03 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-12

சரோஜா மாமி தாய் வீட்டில் பரியரிக்கணும் என்ற ஆசையில் இருந்தவா. ஆனால் செல்வம் மாமா தாய் வீட்டில் இருக்கணும் முதல் பெண் குழந்தை எங்க வம்சத்தில் என்று கட்டுப்பாடு போட்டதில் மாமியால் தாய் வீட்டுக்குப் போகமுடியாத நிலையில் இருந்தா.

அந்த நேரத்தில் பங்கஜம் பாட்டியின்  உன்ற மோள்  சொல்லடியை தனக்கு சாதகமாக்கி .மாமாவின் மனதில் சஞ்சலத்தை ஊட்டிவிட்டா
.
எனக்கு உதவிக்கு அண்ணன் மார் இருக்கினம் ,தம்பி மார் ,இருக்கினம் .
அந்த நேரத்திலேயே இரண்டு அண்ணமார் லண்டன் வந்ததில்  சரோஜா மாமிக்குப் பெருமிதம் .

அந்த பெருமிதமே குடும்பத்தை பின் ஒரு நாளில் சந்தி சிரிக்க வைக்கும் என்று அப்போது தெரியாது! என்பதை இப்போதைக்கு இங்கு சொல்லி வைக்கின்றேன்.

உங்களுக்கு இப்ப இருப்பதே அக்காள் மட்டுந்தான் .

இந்த நேரத்தில் அடுத்த தம்பிக்கு எப்ப வெடி விழுமோ !தெரியாது?

 நான் அம்மா வீட்டில் தான் இருப்பன் அவங்கள் ஒழுங்கா பரியரிப்பா அண்ணிக்குப் பார்த்தவா என்ற மோளையும் நல்லா பார்ப்பா .என்று தலையனை மந்திரம் போட்டதில் தாய் பேச்சும் கேட்காமல் செல்வம் மாமா மாமியை தாய் வீட்டில் கொண்டே விட்டார்.

 தான் மட்டும் இங்கு இருந்தார்.  (31) துடக்குக் கழித்த கையோடு பதுளை போக வெளிக்கிட்டர்.

 இந்த இடைப்பட்ட காலத்தில் தாத்தா அவருக்கு ஏழுதிவைத்த காணி,வளவு எல்லாம் விற்றுப்போட்டார் .சின்னத்தாத்தாவைக் கேட்காமல்.

 புனிதா மாமி ஏன் மச்சான் இப்படி அவசரப்பட்டு குடும்ப சொத்தை இன்னொரு ஊர்க்காரர்களுக்கு விற்கின்றீங்க (.  ஒரே ஊருக்குள் இருந்தாலும் பக்கத்துக்கிராமத்தவருக்கு சொத்து விற்பதில்லை பரம்பரை நடைமுறை )என்று கேட்டதற்கு ?

இல்ல அவனும் என்னோடு பங்காளராக பதுளையில்  இன்னொரு கடை போடப்போறான். என்றதும் இல்லாமல் நீங்க இந்த விடயத்தில் மூக்கை நுழைக்காதீங்க!
                                          இது இன்றைய  பதுளை
 கைச் செலவுக்கு மாதம் மாதம் பணம் அனுப்புறன் என்றார்.

எனக்கு அரசாங்க வேலை இருக்கு உங்க பிச்சக்கார காசு வேண்டாம் செல்வம் என்றாதும் .

சரோஜா மாமி மூல நட்சத்திரத்தில் பிறந்த இவங்கள் செல்லத்துரை செத்துப்போக காரணம் (ஆண்மூலம்அரசாளும் பெண்மூலம்  நிர்மூலம் ஊரில் இது பலர்வாழ்வை  இன்றும்  சீரலிக்கும் நட்சத்திரம்) என்று சொல்லாத மாமி.

 என்ற மோள் பிறந்ததும் தன்ற மோன் போய்ட்டான் என்று எப்படி கூச்சமில்லாமல் பேசுவா ?என்று இடையில் புகுந்ததால்.

 வாய்த்தர்க்கம் பேரம்பலத்தார் தான் உங்களுக்கு காசு கொடுத்து வளர்த்தார் அவர் போனபின் நீங்களும் தனியாக இல்லையா போய் இருக்கனும். உங்களுக்கும் சேர்த்து என் புருஸன் உழைக்கனும். நான் பார்த்துக் கொண்டு இருக்கனுமோ ?

என்று பிரிச்சுப் பேசியது .

வாழையடி வாழையாக கூட்டுக் குடும்பம் என்ற ஆலமரமாக இருந்த குடும்பங்கள்.

 ஆளுக்கொரு பக்கமாக தனிமரம் ஆனது .
.எல்லாம் பார்த்துக்கொண்டு பங்கஜம் பாட்டி பரிதவித்து நின்றது .

புஸ்மம் பாட்டி மாமியின் பேச்சுக்காக காலைப்பிடித்து கெஞ்சினா பங்கஜம் பாட்டியிடம்.

 .பட்டணத்தில் படித்தவள் பாலம் தாண்டினால் பட்டணத்தாள் போல பேச வெளிக்கிட்டுட்டாலே ! என்ற மோள் நான் என்ன செய்வன் மச்சாள் என்று அழுத போது!

 எல்லாம் பார்க்கனும் என்ற தலையெழுத்து இனி செந்தில் வேலன் வழிவிடட்டும்!

 .lஅதுவரை தாயின் முன்  அதிர்ந்து பேசாத ராகுல் அம்மா சிவகாமி .

தம்பி நீயும் உன்ற பொட்டாட்டியும்  இனி இங்க வரவேண்டாம் .பதுளையில் இருப்பீர்களோ ?இல்லை புஸ்பம் மாமியின் சீதன வீட்டில் இருப்பீர்கலோ. தெரியாது அம்மா என்னோட இருப்பா .

மச்சாள் புனிதம்,சீத்தா எல்லாம் அயலில் இருப்பினம் .மருமகன்கள் (பொடியங்கள்) வளர்ந்திடுவாங்க .என்ற புருஸனும் உழைக்கின்றார் எங்கட காணியுடன் பெரிய அண்ணன் காணியும் சேர்ந்து செய்தால் சாப்பாட்டுக்கு கஸ்ரம் இல்லை.

  நீ மச்சாளைக்கூட்டிக் கொண்டு போ இனியும் பட்டணத்தில்  படித்த திமிர் இங்க தேவையில்லை .நானும் ஏச்.எஸ்.சி (higher schcool certificate)படித்தவள் தான் .

எங்க வீட்டில் இருந்து கொண்டு என்ற ஐயாவின் உறவுகளை இப்படிப் பிரித்துப் பேசுவதை பேரம்பலத்தார் பார்த்திருந்தா நடப்பதே வேறயாக இருந்திருக்கும்.

  பதுளையில்  தனிக்குடித்தனம் தந்த திமிர் போல! உதுக்குக்குதான் ஐயா ஊர் தாண்டி போக விட்டது இல்ல புருஸன்மார்கூட.

 கூட்டுக்குடும்பத்தில் குண்டு வைப்பார்கள் என்று. இப்படித்தானே ஊருக்குள் நடக்குது என்று நாட்டு நிலமையையும் குத்திக்காட்டியதும்.சரோஜா மாமிக்கு முகம் கறுத்துவிட்டது(சரோஜா மாமி புதிய கல்வித்திட்டத்தில் A/L படித்தவா)

அன்று இரவே மாமா சரோஜா மாமியுடன் பதுளை போனார்.

   பங்கஜம் பாட்டி அரசியலில் சிரிமா போல தன் குடும்பத்தை நிலை நிறுத்த தனியாக இருந்து ஆம்பிள்ளைகளுக்கு நிகராக  ஆட்சி செய்தது . ஊரில் பேரம்பலத்தாரின் சகோதரி பிள்ளைகளையும் அருகில் குடியமர்த்தி தானும் இருந்தா.

ஏன்ன நினைத்தாவோ தெரியாது ஈசன் மாமாவை தனிக்கடை போடச் சொல்லி தன் ஐம்பது பரப்பு வயல் காணியையும் வட்டிக்கார முருகேஸர் வீட்டில் ஈடாக வைத்து காசும்,  அட்டியல் காசுமாலை என அள்ளிக்கொடுத்து. ராகுலையும் அருகில் வைத்திரு அவனும் உன் மருமகன் தானே  இவன்  படிப்பில் கள்ளம் இங்க.

 அங்க போனால் நாலுநாளில் திருந்தி வருவான். ஒழுங்கா படிக்கின்றன் பாட்டி என்று.  அடுத்த நாள் இரவு யாழ்தேவியில் அனுப்பியது 1986 ஆம் ஆண்டு இறுதியில்

. உடரட்டையில் போகும் போது அருகில் ஈசன் மாமாவும் சாந்தி மாமியும் என்னை இருகையிலும் பிடித்திருக்கும் போது தோழில் படுத்திருந்தால் மச்சாள் பல்லவி.
ஐயாவின் தங்கை மகள் என்ற தோரனையில் .(என் வாழ்வில் கொல்லியிட்டவள்)

பதுளையில் அதிகாலைப் பொழுதில்   உடரட்டையில் இறங்கும் போது ராகுலுக்குத் தெரியவில்லை வலிகளும் உறவுகளும் முகங்கள் மாறும் என்றும்!

இவனுக்கு அங்கே இன்னும் 6 மச்சாள் மார்கள் சமவயதிலும் வயது குறைந்தும்
இருக்கின்றார்கள் என்று.


பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்கலாமா??ஈசன் மாமாவை வரவேற்றது தென்னக்கோன் என்ற சகோதரமொழி நண்பன் .

 கடலைக்கடையை வாடகைக்கு எடுத்து சுருட்டுக்கடை போடனும் என்று நினைத்துக் கொண்டு ஊருக்கு வந்தவருக்கு!

 பாட்டி வடிவில் பண உதவி கிடைத்தது..மச்சானின் மாமி( தேவன் தங்கை கணவர் ஈசன்)  கும்பிடும் கோயில் போலானா பங்கஜம் பாட்டி.

சுருட்டுக்கடையில் 5 வருடம் நின்றால் அதன் பின் தனிக்கடை போடுவது எங்க ஊர் ஆம்பிள்ளைக்களின் தனித்துவம் ஆது இப்போது மலையேறிவிட்டது நாட்டின் விலைவாசி போல்   பாட்டி மனசு வெள்ளைதான்.

கிழவிக்கு தான் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்தாலும்  விளக்கத்துடன் பேரனையும் அல்லவா பேத்தியோடு அடுத்த இரவு அனுப்பிவிட்டா!

புதிய ஊர்  பதுளை  வயலிலும் ,கடல்கரையிலும்  இருந்தவன் மலையகம் என்ற சொல் தெரியாதவன் .பதுளை என்று கேள்விப்பட்டவன்.

 இந்த ஊரில் தொலைவான் என்று அன்று தெரியாதவன்  ராகுல்.

முக்கிய வீதியில் சுருட்டுக்கடை போட்டார் ஈசன் மாமா உடன் .உதவிக்கு ஊரில்  இருந்து ஓலித்து ஓடிவந்த இருவரும்  சேர்ந்து கொண்டார்கள் பெட்டிக்கடையில் புகையிலையும் வெற்றிலையும் கைகோர்த்தது உறவாக .

காலையில் பள்ளிக்கூடம்(  1987 /1/5)போனான் ராகுல் (அது கலைத்தாயின் பெயரை சின்னது என்றால் முழுப்பெயர் வரும் )

பாடசாலை .ஊரில் செருப்புடன் திரிந்தவன் ,பள்ளி செல்வதாக போக்குக் காட்டிவிட்டு வடலிக்குள்லும் / நாவல் மரத்திலும் ,கோயில் கேணியிலும், திரிந்தவனை கட்டி வைத்து! கண்ணீர் விட விட்டது கலைத்தாயின்  பள்ளிக்கூடம் .
                         
                                                                               இன்னும் அழுவான்..............


துடக்கு கழித்தல்-இந்துக்களின் சமய நிகழ்வு

!

23 comments :

ஹாலிவுட்ரசிகன் said...

ஆமா ... இந்தக் கதை உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்படுகிறதா?

ஏனென்றால் அப்படி கடை இருந்தால் யாரைப் பற்றி என்றுதான் நானும் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

அடுத்த பதுளை அத்தியாயங்கள் சீக்கிரம் வரட்டும்.

தனிமரம் said...

வாங்க ஹாலிவூட் ரசிகன் இன்று உங்களுக்குத்தான் பால்கோப்பி முதலில்!

தனிமரம் said...

சம்பவங்கள் நிஜம் இது ராகுலின் கதை என்னிடம் பகிர்ந்த போது அதை வலையில் கொண்டுவாரன்.
அப்புறம் நானும் மண்டையைக் குடையிறன்  நீங்களும் ராகுலையும்,தனிமரம் நேசனையும் பார்த்திருக்கலாம் வெவ்வேறு வடிவங்களில் .பதுளையில்  தொடரை தொடர்ந்து தர பணி இடையில் தடை ஒரு புறம் என்றால்  வரும்  நண்பர்கள் ஒடிவிடுவார்கள் தனிமரம் தொடர் போட்டு கொலைவெறி ஆக்குது என்று. ஹீ ஹீ
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ!

ஹேமா said...

ம்...பதுளையில் பயணித்துக்கொண்டேயிருக்கிறோம் !

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!அருமையாக தொடர்கிறது,தொடர்!/////வேண்டுமென்றே பால்கோப்பிக்குப் பிந்திவிட்டார் போலிருக்கிறது!

தனிமரம் said...

நன்றி ஹேமா அழகான ஒரு பூமியில் பயனிப்பீங்க ஆனால் அப்பப்ப அடியும் விழும் ஹீ ஹீ ஏற்றம் இறக்கம் இருக்கும் ஊர் அல்லவா அதைச் சொன்னேன்!
நன்றி  ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் .  பிந்திவந்தாலும் உடரட்டையில் பயனிப்பதே சந்தோஸம் .ஹீ ஹீ

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

துரைடேனியல் said...

இப்போதான் முதன் முறையா படிக்கிறேன். முந்தினவைகளையும் வாசித்து விடுகிறேன். தொடர்கிறேன்.

தனிமரம் said...

நன்றி துரைடெனியல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் நேசன்!அருமையாக தொடர்கிறது,தொடர்!/////வேண்டுமென்றே பால்கோப்பிக்குப் பிந்திவிட்டார் போலிருக்க// இல்லை யோகா ஐயா யாரோ ஏன் காதலிக்கவில்லை என்று புலம்பியிருக்கிறாராம் அதுதான் அக்காள் ஓடிவிட்டா பாவம் அவா என்ன செய்வா ?அவருக்குத்தான் அழுவது புடிக்காது உள்குத்துப் போடுவார் .தனிமரம் வலை தெரியாது நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை  (சோம்பூ )யோகா ஐயா!உங்களுக்குப் புரியாதா ?,?

minnal said...
This comment has been removed by the author.
athira said...

நானும் வந்துட்டேன்ன்ன்ன்ன்:)) இடையில் வந்ததால எதுவுமே புரியேல்லை...

பதுளையில் நடந்த உண்மைச் சம்பவத்தைக் கதைபோல எழுதுறீங்கள்போல இருக்கு..

athira said...

கண்டி, நுவரெலியா.. எல்லாம் போனதுண்டு.. பதுளைவீதியால் போயிருக்கிறோம்.. இறங்கிப் பார்த்ததாக நினைவில்லை...

தொடருங்கோ... ஒவ்வொன்றாக முழுவதும் படித்தால்தான் எனக்குப் புரியுமாக்கும்.

தனிமரம் said...

minnal has left a new comment on your post "மலையகத்தில் முகம் தொலைத்தவன்-12":

தனிமர இணைப்பு இதுவரை என்னிடம் இருந்ததில்லை, அதனால தலைப்பு வந்தாலும் தெரியமல் இருந்தது. இப்போ இணைத்தச்சூஊஊஊஊ...

தொடர் எழுதுறீங்கள் போல... நான் நடுவில வந்ததால ஒன்றுமே புரியுதில்லை... சிதம்பர சக்கரம் மாதிரி இருக்கெனக்கு... ஆரம்பம் முதல் படிச்சால்தான் புரியும்... படிக்கிறன்.

தனிமரம் said...

வாங்க அதிரா ஒரு நண்பனின் கதையை தொடராக எழுதுகின்றேன் அவ்வளவுதான். தனிமரத்தைத் தேடிவந்து தோப்பாக்கினதுக்கு மிக்க மகிழ்ச்சி இன்று பால்கோப்பியை நண்பர் ஹாலிவூட் ரசிகன் வாங்கியதால் உங்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றாலும் முதல் முதல் என் வலைக்கு வாரதால் பூனைக்குட்டியம்மாவுக்கு சிறப்பு பால்கோப்பி.

தனிமரம் said...

தொடரைவிட பதுளையைப் பற்றி நல்லா சொல்லனும் என்பதே என் விருப்பம் ஏன் என்றால் குற்றாலம் போல துங்கிந்த நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் பலருக்குத் தெரியாது.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

தனிமரம் said...

வணக்கம் மின்னல்!
வாங்க ஏதோ தனிமரம் பதிவுகளை எழுதுகின்றது தொடர்ந்து என்று சொல்ல முடியாது .சிதம்பர சக்கரம் என்றாலும் சில காட்சிப்படத்தினை தருசியுங்கள் ஒரு இடத்தின் இயற்கையை பார்த்தது போல இருக்கும். நன்றி உங்கள் முதல்வருகைக்கும் கருத்துரைக்கும் உங்களுக்கும் தனிமரம் சிறப்பாக பால்கோப்பி தருகின்றது.

Yoga.S.FR said...

(கள்ள)பூனைக்குட்டி பால் குடிக்கிறது கேள்விப்பட்டிருக்கிறன்!பால்கோப்பி குடிக்கிறது இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்!////"அவ"வுக்கு வேண்டிய ஆக்கள் ஆரோ திரும்ப முடியாத இடத்துக்குப் போய்விட்டார்களாம்.ரெண்டு நாளா சிலவன் இல்ல.அந்த அம்மாவுக்காக நாங்களும் மன்றாடுவோம்.

மகேந்திரன் said...

தொலைந்தவன் என்று நீங்கள் தலைப்பிட்டு
ஆயிரம் ஆயிரம் முகங்களை தோண்டித் துருவி
மீண்டும் தருவித்து வருகிறீர்கள்...

நான் படித்துக்கொண்டே வரும் பொழுது..
எதையோ தொலைத்த எண்ணம் மட்டும்
என் ஆழ்மனதில்.....

காற்றில் எந்தன் கீதம் said...

ஆஹா நேசன் பதுளைக்கு வந்திட்டீங்க போல....
அந்த ஸ்கூல் பேர் எனக்கு தெரியுமே :)
(எப்பிடி தெரியாம போகும்)
அப்பிடியே துன்கிந்த, முதியங்கன கோவில்,பத்தினி அம்மன் கோவில்,காளி கோவில்,நமுனுகுல எல்லாத்தையும் பத்தி எழுதுங்க....
பின்தொடர்ந்து வந்திட்டே இருக்கேன்..

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா!
முகம் தொலைந்தவன் நடந்து வந்த பாதைகளில் தொலைந்தவர்கள் அதிகம் அதனை இங்கு பதிவு செய்கின்றேன் என் நண்பரின் கதை மூலம். சில இடங்களில் திரும்பிப்பார்க்கும் போது நம் உறவுகள் முகம் வரும் அல்லவா அப்படித்தான் உங்களுக்கும் போல.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் காற்றில் என் கீதம் தோழி!
பதுளைக்கு இப்போதுதானே ராகுல் போய் இருக்கின்றான் இனி எல்லாம் சொல்லுவான் கொஞ்சம் பொறுத்திருங்கள்  நேரம் கிடைக்கும் போது பின்னூட்டத்துடன் வாருங்கள்.
(அந்தப்பாடசாலை தெரியாமல் போகுமா?? அவ்வழியால் சென்றவர்களுக்கு ஹீஹீ) தனிமரம் படிக்கவில்லை ஹீ ஹீ
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.