29 January 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -2

பொருள் ஈட்டப் புறப்பட்டவர்கள்  பலர் வாழ்வுதனை.  என்றும் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் முதல்  இப்ப அங்க என்ன நேரம் வரை  தொடர்கின்ற  தொடர் நிகழ்வுகள்.

அப்படித்தான்  வடக்கின் பலபகுதியில் இருந்து வியாபாரத்திற்கும் அரச கருமங்களுக்கும் என இடம் பெயர்ந்த உறவுகள் பல.

 அந்த வரிசையில் வடக்கின்  ஏழு தீவுகளில் ஒரு தீவில் இருந்து சுதந்திரம் கிடைக்க(சுதந்திரம் கிடைத்த தாக வரலாறு சொல்லுது)  முன்னமே  1946 இல் இருந்து பல மூத்த தலைமுறையினர் குடும்பத்தை பிரிந்து வியாபாரிகளாக கிழக்கிற்கு,மேற்கு,மற்றும்  காலிவரையும். அதைத் .தொடர்ந்து அங்கிருந்து   மலையகம் வரை  சென்றவர்கள் பலர்.

அப்படிச். சென்றவர்கள் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு.

 வயது போன  பாட்டி மார்களிடம் தான்

.அடுத்த வேளையில் குசினியில் என்ன சமையல் முதல் அடுத்த காணியில் அருவி வெட்டுக்கு எத்தனை பேர் கூலிக்கு  வேனும் என்பது வரை இம்மியளவு பிசகாமல் கணக்குப் போடுவதில் ராமானுஜம் தோத்துப் போவார்.

  .யாராவது கையில் இருக்கும் பணத்திற்கு கையாடல் செய்ய செய்யவும். தலைவன் இல்லாத வீட்டில் தகராறு பண்ணவும் படலை தட்டினால் பாட்டியின்  கையில் இருக்கும் கொக்கத்தடிச் சத்தகம்  குடலை உருவவும்  கோவனம் உருவவும் எந்தக் கனமும் ஜோசிக்காத பாட்டிகள் பல கொண்ட குடும்பமாக இருந்த பூமி ஒரு காலத்தில்.

 கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையும் அடுத்த எதிர்ப்பேச்சுப் பேசி குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் ஒத்து மேவி வாழ்ந்தவர்கள்   .குடும்பம்கள் பல  .

இப்படியான குடும்பத்தில்   இருந்து  பெட்டிக்கடையும் வட்டிக்கடையும்  போடப் போன பொன்னையா ,அம்பலத்தார்,கார்திகேசு,என பலர். போனவர்கள் தங்களின்    அவர்களின் மூத்த மகன்களையும்  சேர்த்து அழைத்துப் போனார்கள்.

 தந்தைவழியில் தனையனும் என இப்படிப் போனவர்களின்  வரிசையில் ராகுலின்  பெரிய தாத்தா.    அவர்கள்  பெட்டிக்கடை பேரம்பலம் என முதலில் வியாபாரம் தொடங்கியது தலவாக்கொலயில்.

 அந்த வியாபாரம்  1958 இல் வந்த கலவரத்தில் அழிக்கப்பட்டது.


 அதன்   பின் அவர் இடம் மாறி மீண்டும்  தன் தம்பியுடன் 1960   பிற்பகுதியில் . வெற்றிலைக்கடையும் ,வட்டிக்கடையும் போட்டது பதுளையில்.

தங்கள் வாரிசுகளையும் வியாபாரத்தில் பழக்கப்படுத்திய போது!  அங்கு முதலில் போனவர்களில்    ராகுலின் மூத்த மாமாவும் ஒருவர்.

  அவர் பெட்டிக்கடை முதலாளியாகியது  பதுளையின் முக்கிய புத்தமதக் கோயில் முன்னால் இருந்த வீதியில்! முத்தியங்கன ரஜாமஹா விகாரை நிலத்தில்..

.....   முகம் தொலைத்தவன் வருவான்.......

16 comments :

Anonymous said...

இம்முறை கொஞ்சம் சுருக்கமாக முடிச்சுவிட்டீர்கள் போல.. தொடர்ந்து வாசிக்கிக்றேன் பாஸ்..

ஹாலிவுட்ரசிகன் said...

கடந்த பதிவு அளவிற்கு நீளமாக இருந்தால் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!தொடர் ஆரம்பித்தாயிற்று.சுருக்கமாக இருந்தாலும்,சுவையான ஆரம்பம்!வாழ்த்துக்கள்!"ஜோசிப்பது" அல்ல "யோசிப்பது".ஆங்கில எழுத்து ஜே(J)அல்ல,வை(Y)யில் ஆரம்பிக்க வேண்டும்.நீண்ட நாட்களாகவே இப்படி வருகிறது.மாற்றுங்கள்!

புலவர் சா இராமாநுசம் said...

தொடர் சுவையாக உள்ளது
தனிமரம் தோப்பாக தொடர்வேன்!

புலவர் சா இராமாநுசம்

கவி அழகன் said...

ராமன் குகன் நட்பினை படித்தேன் நூலில். நம் நட்பு சிலருக்கு பாடமாக இருக்குது நட்பு வட்டாரத்தில். அந்த வகையில் சந்தோஸமே .

கடந்த பதிவில் இந்த வரிகளை தவிர அனைத்து வரிகளும் யதார்த்த இளை ஓடியிருக்கு

வாழ்த்துக்கள்

தனிமரம் said...

வாங்க கந்தசாமித் தாத்தா முதல் முறை வருகின்றீர்கள் பொங்கல் முடித்து ஒரு பால்கோப்பி குடியுங்கோ.
 தொடரின் பந்தியின் நீளம் அதிகம் என்று காட்டான் கடிக்கின்றார்  அதனால் சுருக்கி விட்டேன்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.பந்தி நீண்டால் வாசிக்கும் வாசகர்கள் சலிப்புக் கொள்வார்கள் என்று காட்டான் காவத்துக் கத்தியோடு நிற்கின்றார் .இனி வரும் தொடரில் உங்களின் கருத்தினையும் உள்வாங்குகின்றேன் .

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
இனி வரும் பகுதியில் யோசனையைத் திருத்திக் கொள்கின்றேன்.
நன்றி உங்களின் வழிகாட்டலுக்கும் ஆதரவுக்கும்.

தனிமரம் said...

நன்றி புலவர் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் வாழ்த்துக்கும்.சில சொல்லாடல் பிடித்திருக்கும் போது அதனைப் பயன் படுத்துகின்றேன் அந்த வகையில் கம்பன் என்னுள்ளே சில ஈர்ப்பு.

ஹேமா said...

ஏன் நேரமில்லைப்போல நேசன்.பதிவு சின்னதா இருக்கு !

Anonymous said...

Short,but sweet...வாழ்த்துக்கள் நேசன்...

K.s.s.Rajh said...

பாஸ் கந்தசாமி தாத்தா சொன்னது போல இந்த பகுதி மிக சின்னதாக இருக்கு இன்னும் கொஞ்சம் கூட்டலாம்.தொடருங்கள் தொடர்கின்றேன்

தனிமரம் said...

கொஞ்சம் வேலை அதிகம் ஹேமா என்பதும் ஒருகாரணம். நன்றி வருகைக்கு.

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும். இனி வரும் பதிவுகளில் கவனிக்கின்றேன்.