11 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -5

ஆவணியில் கலியாணத்திற்கு நாட்குறிக்கச்  சொல்லி தாத்தா தந்தி அடித்திருந்தார் .

 செல்லத்துரை மாமா கலியாண மாப்பிள்ளை என்பதால். ஆடியில் வரக்கூடாது என்பதால் ஆவணி முதல் வாரத்தில் வருவார் என்றும் தந்தியில் தகவல் கொடுத்தார் தாத்தா.

செல்லத்துரை மாமா கடையில் இருக்கும் ஓய்வான நேரத்தில் .புத்தகம் படிப்பதும் ,சினிமா பார்ப்பதும் என பொழுதினைப் போக்குவார்  .

அப்போது அருகில் ஒரு புத்தகக்கடை இருந்தது. அது பதுளையில் மட்டும் மல்ல பல மலையகதேசத்திற்கும் அறிமுகமான புத்தகக்கடை .

மீனாம்பிகா .
இந்தக்கடையில் நாளிதழ்கள், வாராசஞ்சிகை முதல் அயல் நாட்டுக் கதைப்புத்தகம் .

மற்றும் ஈழத்து இலக்கிய வானில் எழுத்துக் கோலம் இடும் மலையக உறவுகள்  தெளிவத்தை ஜோசப்,மத்தாளை சோமு,மாத்தளை வடிவேலு,ஓ.எஸ்.ராமையா ,தமிழ் ஓவியன் .சி.பி.வேலுப்பிள்ளை,அந்தனிஜீவா,  என ஒரு பக்கமும் முற்போக்கு இலக்கியம் என்ற பாதையில் வந்து பின் நற்போக்கு இலக்கியம் என்ற  எஸ்.பொ அவரைத்தாண்டிய பலரில் ,வ.ஆ. இராசரத்தினம்,டானியல்,டொமினிக்ஜீவா,கைலாசபதி,சிவத்தம்பி,செங்கைஆழியான் என சித்திரங்களாக புத்தகக்கடையில் பலமுகங்கள்  வாசிப்புக்கு தொட்டு எடுக்கக் கூடியவாறு காட்சிப் படுத்துவார் அந்த நிறுவனத்தின் முதலாளி  .

அவரிடம் செல்லத்துரை மாமா கோண்டாவில் சுருட்டுடன் சென்றால் !(ராகுல் வரும் போது சுருட்டு இன்னும் விசயம் சொல்லும்)

இருவரும் பேசுவதே புதிதாக வந்த நாவல்கள் பற்றித்தான் இருக்கும் .இந்தவகையில் அந்த முதலாளி சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு செல்லத்துரை மாமாவுடன் கதை பேச வெளிக்கிட்டால்  விடிய விடிய பேசுவார்கள்

. அப்போது பூபாலசிங்கம் புத்தகசாலை பதிப்பகம் வைத்திருந்தது,வீரகேசரி பதிப்பகம் வைத்திருந்தது . யாழ்கலை இலக்கிய வட்டம் புகழில் இருந்தது.

 செல்லத்துரை மாமாவுக்கு தன் ஆசை மச்சாளை கலியாணம் முடிக்கப் போறன் என்பதில் அதீத ஆனந்தம்.

 தன்னைவிட .மாமா புனிதா மச்சாள் அதிகம் பட்டப்படிப்பு படித்த படியால் தேவையான புத்தகம் ஏதாவது இந்தியாவில் இருந்து வேண்டும் என்றால் அவரிடம் செல்லிவிட்டால்.

 சில நாட்களில் கையில் கொண்டு வந்து மீனாம்பிகா முதலாளி கொடுப்பதால் நன்றி சொல்ல தானே சுருட்டுடன் போவது செல்லத்துரை மாமாவின் இயல்பு.

 அவரும் தனக்கு ஏதாவது புத்தகம் யாழில் இருந்து விரைவில் வரனும் என்றால் செல்லத்துரை மாமாவிடம் சொல்லிவிட்டார் என்றால் !

அடுத்தவர்கள் வேலைக்கு யாராவது ஊரில் இருந்து வந்தால் .கையோடு கொண்டு வருவார்கள் என்பது அவரின் நம்பிக்கை .

இந்த நட்புத்தான் செல்லத்துரை மாமாவையும் மீனாம்பிகா முதலாளியையும் இணைத்தது.

.செல்லத்துரை மாமாவுக்கு மனைவியாகப் போகும் புனிதா மாமி பட்டப்படிப்பு படித்தாலும்.

 வீட்டில் இருக்கும் நேரத்தில் தறி அடிப்பதும் ,கடகம் பின்னூவது. நெல்லுப்பாய் பின்னூவதிலும் கெட்டிக்காரி என்று பங்கஜம் பாட்டி பாரட்டுப்பத்திரம் வாசிக்கும் .

புனிதா மாமி புத்தகம் வாசிக்கும் பங்கஜம் பாட்டி போட்டு போட்டு சண்டிலியான் புத்தகம் வாசிக்கும் .

இந்தக் காட்சியைப் பார்க்கும் ஆத்தைக்கு பாக்கு உரலில் பாக்கு இடித்தவாரே கலியாணம் கட்டப்போறவளுக்கு புத்தகம் வாசிப்புத்தான் முக்கியமோ?

 ஒழுங்கா வாய்க்கு ருசியா சமைச்சுப்போட பழகு .என்ற பேரன் செல்லத்துரை அவன் அப்பன் போல சாப்பாட்டு ராமன் .

என்று குத்தல் பேசும் .

இது எல்லாம் பழகின ஒன்றுதானே என்று பாட்டிமீது கோபம் கொல்லாத புனிதா மாமி வீட்டில் இருக்கும் ஒலிநாடா போடக்கூடிய  பனசொனிக் வானொலியில் பாட்டுப் போடும் .(tape Redio)செல்லத்துரை மாமா முன்னர் வரும் போது வாங்கியந்த ஒலிநாடாதான் அது.

 தன் சம்பளத்தில் முதல் வாங்கிய பொருள் என்று பெருமையாக புனிதா மாமியிடம் முன்னர் சொல்லியிருந்த படியால் .

செல்லத்துரை மாமா ஞாபகம் வரும் போதெல்லாம் .தனிமையில் இந்த பாடலை ஒலிக்க விடுவா  ரசித்துப் பாடுவாகூடவே அப்போது ராகுலுக்கு இந்தப் பாடலின்
இனிமை புரியாது!


அர்த்தம் புரிந்த போது?...

முகம் தொலைத்தவன் வருவான்...,,

18 comments :

இராஜராஜேஸ்வரி said...

அர்த்தம் புரிந்தபோது???!!!

நெருடும் வரிகள்.....

கோகுல் said...

ஆரம்ப பகுதிகளை தவற விட்டாச்சு.ஆரம்பத்திலிருந்து வருகிறேன்.

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!அருமையான நினைவு மீட்டலுடன் கதை நகர்கிறது,வாழ்த்துக்கள்!தொடருங்கள்,தொடர்வோம்!(பாடல் அருமை!சரி,நாயகன் யார் தெரியுமா?)ஹி!ஹி!ஹி!!!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...

கதை அழகாக நகர்கிறது. தொடருங்கள். பதுளையின் பழைய இடங்கள், கதைகள் பற்றி நிறைய விடயங்கள் இப்பொழுது தான் தெரிய வருகிறது. மேலும் பதுளைப் பற்றிய புகைப்படங்களுக்கு நன்றி.

நிரூபன் said...

ஐயா,
தனிமரம்
என்ன ஐந்தாம் பாகம் வந்திட்டு
நான் ஏலவே மூன்று பாகங்களை தவற விட்டு விட்டேன்.
சேர்த்து வைச்சு படிச்சுக்கிறேன்.

தனிமரம் said...

வாருங்கள் இராஜாராஜேஸ்வரி அம்மா இன்று உங்களுக்குத்தான் பால்கோப்பி. அந்த நெருடல் இனி வரும் பகுதியில் விளக்கப்படும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி கோகுல்  வருகைக்கும் கருத்துரைக்கும் நேரம்கிடைக்கும் போது படியுங்கள்..

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி. (உங்க மேல கோபம் வருகின்றது இந்தமாதிரி நல்ல பாடல்களை புதியவர்களுக்கு கேட்கும் வண்ணம் உள்குத்து போடமாட்டீங்களா என்று) ஹீ ஹீ
கதாநாயகன் பற்றி சொல்லியிருக்கனும் நீங்கள் ஐயா .மு.கா.முத்து .அவர் பெயர் வாத்தியாருக்கு எதிராக கொம்பு சீவிய காளை தந்தையால் ஆனால் ??? வழி தவறியவர். அல்லவா ஜானகி அம்மாவின் ரசிகன் நான் இந்த பாடலுக்கு தனிப்பதிவு போட்டால் ஓடிவிடுவார்கள் இளையராஜா இந்தப்பாடலை கேட்டபின் தான் ஜானகிக்கு அதிகம் சந்தர்ப்பம் கொடுக்கனும் என்று என்னிக்கொண்டதாக ஒரு பேட்டியில் படித்த ஞாபகம்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும். படத்தினை தந்து உதவும் ராகுலின் நண்பனுக்கு நானும் உங்களுடன் சேர்ந்து நன்றி சொல்கின்றேன். பழைய பதுளை பற்றி தெரியாத சிலருக்கு இந்த விடயங்கள் பயன்படனும் என்று ராகுல் என்னிடம் சொன்ன போது நானும் எழுத முயல்கின்றேன் .உங்களைப்போன்றோரின் ஊக்கிவிப்பு வருவது இன்னும் ஏழுதத் தூண்டும்.

தனிமரம் said...

வாங்க நிரூபன் தம்பி( ஹீ ஹீ ஐயாவா கேஸவா!)
நேரம் இருக்கும் போது படியுங்கோ .
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

இலங்கையின் அத்தனை இலக்கியவாதிகளையும் கூட்டி வந்திருக்கிறீர்கள் நேசன்.மலையகக் குளிர் இதமாக இருந்தாலும் மனதை நெகிழவைக்கிறது.தொடருங்கள் !

ஹேமா said...

சொல்ல மறந்திட்டேன்.எனக்குப் பிடிச்ச பாட்டு.3-4 தரம் கேட்டிட்டேன் !

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் .பாடல் வரிக்கும். இன்னும் சில எழுத்தாளர்கள் பின்னால் வருவார்கள் ராகுலுடன் சேர்ந்து.

மகேந்திரன் said...

'''அந்த முதலாளி சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு செல்லத்துரை மாமாவுடன் கதை பேச வெளிக்கிட்டால் விடிய விடிய பேசுவார்கள்'''

இப்படியான சிலர் பேசுவது பல சமயங்களில்
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
பட்டனைத் தட்டி விட்டது போல அவர்களிடம்
ஒரு கேள்வி கேட்டால் போதும் ஒன்பது மணி நேரம்
பேசுவார்கள்.

நண்பர் நேசன்,
தொடர்ந்து படித்து வருகிறேன்.
கருத்திட நேரம் வைக்க வில்லை.
மலையகத்தில் தொலைந்த முகத்தை
தேடுவதில் ஆனந்தமாக இருக்கிறது.

உங்கள் எழுத்து நடை மிக இயல்பாக இருக்குது.
தொடர்கிறேன்.. தொடருங்கள்.

அம்பலத்தார் said...

// தெளிவத்தை ஜோசப்,மத்தாளை சோமு,மாத்தளை வடிவேலு, ஓ.எஸ்.ராமையா,அந்தனிஜீவா, எஸ்.பொ , வ.ஆ. இராசரத்தினம், டானியல், டொமினிக்ஜீவா, கைலாசபதி,சிவத்தம்பி, செங்கைஆழியான், முத்துலிங்கம்....//
வணக்கம் நேசன், நீண்டு செல்லும் ஈழத்து எழுத்தாளர்கள் பட்டியலில் தற்பொழுது ஒரு தேக்க நிலை இருப்பதுபோல தெரிகிறது அண்மையகாலங்களில் பெயர் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு நல்ல படைப்புக்களை தந்த புதிய திறமையான எழுதாளர் யாரும் உருவாகவில்லை என்பது வருத்தப்படவேண்டிய யதார்த்தம்.

அம்பலத்தார் said...

கதை எமது வாழ்வியலின் ஒரு ஆவணப்பதிவுபோல பல விடயங்களையும் தொட்டு ஞாபகங்களை மீட்டு செல்கிறது.

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார் !
நீங்கள் சொல்லும் தேக்க நிலை சரிதான் ஆனாலும் நல்ல படைப்பாளியை உருவாக்க முடியாத புறச்சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதும் கவலையே நல்ல வாசிப்பை ஊக்விக்காத நிலையை என்ன சொல்வது??

தனிமரம் said...

சிலவிடயங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் விடயத்தை நண்பன் வேண்டி நிற்கின்றான். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அம்பலத்தார்.