07 January 2012

தைமகள் வருவாள்!

நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தி
 பார்ப்போரை பரவசம் ஆக்குவாள்!
தலைமகன்  வந்து தளுவியதால்
 நிறைமாதக் கர்ப்பனியாகி!

 குலமகள் குலுங்கி வளைக்காப்பு நடத்த
மஞ்சள் பூசிய முகத்தினை!
 மன்னவனைக் கண்டு
 மண்ணை நோக்கி குனியும் கார்காலம் !

நீண்ட சடையை நிலத்தில் விரிக்க
.தைமகள்  தங்க நிறத்தில் நெல்மணியை பரப்பி !
விவசாயிகளை சிரிக்க வைப்பாள்!
     தைப்பொங்கல் என்று சொல்லி!  !
அதைக் கொண்டாடியது ஒரு காலம்!

இனவாத இராட்சதர்கள்
  இரக்கமில்லாது எடுத்து இயம்பிய போரில் 
இடம் பெயர்ந்து கொதித்தது
 இதயப் பானைப் பொங்கல்!
 அலைந்து திரிந்து
 பானைதேடிப் பொங்கும் என்னத்தில் இருந்தபோது

!  பொசுபரசு போட்டு புதர்கள் ஆக்கிய வயல்களில்  .
இனி எப்போது நெல்மணிகள் வம்சம்  பிறக்கும்!மீண்டும் வாருங்கள் பொங்கல் வைக்கலாம்!
 பிறந்த அன்னைவயலில் என்று கூறும் பேயரசுகள்

 இன்னும் அகற்றவில்லை பாதுகாப்பு வேலிகளை! 
ஒரு அடிதன்னும்!

அடுத்த முறையாவது வந்திடுவேன் பொங்கல் வைக்க !
காத்திருப்பாய் தை மகளே!
  அழைக்கின்ற போது!
 அத்தான்
.நானும் வாறேன் புலம்பெயர்ந்து கூப்பிடுங்கள் !அண்ணாவைவும் ,தம்பியையும்,
 அடுத்த நேரம் என்ன ஆகும் யார் அறிவார்
என்று முனங்கும் கானும் பொங்கல் !

அப்பா எப்போது வருவார் சேர்ந்து பொங்க

 என்று கேட்கும் அண்ணன் மகளிடம்

நெல்லுவாங்கப் போனவன் நெடுநாளாகி வராத
 கதையை எப்படி உரைப்போன்!

நிலமகள் தாயே!

 நின்னை தேடிவருவேன் என் குருத்துக்களுக்கு
  நான் பொங்கிய வயல்க் காணி காட்டுவதற்கு !

புலம்பெயர்ந்த வலிகள் போக்கி

. புன்முறுவல் பூக்க

 தைமகள்  வரும் நாளில்

 பொங்கவேண்டும் தமிழர் தாயகத்தில்!
இத்தனை ஆசைகளையும் !
அடுப்படியில் பொங்கியவாரே
  அசைபோடுகின்றேன்!
 அடுத்த வேலைக்குப் போகும் அவசரத்தில்!!உறவுகள்  வாசகர்கள் அனைவருக்கும் முன்கூட்டிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
 
இன்னும் சில வாரத்தில் வலையூடாக சந்திக்கலாம் அதுவரை!       

வண்ணத்தமிழ் வணக்கத்துடன்
தனிமரம்!


 ! 

11 comments :

ஹேமா said...

ம்...நேசன் வருஷங்கள் மாறுதே தவிர எங்கள் மனஏக்கங்கள் அப்படியேதான் இருக்கு.தொடர்ந்த வருஷங்களின் பதிவுகளைப் பாருங்கோ.கொஞ்சமும் மாறாமல்.ஆனாலும் தை மகளை வரவேற்போம் நம்பிக்கையோடு !

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பொஸ்,

தைமகளின் வருகையினை இன்முகத்தோடு வரவேற்கும் கவிஞனின் உணர்வாக உங்கள் உணர்வுகள் வந்திருக்கிறது.

கவிதை நடையிலிருந்து திடீரென கவிதை வாக்கியம் போன்றதோரு அல்லது கட்டுரை போன்ற சாயலுக்கு மாறுகிறது. கவனம் செலுத்தினால் முன்னேற முடியும்.

Rathnavel said...

வேதனையான கவிதை.

கவி அழகன் said...

Nenjai kanakavaikkum kavivarikal ekame epothum em calvil

மகேந்திரன் said...

அன்பு நேசன்

தைமகளுக்கு ஓர்
அற்புதமான வரவேற்பு கவிதை.
மனதில் உள்ள ஆதங்கங்களை கொட்டி
வடித்திருக்கிறீர்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும்...
பிறந்த தைகளிலேல்லாம் வழிகளை தேடி
எம் விழிகள் பூத்திட்டனவே என
நீங்கள் உரைத்த ஒவ்வொரு சொல்லும்
நெஞ்சில் பாய்கிறது...

மகேந்திரன் said...

///அடுத்த முறையாவது வந்திடுவேன் பொங்கல் வைக்க !
காத்திருப்பாய் தை மகளே!///

முத்தாய்ப்பாய் ஓர் வரி
காத்திருத்தல் எனக்கொன்றும் புதிதில்லை
நீ உன் மனதில் புதைத்து வைத்திருக்கும் எமது
வாழிவின் பொற் கணங்களை
மீள்வித்திட நாம் கொடுக்கும் அவகாசமே இந்த ஓர் வருடம்..

அடுத்த வருடம் வருகிறோம்
தை மகளே எம்மை மனதில் வைப்பாய்....

அருமை அருமை
அருமையான படைப்பு நேசன்.

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!அருமையான கவிதை.அங்கங்கே சிறு,சிறு எழுத்துப் பிழைகள்!இலக்கணத்தில் கூட.(தளுவுதல்-தழுவுதல்)வாழ்த்துக்கள்!முன்கூட்டிய தமிழ்ப் புத்தாண்டு,மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

நிலமகள் தாயே!

நின்னை தேடிவருவேன் என் குருத்துக்களுக்கு
நான் பொங்கிய வயல்க் காணி காட்டுவதற்கு !

தை மகளை நம்பிக்கையோடு வரவேற்போம் !

அம்பலத்தார் said...

//அப்பா எப்போது வருவார் சேர்ந்து பொங்க

என்று கேட்கும் அண்ணன் மகளிடம்

நெல்லுவாங்கப் போனவன் நெடுநாளாகி வராத
கதையை எப்படி உரைப்போன்!

நிலமகள் தாயே!//
வலிதரும் மறக்கமுடியா நினைவுகள்

அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள். நேசன் எப்பொழுது கவிஞரானார்?

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நேசன்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

தை மகளை நம்பிக்கையோடு வரவேற்போம்..

வாழ்த்துக்கள் நேசன்...