12 March 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் - 16

ஒரு மாட்டுக்கன்றுக்காக தன் மகனை  பலியிட  முன்வந்தவன்  மனுநீதி சோழன் என்பது  வரலாறு;  ஆட்சி செய்ய தம் மக்களையும்  பலியிட்டு எதுவும் செய்வார்கள்  இன்றைய தலைவர்கள். நையீரியாவில்  "இபோ"  இன மக்கள்  , தென்  சூடான், கொசோவோ  ஈழம் எனத்தொடர்கிறது.
 
அரசியல்  வீதியில்  பதுளையும்  ஒரு சில  வேதனைகளை  உள்ளே  அடக்கிக்கொண்டுதான்  இன்றும்  இருக்கின்றது. வெளியுலகில் பலது மறைந்து போகலாம்  மனதில்  வடுக்கள்  மறையாது.  ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த முன்னனி  உறுப்பினர்கள்  பலர்  ஆட்சியில்  இருந்தோரால் காடைத்தனமாக  சுட்டும் வெட்டியும் நெருப்பில்  கொழுத்தப்பட்டும்  வீதியிலும்  ஆற்றிலும்  வீசப்படது இன்னும் பல  இடங்களில்  பதிவு செய்யாமலே  போய்க்கொண்டு  இருக்கு.  இலக்கிய உலகம் ? அரசியல் மற்றும்  சினிமாவில் இது என்றாவது  ஒரு நாள்  நியாமான முறையில் பதிவு செய்வது  காலத்தின்  கட்டாயம்.  சிங்கள  மக்களின்  மன உணர்வுகள்  ஏன் இப்படி போரின்  வடுக்கள் வாழும்  குடும்பங்களின் உண்மையான   முகத்தினை மேட்டுக்குடி ஊடாகமும், அரச ஊது குழலும்  பதிவு செய்ய முடியாது போனது. இது இன்னமும் பலர் கண்ணுக்குள் இருக்கு.
 
 ஐயந்த  மாமாவின்  உடல்  பாகம் நாங்கள் குளிக்கும் ஆற்றில் மிதந்து  வந்தது;  ஒரு காலைப்பொழுதில் அன்று  தென்னக்கோன் மாமா  அழுதுகொண்டு வந்ததும்,  குசுமாவதி  பாட்டியும்  மெனிக்கே  மாமி  கதறியதும் இன்னும்  மறக்க  முடியாது.  பரிசு தருவார்  என நினைத்த  என் கனவில் ஆற்றில்  ஓடும் வாழை மரக் கன்று போல ஆகிவிட்டது. 
                                                          (தெய்யனாவளை ஆறு)
அனோமா   திகைத்து நின்றாள். வீட்டில் எல்லோரும் செத்த வீடு கொண்டாடினார்கள்  சில பாகம் கிடைக்கவில்லை  ஆற்றில்  நீர் வேகம்  அதிகம்   என்பதால்  அடித்துச்  சென்று விட்டது அதனால் வீட்டில் பெட்டி வைக்கவில்லை. அன்றைய நிலையில் அப்படி செய்யும் நிலையில் மக்கள் தயாராகவும் இல்லை ஒருவீட்டில் மரணத்தை சாட்டாகவைத்து  பலர் பிடிக்கப்பட்டார்கள்.  அவர்களும் பின் ஆற்றிலும்  தேயிலைக்காடுகளிலும் முகம் தொலைந்து  போனார்கள். நம்பிப்போய் கடைசியில் வீதியில் நாய் போல கிடந்த பிரேதங்கள் பலருக்கு மறக்கமுடியாது!  தமிழ் மக்கள் வீடுகளைத்தவிர பல   சகோதர மொழி  வீடுகளில்  அப்போது மரண ஓலம்தான் கேட்டது.  ஒரு கட்டத்தில் ஆற்றில் குளிப்பதே  பயமாக இருந்தது.  இன்று யார் முகமோ என்று குளிக்கப்போகமல்  வீட்டில் வரும் தண்ணிப்பைப்பில்   குளித்தோம்!  இந்த ஆற்றில்  குளித்தவர்  கண்களுக்கு 1989  இன்னும் தெரியும் எத்தனை உடல்கள்  காசியைப்போல  மிதந்து  வந்தது  என்று!   இப்படி பதுளை குருநாகலை  அம்பாந்தோட்டை  என்று நீளும்  மரண ஓலம்...
 
பெட்டியில் அடங்கும்
வாய்ப்பே அற்று
மயான மூலையில்
முகமறியா இருளில்
முகமிழந்து புதைந்த உடல்களை
பாதி எரிந்து
மீதி அழிந்து
சிதைந்த உடல்களைச்
சுதந்திரத்திற்காய்
களத்திலிறங்கிச்
சுதந்திரம் இழந்தவர்களை
நாம் நினையாது இருந்தால்
மிகவும் கொடியது
இது எமது எதிரியின் வேலை அல்ல
எம்மவர் கொலைக்கரம்
பதித்த சுவடுகள்
            -சேரன்-

பிற்காலத்தில் இந்த மரண ஓலங்களே    இந்தப்பகுதியில்  மக்கள் விடுதலை முன்னணிக்கு(ஜேவிபி)  கனிசாமான    வாக்கு  வங்கியை பெற்று கொடுத்தது என்று சொன்னாலும் மிகை இல்லை. பதுளையில்  நிகால் கலப்பதிக்கு ஆதரவாக பின்னாளில்   மாணவர்  இயக்கத்தில்  செயல்பட ராகுல் முன்வந்ததும்  இதனாலதான் "அப்பி  வாமாங்க பக்சயோ" (இடதுசாரிகள் என்ற  கொள்கை பற்றி  அப்போ ராகுலுக்கு தெரியது)
 
இந்த அழிவுக்கு எல்லாம் காரணமானவர்கள் பின்னாட்களில் எப்படி பாராளுமன்றத்தில் கதிரையை பிடித்துக்கொண்டு கட்சி என்றும், கொள்கை என்றும், உண்ணாவிரதம் என்றும் ஊரையும் கிராமத்தவனையும் ஏமாற்றியதை இந்த உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் இன்னும் சில மனங்களால்  இவர்களின் நடிப்பு எத்தனை அயோக்கிய தனமானது என்று புரிந்துகொள்ள முடியாது தான் உள்ளது. இருந்தாலும் இந்த பகுதிகளில் இவர்களின் வளர்ச்சி கேள்விக்குறியே!
அன்று தெரியாது  ஐயந்த மாமா ஒரு மக்கள் விடுதலை முன்னனியில் ஒரு உறுப்பினர் என்று.. இந்த மரண வீட்டில்தான்  முதல் முறையாக  ராகுல் பார்த்தது தன்  இரண்டாவது  அத்தை ( மாமி ) மற்றும்  மூன்றாவது  நந்தா (சகோதர மொழியில்  மாமி) அவர்களின் இரு மச்சாள்களில் முன்னம் தெரிந்த அனோமா மற்றவள் துஷாரி..   

60 comments :

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!படிக்கிறேன்.ஐந்து நிமிடங்களில் பால் கோப்பியுடன் தயாராக இருக்கவும்!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

வணக்கம் நேசன் அண்ணா! பொறுங்கோ படிச்சுட்டு வாறன்!

Anonymous said...

JVPக்கு எத்தனை முகங்கள்...

பாதியிலே நிறுத்தியது போன்ற தோற்றம்...

தொடருங்கள் நேசன் ...

Yoga.S.FR said...

பட்டது போதுமென்று கருதியே ஆண்டவன் உலகின் கண்களைத் திறந்து காட்சிகளை ஒப்பிக்கிறானோ????வலிக்கிறது நேசன்.பால் கோப்பி வேண்டாம்.கொஞ்சம்.................

அம்பலத்தார் said...

கொஞ்சம் பொறுங்கோ நேசன் செம ஸ்பீட்டில ஆளாளுக்கு பதிவுபோடுறியள். எனக்கு படிச்சு பின்னூட்டம் போடவே நேரம் போதாமல் இருக்கு

அம்பலத்தார் said...

எமது நாட்டில் சேகுவரா போராட்டம் என்ற விடயத்தைபற்றி சொல்ல நிறைய விசயம் இருக்கு அப்புறமா வாறன்.

அம்பலத்தார் said...

ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி 19971 இல் இரண்டாவது கிளர்ச்சி 1989 ல். அந்த நேரங்களில் அவர்களை அடக்க தமது செயலின் விளைவை அறியாமலே எம்மவரும் துணை போயினர்.

Yoga.S.FR said...

Blogger அம்பலத்தார் said...

ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி 1971 இல் இரண்டாவது கிளர்ச்சி 1989 ல். அந்த நேரங்களில் அவர்களை அடக்க தமது செயலின் விளைவை அறியாமலே எம்மவரும் துணை போயினர்.///இவைகள் எனக்குப் புதிய செய்திகள்!இந்தக் கதை நகரும் காலத்துக்கு முன்பே "காலி"பண்ணியதால்...............

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா பால்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

வணக்கம் மணியண்ணா மெதுவாகப்படுயுங்கோ நான் ஓடமாட்டன் இன்று இங்கு தான் இருப்பேன்(பிரென்சில்) ஹீ ஹீ

தனிமரம் said...

பாதியல்ல ரெவெரி இது தொடரில் ஒரு சம்பவம் தான் அவர்களின் முகம் இன்னும் சொல்லுவேன் பின் வரும் பகுதியில்!
நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.S.FR said...

நிரூபன் வீட்டிலும் விருந்து காத்திருக்கிறது!வெறும் தேநீர் குடித்து விட்டேன்.அம்பலத்தாருக்கு கோப்பி..........

தனிமரம் said...

பட்டது அதிகம் யோகா ஐயா வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று வைரமுத்து சொல்லியிருக்கின்றார்.பால்கோப்பி உடம்புக்கு நல்லம் ஊரில் பாட்டி சொல்லும்.ஹீ ஹீ நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாங்கோ அம்பலத்தார் மெதுவாக படியுங்கோ இன்னும் 2நாட்கள் வேலை அதிகம் பின்னர்தான் அடுத்த தொடர் வரும்.ஹீ ஹீ

தனிமரம் said...

நிச்சயம் அவர்களின் போராட்டம் என்ற மாயைப்பற்றி நீங்கள் சொல்லனும் அம்பலத்தார்.

தனிமரம் said...

அவர்களை அடக்குவதற்கு நம்மவர்கள் மறைமுகமாக செய்த உதவியை வரலாறு இருட்டடைப்பு செய்துவிட்டார்கள் மூத்தவர்கள் இது வெளியே சொல்லப்படனும் அம்பலத்தார்.வரலாறு முக்கியம்!

ஹாலிவுட்ரசிகன் said...

ஜே.வி.பியின் உண்மையான முகம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த பதிவுகளில் தெரியவரும் என நினைக்கிறேன். என் காலப்பகுதிக்கு முன்னரே இச்சம்பவங்கள் நடந்ததால் பெரிதாக ஒன்றும் தெரியாது. தொடரின் மூலம் மெல்ல மெல்ல தெரியவருகிறது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி 1971 இல் இரண்டாவது கிளர்ச்சி 1989 ல். அந்த நேரங்களில் அவர்களை அடக்க தமது செயலின் விளைவை அறியாமலே எம்மவரும் துணை போயினர்.///இவைகள் எனக்குப் புதிய செய்திகள்!இந்தக் கதை நகரும் காலத்துக்கு முன்பே "காலி"பண்ணியதால்.............../: //

உண்மைதான் யோகா ஐயா .பலர் நாட்டைவிட்டுப் போன பின்  அப்பாவி சிங்கள இளைஞர்கள் யுவதிகள் கதறியது பலருக்குத் தெரியாமலே போய் விட்டது .வலிகள் மாறாது இன்று அவர்கள் கட்சி இனவாதம் பேசினாலும் ஆரம்பத்தில் தமிழர் சிலர் சேர்ந்து இருந்தார்கள் அவர்கள் கட்சியில்!

தனிமரம் said...

நிரூபன் வீட்டிலும் விருந்து காத்திருக்கிறது!வெறும் தேநீர் குடித்து விட்டேன்.அம்பலத்தாருக்கு கோப்பி.......... 
// இன்று கொஞ்சம் இங்கே இருந்துவிட்டு வாரன் யோகா ஐயா விதானையார் வீட்டில் பால்கோப்பி கிடைக்காது .ஹீ ஹீ

Yoga.S.FR said...

இன்றும் இருக்கிறார்கள் தான்!இங்கே பிரான்சில் கூட ஒரு கட்சி(F.N) இருக்கிறதே,பிரச்சாரத்துக்குக் கூட பணமின்றி "சிங்கி" அடிக்கிறார்கள்,கேள்விப்பட்டிருப்பீர்கள்!

தனிமரம் said...

ஜே.வி.பியின் உண்மையான முகம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த பதிவுகளில் தெரியவரும் என நினைக்கிறேன். என் காலப்பகுதிக்கு முன்னரே இச்சம்பவங்கள் நடந்ததால் பெரிதாக ஒன்றும் தெரியாது. தொடரின் மூலம் மெல்ல மெல்ல தெரியவருகிறது. முயற்சிக்கு வாழ்த்துக்கள். 
// வாங்க ஹாலிவூட் ரசிகன். இந்த விடயங்கள் இன்னும் பல விசயங்கள் உள்ளே புதைந்து கிடக்கு பதுளையில் சிலவிடயங்களை ராகுல் இன்னும் சொல்லுவான் எதிர்காலத்தில்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

Yoga.S.FR said...

மற்றையோருக்கு இடம் விட்டு,கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்!

தனிமரம் said...

அவர்களுக்கும் சிலர் வாழ்வு கொடுக்கலாம் நாட்டை முன்னேற்றுவார்கள் .ஹீ ஹீ.
வாருங்கள் யோகா ஐயா இன்னும் கதைக்கலாம் அரசியல் விடயங்கள்!நன்றி.

KANA VARO said...

அம்பலத்தார் said...
கொஞ்சம் பொறுங்கோ நேசன் செம ஸ்பீட்டில ஆளாளுக்கு பதிவுபோடுறியள். எனக்கு படிச்சு பின்னூட்டம் போடவே நேரம் போதாமல் இருக்கு//

வயதானவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறலாம்.

KANA VARO said...

தொடருடன் தொடர்கிறேன்..

தனிமரம் said...

அம்பலத்தார் said...
கொஞ்சம் பொறுங்கோ நேசன் செம ஸ்பீட்டில ஆளாளுக்கு பதிவுபோடுறியள். எனக்கு படிச்சு பின்னூட்டம் போடவே நேரம் போதாமல் இருக்கு//

வயதானவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறலாம்.
//வரோ அண்ணா வயதானாலும் அவர் அடித்தாட வெளிக்கிட்டால் நாங்க பொடிப்பசங்க நிமிரமாட்டம்.ஹீ ஹீ

தனிமரம் said...

நன்றி வரோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் .

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

நேசன் அண்ணா! ஒரே சோகமயமாக் கிடக்கு! அப்ப அந்தக் காலத்தில எப்புடி இருந்திருக்கும்??

தனிமரம் said...

தனிமரம் ஏன் சில இடங்களில் சகோதர மொழியின் உணர்வுகளை படம் பிடிக்குது என்று இந்தத் தொடர் முழுதும் படித்தால் புரியும். அந்த மக்களின் வேதனை பயப்பிராந்தி,ஒப்பாரி எல்லாம் வெளியில் தெரியாது செய்து விட்டார்கள் அவர்கள் மட்டுமா நம்மவர்களும் தான் ! 
சில நேரம் உங்களுக்கு அழவாச்சி காவியம் பிடிக்காது ஏன்னா நீங்க ஊடகவியலாளர் நான் ஒரு படிக்காத தனிமரம்.நன்றி வருகைக்கும்  கருத்துரைக்கும்.

Yoga.S.FR said...

தனிமரம் said...

தனிமரம் ஏன் சில இடங்களில் சகோதர மொழியின் உணர்வுகளை படம் பிடிக்குது என்று இந்தத் தொடர் முழுதும் படித்தால் புரியும். அந்த மக்களின் வேதனை பயப்பிராந்தி,ஒப்பாரி எல்லாம் வெளியில் தெரியாது செய்து விட்டார்கள் அவர்கள் மட்டுமா நம்மவர்களும் தான் !///இந்த நேரத்தில் "அது" வேண்டாமே????எல்லாப் பக்கமும் அடித்தாட வேண்டி வரும் என்பதாலேயே,கொஞ்சம் "விலகி" இருக்கிறேன்,நேசன்!

Yoga.S.FR said...

ஒருவர் அல்லது பலர் சேர்ந்து செய்த பிழைகளை,நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அல்லது ஆறப் போடுவதற்காக,அல்லது மறைப்பதற்காக ஒருவரிடம் ஆலோசனை கேட்டால்,அல்லது அப்படி நடிப்போம் என்று ஆரம்பித்து கடைசியில் எங்கே போய் முடியப் போகிறது என்று நிகழ் காலத்தில் பார்க்கக் கிடைத்திருக்கிறது!நீங்கள் கேட்டதை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருகிறோம் வாருங்கள் என்ற ரீதியில் காரியங்கள் நடைபெறுவதைப் பார்க்கும்போது,அழுவதா சிரிப்பதா என்றே தெரிய மாட்டேன் என்கிறது!

தனிமரம் said...

தனிமரம் said...

தனிமரம் ஏன் சில இடங்களில் சகோதர மொழியின் உணர்வுகளை படம் பிடிக்குது என்று இந்தத் தொடர் முழுதும் படித்தால் புரியும். அந்த மக்களின் வேதனை பயப்பிராந்தி,ஒப்பாரி எல்லாம் வெளியில் தெரியாது செய்து விட்டார்கள் அவர்கள் மட்டுமா நம்மவர்களும் தான் !///இந்த நேரத்தில் "அது" வேண்டாமே????எல்லாப் பக்கமும் அடித்தாட வேண்டி வரும் என்பதாலேயே,கொஞ்சம் "விலகி" இருக்கிறேன்,நேசன்! 
//உண்மைதான் யோகா ஐயா ஆனால் அந்த இடத்தில் வாசிக்கும் புதியவர்களுக்கு எங்க நாட்டுப் பதிவாளர்கள் விசம் கக்குவதை ஒரு வாசகனாக பொறுக்க முடியாமல் தான் தனிமரம் வலையில் இருப்பதே  இதையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து நம்மவர்கள் சிங்களவனைக் கொல்லனும் ,வெட்டனும் ,மோடயன் ,என்று பொதுவாக நாறடித்துஅயல்தேசத்தவருக்கும் மற்றும் புதிய தலைமுறையினர் ஐரோப்பிய உறவுக்களுக்கும்  நம்தேசத்தினை சேர்ந்த சகோதர மொழி உறவுகள் மீது வெறுப்பினை உமிழ்வதை எப்படி பொறுக்க முடியும் இனவாதம்,மொழிவாதம்,மதவாதம் தாண்டி ஒரு நல்ல ஒற்றுமையுள்ள பிரென்சு தேசத்தைப் போல நம் இலங்கையில் உருவாக்க முடியாதா என்ற உணர்வில் தான் சண்டை போடுகின்றேன் அதனால் என்னிடம் வராமல் போனவர்கள் பட்டியல் அதிகம் ஐயா அதற்காக நான் யாரையும் புறக்கனிக்கவும் இல்லை மைனஸ் ஓட்டும் குத்தவில்லை கவலைப்பட்டதும் இல்லை எனக்கு எதிராக இருக்கும் குழுவில் கூட நான் வெளியே தான் இருக்கின்றேன். அதை வெளியில் காட்டாமல் இருக்கின்றேன் ஆனால் என் மனஉணர்வை நீங்கள் ,அம்பலத்தார் புரிந்து கொள்வதில் எனக்கு சந்தோஸமே இந்த ஓட்டு,ஹிட்ச் என்னைப் பாதித்தது இல்லை ஐயா. இந்தத் தொடரைவிரைவில் நிறுத்தனும் என்றாலும் என் நண்பனுக்கு கொடுத்த வாக்குறுதி முக்கியம் அதனால் தான் இந்த தொடர் முடித்துவிட்டு வெளியேறிவிடும் எண்ணத்தில் இருக்கின்றேன்.நீங்க சொல்வது போல நானும் பின்னூட்டவாதியாக இருப்பதே மேல்! நன்றி ஐயா

தனிமரம் said...

ஒருவர் அல்லது பலர் சேர்ந்து செய்த பிழைகளை,நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அல்லது ஆறப் போடுவதற்காக,அல்லது மறைப்பதற்காக ஒருவரிடம் ஆலோசனை கேட்டால்,அல்லது அப்படி நடிப்போம் என்று ஆரம்பித்து கடைசியில் எங்கே போய் முடியப் போகிறது என்று நிகழ் காலத்தில் பார்க்கக் கிடைத்திருக்கிறது!நீங்கள் கேட்டதை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருகிறோம் வாருங்கள் என்ற ரீதியில் காரியங்கள் நடைபெறுவதைப் பார்க்கும்போது,அழுவதா சிரிப்பதா என்றே தெரிய மாட்டேன் என்கிறது! 
//இந்த அரசியலை உணர்ச்சி வேகத்தில் இருந்து என்று நாம் உணர்வு ரீதியாகப் பார்க்கப் போறம் ஐயா??? இழந்தது எத்தனை சொத்து யாரோ சிலருக்காக ஏன் இன்னும்  பல தலைமுறைகள் மரணம் தாங்கனும் என்பதே என் கேள்வி .அடியவன் சின்னவன் ஆனால் ஒற்றுமையை நாடுபவன். ஏதாவது தங்களைச் சங்கடப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் ஐயா!

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
//நிரூபன் வீட்டிலும் விருந்து காத்திருக்கிறது!வெறும் தேநீர் குடித்து விட்டேன்.அம்பலத்தாருக்கு கோப்பி..........//
கோப்பி பிரியரான நீங்க நேசனின் பால்கோப்பியை எனக்கு தந்ததற்கு நன்றி யோகா

தனிமரம் said...

Yoga.S.FR said...
//நிரூபன் வீட்டிலும் விருந்து காத்திருக்கிறது!வெறும் தேநீர் குடித்து விட்டேன்.அம்பலத்தாருக்கு கோப்பி..........//
கோப்பி பிரியரான நீங்க நேசனின் பால்கோப்பியை எனக்கு தந்ததற்கு நன்றி யோகா
// அவர் கொடை வள்ளல் அம்பலத்தார்.ஹீ ஹீ

அம்பலத்தார் said...

Blogger தனிமரம் said...
//அப்பாவி சிங்கள இளைஞர்கள் யுவதிகள் கதறியது பலருக்குத் தெரியாமலே போய் விட்டது//
ஆம். எமது போராளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிங்கள இராணுவம் என்ன கொடுமைகளை செய்ததோ அவற்றையெல்லாம் 89 ஆம் ஆண்டுகளில் JVP ஐ அடக்கவும் செய்தது. JVP அங்கத்தினர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் வரைமுறையின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். சுற்றிவளைத்து அவர்களை பிடிக்க முற்படும்போதுகாயப்பட்ட JVP போராளிகள் குற்றுயிராக இருக்கும்போதே இழுத்துவந்து நடுரோட்டில் கழுத்தில் ரயர்மாட்டி உயிருடன் கொழுத்தப்பட்டனர். போராளிகளை மிரட்டி பணியவைக்க அவர்களது பெற்றோர் சகோதரங்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர் கொலை செய்யப்பட்டனர்.

ஹேமா said...

இண்டைக்கும் கோப்பியைக் காக்கா கொண்டு போச்சா.அப்பா....!

தனிமரம் said...

ஆம். எமது போராளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிங்கள இராணுவம் என்ன கொடுமைகளை செய்ததோ அவற்றையெல்லாம் 89 ஆம் ஆண்டுகளில் JVP ஐ அடக்கவும் செய்தது. JVP அங்கத்தினர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் வரைமுறையின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். சுற்றிவளைத்து அவர்களை பிடிக்க முற்படும்போதுகாயப்பட்ட JVP போராளிகள் குற்றுயிராக இருக்கும்போதே இழுத்துவந்து நடுரோட்டில் கழுத்தில் ரயர்மாட்டி உயிருடன் கொழுத்தப்பட்டனர். போராளிகளை மிரட்டி பணியவைக்க அவர்களது பெற்றோர் சகோதரங்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர் கொலை செய்யப்பட்டனர். //
ஆம் இதை ஏன் ஊடகவியலார்,இலக்கிய உலகு பதிவு செய்யாமல் போனது அம்பலத்தார் ஐயா அந்தப்பிள்ளைகளும் அப்பாவிகள் தானே எதிர்கால சந்ததி தானே அழுகை பங்கஜம் பாட்டிக்கும்,குசுமாவதி பாட்டிக்கும் ஒரே வகைதானே ?? பதில் இல்லை ஐயா செத்தது ஒரு மகன் மட்டுமா?? கொடுமையிலும் கொடுமை!

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//வலிகள் மாறாது இன்று அவர்கள் கட்சி இனவாதம் பேசினாலும் ஆரம்பத்தில் தமிழர் சிலர் சேர்ந்து இருந்தார்கள் அவர்கள் கட்சியில்!// JVP இல் மிகவும் குறைந்த எண்ணிக்கையான தமிழ் இளைஞர் இணைந்திருந்தனர். அவர்களும் அநேகமாக தென் மலையக பகுதிகளான இரத்தினபுரிமுதல் பதுளைவரையான பகுதியினராகவே இருந்தனர். JVP ஆரம்பதிலிருந்தே தென் இலங்கையில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்த மிகவும் பின்தங்கிய கிராமங்களிலே செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்றிருந்தது. JVP தென் இலங்கையிலிருந்து அதற்கு அண்மையிலுள்ள பிரதேசங்களான மலையகத்தின் தென் பகுதிகளுக்கு தமது செயற்பாடுகளை விஸ்தரிக்கும்போது அந்தப்பிரதேசங்களை சேர்ந்த இரத்தினபுரிக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதிகளை சேர்ந்த சில தமிழ் இளைஞர் JVP இல் இணைந்துகொண்டனர்.

தனிமரம் said...

பால்கோபி இன்னொரு நாள் கிடைக்கும் ஹேமா கவலை வேண்டாம் பதிவை படியுங்கோ அக்காள்!

ஹேமா said...

எத்தனை கொடுமைகளை வரிசையாக அனுபவிக்கிறோம்.சந்தோஷம் நிம்மதி என்பது என்னவிலை என்பதுமாதிரி இருக்கு !

தனிமரம் said...

உண்மைதான் அம்பலத்தார் பதுளை ,பசரை,நமுனுக்கொல்ல,பண்டார
வெல,வெலிமட,நுவரெலியா என்று நம்மவர்கள் களப்பணி ஆற்றியது அதிகம் அன்நாட்களில் அதற்கு அவர்களின் பிரச்சாரம்,வீதி நாடகம் ,ஓற்றுமை என பலவிடயம் பின்னால் இருந்தது முக்கியமாக மாணவர் அணி!

அம்பலத்தார் said...

1971 ம் ஆண்டு முதலாவது JVP கிளர்ச்சிக்காலத்திலை கனசிங்களப் பெடியள் தங்கள் பாதுகாப்புக்கு தமிழராக தங்களை காட்டிக்கொள்ள நெத்தி நிறைய விபூதி சந்தனம் அப்பிக்கொண்டு திரிஞ்சவை

தனிமரம் said...

உண்மைதான் அம்பலத்தார் பண்டார பாலா  சிவ்வா சிவா ,நெல்சன்குரே  நேசன் துரை  என்று முகம் மாறியது ஆகியதை 1989 இல் பார்த்தவன் விதி வலியது என்ன செய்முடியும்???

தனிமரம் said...

உண்மைதான் அம்பலத்தார் பண்டார பாலா  சிவ்வா சிவா ,நெல்சன்குரே  நேசன் துரை  என்று முகம் மாறியது ஆகியதை 1989 இல் பார்த்தவன் விதி வலியது என்ன செய்முடியும்???

அம்பலத்தார் said...

ஹேமா said...
//எத்தனை கொடுமைகளை வரிசையாக அனுபவிக்கிறோம்.சந்தோஷம் நிம்மதி என்பது என்னவிலை என்பதுமாதிரி இருக்கு !//
ஹேமா அண்மையில் அமெரிக்காவில் ஆரம்பித்த We are 99. போராட்டத்தின் மூலகாரணமான 99% மக்களையும் ஆளுவது 1% மட்டுமே இருக்கும் பெரும் பணக்கார முதலாளிகளும் அரசியல்வாதிகளும்தான். இந்த 1% இனரிற்கு இன, மொழி, சாதி, சமய வேறுபாடெல்லாம் கிடையாது. அனைவரையும் அடக்கி ஆண்டு சுரண்டுவதே ஒரே நோக்கம்

தனிமரம் said...

என்ன ஹேமா இப்படி சுலமாகச் சொல்லிப்போட்டுப் போய்விட்டீர்கள் நீங்கள் அல்லவா தீர்ப்புச் சொல்லனும்.

தனிமரம் said...

ஹேமா said...
//எத்தனை கொடுமைகளை வரிசையாக அனுபவிக்கிறோம்.சந்தோஷம் நிம்மதி என்பது என்னவிலை என்பதுமாதிரி இருக்கு !//
ஹேமா அண்மையில் அமெரிக்காவில் ஆரம்பித்த We are 99. போராட்டத்தின் மூலகாரணமான 99% மக்களையும் ஆளுவது 1% மட்டுமே இருக்கும் பெரும் பணக்கார முதலாளிகளும் அரசியல்வாதிகளும்தான். இந்த 1% இனரிற்கு இன, மொழி, சாதி, சமய வேறுபாடெல்லாம் கிடையாது. அனைவரையும் அடக்கி ஆண்டு சுரண்டுவதே ஒரே நோக்கம் //உண்மைதான் அம்பலத்தார் அடக்கியாளனும் சாவது அப்பாவிகள் கதறுவது உடன் பிறப்புக்கள் இது சில பதிவாளர்களுகுப் புரிவதில்லை .ம்ம்ம் மெளனம் தனிமரம் படித்ததில்லை!

Esther sabi said...

ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் சொந்தகாரங்க ஆக்கிட்டிங்க போல.
தன் நோய்க்கு சிறுபான்மை மங்கையரின் மார்பெடுத்த அரசல்லவா இது அழிந்துதான் போகும்.

தனிமரம் said...

வாங்க எஸ்தர் -சபி.
ஒட்டுமொத்தவர்களும் அல்ல ஒரு சிலர் நல்லவர்கள் இருந்தார்கள் இப்ப இல்லை விடுபட்டுப் போனவர்களை முகம் காட்டுவதுதான் என் நோக்கம்.சிறுபான்மை மட்டும்மல்ல பெரும்பான்மை மங்கையர்களின் மார்பும் எடுத்தது அட்சி மன்னம்பெரி வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் பதிவு செய்யப்படாமல் போனது இன்னும் பல சகோதரி. இது நிஜம்  .அழிந்து தான் போகும்  சாபங்கள் பொய்ப்பதில்லை.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

1971 ஜே.வி.பி. கிளர்ச்சிக்காலத்தில் கதிர்காமத்தை அண்டிய பகுதிகளிலும் அவர்களது நடவடிக்கைகள் அதிகமாக இருந்தது. கதிர்காமம் JVP இன் தாக்கும் நடவடிக்கை மையமாக இருந்தது. ஏப்ரல் 16 ம் தேதி இலங்கை இராணுவம் இப்பிரதேசத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அப்பொழுது 22 வயதான பிரேமாவதி மானம்பெருமா எனும் JVP பெண் உறுப்பினர் உட்பட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரேமாவதி அவரது நடவடிக்கைகள் பற்றி எதுவும் வாக்குமூலம் கூறமறுத்ததால் இரவு மூலம் சித்திரவதை செய்யப்பட்டார். லெப்டினன்ட் வியஜசூரிய பிரேமாவதியினது அட்டைகளை உரிவி நிர்வாணமாக்கி தாக்கினார். நிர்வாணமாக அந்த ஊரிலுள்ள தெருக்களினூடாக ஊர்வலமாக இழுத்துவந்து இறுதியாக ஒரு தபால் அலுவலகம் அருகே நிறுத்தி, இராணுவஅதிகாரிகள் அவளை துப்பாக்கியால் சுட்டு, குறைஉயிருடன் புதைத்தனர்.
லெப்டினன் விஜயசூரிய மற்றும் ஒரு ராணுவவீரர் அமரதாச ஆகியோர் இக்கொலைக்கு காரணமவர்கள் என இனங்காணப்பட்டனர். ஜே.வி.பி. இனர் பின்னர் 1988- 1989 காலத்தில் லெப்டினன்ட் விஜயசூரியவை மாத்தறையில் வைத்து சுட்டுக்கொலை செய்தனர்

தனிமரம் said...

1971 ஜே.வி.பி. கிளர்ச்சிக்காலத்தில் கதிர்காமத்தை அண்டிய பகுதிகளிலும் அவர்களது நடவடிக்கைகள் அதிகமாக இருந்தது. கதிர்காமம் JVP இன் தாக்கும் நடவடிக்கை மையமாக இருந்தது. ஏப்ரல் 16 ம் தேதி இலங்கை இராணுவம் இப்பிரதேசத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அப்பொழுது 22 வயதான பிரேமாவதி மானம்பெருமா எனும் JVP பெண் உறுப்பினர் உட்பட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரேமாவதி அவரது நடவடிக்கைகள் பற்றி எதுவும் வாக்குமூலம் கூறமறுத்ததால் இரவு மூலம் சித்திரவதை செய்யப்பட்டார். லெப்டினன்ட் வியஜசூரிய பிரேமாவதியினது அட்டைகளை உரிவி நிர்வாணமாக்கி தாக்கினார். நிர்வாணமாக அந்த ஊரிலுள்ள தெருக்களினூடாக ஊர்வலமாக இழுத்துவந்து இறுதியாக ஒரு தபால் அலுவலகம் அருகே நிறுத்தி, இராணுவஅதிகாரிகள் அவளை துப்பாக்கியால் சுட்டு, குறைஉயிருடன் புதைத்தனர்.
லெப்டினன் விஜயசூரிய மற்றும் ஒரு ராணுவவீரர் அமரதாச ஆகியோர் இக்கொலைக்கு காரணமவர்கள் என இனங்காணப்பட்டனர். ஜே.வி.பி. இனர் பின்னர் 1988- 1989 காலத்தில் லெப்டினன்ட் விஜயசூரியவை மாத்தறையில் வைத்து சுட்டுக்கொலை செய்தனர் //
உண்மைதான் அம்பலத்தார்  ஆனால் இவருக்குப் பின்னால் இருந்த பலர் தப்பிவிட்டார்கள் அன்று இதைச் செய்த jvp பின்னால் எப்படி எல்லாம் வங்குரோத்து அரசியகுக்கு  வந்தது என்பதையும் எதிர்காலச் சந்ததிக்கு சொல்லவேண்டியது காலத்தின் கட்டாயம்.நீங்க தந்த தகவல்கள் ஊர்ஜிதமானவை அதைeprlf  புஸ்பராஜா எழுதிய ஈழத்துப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் பதிவு செய்திரிந்தார் துரதிஸ்டவசம் இந்த நூல் பலவாசகர்களிடையே போகவில்லை . 

தனிமரம் said...

தம் இனமக்கள் மீதே இப்படி வன்முறைகட்டவிழ்த்துவிட்ட ஆட்சியாளர்கள் தமிழர் மீது எவ்வளவு அடக்குமுறையைக் கையாண்டு இருப்பார்கள் மன்னம்பெரிக்கே இந்தளவு செய்தவர்கள் இசைப்பிரியாவுக்கு எவ்வளவு வக்கிரம் புரிந்திருப்பார்கள் எல்லாம் ஆட்சிபோதை தரும் சுகம்.ம்ம்ம்

அம்பலத்தார் said...

தனிமரம் said...///
நீங்க தந்த தகவல்கள் ஊர்ஜிதமானவை அதைeprlf புஸ்பராஜா எழுதிய ஈழத்துப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் பதிவு செய்திரிந்தார் துரதிஸ்டவசம் இந்த நூல் பலவாசகர்களிடையே போகவில்லை.//
புஸ்பராஜாகூட புலம்பெயர்ந்து பிரன்சில் வாழ்ந்து புற்றுநோயின் பாதிப்பினால் சில வருடங்களின்முன் இறந்துவிட்டார்.

தனிமரம் said...

புஸ்பராஜாகூட புலம்பெயர்ந்து பிரன்சில் வாழ்ந்து புற்றுநோயின் பாதிப்பினால் சில வருடங்களின்முன் இறந்துவிட்டார். 
//பாவம் இறுதிக்காலத்தில் சில கண்டணங்களையும் தன் தவறுகளையும் பதிவு செய்திருக்கின்றார் என நான் நினைக்கின்றேன் அம்பலத்தார் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை தனிமரத்திற்கு!.

ஹேமா said...

இவ்வளவு தூர அரசியல் எனக்குத் தெரியவில்லை.மேலோட்டமாகப் பெயர்கள் மட்டும்தான் அறிந்திருக்கிறேன்.சிங்களவழி வந்தவர்களால் என்றுமே எமக்கு அழிவுதான் என்றும் தெரியும்.அலசலுக்கு நன்றி !

சென்னை பித்தன் said...

பல விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

தனிமரம் said...

நன்றி ஹேமா மீள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சென்னைப்பித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.