24 January 2012

நீ வரும் பாதை வானவில் கோலம்.

தனி வழியில் போனவன்
 உன்னைப் பார்த்த பின்!
 தோல் பற்ற தவம் இருந்தேன். 
அதிகாலை குளிரைப் போல் 
அடைக்கலம் தேடி உன் மடி சாய்ந்தேன்.
 மாலையிட்டு மன்னவன் இவன்
 என்று முகம் மலர்ந்தாய்.
எப்போதும் ஓடும் நதிபோல
  இவன் வாழ்வில்
 அணைகட்டுப் போல அடி எடுத்து வைத்தாய்.
 ஆண்டுகள் சில  காத்திருந்தேன்
நீ  அருகில் வர அன்பே.


எப்போதும் சண்டைபோடும்.
 அலைபேசியும் ஊர் புதினம் சொல்லும் முகநூலும், வலைப்பதிவும், என திரியும் தனிமரத்திற்கும்
தாகம் தீர்க்கும் தமிழ்த்தாயக வந்தாய்.
 இந்நாளில் என் அன்பே.

திருத்த முடியாத தண்டம் இவன்
 என்று என் தந்தை கைபிடித்துக் கொடுத்தது உன்னிடத்தில்.
 இப்போது கொஞ்சம் பரவாய்யில்லை
என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் மாமானார் முன்னாடி
  மருமகனாக நானும் நிலம் நோக்கின்றேன்.
 கூண்டில் இட்ட சிங்கம் போல
 இது எல்லாம் நீ செய்த திருத்தங்கள்.பொறுமையைப் பழகுங்கள்.
 என்று  பலதடவை போனில் சொன்னாலும்
 .பொசுக்கென்று கோபம் வருகுது உங்களுக்கு!
 என்று திட்டும் போதெல்லாம் தொலைபேசி துண்டிக்கப்படுவதும்.
 பின் கெஞ்சலுமாக ஓடும் நாட்களில் எல்லாம்
 நீ சிறுகுழந்தையாகி என்னை செதுக்கும் சிற்பி ஆகின்றாய். .
  
 சொல்லவில்லை என் காதலையும்,
உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் .
சொல்ல முடியாத தூரத்தில் நீ ..


இன்று பிறந்தநாள் கானும் உள்ளங்களுக்கு தனிமரம் தரும் சிறப்புப் பாடல் (இந்த பாட்டிற்கு மனோ அண்ணாச்சி டூயட் பாடுவார் ஹீ ஹீ)

முஸ்கி -1 இது கவிதை மாதிரி  புலவர்கள் தான் இதை தெளிவு படுத்தனும்.


முஸ்கி-இந்தப் பதிவு எனக்குப் பிடித்த தேவதைக்கு முந்திக் கொண்டு விடும் தூது.போதிய நேரம் இல்லை கணனி முன் இருக்க.

11 comments :

Ramani said...

அன்னம் விடு தூது போல
பதிவு விடு தூது மிக மிக அருமை
தனி மரம் கூடிய விரைவில்
பூத்துக் குலுங்கி தோப்பாக
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 2

Anonymous said...

உங்கள் தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...உங்களுக்கும் வாழ்த்துக்கள் நேசரே...

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

யோவ் பாஸ் கவிதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா யாருக்கு எழுதியிருக்கீங்க? அண்ணிக்கா? அவங்களுக்கா இன்று பிறந்த நாள்?அப்படினா அவங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இல்லை முன்னால் சகோதர மொழி அண்ணிகள் யாருக்காவது பிறந்த நாளா?
ஹி.ஹி.ஹி.ஹி.

பி.அமல்ராஜ் said...

//இது கவிதை மாதிரி புலவர்கள் தான் இதை தெளிவு படுத்தனும்.//

கவிதை நன்றாகத்தானே இருக்கிறது நண்பரே.. எதற்கு இவ்வளவு அவை அடக்கம்.??? உங்க அவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Chitra said...

வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து! :-)

ஹேமா said...

நேசனின் அன்புத் துணைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் !

மகேந்திரன் said...

தங்களின் மனதிற்கினியவருக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
அழகான கவிதை நண்பரே.

sasikala said...

பொறுமையைப் பழகுங்கள்.
என்று பலதடவை போனில் சொன்னாலும்
.பொசுக்கென்று கோபம் வருகுது உங்களுக்கு!
அமாங்க எனக்கும் தான் இந்த கோபத்தை என்ன செய்யலாம் அருமையான பகிர்வு

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!ஹப்பி நியூ இயர்!!!!ஹ:ஹ!ஹா!!!!!!!!!!