22 January 2012

சேலை கட்டும் பெண்.

உறவுகளே நலமா சிறிய இடைவெளியின் பின் உங்களுடன் மீண்டும் தனிமரம் இனைகின்றது.


பதிவுலகில் 1000 பதிவுகளைக் கடந்து தொடர்ந்தும் காத்திரமான பதிவைத் தரும் அண்ணண் சி.பி. செந்தில்குமார் அவர்களுக்கு தனிமரத்தின் காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள்!

////////////////////////////////////////////

சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள்.....!
 நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப் போனேண்டி...,.!

என்ன மச்சான் இப்படி பாட்டோட வாராய் ?என்று நண்பன் என்னிடம் கேட்ட போது? சேலைக்கடைக்குள் நடந்த விடயத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டதை  உங்களிடமும் சொல்கின்றேன்!

பலருக்கும் தம் உறவுகளுக்கும் தம் மனைவி மாருக்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்தாலும் சேலை வாங்கிக் கொடுக்கும் கணவன்மார்கள் அதிகம் எனலாம் !

இவர்கள் மனைவியுடன்  புடவைக்கடைக்குள் நுழைந்தால் அங்கே இருக்கும் விற்பனையாளர்கள் அண்ணா வாங்க அக்காவுக்கு இந்த சாரிஎடுப்பா இருக்கும் சினேஹா மாதிரி இருக்கும் அவங்க உடுத்தினால்  தேவதை மாதிரி இருக்கும் என்று பாணில் பூசிய ஜாம் போல இனிக்கப் பேசத் தொடங்கினால் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கனும்..

 குடிக்கத்தரும் குளிர்பாணத்திற்கு மேலாக நம் கஜானா காலியாகிவிடும். எத்தனையோ சாறியைப் பெண்கள் பிரித்துப் பார்த்தாலும் திருப்தி  கிடைப்பதில்லை! சீதை பிராமணர்களுக்கு இட்ட சாபம் போல!

 ஒவ்வொரு சாறியும் உடுத்திப் பார்க்கும் போது அவர்கள் தம் கணவனுக்கு எட்டில் அழகு என்று பாடத் தோன்றும் என்றாலும் விலையைப் பார்க்கும் போது வருமானம் செலவு பத்தணா நிலமை.

 ஒவ்வொரு ஆண்மகனும்  ராமன் வளைத்த வில்லை வளைக்க முடியாது தோற்றுப் போகும் சுயம்வரம் இந்த புடவைக் கடைகளில்  என்றால் மிகையாகாது.

 விற்பனையாளர்கள் மேசைத் தட்டில் சாறியை  விரித்தால் !

கல்லுவைத்த அழகு சாறிகள்,கோலங்கள் சாறிகள் ,சில்க் சாறிகள் வஸ்த்திரகலாப்பட்டுச் சாறிகள் ,எம்றைற்றிங் சாறிகள் ,நேத்தரகலா பட்டுச்சாறிகள் கொட்டன் சாறிகள்  ,பட்டுச் சாறிகள் பளபளக்கும் சீக்கூயின் சாறிகள்...., என சேலைப்பூவை விரித்து விட்டால்.

 ஊரில் சொல்வார்களே சோலைக்காட்டுப் பொம்மையும் சேலையுடுத்தினால் சொப்பன சுந்தரி போல இருப்பால் !என்பது தனித்துவம் தான்..

இன்று நவயுக மங்கைகளுக்கு சேலை உடுத்த அதிகம் தெரியாது என்று ஐரோப்பாவின் எண்ணத்தில் இருப்போருக்கு!

 சென்னை ரங்கநாதன் வீதிக்கடைகளில் சிலமணித்தியாலம்  வலம் வந்தால் பொய்யாகிப் போகும் கருத்து.

(கடந்தவருடம் ரங்கநாதன் தெரு)

  இன்னும் சேலைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும்.
ஒவ்வொரு மங்கையையும் மாடன் உடையைவிட மங்களமாக சாறியில் பார்க்கும் போகு மதியிழந்து போகும் இந்திரன்கள் அதிகம் எனலாம்!

இப்படியான சேலையை தெரிவு செய்யும் போது அழகு ,விலை ,என்றதைப் பார்க்கும் நாம் !

இப்போது இன்னொரு விடயத்தையும் பார்க்கவேண்டும்.

 அதுதான் சாறி வேண்டும் போது நீளத்தையும் அகலத்தையும் பார்க்கும் விழிகள் உயரம் என்ற ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

 அழகிய வேலைப்பாடு கொண்ட சேலை  வாங்கும் போது. உயரம் குறைந்தவர்களுக்கு உடுத்தும் அளவு போதுமா? என்று கவனிக்க வேண்டும். .கொஞ்சம் குள்ளமானவர்களுக்கு  சாறியின் உயரம் அதிகமாக இருக்கும் போது.உயரம் குறைந்தவர்களுக்கு  சேலையை மீளவும் வெட்டிச் சீரமைக்கும் போது  அதன் இயற்கை அழகினை சில தையற்கலைஞர்கள் சீரலித்து விடுவார்கள்.  அத்துடன் அழகிய வேலைப்பாடுகள் தெரியாமல் போய்விடும்

. . அதனால் எத்தனை ஆயிரம் கொடுத்தும் அழகிய சேலையை மனைவிக்கு  வாங்கிக் கொடுக்கும் மனம்கவர் கணவன் மார்கள் இந்த உயரம் கூடிய சாறியை வாங்கும் போது தம் மனைவிக்கு ஏற்ற உயரம் குறைந்த எடுப்பான சேலையை பார்த்து வாங்க வேண்டும்..!


 சேலை வாங்குவதில் .கவனம் இல்லையேல்!இழப்பு பணம் மட்டுமல்ல !அன்புதான்!

இப்படித்தான் சிலர். சென்னை போகும்   நண்பர்களிடம். தம்ரசனையைச் ரகசியமாக சொல்லி வாங்கி  வரச் செய்து.

(இன்னும் சில வாரம் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு காத்திருக்கும் ரங்கநாரன் தெரு வியாபாரிகள்)

  தம்மனைவிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க நினைப்போர் !  சிலர்  மனதில் ஏற்படும் வாய்த்தர்க்கம் முல்லைப்பெரியாறு அணை போல இருவருக்கும் இடையில் அக்கப்போராக  வந்தால்! பிறகு நண்பர்கள் எப்படி இன்முகத்துடன் அவர்கள் வீட்டுக்குப் போக முடியும்?

 உயரம் கூடிய  சாறியை  உயரம் குறைந்தவர்கள் எப்படி உடுத்துவது? ஏற்கனவே பிள்ளைகளுடன் விசேட வைபவங்களுக்குப் போய் களைப்புறும் நம் சொந்தங்கள் சேலையை வெறுப்பது ஒருபுறம்  இருக்க ஒருபுறம் அதையும் மீறி  ஆசையில் இந்த உயரமான  சேலையையையும் மடித்து உடுத்திக்கொண்டுண்டால்  எப்படி அடிக்கடி  அவர்களால் இடுப்பு மடிப்பை சரி செய்வது?

 இப்படியான புதிய சிக்கல்களையும் கணவனாகப் போகும் மன்மத ராசாக்களே கவனித்த்துக் கொள்ளுங்கள்! இல்லையேல் நண்பர்களின் சம்பாசனையின் போது!
 
உங்கள் நண்பர்களின் இல்லத்தரசிகள் நீங்கவாங்கின சாறியை நீங்களே உடுத்துங்கோ? அவரும் அவருடைய சாறி தெரிவும்! என்று இல்லத்தரசிகள் பொங்கி வரும் காவேரியாக நண்பர்கள் முன் மடை திறந்தால்! நிலம் நோக்குவது கணவன் மட்டுமல்ல விருந்தினர்களும்தான்.!

23 comments :

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

நல்லாய்த்தான் சேலை வாங்கி அனுபவப்பட்டு இருக்கீங்க போல அவ்வ்வ்வ்வ்வ்

என்னைக்கேட்டால் பெண்களை சேலையில் பார்க்கும் போது இருக்கும் அழகு,கவர்ச்சி,வேறு எந்த உடையிலும் வராது சேலையில் பொண்ணுங்க ஒரு தனி அழகுதான் அவ்வ்வ்

மனசாட்சி said...

சேலை அனுபவம் செம அனுபவமோ? பகிர்வுக்கு நன்றி

அம்பலத்தார் said...

சேலைக்கடை அனுபவங்கள் சுவையானவை. சேலைக்கடை காத்திருப்புகளின்போது சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்தால் நிறைய சுவாரசியமான கதைகள் கிடைக்கும்.

அம்பலத்தார் said...

இந்தியாவிலிருந்து மனைவிக்கு நிறைய சேலைகளை மட்டுமன்றி எங்களுக்கு நிறைய சுவாரசியமான கதைகளையும் அள்ளிவந்திருப்பியள்தானே?

தனிமரம் said...

வணக்கம் ராச் !
நல்ல சுகம் நீங்களும் அவ்வண்ணமே இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி  மனசாட்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.வருக வருக தனிமரத்துடன் முதல் இணைவுக்கு மிக்கமகிழ்ச்சி.

தனிமரம் said...

நன்றி  அம்பலத்தார் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் பலவிடயங்களை இனிவரும் நாட்களில் பதிவிடுவேன்.

ஜீ... said...

//இப்படியான புதிய சிக்கல்களையும் கணவனாகப் போகும் மன்மத ராசாக்களே கவனித்த்துக் கொள்ளுங்கள்! இல்லையேல் நண்பர்களின் சம்பாசனையின் போது!//

ம்ம்ம்...முடியல பாஸ்! :-)

தனிமரம் said...

வணக்கம் ஜீ.
நலம்தானே ?
முடியும் இந்த சேலைக்கடைப்பக்கம் போனால் இப்படியான அனுபவம் பெற. ஹீஹீ
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!மீள்வரவு நல்வரவாகுக!உறவுகள் எல்லோரும் நலம்தானே?////கல்லுவைத்த அழகு சாறிகள்,கோலங்கள் சாறிகள் ,சில்க் சாறிகள் வஸ்த்திரகலாப்பட்டுச் சாறிகள் ,எம்றைற்றிங் சாறிகள் ,நேத்தரகலா பட்டுச்சாறிகள் கொட்டன் சாறிகள் ,பட்டுச் சாறிகள் பளபளக்கும் சீக்கூயின் சாறிகள்..////தம்பி புடவக்கடையில வேலையோ?இல்லாட்டி,..............................!பரவாயில்லை,நல்லதும் தான்!!!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!!!

Yoga.S.FR said...

ரங்கநாதன் தெரு கடைகள் பொங்கலுக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் திறக்கப்பட்டனவாம்.நல்ல முடிவு கிட்டட்டும்!தமிழக அரசும் கொஞ்சம் அனுசரித்துப் போகலாம் என்பது என் அபிப்பிராயம்.ஆயிரக்கணக்கான தொழிலாளர் பிரச்சினை.

புலவர் சா இராமாநுசம் said...

நலமா! நண்பரே!
சேலை புராணம் நன்று!

புலவர் சா இராமாநுசம்

MANO நாஞ்சில் மனோ said...

சேலை எடுத்து கொடுத்துட்டு வாங்கி கட்டினதுனாலே வந்த பதிவா இது...?? கொடிபறக்குது படம் பாட்டு கேட்டு பலகாலம் ஆச்சு ரசுச்சி கேட்டேன் நன்றி...!!!

ஹேமா said...

வருது வருது.வந்தாச்சா...இனி அனுபங்கள் நிறைய வரும்.இப்ப சேலை கட்டி வந்திருக்கு.அசத்தல் நேசன்.சுகமா இருக்கீங்களா !

Anonymous said...

நேசரே...நலமா...நெடு நாளைக்கப்புறம்....டும் டும் டும் போல...சேலை தேர்வு...அது ஒரு ஆனந்த அவஸ்தை தானே...

Welcome to the weary club...

//சிலர் மனதில் ஏற்படும் வாய்த்தர்க்கம் முல்லைப்பெரியாறு அணை போல இருவருக்கும் இடையில் அக்கப்போராக வந்தால்!//

Nice...தொடருங்கள் நேசரே...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
நன்றி உங்களின் கனிவான வரவேற்புக்கு.
சாரிக்கடையில் கொஞ்சக் காலம் கணக்கு எழுதியது மட்டுந்தான் அனுபவம் .அந்த படிப்பினைதான் பதிவு எழுத உதவியது.

தனிமரம் said...

மக்களுக்கும் பாதுகாப்புத் தேவைதானே யோகா ஐயா சனநெரிசல் விபத்துக்கள் என்பன ஏற்பட்டால் ஓட வசதியில்லை ரங்கநாதன் தெரிவில் .தொழிலாளர் பாவம் தான் ஒன்றைப் பார்த்தால் ஒன்று நல்லதே நடக்கட்டும்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலம்தான் புலவர் ஐயா.
நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆஹா மனோ அண்ணாச்சி புரளியைக் கிளப்பி விட்டுட்டாரே. பாடல் எனக்கும் அதிகம் பிடித்தது அண்ணாச்சி .
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் திரட்டியில் இணைத்த தற்கும்.

தனிமரம் said...

நலமாக இருக்கின்றேன் ஹேமா.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.இனித் தொடர்ந்து பதிவுலகில் இருப்பேன்.

தனிமரம் said...

நன்றி  ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும். சிறிய பயணம் அதனால் சிறிய  இடைவெளி .இனித் தொடர்வோம் வலையில்.

Yoga.S.FR said...

வணக்கம் யோகா ஐயா.
நன்றி உங்களின் கனிவான வரவேற்புக்கு.
சாரிக்கடையில் கொஞ்சக் காலம் கணக்கு எழுதியது மட்டுந்தான் அனுபவம் .அந்த படிப்பினைதான் பதிவு எழுத உதவியது.///அப்ப,கணக்குப் பாக்கேல்லையோ?கணக்கு விடயில்லையோ???,ஹ!ஹ!ஹா!!!!!!!

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் நேசன்,
சேலை பற்றிய அருமையானதொரு பதிவு...
மனையாளுக்கு சேலை தேர்ந்தெடுப்பது
ஒரு அவஸ்தையான ஆனந்தம் தான்....
நாம தேர்வு செய்வது மட்டும் அவர்களுக்கு பிடித்துவிட்டால்.....