24 February 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-9

அதிகாலையியே சமயகிரிகைகள் தொடங்கி விட்டது. செல்வம் மாமாவும் .
,
சண்முகம் மாமாவுக்கு மச்சான் ரூபனும் சுண்ணம் இடிக்க வெளிக்கிட்டபோது அருகில் இருந்து வட்டிக்கார முருகேஸர் சுண்ணப்பாட்டுத் தொடங்க!

..முத்து நல் தர்மம் பூ மாலை தூக்கி முளைக்குடம் நல் தீபம் வைபின் '

என்று தொடங்கி ..சுண்ணம் இடிப்பேன் .

என்று செல்வன் மாமா சுண்ணம் இடிக்க உலக்கையைத் தூக்கி இடிக்கும் ஒவ்வொரு தருணமும் .

தன்னை மறந்து அழுத துயரம் என்ன வென்று சொல்வது.

 மச்சான் ரூபன் சுண்ணம் இடிக்க மாட்டன் என்று உலக்கையை விட்டுட்டு  ஓடியந்து சீத்தாமாமியிடம் சேலைத்தலைப்பில் ஒளிந்து கொண்டவனைத் தாங்கி மீளவும் சுண்ணம் இடிக்கத் தாங்கியிருந்தவன் யோகன் .

அவனுக்கு அன்று தெரியவில்லை தன் தந்தைக்கு இப்படி ஒரு நாள் பிறகு தானும் அழுதுகொண்டுதான் சுண்ணம் இடிக்கவேண்டி வரும் என்று !

"ஆலகால விசத்தை உண்ட சிவனைப்பாடி நாம் திருப்பொற்சுண்ணம் இடிப்போம் .

என்று முருகேசர் பாடி முடித்த போது அழுதது செல்வம் மாமா,ரூபன் மச்சான் மட்டுமல்ல கூட இருந்த உறவுகளும் தான் .

எல்லாம் முடிந்து சுடலைக்குப் போகும் போது

தன்னோடு  மருமகன் ராகுலையும் தலையில் தூக்கிக் கொண்டு போனார் .

சோதி மாமா சுடலைக்கு .

செல்வம் மாமா கொள்ளிக்குடம் தாங்கி குலுங்கிக் குலுங்கி அழுத போது.

 ரூபன் கொள்ளி மூட்டமாட்டன் என் ஐயாவுக்கு என்ற போது அருகில் இருந்து கொள்ளியை  வையண்டா என் மாமாவுக்கு(சண்முகம்)  என்று அழுதுகொண்டு அவனை கொள்ளி வைக்க  வைத்தவன் யோகன் .

.பின் அவனுக்கு கொள்ளியே வைக்கமுடியாமல் வித்துடலாகி வருவான் என்று அன்று நினைக்கவில்லை!

எல்லோரும் சுடலையால் வீட்ட
காடாத்தி வரும் போது !

சோதி மாமா ராகுலை நடந்து போ வீட்டை என்றுவிட்டு பெட்டிக்கடை அரணியிடம் தோடம்பழச் சுவை டொபி வாங்கித் தந்து விட்டுப் போனவர் பின் வரவேயில்லை ஊருக்குள் .

சோதி இயக்கத்துக்குப் போய் விட்டான் என்று வதந்தி உலாவியது.

 எல்லாம் பேச்சே முருகா!

இந்த பங்கஜத்தை முண்டச்சி ஆக்கி. மூத்தபிள்ளையை பலிவாங்கி.

  பிந்தி வந்ததுகள் பிழை செய்ய வைத்து பேர் சொல்லும் பிள்ளை செல்லத்துரையை சேர்த்துக் கொண்டுபோக வைத்தாய் .பெத்தவயிறு துடிக்க பின்ன வந்தவனும் ஓடிப்போட்டானே !

யாரிட்டைப் போவேன் காடாத்தி வந்திருக்கும். இந்த மகனை என்ன செய்வாய் செந்தில் வேலா ?

பாவியானே என்று ஒப்பாரி வைத்த பாட்டி.

 அதன் பின் பேரன் ராகுலிடம் பேசுவதே இல்லை  சில காலம்.

உன்னைக்கொண்டு போன சாட்டில் தான் ஓடிப்போய்ட்டான் .

இல்லை என்றால் யாராவது கண்ணுக்குள்!தென்படாமல் இப்படி கொதித்துக் கொண்டு போயிருப்பானா ?

வீட்டுக்கு வந்து எட்டு வீட்டை செய்ய எனக்கு உதவியாக இருக்காமல் .

.முத்தாச்சி  பாட்டி பங்கஜத்தை இனி ஒப்பாரி ஏன்  வைத்துக் கொண்டு .

நடக்கப் போறதைப் பாரு மச்சாள் .வந்தவர்களை அனுப்பவேனும் என்று அதிகாரம் செய்த பின் அழுகையை நிறுத்திவிட்டு தோய்ந்து போட்டு பாட்டி வந்தா வெள்ளைச் சீலையில்!

 இப்படிப் பார்த்த காட்சி என்ன சொல்வது பானுமதி போல இருந்த பாட்டி சுந்தராம்பாள் ஆகிவிட்டதை.

அர்தங்கள் புரியாத போது விளக்கம் தரும் பாட்டி இன்று இனி என் கிட்ட வராதே என்று அதட்டிய போது ராகுல் செய்த பாவம் தான் என்ன !

ஆனாலும் அவனுக்கும் பேரப்பலத்தாரின் பிடிவாதம் இருக்கும் தானே!

 சின்னப்பாட்டியிடம் சாய்ந்து கொண்டான். தனக்குத்தான் பிள்ளைகள் இல்லை இந்தப்பேரன் தன்னை கைவிடமாட்டான் என்று கனவு கண்டாவோ?

 கடைஸியில் கொள்ளி வைத்தவன் இந்தப்பேரன் தான் .

காலம் வலிகளையும் வேதனைகளையும் தீர்க்கும்.

 ஊருக்குள் வந்தவர்கள் மீண்டும் வியாபாரத்திற்கு பதுளை  பசறை, அப்புத்தளை,பண்டாரவளை,கண்டி கம்பளை ,நாவலப்பிட்டி, காலி,தலவாக்கொல்ல, குருநாகல் ,மொரட்டுவ என்று வேகம்  எடுத்து பல திக்கும் பறந்தார்கள் .

அதனால் தான் காகம்கள் என்றார்கள் பட்டணத்தில் வாழ்வோர்.

 ஆனாலும் கஸ்ரப்பட்டு வெற்றிலைக்கடையும் ,வட்டிக்கடையும் போட்டார்கள் விளம்பரப்பலகை வைத்து.

 செல்வம் மாமா ,ஈசன் மாமா,பாலன் மாமா(தேவனின் தங்கை கணவர்) எல்லாறும் பதுளை போனார்கள் 1984 இல் .

சின்னத்தாத்தா மட்டும் செத்தாலும் வரமாட்டேன் .என்று சொல்லிப்போட்டார்.

காணி வித்த காசோடு பதுளை போனவர்கள் வந்தது 1985 தையில்

.பங்கஜம் பாட்டி செல்வம் மாமாவுக்கும் முத்தாச்சியின்  கடைசித் தங்கை  புஸ்பம் மகள் சரோஜாவுக்கும் கலியாணம் செய்து வைத்தா  தையில் .

.ஊரே கூடிவந்து மீண்டும் வீடு கலகலத்தது.

 அந்த நேரத்தில் தான் நல்ல பனங்கிழங்கு புடுங்கும் காலகட்டம்.

 வீடுகள் எல்லாம் பனம்பாத்தியில் கிழங்கு புடுங்கி அவிப்பதும், அவித்த கிழங்கை புழுக்கொடியலுக்குப்  காயவைப்பதும் ,ஒடியலுக்கு பச்சையாக காயவைப்பதும்,  பூரான் திண்ணுவதுமாக ஒரே கிழங்கு வாசம் வீசியது.

  அவித்த பனங்கிழங்கை பச்சைமிளகாயுடன் சேர்த்து(இடித்து) துவைத்து சாப்பிடும் சுவைக்கு யார் தான் ஆசைப்படமாட்டார்கள் .

ஆத்தைக்கிழவிக்கு ஓடியல் புட்டும் ஒடியல் கூழும் என்றால் போதும் நாலுநேரமும் சாப்பிடும்  .

கிழங்கை பச்சை மிளகாயுடன் ,சின்ன வெங்காயம் போட்டு இடித்துக் கொடுத்தால்  உருண்டையாக்கி பேரப்பிள்ளைகளுக்கு ஊட்டியவாரே தானும் சாப்பிடும்.

 அன்றும் அப்படித்தான் எல்லாருக்கும் ஊட்டி விட்டா பேரன்களுக்கு இரவுப்பொழுதில்   .

புஸ்பம் பாட்டி வீட்டில் அன்று இரவு  கலியாணவீட்டுப் பந்தலில் இரவு  இரவாக வாடகைத் தொலைக்காட்சியில் வாடகைக்கு படக்கொப்பி எடுத்து படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

வீட்டில் இருந்த புனிதா மாமி,சீத்தாமாமி , முத்தாச்சிப் பாட்டி ,சின்னத்தாத்தா  என முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் ஒரு ஐம்பது பேர் இருந்திருப்பார்கள் .


.ஊருக்குள்  படம் போடுவது என்றால் எல்லா அயல் வீட்டார்களும் ஒன்றாக  கோப்பி குடித்துக் கொண்டு   விடியவிடியப் படம் பார்த்த காலம் அது .

எங்கப்பாவுக்கு சிவாஜி பிடிக்கும் !

  ஆத்தை ஆசையில் பனங்கிழங்கு துவையலைச் சாப்பிடும் போதே சின்னத்தாத்தா அளவாச்சாப்பிடுங்கோ

கிழங்கு  இட்டு முட்டாக்கி மூச்சு விட கஸ்ரப்படுவாய் என்று சொல்லியதையும் கேட்கவில்லை. சாப்பிட்டா அதன் பின்பு !

இன்றும் ராகுலின் கண்ணுக்குள் அந்தக்காட்சி இருக்கின்றது!

24 comments :

மகேந்திரன் said...

சுடலையும்
எரியூட்டும் காட்சிகளும்
கண்களில் நீரை வரவழைக்கிறது
சகோதரா...

மகேந்திரன் said...

உறவுகளின் உன்னதங்கள் உங்கள்
பதிவில் யதார்த்தமாய் இருக்கிறது..

மகேந்திரன் said...

" நாலாறு மாசமா
நல்லசோறு தின்னலியே..
நான் பெத்த மகராசா
என்னைவிட்டுப் போனதேனோ...

ஐந்தாறு மாசமா
அங்குலமும் நகரலியே
அஞ்சனையின் புத்திரனே
உருமறைஞ்சி போனதெங்கே.."

அப்படின்னு எங்க ஊர்ப்பக்கம்
ஒப்பாரிப்பாடல் ஒன்றைக் கேட்டிருக்கிறேன்..

என்னவோ ஏதோ..
உங்க பதிவில் வரும் சுடலைக் காட்சியைக் கண்டதும்
இந்தப் பாடலை சொல்லணும் னு தோணுச்சி..

Anonymous said...

சோகம் கப்பி தொடர் நகர்கிறது நேசரே...தொடருங்கள்...

வாழ்த்துக்கள்...

Yoga.S.FR said...

இரவு வணக்கம் நேசன்!எங்கள் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தொடர்,அருமை!!!!////.ஊருக்குள் படம் போடுவது என்றால் எல்லா அயல் வீட்டார்களும் ஒன்றாக கோப்பி குடித்துக் கொண்டு விடியவிடியப் படம் பார்த்த காலம் அது .////தொட்டில் பழக்கம்?????இன்றைக்கு மகேந்திரனுக்கு சூடாக,திக்காக(THICK) ஒரு பால் கோப்பி.

ஹேமா said...

இன்னும் என்னமோ சொல்லப்போறீங்கள் நேசன்.எழுத்துப்பிழைகள் குறைவா இருக்கு.சந்தோஷம் !

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா.
வாங்க ஒரு பால் கோப்பி குடியுங்கோ.

தனிமரம் said...

கிராமத்தவனிடம் உறவுகள் தானே சொத்தாக இருக்கும்.

தனிமரம் said...

இந்த ஒப்பாரியும் எங்கள் உணர்வைவிட்டுப் போய் விடும்போல இருக்கு அண்ணா !அடுத்த தலைமுறைக்கு எதைக் கொடுக்கப் போறம்? அழகான ஒப்பாரியை பகிர்ந்ததற்கு நன்றி .

தனிமரம் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகேந்திரன் அண்ணா!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா. நன்றி பாராட்டுக்கு. அன்று தொட்டில் பழக்கம் என்றாலும் குடும்பத்துடன் படம் பார்க்கலாம் இன்று ????வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி யோகா ஐயா.
 சிவாஜி பாட்டுக்கு டூயட் பாடினீங்களா ?சென்றல் கல்லூரியில் படிக்கும் போது. ஹீ ஹீ

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் இந்த எழுத்துப்பிழையால் நான் படும் பாடு ஸ்ப்பா!!!
சிவாஜி பாட்டுப் பிடிக்காதோ???

ஹாலிவுட்ரசிகன் said...

கதை யதார்த்தமாக அழகாக நகர்கிறது. வசனங்கள் உணர்ச்சிகளை உண்மையாக எடுத்துரைக்கின்றன. நன்றி.

விக்கியுலகம் said...

ஒரு வித அழுத்தத்துடன் கதை செல்கிறது மாப்ள தொடர்கிறேன்!

Yoga.S.FR said...

தனிமரம் said...
சிவாஜி பாட்டுக்கு டூயட் பாடினீங்களா ?சென்றல் கல்லூரியில் படிக்கும் போது. ஹீ ஹீ!!!////சிவாஜி பாட்டுக்கு டூயட் பாடுறதா????அந்தக் காலத்திலிலயிருந்து எம்.சி.யார் தான் புடிக்கும்!பறகு தெய்வமே,தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே எண்டும்,யாருக்காக?இது யாருக்காக? எண்டும் வயல்வெளிக்குள்ள நிண்டு "கத்துவன்"ஹி!ஹி!ஹி!!!!!!!!!

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தெய்வமே எண்டும்,யாருக்காக?இது யாருக்காக? எண்டும் வயல்வெளிக்குள்ள நிண்டு "கத்துவன்"ஹி!ஹி!ஹி!!!!!!!!! //
புல்லும் புடுங்க வரும் பொன்னையா பேர்த்தியைப் பார்த்து கேட்டீங்களாக்கும் இது யாருக்காக(இந்த யோகா  ஐயாவின் இதயக்கமலம் ) என்று அப்படித்தானே ??? யோகா ஐயா! ஹீ ஹீ 

G.M Balasubramaniam said...

உங்கள் பதிவைப் படித்தேன். பழைய பகுதிகளையும் படிக்க வேண்டும். படிப்பேன். எனக்கு அறிமுகமே இல்லாத பல கலாச்சார விஷயங்கள் உங்கள் பதிவில் தெரிகிறது. எழுத்துக்களில் ஒரு மென்சோகம் புலப் படுகிறது. புலம் பெயர்ந்தாலும் பின்புலம் அப்படியே தெரிகிறது. வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

உங்கள் பதிவைப் படித்தேன். பழைய பகுதிகளையும் படிக்க வேண்டும். படிப்பேன். எனக்கு அறிமுகமே இல்லாத பல கலாச்சார விஷயங்கள் உங்கள் பதிவில் தெரிகிறது. எழுத்துக்களில் ஒரு மென்சோகம் புலப் படுகிறது. புலம் பெயர்ந்தாலும் பின்புலம் அப்படியே தெரிகிறது. வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

Supper hit

தனிமரம் said...

நன்றி பாலசுப்பிரமணியம் ஐயா உங்களின் வருகைக்கும் ஊக்கிவிப்பு வார்த்தைகளுக்கும் . எங்கள் நாட்டு விடயங்களை விபரிப்பது ஒரு அகதியின் கடமை அதைச் செய்கின்றேன். தொடர்ந்து  நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்.

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.