18 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-7

கடந்த அங்கத்தில் கொலரா காய்ச்சல் என்பது தவறு. அது வயிற்றோட்டம் என்று வரலாற்றுத் தவறினைத் திருத்திய மருத்துவர் ஐயா முருகானந்தம் அவர்களுக்கு சிறப்பு   நன்றி . உங்களின் தொடர் ஆதரவினை தனிமரம் வேண்டி நிற்கின்றது. /////////////

///////////////////////////////////////////////////////////////


 புனிதா மாமியின் பெயர் உள்ளூரில் செங்கமலம் என்றால் தான் தெரியும்.

 மருமகளும் ,மாமியும் ஒரே  தோற்றம் போல் இருப்பதால் .பங்கஜம் பாட்டியும் செங்கமலம் என்று தான் பாசத்துடன் மருமகளைக்  கூப்பிடும்.

இனி கலியாணப்பெண் என்பதால் !மருமகளை மரியாதை கொடுத்து புனிதா  கெட்டிக்காரி என்று சின்னராசுவிடம் பேச்சைக் கொடுத்த படியே  இருந்த போது !

ஒரு நாட்டில் எங்கோ ஒரு மூளையில் ஏற்பட்ட மரணத்தை வைத்து .
முழுநாட்டையுமே இரத்தக்களரியிலும் ,வாழ்வில் மறக்க முடியாத வடுவையும் தந்து. தமிழர் மீது திட்டமிட்டு செய்த செயல்தான் இனக்கலவரம்.

அந்த சம்பவம்  பதுளை நகரையும் விட்டு வைக்கவில்லை .

அறிவுப்பசி தீர்த்துவைக்கும் புத்தகக்கடை ,வாழ்வாதார  தேவையை நிறைவு செய்யும் வர்த்தக நிலையங்கள் ,சாதாரண மக்கள் வாழும் வீடுகள் ,என  தமிழர்  மீது தேடித் தேடித் தாக்குதல் ,கடையுடைப்பு  ,தீவைப்பு என காடையர்கள் செய்த வன்முறைச் செயல்கள் .மறக்கவும் மன்னிக்கவும் முடியாது

. இந்த செய்தி காற்றலையில் கசிந்து வந்து கொண்டிருந்தது .

 ஊருக்குல் சிங்களவன் வெட்டுறானாம் கொழுத்துறானாம்  என்று பேச்சு வீட்டுத் திண்ணைகளில் வீசிக்கொண்டிருக்க.

  பதுளையில் கடைக்குல் இருந்தவர்களையும் வெளிவரமுடியாது.

 மூடியகடைக்குல் தீ வைத்த நிலையில் எரிகாயங்களுடன் தப்பியவர்கள் மீது காடைத்தனமாக எரித்த செயலில் எத்தனை பேர் மாண்டு போனார்கள்.

 என்று இன்றும் வெளிப்படைத் தகவல் இல்லாத நிலையில் .

பேரம்பலத்தாத்தா ,சண்முகம் மாமா,செல்லத்துரை மாமா என வாழையைப் போல் வெட்டிச் சாய்த்து கடையையும் தீ வைத்தார்கள் காடையர்கள் கூட்டம்.

இத்தனையும் தாண்டி தப்பித்த இருவர் சின்னத்தாத்தாவும் , செல்வம் மாமாவும் தான் .

உயிர் இல்லாத உடலைப் பெட்டியில் கட்டிக்கொண்டு இருவரும் ஒரு  வாரம் கழித்து அகதியாக சொப்பின் பையுடன் வெற்றுடலை வாடகைக்காரில் ஊருக்குல் கொண்டு வந்தபோது   !

ஊரே கூடிவிட்டது. யார் யார் இன்னும் உயிரோடு இருக்கின்றார்களோ ?இல்லாமல் போனார்களோ? என்ற அங்கலாய்ப்பில்.

 எங்கிருந்து ஆத்தையின் ஒப்பாரி இப்படி முழங்கியதோ தெரியாது !

பேரம்பலத்தாத்தாவின் உடல் பெட்டி திறக்க   முன்னாடியே .

சின்னத்தாத்தாவின் தோழில் சாய்ந்து.

  என் வம்சத்தில் வந்த முத்தவனே. மார் மீது போட்டு அடைகாத்தேனே .ஐயா ,ராசா என்னைவிட்டு போனியோ ?

பாவி நானிருக்க என்று ஆத்தை நெஞ்சில் அடித்து ஒப்பாரிவைக்க.

 கூட இருந்தாலும் அண்ணண் என்னையும்  ஒரு பிள்ளைமாதிரி பார்த்தவர் !

என் கண்முன்னாலே இப்படியாகுமோ ஆத்தா    .
எனக்கு கொல்லி இடுவான் என்று  நம்பி வளர்த்த மூத்தவன் சண்முகம் .
பக்கத்தில் கையுக்குல் இருந்த செல்லத்துரை .

என்னத்தைச் சொல்லி அழ ..

பார்த்துப் பார்த்து அழுதே இந்த செல்வனைக் கொண்டு வந்து சேர்க்க நான் பட்ட பாடு என்ற முருகா என்று கதறியழும் சின்னத்தாத்தா  .

ஒரு நாளும் இப்படி அழுது பார்க்காத ராகுல் அம்மா.ஒரு புறம் .

  பங்கஜம் பாட்டிக்கு தன் புருஸன்  பெட்டியைத் திறக்கவும் .

பொருளீட்டப் போன புண்ணினியவானே !பெட்டியில் வரக்காத்திருந்தேனோ !அப்பனுக்குத் துணையாக இரண்டு பிள்ளையலும் முன்னரே போனீங்களாட ?என்ற மோனே.

 கட்டினவள் காத்திருக்க !

கலியாணத்துக்கு  மற்றவனுக்கு பந்தல் போட்டேனே.

 உங்களைப் பார்க்க வருவோருக்கு நிழல் கொடுக்கவா போடுறன் என்று தெரியலையே?
 கந்தனே இந்த பங்கஜத்தை பாவி ஆக்கினாயே?

 என்று ஒப்பாரி வைக்க ஊரில் இருந்த உறவுகள் எல்லாம் .மார்பிலும் ,தோழிலும்  கூடிவைத்த. ஒப்பாரியைப் பார்க்கும் குழந்தைகள் எல்லாம் அழுகின்ற அவலத்தை எப்படி மீண்டும் எழுத்தில் வடிப்பது .

 .அன்று  அருகே அழுது தீர்த்த  ராகுல் இன்றும் அதை நினைத்து அழுவதை

. . கலியாணத்திற்கு  சண்முகம் மாமாவும் சந்தோஸமாக வருவார் .

அடுத்த ஊரில் நடக்கும் கூத்தைப் பார்க்க போவ காத்திருந்த யோகன் அழுகின்றான்  தம்பியுடன் சேர்ந்து தேம்பித் தேம்பி .

மாமி எங்கமாமாவுக்கு ஏன் இப்படி ?

போகும் போது என்னோட பகிடிவிட்டவர். இப்படி பெட்டியிலா  வருவார் .  ?

சீத்தா மாமி .
என்று மூத்த மாமியின் மடியில் விழுந்து அழும் மருமகன் யோகனை தூக்கி தன் தங்கையின் மடியில் வைத்தார் தந்தை தேவன்.

 கைபிடிக்க வருவார் என்று பூத்திருந்த செங்கமலம் மாமி  என்று செல்லம் பொழியும் புனிதா பொங்கி அழுதகாட்சியை வர்ணிக்க வார்த்தை இல்ல

 .அருகில் இருந்த  பெரிய மச்சாள், சின்ன மச்சாள் ,சகளி ,பெரியதாய் ,சிறியதாய் என முப்பது மூத்த பொண்டுகள் தோலைக்கட்டி ஒப்புப்படிக்க .

அடுத்த வீட்டு கமலம் .அக்கம்பக்கம் விமலா,ராச்சாத்தி,பாக்கியம் என ஒடிவந்து ஒப்புப்படிக்க.

 சின்னத் தாத்தா வெற்றுடலை மூன்றையும்  முறையாக தாத்தாவின் இரண்டு கால்மாட்டிலும் .
சண்முகம் மாமாவையும் செல்லத்துரை மாவையும்  முற்றத்தில் வைத்தார் .எல்லோருக்கும் தெரியவும்

.அடுத்த நாள் சவத்தை அடுக்கம் செய்வதற்கு.
வசதியாக .

வீட்டில் அடுத்த மகன் சோதிக்கு எதையும் செய்யும் சபை அறிவு போதாது .
எல்லாம் தெரிந்த சண்முகம் ,செல்லத்துரை மாமா போல் இல்ல இவன் .

வீட்டில் செல்லப்பிள்ளை கொஞ்சம் தெரிந்த மகன் செல்வம் இன்னும் கொலராவில் இருந்து மீளவில்லை .

இவனும் மீளுவானோ என்ற கவலை சின்னத்தாத்தாவுக்கு உள்ளுக்குள்.

 ஆனாலும் வீடே செத்த வீடாக இருக்கும் போது என்னத்தைச் செய்வது .என எண்ணத்துடன்  .
வீட்டுக்கு மூத்த ஒரே ஒரு மருமகன் தேவனைக்  கூப்பிட்டார் .

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தான் ராகுல் .தந்தை வழி மாமியின் பிடிக்குல் இருந்து கொண்டு.

    நாளைக்கு சவம் எடுக்கனும்.

 இனியும் வைத்துக்கொண்டிருக்க முடியாது .ஆகவேண்டி காரியத்தைப் பார்க்கனும் .வளவுக்குல் இருக்கின்ற பூவரசை எல்லாம் தறிக்கச் சொல்லு .சின்னராசுவை .


வேற ஆட்களைக் கூட்டியரச் சொல்லி யாரையாவது அனுப்பு கையோட விசயத்தைச் சொல்லி .கள்ளுக்கும் காசு கொடுக்கச் சொல்லு.
 பின்னாடி கணக்குப்பார்க்கலாம் .
எல்லாம் பேச்சு!

 முதலில் வட்டிகார முருகேசுவிடம் காசு கொஞ்சம் வேண்டு. பிறகு பார்கலாம்.

 இந்த கார்க்காரங்களுக்கு காசும் சாப்பாடும் கொடுக்க வழி செய் .பாவம் அவங்களும் தூக்கம் இல்லாமல் எங்களுடன் வந்த வங்க.

 சரிமாமா என்றுவிட்டு தேவன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்க.

 அருகில் இருந்த ஆம்பிள்ளைகள் எல்லாம் அடுத்த வேலைகளை ஆளுக்கொருவராக செய்தார்கள்.
 பாய் விரித்து  வந்தவர்களுக்கு கோப்பி அருகில் இருந்த நல்லம்மா வீட்டில் இருந்து வந்தது  .

ஒப்புப்படித்து ஒய்ந்து போய் இருக்கும் ஆத்தை மட்டும் ஆர் குருக்களைக் கூப்பிட்டு கிரியை செய்யனும் என்று   சின்னத்தாத்தாவிடம்சொல்லி அனுப்ப !தேக்கி வைத்த துயரம் எல்லாம் தாய் மீது சாய்ந்து  கதறி அழுதான்  செல்வன்..தொடரும்....

பகிடி-நகைச்சுவை .
ஒப்பு,ஒப்பாரி,-மரணவீட்டில் நடக்கும் சம்பிராதய முறை.
குருக்கள்- மரண சமய நிகழ்வுக்கு தனியாக இருப்பவர் .

16 comments :

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,
மனம் கனத்து விட்டது..
கலவரக் காட்சிகளை அப்படியே
எழுத்தில் கொண்டு வந்துருக்கீங்க..
உயிரின் உன்னதம் தெரியாத பாவிகளின்
கொடூரச் செயல்கள் கண்டு மனம் கொதிக்கிறது..

ஹாலிவுட்ரசிகன் said...

இன்றைய பதிவு நெஞ்சை கனக்க வைத்துவிட்டது. ஒப்பாரி ஓலங்களும், புகைப்படங்களும், முன்பு வாசித்த செய்திகளும் மீண்டும் அப்படியே கண் முன் நிற்கின்றன.

பி.கு - எழுத்துப் பிழைகளை ஒருமுறை பதிவிட முன் சரிபார்த்தால் அழகாக இருக்கும்.

Yoga.S.FR said...

ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்................................................

ஹேமா said...

கஸ்டமாயிருக்கு நேசன்.எத்தனை எதிர்பார்ப்புகள் ஆசைகளை இழந்து ஏதுமற்றவர்களாகினோம் !

உங்களை திட்டவேணும் நேசன்.இப்பிடி உணர்வோட எழுதுறீங்கள்.முக்கியமான இடமெல்லாம் எழுத்துப்பிழை.அது அந்த உணர்வை மாத்துது.
குறைக்குது.மூலை-மூளை இதுபோல.பதிவை எழுதிட்டு 2-3 தரம் திரும்பி வாசியுங்கோ.அப்போ பிழைகளைத் திருத்த உதவியாயிருக்கும் !

துஷ்யந்தன் said...

நேசன் அண்ணா... இப்போத்தான் உங்க பக்கம் வாறன்..... நிறைய நாட்களுக்கு அப்புறம் :)

என்னமா.... எழுதுறீங்க??? எதார்த்தமாக உணர்வுகளை கொட்டி எழுதுறீங்க??? ஒரே உணர்வு குவியலாய் இருந்து படிக்கவே மனசை ஏதோ செய்யுது நேசன் அண்ணா :( தொடர் ரெம்ப சிறப்பாய் இருக்கு :)

ஆனால்!!!!!
எழுத்துப்பிழை அதிகமாய் இருக்கு..... அது தொடர் மேல் உள்ள ஈடு பாட்டையே குறைக்குது:(

உங்கள் நிலை எனக்கு நன்கு தெரியும்.... ரெண்டு வேலை :( இந்த வேலைப்பளுவின் இடையே பதிவு போடுவதே ரெம்ப பெரிய்ய விஷயம்... இதில் எழுத்து பிழைகள் வருவது சகஜம்தான் ஆனாலும்... பதிவின் இடையே பெரிய்ய இடை வெளி விழுந்தாலும் பரவாயில்லை... கொஞ்சம் மினெக்கெட்டு எழுத்து பிழைகளை சரி பார்த்து வெளியிடுங்கள். ப்ளீஸ் ..

மற்றும்படி தொடர்.... செம அசத்தல்

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா!
இழப்பு வலிகள் வந்து செல்லும் போது சில நினைவுகள் மீறிவருகின்றது அதைச் சொன்ன நண்பனுடன் உங்களிடம் தொடராக வாரன் .
தனிமரத்தினை தருசிக்க வந்ததற்கு முதல் காப்பி உங்களுக்குத்தான். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும். நிச்சயம் இனி வரும் காலத்தில் இந்த பாழாய்ப்போன எழுத்துப் பிழையைத் திருத்துகின்றேன். தொடர்ந்து உங்களின் வருகையை இந்தத் தொடரில் ஏதிர்பார்க்கின்றேன் பதுளையின் மைந்தன் என்பதால்!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
ஏன் நீங்கள் இப்படி ம்..என்று சொல்லிப்போட்டு என்னைக் குட்டிச் சொல்லாமல் போனது உண்மையைச் சொன்னால் வலிகளும் வார்த்தையும் உங்களிடம் எதிர்பார்த்தேன் .மிஸ்சிங்!
ஒரு வேளை என் எழுத்துப்பிழை உங்களைப் பேச வைக்கவில்லைப்போல  திருத்துகின்றேன் தனிமரம் சமையலை கவனிப்பதா இந்த ஹிட்சைப்பார்பதா?? ?வலியின் வேதனை பேசவிடவில்லையோ??
 

தனிமரம் said...

என்ன செய்வது ஹேமா உழைக்கப்போனவர்கள் பெட்டியில் வருவார்கள் என்று எந்தத் தாய் எதிர்பார்த்தாள்???

தனிமரம் said...

ஹேமா அக்காள் திட்டினால் நான் கோபப் படமாட்டன். என்ன செய்வது நானும் பல தடவை முயல்கின்றேன் எழுத்துப்பிழையை திருத்த முடியவில்லை எனக்கு உள்குத்துப் பதிவு போட்டுக்கூட சில நண்பர்கள் திருத்த நினைக்கின்றார்கள் என் எழுத்தாணி ஐபோனில் இந்த எழுப்பிழையைக் காட்டும் வழி தெரியல அக்கா!! முயல்கின்றேன் என்று மட்டும் சொல்ல முடியும் .!

தனிமரம் said...

நேசன் அண்ணா... இப்போத்தான் உங்க பக்கம் வாறன்..... நிறைய நாட்களுக்கு அப்புறம் :)//
வாங்க தம்பி ஒரு பால்கோப்பி குடியுங்கோ! அப்புறம் !ஆஹா  !!என்ன ஒரு சுகம்!

தனிமரம் said...

என்னமா.... எழுதுறீங்க??? எதார்த்தமாக உணர்வுகளை கொட்டி எழுதுறீங்க??? ஒரே உணர்வு குவியலாய் இருந்து படிக்கவே மனசை ஏதோ செய்யுது நேசன் அண்ணா :( தொடர் ரெம்ப சிறப்பாய் இருக்கு :)
// சும்மா உசுப்பேத்தக் கூடாது  உணர்வா ??படிக்க முடியாமல் கொலை வெறியில் இருக்கின்றன் என்று சொல்லு. ஹீ ஹீ

தனிமரம் said...

ஆனால்!!!!!
எழுத்துப்பிழை அதிகமாய் இருக்கு..... அது தொடர் மேல் உள்ள ஈடு பாட்டையே குறைக்குது:(
// என்ன செய்வது எனக்கே புரியலேயே???

தனிமரம் said...

உங்கள் நிலை எனக்கு நன்கு தெரியும்.... ரெண்டு வேலை :( இந்த வேலைப்பளுவின் இடையே பதிவு போடுவதே ரெம்ப பெரிய்ய விஷயம்... இதில் எழுத்து பிழைகள் வருவது சகஜம்தான் ஆனாலும்... பதிவின் இடையே பெரிய்ய இடை வெளி விழுந்தாலும் பரவாயில்லை... கொஞ்சம் மினெக்கெட்டு எழுத்து பிழைகளை சரி பார்த்து வெளியிடுங்கள். ப்ளீஸ் ..

தனிமரம் said...

உங்கள் நிலை எனக்கு நன்கு தெரியும்.... ரெண்டு வேலை :( இந்த வேலைப்பளுவின் இடையே பதிவு போடுவதே ரெம்ப பெரிய்ய விஷயம்... இதில் எழுத்து பிழைகள் வருவது சகஜம்தான் ஆனாலும்... பதிவின் இடையே பெரிய்ய இடை வெளி விழுந்தாலும் பரவாயில்லை... கொஞ்சம் மினெக்கெட்டு எழுத்து பிழைகளை சரி பார்த்து வெளியிடுங்கள். ப்ளீஸ் ..
//ஒப்பாரி வைக்கும் தனிமரத்தின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நண்பேண்டா நீ! நிச்சயம் இனிவரும் காலத்தில் முடிந்தளவு முயல்கின்றேன் எழுத்துப்பிழையைத் தவிர்க்க . நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். சிறப்பு நன்றி தொடர் செம கலக்கல் என்று என் மனசை டைச் பண்ணிவிட்டாய் ! ஹீ ஹீ ஈரோ மட்டும் தரமாட்டன் பரிசாக. ஹீ ஹீ

தனிமரம் said...

துசி பாராட்டி குற்றம் சொல்லி மட்டும் போதாது தமிழ்மணத்தில் ஓட்டுப்போடு ஆமா .