16 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-18

பதுளையில் இருந்து வானில் பயணம் போவது என்றால் தனி ஒரு சுகம்தான். நம் ஊருக்கு!

 அதிகாலையில் வெளிக்கிட்டால் நல்ளிரவு ஆகிவிடும் வந்து சேர எங்கள் ஊருக்கு .வழமையாக உடரட்டையில் போய் பொல்காவெலயில் ரயில் மாறி யாழ்தேவியில் போகும் பயணம் இந்தமுறை எல்லோரும் போவதால் தங்கமணி மாமா தன் நண்பரின் வானில் எல்லோரும் போவம் என்றதும் மூத்தவர் தங்கமணியின்  சொல் கேட்டு  அவர் குடும்பத்துடன் ,செல்வா மாமா குடும்பமும் ,சேர்ந்து கொள்ள ஈசன் மாமியும் பல்லவியுடன் சேர்ந்து கொள்ள .

அண்ணணுடன் ஊருக்குள் பேசுவது இல்லை என்றாலும் வெளியிடத்தில் பேசும் செல்வம் மாமாவும் குடும்பத்துடன் வர  வானில்  புறப்பட்டோம்.

வானில் மச்சாள் மார் போட்ட சத்தம் என்பதைவிட அவர்கள் எல்லோருக்கும் வானில் நீண்ட தூரப்பயணம் இது முதல் முறை என்பதால் ஒரே சக்தியும் அழுகையும் தான் .

அதைப் பார்த்தால் எனக்கும் வந்துவிடும் போல இருந்தது சக்தி.

 ஆனாலும் தேசிக்காய் புண்ணியத்தில் தப்பித்துக் கொண்டேன்.

அனோமாவுக்கு
  இருப்புக் கொள்ளவில்லை என்னருகில் வந்து இருந்து கொண்டாள் .

ராகுல் உனக்கு மட்டும் எப்படி சக்தி வரவில்லை .நான் தான் அடிக்கடி ஊருக்குப்   போய் வந்திருக்கிறனே.

 பங்கஜம் பாட்டியின் பேரன் இல்ல என்று என் கையில் இருக்கும் தேசிக்காயைக் காட்டினேன் அவளுக்கு.

 அப்போது புரிந்திருக்காது அதன் மருத்துவக்குணம்.அவளுக்கு .

மலைகள் சூழ இருந்தவர்கள் சமதரையான வடக்குக்குப் பகுதிக்கு போவது புது அனுபவம்.

 தங்கமணி மாமாவுக்கு கலியாணம் முடித்து 4 பெண் பிள்ளைகள் பிறந்த பின் 12  வருடங்கள் கழித்து தன் தாயைப்பார்க்கவும் உறவுகளைப் பார்க்கவும் போகின்றார் .

அதற்கு இடையில் பேரம்பலத்தார் சண்முகம் மாமா,செல்லத்துரை போய்விட்டார்கள் .பின் கணேஸன் மாமா போனது என பல துக்கம் நடந்த போதும் வராதவர்.

 அம்மா பங்கஜத்திற்கு சுகமில்லை என்றதும் எப்படியும் அம்மா கண்ணை மூடுவதற்கு முன் என் பிள்ளைகளைக் காட்டிவிடனும் என்ற ஆர்வம் ஒரு புறம்.

 இத்தன நாள் இருந்த வைராக்கியம் எல்லாம் மூத்தவள் இன்றோ நாளையோ சாமத்தியப்படப்போறாள்.

 அவளுக்கு முறைதலையாக எல்லாம் செய்ய அம்மா அருகில் இருக்கணும் என்ற உள்ளூணர்வு அவருக்கு இப்போது அடிக்கடி வருவதால் தான் போகாத ஊருக்கு தன் மனைவி மகள்கள் சகிதம் போவதே

!விமலா மாமிக்கு அங்கே எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பதட்டம் .

அவவுக்கு மட்டுமா !லீலாவதி மாமிக்கும் தான் .

தான் கதைக்கும் தமிழ்  அவர்களுக்கு எப்படியிருக்கும் .

என்னை ஏற்றுக் கொள்வார்களா ?

இத்தனை துயரம் நடந்த போதும் நானும் மாமிக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாத மருமகள் தானே!

 இவர் கூட கல்கமுவ போனபின் எங்கும் போகாமல் கடையுடனே வாழ்க்கை போகின்றது .

பெட்டிக்கடை போட்டால் கோழி முட்டையிடும் வரைக்கும் காத்திருக்கணும் போலத்தான் .
எல்லாப் பயணம் போக ஆசைப்பட்டாலும் நம்பி விட்டுட்டுப் போக இனசனம் இல்லை .

இது எல்லாம் புரிந்து கொள்வாவா மாமி .

இவரும் என்னோடு வந்த 13 வருடத்திற்ப் பிறகு இன்றுதானே தன் ஊருக்குப் போறார் என்ற ஜோசனை மாமிக்கு.

  செல்வம் மாமாவுக்கு பங்கஜம் பாட்டி எப்படி எல்லாம் திட்டும் என்று தெரியும் .

ஆனாலும் தங்கை,மச்சான்,சின்னாத்த ,சித்தப்பா எல்லாரும் இருக்கினம் என்ற தைரியம் அவர் மனதில் .

அனோமா பிறந்திருந்த போது கலவரம் வந்ததால் என்னால் ஐயாட முகத்தைக் கூட கடைசியாக பார்க்கவில்லை நான் தான் இப்படி! இருந்தன் என்றால் அவர்கள் சரி தேடிவந்திருக்கலாம் எல்லாம் அவன் செயல் போய்ப்பார்ப்போம்.

தன் தவற்றினை உணர்ந்துவிட்ட செல்லன் மாமி (சரோஜா[ இந்த முறை பங்கஜம் பாட்டிவீட்டில் தங்கனும் சுகியை அவர்களுடன் விளையாடவிடனும் என்று எண்ணிக்கொண்டு வந்தா!

மூன்று  தாய் வழி மாமாக்கள் மாமிகள் ஒருபுறம் தந்தைவழி மாமி ஒருபுறம் என 4 நான்கு மாமிக்கள் தன் குறும்புத்தனத்தை ரசிக்கின்றார்கள் என்ற நிலையில் ராகுல் .

தங்கமணி மாமாவின் மகள்கள் ஒருத்தியைத் தவிர மற்றவர்கள் சேரவில்லை இவனுடன் .

அனோமா பழகும் அளவுக்கு அவள் தங்கை துசாரியும் சேரவில்லை ராகுலுடன் .

இத்தனை எண்ணங்களைச் சுமந்து கொண்டு வான் போகும் பாதை யாழ்ப்பான வீதி எங்கும் இந்தியன் ஆமியின் அக்கிரமங்களும் அநியாயங்களும் ஊரில் இருந்த மதில் சுவர்கள் காட்டிக் கொண்டு இருந்தது .

மக்களின் முகத்தில் ஒரு ஓளி தெரிந்து கொண்டிருந்தது ஊர் எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது!


       வருவான் தொடர்ந்து ...........
////////////////////////////////////////////////////////
சாமத்தியம்-பெண்ணின்  பருவமாற்றம். .யாழ் வட்டார வழக்கு

உடரட்ட-மலையகம் போகும் புகையிரத சேவை
யாழ்தேவி-வடபகுதிக்கான ரயில் சேவை
பொல்காவெல- இரு சேவையும் சந்திக்கும் தரிப்பு நிலையம்

44 comments :

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

KANA VARO said...

உங்கள் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போதும் மலையகத்துக்கு நான் செல்லவில்லையே என்ற ஏக்கம் தான் மனதில் ஓடுகின்றது. நிச்சயம் வெகு விரைவில் அந்த ஆசை நிறைவேறும் என நினைக்கிறேன்.

KANA VARO said...

ஐ ஃபோனில் இவ்வளவு தூரம் எழுதும் உங்களைப் பாராட்ட வேண்டும். ஆனால் புதிதாக வரும் வாசகன் உங்களுக்கு எழுத்துக்கள் தெரியாது என நினைத்துவிட வாய்ப்புண்டு. கொஞ்சம் கணனியுடனும் நேரத்தை செலவிடுங்களேன்..

Yoga.S.FR said...

இரவு வணக்கம் நேசன்!அருமை,யாழ்.பயணம்!சத்தி-வாந்தி என்றும் குறிப்பிட்டிருக்கலாம்.

தனிமரம் said...

வாங்க வரோ அண்ணா இன்று பால்கோப்பி உங்களுக்குத் தான்!

தனிமரம் said...

நிச்சயம் மலையகத்தை ஒவ்வொரு வடகிழக்கு மாந்தர்களும் போய்ப் பார்க்கனும் என்பது தான் என் பிரார்த்தனை விரைவில் நீங்களும் குடும்பத்துடன் ஒரு சுற்றுலா போய் வாருங்கள் எங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று சிறுகுறிப்பு வேனும் என்றால் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன்!யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

தனிமரம் said...

எனக்கும் ஆசையுண்டு கணனியில் இருக்க ஆனால் புலம்பெயர் தேசத்தில் 18 மணித்தியாலம் உழைக்கனும் என்ற நியதியில் இருக்கும் சராசரி குடும்பத்தலைவன் நிலமை எல்லாருக்கும் புரியாது ஏன் எனில் உங்களைப் போல என்னைப்போல புலம் பெயர்ந்து அனுபவப் பட்டால் தான் புரியும்! புதியவர்களுக்காக என்னை விரைவில் மாற்ற முயல்கின்றேன் வரோ அண்ணா ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
வாந்தி என்பது எங்க ஊரில் சொல்வது இல்லை அதனால் தான் சக்தியை புகுத்தினேன் வாந்தி என்பது கொஞ்சம் எங்க ஊரில் ஆபாசம் ஓம்  யோகா ஐயா தாத்தா ஆகிட்டார் என்று சொல்லுவாங்க பெரியவர்கள் !ஹீ ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

வாங்க வரோ அண்ணா இன்று பால்கோப்பி உங்களுக்குத் தான்!////நான் நினைக்கிறான் அவறுக்கு பால்கோப்பிய விட கோக் தான் பிடிக்குமெண்டு!

Yoga.S.FR said...

எனக்கும் மலையகத்தில் களுத்துறை,லப்பந்துறை தெரியும்!சில நாட்கள் கழித்திருக்கிறேன்.தலை நகரிலிருந்து பேரூந்தில் செல்ல வேண்டும்.இறப்பர் தோட்டங்கள் தான்!மிதிவண்டி ஓட்டுவது சுகமான அனுபவம்.

தனிமரம் said...

வாங்க வரோ அண்ணா இன்று பால்கோப்பி உங்களுக்குத் தான்!////நான் நினைக்கிறான் அவறுக்கு பால்கோப்பிய விட கோக் தான் பிடிக்குமெண்டு! 
//கோக் வாங்கும் அளவுக்கு தனிமரம் வசதியான ஆள்கிடையாது அதையும் தாண்டி நான் கோக் குடித்தது இல்லை இன்று வரை ஏன்னா நான் சிரிமாவின் சுதேசிக்கொள்கைக்காரன் !ஹீ ஹீ அரசியல் வேற ஆனால் மனதில் ஊரிப்போன விவசாயி மகன் இன்று பிரெஞ்சுக்காரன் டானோ பின்னே போகின்றான் அது அவனின் நாட்டுப் பற்று அரசியல் வேற தானே ஐயா??!

தனிமரம் said...

எனக்கும் மலையகத்தில் களுத்துறை,லப்பந்துறை தெரியும்!சில நாட்கள் கழித்திருக்கிறேன்.தலை நகரிலிருந்து பேரூந்தில் செல்ல வேண்டும்.இறப்பர் தோட்டங்கள் தான்!மிதிவண்டி ஓட்டுவது சுகமான அனுபவம். 
//யோகா ஐயா களுத்துறையின்  தன்மை வேறு மத்தியமலைநாடு, ,ஊவா,சப்பிரமுக மாகாணத்தின் தன்மை வேறு மக்களின் மனநிலை வேறு அதனால் தான் கோழிச்சின்னம் இன்னும் வாழ்கின்றது! (cwc)

தனிமரம் said...

பதுலையிலும் இரப்பர் தோட்டம் இருக்கு அதையும் தாண்டி இன்னும் சில பகுதியில் ஊவாவில் ரப்பர் இருக்கு அதையும் ராகுல் சொல்வான் நேசனுக்குத் தெரியாது ஆனால் ராகுல் அங்கே இருந்தவன்!ஹீ ஹீ அவன் நான் இல்லை! யோகா ஐயா!

Yoga.S.FR said...

தனிமரம் said...

பதுலையிலும் இரப்பர் தோட்டம் இருக்கு அதையும் தாண்டி இன்னும் சில பகுதியில் ஊவாவில் ரப்பர் இருக்கு §§§§அதையும் ராகுல் சொல்வான் நேசனுக்குத் தெரியாது ஆனால் ராகுல் அங்கே இருந்தவன்!ஹீ ஹீ அவன் நான் இல்லை!§§§§§ யோகா ஐயா!//////நம்பிட்டோம்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S.FR said...

நான் சுதேசிக் கொள்கைக்காரன்.////அப்படிஎன்றால்?????நான் இப்போதிருக்கும் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறேன்.பகிஷ்கரிப்பது என்றல்ல,ஆயினும்...............................!

தனிமரம் said...

அதையும் தாண்டி இன்னும் சில பகுதியில் ஊவாவில் ரப்பர் இருக்கு §§§§அதையும் ராகுல் சொல்வான் நேசனுக்குத் தெரியாது ஆனால் ராகுல் அங்கே இருந்தவன்!ஹீ ஹீ அவன் நான் இல்லை!§§§§§ யோகா ஐயா!//////நம்பிட்டோம்,ஹ!ஹ!ஹா!!!!!! 
// பதிவுலக அரசியலில் நம்பியாகனும் நீங்கள் !ஹீ ஹீ !

தனிமரம் said...

நான் சுதேசிக் கொள்கைக்காரன்.////அப்படிஎன்றால்?????நான் இப்போதிருக்கும் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறேன்.பகிஷ்கரிப்பது என்றல்ல,ஆயினும்...............................! //ஹீ ஹீ தன்நாட்டு மக்களும் மக்கள் பொருட்களும் எப்போதும் முக்கியத்துவம் இருக்கு இல்லை என்றால் ஒரு ஈழத்தவன் ஐரோப்பிய தேசத்தில் மக்கள் கடையோ இல்லை காசன் கறியோ போட முடியாது ஐயா இதை நான் சொல்லனுமா??சிசிரவும்  இருக்கு பின்சிரியும் உண்டு ஹீ ஹீ

அம்பலத்தார் said...

//பெட்டிக்கடை போட்டால் கோழி முட்டையிடும் வரைக்கும் காத்திருக்கணும் போலத்தான் .//
எம்மாம் பெரியதொரு தத்துவம் சொல்லிவிட்டியள் நேசன் புல்லரிக்குது.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//...ஊவாவில் ரப்பர் இருக்கு அதையும் ராகுல் சொல்வான் நேசனுக்குத் தெரியாது ஆனால் ராகுல் அங்கே இருந்தவன்!ஹீ ஹீ அவன் நான் இல்லை!//
நம்புறம் நம்புறம் நம்புறம் நம்புறம் நம்புறம்...................ம்

தனிமரம் said...

பெட்டிக்கடை போட்டால் கோழி முட்டையிடும் வரைக்கும் காத்திருக்கணும் போலத்தான் .//
எம்மாம் பெரியதொரு தத்துவம் சொல்லிவிட்டியள் நேசன் புல்லரிக்குது. 
//வாங்க அம்பலத்தார் எந்தப்புல் ஹீ ஓல்ட் அரக்கா இல்லை நேப்போலியன் ஹீ இல்ல மானம்புல் இல்ல  இப்படி எல்லாம் சந்தேகம் வரும் இல்ல அம்பலத்தார் பெட்டிக்கடையில் இருந்தவனுக்கு ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

அம்பலத்தார் said...

மலையகத்தில் முகம் தொலைத்தவனிடம் நான் என் மனதை தொலைத்திட்டன்.

தனிமரம் said...

தனிமரம் said...
//...ஊவாவில் ரப்பர் இருக்கு அதையும் ராகுல் சொல்வான் நேசனுக்குத் தெரியாது ஆனால் ராகுல் அங்கே இருந்தவன்!ஹீ ஹீ அவன் நான் இல்லை!//
நம்புறம் நம்புறம் நம்புறம் நம்புறம் நம்புறம்...................ம் 
//ஹீ ஹீ இன்று மூத்தவர்கள் எல்லாம் தும்புத்தடியோடு வந்தாச்சு போல ஹீ ஹீ இப்பவும் சொல்லுறன் நான் அவன் இல்லை  !!ஹீ ஹீ பங்கஜம் பாட்டியின் பேர்த்தி என் (தனிமரத்தின்)மனைவியாக்கும் 

தனிமரம் said...

மலையகத்தில் முகம் தொலைத்தவனிடம் நான் என் மனதை தொலைத்திட்டன். 
//இப்படிப் பொய் சொன்னால் நான் சமியிடம் உண்மை சொல்லவேண்டி வரும் மாலினி பொன்சேக்கா என் அத்தை நானும் அவங்க கூட ஒரு போட்டோ எடுத்து வைத்திருந்தன் ஆனால் எல்லாம் போய் விட்டது நாசாமாகப் போன இடம்பெயர்வில்!

ஹேமா said...

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு நேசன் இப்பவும்.மலைநாட்டுப் பிரயாணம் என்றால் தேசிக்காய்,பொலித்தீன் பைதான் முதல்ல எடுத்து வச்சுக்கொள்ளுவன் !

நேசன்தான் ராகுல் இல்லை...இல்லை...இல்லை !

தனிமரம் said...

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு நேசன் இப்பவும்.மலைநாட்டுப் பிரயாணம் என்றால் தேசிக்காய்,பொலித்தீன் பைதான் முதல்ல எடுத்து வச்சுக்கொள்ளுவன் !

நேசன்தான் ராகுல் இல்லை...இல்லை...இல்லை ! 
//ஹீ ஹீ என்ற மச்சாள் றொம்ப  நல்லவள் பங்கஜம் பாட்டியின்  பேர்த்தி ஆனால் நான் தீவில் இருந்தஇன்னொரு  பேரன் ஹேமா  அக்காள் !

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

அம்பலத்தார் said...

ஹேமா said...

//எனக்கும் இதே பிரச்சனை இருக்கு நேசன் இப்பவும்.மலைநாட்டுப் பிரயாணம் என்றால் தேசிக்காய்,பொலித்தீன் பைதான் முதல்ல எடுத்து வச்சுக்கொள்ளுவன் !//

எதுக்கு எல்லாம் தேசிக்காய் உதவியிருக்கு. இப்பத்தான் ஏன் தேசிக்காய் விலை ஏறினது என்று புரிஞ்சுது.
தேசிக்காய் என்று எழுதேக்கைதான் ஞாபகம் வந்தது. Please clear my doubt. தில்லானாமோகனாம்பாள் படத்தில நாகேஸ் தேசிக்காயோடையே திரிவாரே.. அந்த தேசிக்காயிற்கு பின்னாலையும் எதாவது சத்தி மாற்றர் இருந்ததோ??

தனிமரம் said...

இப்பத்தான் ஏன் தேசிக்காய் விலை ஏறினது என்று புரிஞ்சுது.
தேசிக்காய் என்று எழுதேக்கைதான் ஞாபகம் வந்தது. Please clear my doubt. தில்லானாமோகனாம்பாள் படத்தில நாகேஸ் தேசிக்காயோடையே திரிவாரே.. அந்த தேசிக்காயிற்கு பின்னாலையும் எதாவது சத்தி மாற்றர் இருந்ததோ?? // இருக்கு அம்பலத்தார் ஆனால் இது கொஞ்சம் ஆபாசம் ராகுல் சொலுவான் கொஞ்சம் காத்திருக்கனும் அவன் இப்ப தானே தன்ற ஊருக்குப் போய் இருக்கின்றான் மீண்டும் சிலரைப் பார்கனும் இல்லையா??பதில் வரும் கொஞ்சம் சுனங்கும் மறைந்திருந்து பார்க்கும் மெளனம் என்ன அது யாரோ ராகுல் சொல்வான்! ஹீ 

ஹேமா said...

அம்பலம் ஐயா ஊறுகாய் போட்டு வச்சிருப்பீங்கள்.கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய்தானே.கஞ்சிதான் இண்டைக்குக் கஞ்சிதான்...அது ஒரு புதுப்பாட்டு !

தனிமரம் said...

அம்பலம் ஐயா ஊறுகாய் போட்டு வச்சிருப்பீங்கள்.கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய்தானே.கஞ்சிதான் இண்டைக்குக் கஞ்சிதான்...அது ஒரு புதுப்பாட்டு ! // கஞ்சிக்கு மட்டும் தொட்டுக்கொள்வதில்லை ஊறுகாய் ஹீ ஹீ சாப்பாட்டிலும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அதிகம் !

Yoga.S.FR said...

ஹேமா said...

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு நேசன் இப்பவும்.மலைநாட்டுப் பிரயாணம் என்றால் தேசிக்காய்,பொலித்தீன் பைதான் முதல்ல எடுத்து வச்சுக்கொள்ளுவன் !/////நம்ப மாட்டினம்!என்ரை மனுசிக்கு மகிழூந்து(கார்)பயணம் ஒத்துக் கொள்வதில்லை.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மைத்துனர் காரில் சென்ற போது,அவரின் சிரிப்பின் அர்த்தம்????????????????????????முடியல சாமி!!!!!!!!!!!!!

தனிமரம் said...

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு நேசன் இப்பவும்.மலைநாட்டுப் பிரயாணம் என்றால் தேசிக்காய்,பொலித்தீன் பைதான் முதல்ல எடுத்து வச்சுக்கொள்ளுவன் !/////நம்ப மாட்டினம்!என்ரை மனுசிக்கு மகிழூந்து(கார்)பயணம் ஒத்துக் கொள்வதில்லை.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மைத்துனர் காரில் சென்ற போது,அவரின் சிரிப்பின் அர்த்தம்????????????????????????முடியல சாமி!!!!!!!!!!!!! 
/- வணக்கம் யோகா ஐயா!
சிலரின் வாசம் அது ஹீ ஹீ

Yoga.S.FR said...

தனிமரம் said...

நான் சுதேசிக் கொள்கைக்காரன்.////அப்படிஎன்றால்?????நான் இப்போதிருக்கும் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறேன்.பகிஷ்கரிப்பது என்றல்ல,ஆயினும்...............................! //ஹீ ஹீ தன்நாட்டு மக்களும் மக்கள் பொருட்களும் எப்போதும் முக்கியத்துவம் இருக்கு இல்லை என்றால் ஒரு ஈழத்தவன் ஐரோப்பிய தேசத்தில் மக்கள் கடையோ இல்லை காசன் கறியோ போட முடியாது ஐயா இதை நான் சொல்லனுமா??சிசிரவும் இருக்கு பின்சிரியும் உண்டு ஹீ ஹீ///வணக்கம் நேசன்!அத்தியாவசியம் என்று ஒன்று உண்டே?நுகர்வதில் கட்டுப்பாடும் வேண்டும்!லயன் லாகரும்LION LAGER),நெக்டொவும்(NECTO)???????

Yoga.S.FR said...

கொஞ்சம் வெளியே செல்ல வேண்டும்,நீங்களும் வேலைக்குப் போக வேண்டுமென நினைக்கிறேன்.முடிந்தால் மாலையில்.............

Anonymous said...

சுபேரா இருக்கு அன்ன

சிங்கள் ரீரீ அண்ணா இது தொடர் கதையா...

Anonymous said...

மீ இந்தப் பதிவை படிச்சிப் போட்டேன் ...

மீதம் இருப்பதை பின்னரம் படிக்கான்

Anonymous said...

பதிவு சுபேரா இக்குதூஊ ஊ ஊ ஊ ..

கொஞ்சம் ஸ்பெல் மிஸ்டேக் இக்குதூஉ ...சோ டீச்சரை கூப்பிட்டு உங்களை பென்ச் மேல ஏற வைக்கேன் அண்ணா

Anonymous said...

ரீச்சர் சிக்கிரம் ஓடி வாங்கோல் ...ரீரீ அண்ணான் ஸ்பெல் மிஸ்டேக்

Yoga.S.FR said...

பின்னூட்டமே ஸ்பெலிங் மிஸ்ரேக்!இதில பதிவில ரெண்டொரு எழுத்துப்பிழைக்கு ரீச்சர ஆரோ கூப்புடுகீனம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!(நேசன் பதிவிடுவது மொபைலில்,தெரியுமா?)

தனிமரம் said...

வணக்கம் கலை!
முதல்முறையாக தனிமரத்திற்கு வாரீங்க ஒரு பால்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

இது ஒரு நீண்டதொடர் கலை  பரீட்சை முடிய நேரம் இருக்கும் போது ஆரம்பத்தில் இருந்து வாசியுங்கோ விரும்பினால்!

தனிமரம் said...

அதிகம் எழுத்துப்பிழை என்று எல்லா பேராசிரியர்களும் குட்டியும் இன்னும் தனிமரமாக நின்று கொண்டுதான் இருக்கின்றேன் வாங்கில் ஹீ ஹீ !.ஏன்னா பாடசாலையில் கடைசி மேசைதான் நமக்கு! இங்க உறவுகள் இருக்கின்றனர் ஹேமா,பூசார்,யோகா ஐயா,செங்கோவி  ஐயா,அம்பலத்தார் என பட்டியல் அதிகம்!

தனிமரம் said...

நன்றி கலை பரீட்சை நேரத்திற்கு இடையிலும் இங்கு வந்தற்கு சிறப்பு நன்றி முதலில் பரீட்சை முக்கியம்!நாங்க படிக்காத மரம் இல்ல!ஹீ

தனிமரம் said...

பின்னூட்டமே ஸ்பெலிங் மிஸ்ரேக்!இதில பதிவில ரெண்டொரு எழுத்துப்பிழைக்கு ரீச்சர ஆரோ கூப்புடுகீனம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!(நேசன் பதிவிடுவது மொபைலில்,தெரியுமா?) 
// இரவு வணக்கம் யோகா ஐயா!
கலை கூப்பிடுவது அதிராவை யோகா ஐயா அவங்கதானாம் இவங்களுக்கு ரீச்சர்! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!