா செய்ய மாட்டம்.

 சரி சரி சந்தோஸமா கிளம்பு என்ன தேவை என்றாலும் ஒரு கோல் பண்ணு. .இரவுப் பொழுதில் அந்த நகரம் தன் சோபை இழந்த பிச்சக்காரன் போல இருந்தது .

.சுகுமார் அவனைத் தழுவி வழி அனுப்பும் போது 500 ரூபாய் நோட்டினை சட்டைப் பையினுள் தினித்துவிட்டான்

.ஏண்டா வைச்சுக்க அவசரத்திற்கு உதவும். எப்போதும் என் நினைப்பு இருக்கும் தானே?
 உன்னை மாதிரி ஒருத்தன் கூட இவ்வளவு நாளும் நட்பாக தொடர்ந்து இருந்ததில் எனக்கு பெருமை.

 என் வீட்டில் என்னை விட உனக்கு எப்போதும் ஒரு ராஜகம்பீர மணிமகுட  வரவேற்பு இருக்கும். இனி எப்போது சந்திப்போம்? என்று தெரியல.

 என்றைக்கு இந்த ஊருக்கு வந்தாலும் நம்மவீடு இருகரம் கூப்பி வரவேற்கும். எந்த நேரம் என்றாலும் மறந்திடாத.

 மீண்டும் மீண்டும் என்னைக் அன்புக் கடன்காரன் ஆக்கின்றாய் சுகுமார். உண்மையில் பூர்வஜென்ப பந்தம் போல உன் நட்பு.
 ராமன் குகன் நட்பினை படித்தேன் நூலில்.  நம் நட்பு சிலருக்கு பாடமாக இருக்குது  நட்பு வட்டாரத்தில். அந்த வகையில் சந்தோஸமே .

.சரிங்கடா பஸ் எடுக்கப் போறான். பார்த்துப் போங்கடா.

 இவனுங்க இப்படித்தான் ரேஸ் பண்ணிக் கொண்டு இருப்பாங்க எடுத்துத் தொலைக்கமாட்டாங்க என்றான் தயாளன்.

 .குளிர் கால நேரம் என்பதால் இரவுப் பொழுது விரைவில் கடைகள் மூடப்படும். சில இரவு காப்பிக் கடைகளும் கொத்து ரொட்டிகளும் கொத்தப்படும் சத்தம்  மட்டும்  கேட்கும். பின் இரவுப் பொழுதில்.

 சகோதர வானொலி அலைவரிசை சிரசவில். இனிய சகோதரமொழிப்பாடல்கள் ஒலிக்கவிடும் நேரம்.. என்றாலும் .

அன்று ஞாயிறு பொழுது என்பதால் சிரச வானொலியில் வலம் வரும் top 20' ஹிந்திப் பாடல் தெரிவுக்கு.

 அறிவிப்பாளர் சமந்த வானொலியில் துள்ளிசையோடு வருவதைக் குறிக்கும் பாடல் குறீயிசை ஒரு புறம் என்றால்.!

 இரவுப் பொழுதில் சாரயத்தின் வாசத்தில் ஊறிப்போய் குடை ,மற்றும் செருப்புத் தைக்கும் வீதியில் குடும்பம் நடத்தும் அந்த சகோதரமொழி குடும்பத்தலைவனின் மூன்றாம் தரமான வார்த்தைகள் காதில் விழுகின்றது.

இந்த தலைவனும் ராகுலும்  எத்தனை  படத்தினை அந்த ஊர் தியேட்டரில்  முதல் காட்சியில் இருந்து பார்த்திருப்பார்கள் என்ற எண்ணம் ஒரு புறம்.

 இனி இவர்களையும் சந்திக்கமாட்டன். என்பதால் ஒரு முறை அவனையும் தரிசித்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அவர்களின் ரோட்டோர வீட்டை எட்டிப்பார்த்தான்.

 போத்தல் விளக்கு (கைலாம்பு)வெளிச்சத்தில் அவன் சுருட்டுக் குடித்துக் கொண்டிருந்தான்.

 ராகுலைக் கண்டதும்!
.மல்லி கமனக் யனவா வகே?
 ஒவ் மம கொழும்ப ஜனவா.
( தம்பி பயணம் போகின்றீர்கள் போல?

ஓம் நான் கொழும்பு  போறன்.)
  என்று விட்டு அவனை கடைசியாக பார்த்துக் கொண்டே பஸ்சின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ராகுல்.

 பஸ் நீண்ட இரைச் சலுடன் நகரைக் கடந்து பயணித்துக் கொண்டு இருந்த போது.
 அவன் மனதில் தான் யார் ?இந்த ஊருக்கு முதலில் வந்த நினைவுகள் தொடர்கதை போல விரிகின்றது. .ராகுல் யார்? கல்பனா யார் ?இந்த வழி அனுப்பவந்து சென்ற நண்பர்கள் யார்.? அவனின் சீட் அருகில்   நித்திரைக் காத்திருக்கும் நான் யார்  வருடங்கள் முன்னோக்கிப் போவோமா?

17 comments :

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!மிண்டும் ஒரு தொடர்?அருமையாக ஆரம்பித்து நகர்கிறது,பஸ்சும்(பேரூந்து)தான்!தொடர்க,தொடர்வோம்!!!!

ஹாலிவுட்ரசிகன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது ஆரம்பம். சீக்கிரமே அடுத்த பதிவை எழுதுங்கள்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா பொங்கல் முடித்து புதிய தொடரில் முதல் வருகை மூத்தவர் உங்களுக்கு அன்போடு ஒரு பால் கோப்பி முதலில் குடியுங்கோ. 

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் நேசன்,
நன்றிகளுடன் நீங்கள் ஆரம்பித்த விதம் அழகு...

////எந்நன்றி மறந்திடினும்
செய்நன்றி மறவேன்/////
என்று உரைத்த உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

தொடரின் ஆரம்பம் அழகாக இருக்கிறது..
கதாபாத்திரங்கள் நின்று பேசட்டும் தொடர் முழுதும்......

தனிமரம் said...

எப்போதும் என்னோடு குருவாக தொடர்ந்து வரவேண்டும் .நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் முடிந்த அளவு விரைவில் தருகின்றேன்.

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா.
உங்கள் வருகையும் ,வாழ்த்தும், பாராட்டும் இன்னும் சிறப்பாக எழுத உதவும் எனக்கு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S.FR said...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா பொங்கல் முடித்து புதிய தொடரில் முதல் வருகை மூத்தவர் உங்களுக்கு அன்போடு ஒரு பால் கோப்பி முதலில் குடியுங்கோ.///நன்றி,நேசன்!எனக்குப் பால்கோப்பி பிடிக்குமென்று உங்களுக்கு யார் சொன்னது?இந்தச் செய்தி வெளியே கசிந்தது ஆச்சரியம்.ஓ.கே!தொடரை தொடருங்கள். பின்னே வருகிறேன்!

நிரூபன் said...

வணக்கம் தனிமரம் சார்,
நல்லா இருக்கிறீங்களா?
ஆரம்பம் அருமையாக இருக்கிறது.
இலக்கண வழுக்களை கொஞ்சம் தவிர்க்கலாம்,.
கோவிச்சுக்க வேணாம்.
அப்புறம் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

நிரூபன் said...

இச் சிறியேனையும் தங்கள் பதிவில் நினைவு கூர்ந்திருப்பது புல்லரிக்க வைக்கிறது.

நன்றி ஐயா.

நிரூபன் said...

ஆன்மீகவாதியாக மாறிட்டீங்க போல இருக்கே..
அவ்வ்வ்வ்

தனிமரம் said...

வணக்கம் தனிமரம் சார்,
நல்லா இருக்கிறீங்களா?

//
வணக்கம் நிரூபன் .
என்னது தனிமரம் சாரா ?? 
பதிவுலகில் இல்லாத போது யாரும் இப்படி ஒரு பட்டம் கொடுத்தார்களோ? நான் அறியேன்! ஹீ ஹீ
எப்போதும் சகோதரம் தான் தனிமரம் நினைவில் கொள்க. நிரு.
நான் நலமாகத்தான் இருக்கின்றேன் தாங்களும் அவ்வண்ணம் இருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

தனிமரம் said...

இலக்கண வழுக்களை கொஞ்சம் தவிர்க்கலாம்,.
கோவிச்சுக்க வேணாம்.//
இந்த இலக்கண வழுக்களைத் தவிர்க்க முடியாமல் தான் திண்டாடுகின்றேன் .மடிக்கணனி வேண்டும் வரை நீங்கள் கோவிச்சுக்க வேணாம் பாஸ் .என்று நான் தான் கேட்க முடியும்.

தனிமரம் said...

இச் சிறியேனையும் தங்கள் பதிவில் நினைவு கூர்ந்திருப்பது புல்லரிக்க வைக்கிறது.

நன்றி ஐயா. 
// 
நீங்கள் செய்த உதவியை பெற்றுக் கொண்ட நான் சொல்லிக் காட்ட வேண்டும் பதிவுலகிற்கும். சில உறவுகளுக்கும் அப்போது தான் புரியும் நிரூபனின் சிறந்த குணம் இது உங்களுக்குப் புல்லரிக்கும் என்றாலும் எனக்கு ஆத்ம திருப்தி .

 
 

தனிமரம் said...

ஆன்மீகவாதியாக மாறிட்டீங்க போல இருக்கே..
அவ்வ்வ்வ் 
//  
அந்த நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் லவுக்கிய வாழ்வில் இணைந்து விட்டேன் .ஹீ ஹீ
 நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நிரூ.

ஹேமா said...

காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்தபடி தொடங்கியிருக்கிறீர்கள் நேசன்.காத்திருப்புத் தொடரும் !

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் ஊருக்கு போனதால் உங்கள் இந்த தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் தவறவிட்டுவிட்டேன் இப்ப முதல் பகுதியை படித்துவிட்டேன் இதோ இரண்டாம் பகுதியை படிக்க கெளம்புறேன்.

தொடரில் ப்ளாஸ்பேக்குடன் சொல்வது மிக சிறப்பாக இருக்கு நல்ல ஆரம்பம் தொடருங்கள்.