21 March 2012

game over.. ஒரு முன்னோட்டம்!

ஈழத்தில் இருந்து மீண்டும் திரைப்படம் வெளிவராதா?.. ஒரு நல்ல படத்தை எப்போது வெள்ளித்திரையில் கொண்டு வருவோம்! என்று ஏங்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்களின் கனவுகள் பலரிடம்..!!

வெள்ளித்திரைக்கு முகவரி கொடுக்க சிறிய அளவில் குறுந்திரைப்படம் எடுக்கின்றார்கள் பலர் .

அப்படியான நண்பர்களுக்கு என்றும் தோள் கொடுக்க வேண்டியது ஒரு கலையை நேசிக்கும் ஈழத்தவனின் கடமையாக இருக்க வேண்டும்.

இவை பிரதேசவாதம்,மொழிவாதம்,இனவாதம் என்பவற்றை கடந்து இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்!

எனக்கு எப்போதும் பல நண்பர்கள் பல வட்டங்களில் இருப்பது என் பலம் என்பது  ஒரு புறம் என்றால் ! பலவீனமும் அதுதான்!

நம்மவர்கள் தயாரிப்புக்கள் பற்றியும், தேடல் பற்றியும், இருக்கும் ஆர்வம் பற்றியும் அன்று என்னோடு இருந்தவர்கள் கூட இன்று  முகநூல் வழியாக உரையாடும் போதும் , ஸ்கைப்  வழியாக  தொடர்பில் வரும் போதும் காது கிழியும் அளவுக்கு பல விடயங்களை நண்பர்களாக  பேசிக்கொள்வோம்.

அப்போது அருகில் இருப்போர் 'இவன் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டனும்' என்று   சொல்லி கிண்டல் பண்ணுவார்கள்.. அது வேறு கதை! ஏன்..இப்போது வலையிலும் பால்கோப்பி கேட்டுப் போனால்  முதலில் பிளாஸ்டர் ஒட்ட காத்திருக்கும் உறவுகளும் பலர்!

மீண்டும் நம் படைப்புக்களுக்கு நாம் வரவேற்பை கொடுக்காமல், அன்னியரின் ஆராதிப்புக்கும்,  அவாடுக்குமாக  ஒரு கலைஞனை கண்கலங்கவிட்டு விட்டு, பிற்காலத்தில் அவனைப்பற்றி பெருமை பேசி பட்டிமன்றம் வைத்து பல பதிவு எழுதி  எதைச் சாதிக்கப்போறோம்? என்ற உணர்வைத் தரும்!

இன்று நம் தேசத்துக் கலைஞர்கள் பலர் முகம் தொலைந்து அரபுலகத்திலும், இன்னும் பிற தேசத்திலும் வாழ்கின்றார்கள். படைப்பாளிகள்,தயாரிப்பாளர்கள் என நொந்து போனவர்கள் பலர்.

இன்னும் நல்ல கதை, இருக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று ஒரு நண்பன் கூறும்போது, நேரம் வராதா அவனுக்கு ஒளி கொடுக்க என ஏங்கும் நெஞ்சங்களும் உண்டு.

இன்னும் அடிபட்ட இடத்தில் இருந்து மீண்டுவராமல் இருக்கும் சிலரிடம் என்றாவது மீண்டும் ஒரு சமுகவிடயத்தை வெள்ளித்திரையில் வலம் வரவிடனும் என்ற கனவுமட்டும் கலையாது!

எப்படியும் இணைவோம் என சிலர் சொல்லிச் செல்வது வெற்றுக் கோசம் அல்ல என எண்ணவைக்கும் என்னை...

இப்படி இருக்கும் ஒரு நண்பனின் குறும்பட முயற்சிக்கு  என்னால் முடிந்த அளவு ஊக்கிவிப்பு.. அவனுக்காக ஒரு பதிவை பதிவு செய்வது மட்டும் தான்!

அந்த வகையில்
மணியின் முதல் குறுப்படம் தேஞ்ச செருப்புக்கு என் விமர்சனம் இங்கே பார்க்கலாம். http://www.thanimaram.org/2011/12/blog-post.html


அடுத்த இயக்கம்  மிகவிரைவில் என்று கூறப்பட்டிருந்தாலும், மிக வேகமாகவே,  இந்த வார இறுதியில் நண்பன் மணிவண்ணன் கொழும்பில் வெளீயீடு செய்ய இருக்கும் குறும்படத்தின் முன்னோட்டத்தை உங்களிடம் கொண்டு வருகின்றேன் -.

விமர்சனம் விரைவில் பின்னே வரும் .

இது 6 நிமிடங்கள் கொண்ட குறும்படம். 'அந்தக் கணத்தில் என்ன நடக்கும்' என்பதை இன்னொரு கோணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளீயீட்டை வெற்றிகரமாக செய்து முடி மணிவண்ணா...என்றும் உன் வெற்றிக்கு பக்கபலமாக இந்த தனிமரத்தின் குரல் இருக்கும்! அத்தோடு உங்கள் குறும்படம் வெற்றி வாகைசூட பிரார்த்திக்கின்றேன்!

நல்  வாழ்த்துக்களுடன்
நண்பன் நேசன்!

63 comments :

Anonymous said...

annaa paarkkavilai..padichip pottu varen

Anonymous said...

சுப்பரா சொல்லி இருக்கீங்க அண்ணா

Anonymous said...

உண்மயைத்தான் அண்ன்ன ...ரொம்ப சுபேரா கலையை பற்றி எழுதி இருக்கீங்க avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv படம் பார்த்து விட்டு வரேன் அண்ணா

தனிமரம் said...

வாங்க கலை முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ!

Anonymous said...

முன்னூட்டம் பார்க்க கஷ்டமா இருக்குது அண்ணா

தனிமரம் said...

விமர்சனம் பின்னால் வரும் கலை

தனிமரம் said...

ஆனால் காட்சியில் வித்தியாசம் உணர்வீர்கள் கலை!

Anonymous said...

என்னால் முடிந்த அளவு ஊக்கிவிப்பு.////////////

ஊக்குவிக்க ஆள் இருந்தால் உக்கு விற்பவர்கள் கூட தேக்கு விர்ப்பரகலாம் அண்ணா ....

சூப்பர் ...உங்கட மாறி நண்பன் கிடைத்தமைக்கு உங்க நண்பருக்கு வாழ்த்துக்கள்

ஹேமா said...

இங்க பார்டா.....நான் வரேல்ல உந்த விளையாட்டுக்கு !

Anonymous said...

விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா ...

காட்சிகள் கஷ்டமா இருந்தால் நான் பார்க்க மாட்டேன் ..

Anonymous said...

வாங்கோ ஹேமா அக்கா ...நீங்க இல்லமல் ஒரு விளையாட்டா..நோ ஒ

தனிமரம் said...

சுபேரா கலையை பற்றி எழுதி இருக்கீங்க avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv படம் பார்த்து விட்டு வரேன் அண்ணா// இலங்கை கலையில் சில புல்லூரிவிகள் புகுந்துவிட்டதால்! நம் ஈழத்து கலையும் இருண்டுகிடக்கு.கலை

Anonymous said...

இன்ன்டைக்கும் பால் காப்பி எனக்கு கிடைத்தால் ஹேமா அக்கா வுக்கு ஒரே ஸ்டமக் பர்னிங்ங்ங்ங்ங்ங்ங்ங்..........
அக்கவிருக்கு மோர் கொடுங்கோ அண்ணா

தனிமரம் said...

வாங்க ஹேமா நீங்க இல்லாமல் தனிமரம் இந்தளவு முன்னேறாது

ஹேமா said...

க்லை...படிக்கிறன் படிக்கிறன் எண்டு சொல்லிக்கொண்டு ஒரே கும்மிதானாக்கும்.எங்க உங்கட டீச்சர்.பின் வாங்கில ஏத்திவிடச் சொல்றன் !

ஹேமா said...

என்னைவிட வயித்தெரிச்சல் யோகா அப்பாவுக்குத்தான்.அவருக்கு ப்ளீஸ் இப்பவே ஃப்ரிஜ்க்குள்ள வச்சுவிடுங்கோ ஒரு கூசா நிறைய மோர்நீர் !

தனிமரம் said...

காட்சி கான நானும் நண்பனிடம் காத்திருக்கின்றேன் முகநூல் வழியாக. விரைவில் பார்த்துவிட்டு வருவேன் விமர்சனம்` உடன் கலை

தனிமரம் said...

மோர் குடிக்கும் நேரம் இப்ப ஹேமாவுக்கு இல்லை கலை! ஒரு சுக்குக்குக் காப்பி கொடுப்பம்!

Anonymous said...

க்லை...படிக்கிறன் படிக்கிறன் எண்டு சொல்லிக்கொண்டு ஒரே கும்மிதானாக்கும்.//////////////////////நோ ஒ ஒ ஒ ஒ ஒ அக்கா ...நான் ப்லோக்க்ஸ் பக்கம் வர வேணாம் எண்டு தான் இருந்தனன் ஒரு வாரம் ..
ஆனால் இண்டு 22ம் திகதி அல்லோ ...அதிரா அக்காக்கு வாழ்த்து சொல்ல வந்தான் அப்புடியே அண்ணா ப்லொக்கில் நேற்று அடித்த கும்மியை முடிக்க வந்தேன் அதற்குள் இன்னொரு கும்மிக்கு தலைமை தாங்கும்படி ரீரீ அண்ணா அன்பா கேட்டுக் கொண்டவை ...அதான் அக்கா

தனிமரம் said...

க்லை...படிக்கிறன் படிக்கிறன் எண்டு சொல்லிக்கொண்டு ஒரே கும்மிதானாக்கும்.எங்க உங்கட டீச்சர்.பின் வாங்கில ஏத்திவிடச் சொல்றன் // பாவம் ஹேமா கருக்குமட்டை அடிவாங்கும் வயசு இல்லை கலை தங்கச்சிக்கு!

ஹேமா said...

நம் கலைஞர்களின் முயற்சிக்கு என்றும் எம் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.முன்னோட்டமே கொஞ்சம் மனசுக்குச் சங்கடமா இருக்கு.ம்ம்..சரி எங்களது கதைகள் என்றாலே அப்படித்தான்.மூளைக்குத் தெரிந்தாலும் பார்க்கும்போது மனம் கலங்குகிறது !

Anonymous said...

ஹேமா said...
என்னைவிட வயித்தெரிச்சல் யோகா அப்பாவுக்குத்தான்.அவருக்கு ப்ளீஸ் இப்பவே ஃப்ரிஜ்க்குள்ள வச்சுவிடுங்கோ ஒரு கூசா நிறைய மோர்நீர் !//////////////////////


avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv ......யோகா அங்கிள் வரும்முன் நான் மூட்டை கட்டி கிளம்பி விடுவேனாக்கும் ...அங்கிள் கேட்டார் எண்டால் நான் இந்தப் பக்கமே வர வில்லை எண்டு சொல்லிவிடுவினம் ...மீ எஸ்கப ஏஏஏஏஏஏஎ

ஹேமா said...

அப்ப இண்டைக்கு பூஸாரின்ர வீடல் இரவிரவாக் கும்மியெண்டு சொல்லுங்கோ.மணியத்தாரும் சங்கிலியைக் குடுத்திடுவார் எண்டு நம்புவம் !

தனிமரம் said...

அப்பாவுக்குத்தான்.அவருக்கு ப்ளீஸ் இப்பவே ஃப்ரிஜ்க்குள்ள வச்சுவிடுங்கோ ஒரு கூசா நிறைய மோர்நீர் //ஹீ அவ்ருக்குத்தான் பால்கோப்பி கிடைத்து இருக்கனும் ஆனால் சக்ப்திவாள்ர் நிகழ்வுக.ள் கந்தசாமி தான் என் படத்தினை வலை ஏற்றித்தந்தார் அவர் உதவியதற்கு என் சார்பிலும் உங்கள் சார்பிலும் சிறப்பு நன்றி! சொல்லுவோம்!

தனிமரம் said...

க்லை...படிக்கிறன் படிக்கிறன் எண்டு சொல்லிக்கொண்டு ஒரே கும்மிதானாக்கும்.//////////////////////நோ ஒ ஒ ஒ ஒ ஒ அக்கா ...நான் ப்லோக்க்ஸ் பக்கம் வர வேணாம் எண்டு தான் இருந்தனன் ஒரு வாரம் ..
ஆனால் இண்டு 22ம் திகதி அல்லோ ...அதிரா அக்காக்கு வாழ்த்து சொல்ல வந்தான் அப்புடியே அண்ணா ப்லொக்கில் நேற்று அடித்த கும்மியை முடிக்க வந்தேன் அதற்குள் இன்னொரு கும்மிக்கு தலைமை தாங்கும்படி ரீரீ அண்ணா அன்பா கேட்டுக் கொண்டவை ...அதான் அக்கா/ பூனைக்கு வாழ்த்து சொல்லுவோம்.

ஹேமா said...

கலை உங்களைப் பிடிச்சு நேசன் வீட்டுத் தூண்ல கட்டிப்போட்டு நானே பிடிச்சுக் குடுக்கப்போறன்.நானே யோகா அப்பாட்ட பால்க்கோப்பிக்கு சண்டை போடுறனான்.இப்ப எப்பவும் நீங்கள் முந்தி வந்திடுறீங்கள்.

எனக்கு சுக்குக் கோப்பி தாற ஆளைப் பாருங்கோ.எனக்கு வேண்டாம் உந்த சுக்குக் கோப்பி.எனக்கு வயிறு நல்லாத்தான் இருக்கு !

Anonymous said...

இல்லை ஹேமா அக்கா ,அதிரா அக்கா என்ன விடயம் எண்டே சொல்லவில்லை ,,,போன மாதம் தான் பிறந்த நாள் போச்சி..இப்போ திருமண நாள் இருக்கலாம் ..இல்லை எண்டால் அக்காவின் குட்டிச்களுக்கு பிறந்த நாளா இருக்கலாம் ..

அக்கா ரொம்ப பிஸி ஆகி விட்டங்கள் ..நோ கும்மி ..

தனிமரம் said...

நம் கலைஞர்களின் முயற்சிக்கு என்றும் எம் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.முன்னோட்டமே கொஞ்சம் மனசுக்குச் சங்கடமா இருக்கு.ம்ம்..சரி எங்களது கதைகள் என்றாலே அப்படித்தான்.மூளைக்குத் தெரிந்தாலும் பார்க்கும்போது மனம் கலங்குகிறது // ம்ணியிட்ம் முதலில் நான் கேட்ட்தும் இதுதான் ஆனால் அப்ப்டி இல்லை என்றார் ஹேமா பொறுப்போம் இன்னும் இரண்டு நாள் முழுவதும் வரும்

தனிமரம் said...

அங்கிள் வரும்முன் நான் மூட்டை கட்டி கிளம்பி விடுவேனாக்கும் ...அங்கிள் கேட்டார் எண்டால் நான் இந்தப் பக்கமே வர வில்லை எண்டு சொல்லிவிடுவினம் ...மீ எஸ்கப ஏஏஏஏஏஏஎ// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்! நல்லாப்படியுங்கோ!

ஹேமா said...

ஆகா ...தனிமரம் ரீரீ ஆயிட்டாரே !

ரீ ரீக்கு உதவின கந்துவுக்கு நன்றி நன்றி.கந்து அப்பிடியே எழுத்துப் பிழைகளையும் திருத்திவிடுங்கோ நல்ல பிள்ளைபோல !

தனிமரம் said...

அப்ப இண்டைக்கு பூஸாரின்ர வீடல் இரவிரவாக் கும்மியெண்டு சொல்லுங்கோ.மணியத்தாரும் சங்கிலியைக் குடுத்திடுவார் எண்டு நம்புவம் // அவா பதிவு போட்டமாதிரித்தெரியாது ஐபோனில்! நாளைக்குத்தான் கும்ம முடியும்

Anonymous said...

ஓகே ஹேமா அக்கா ...நான் கிளம்புறேன் ..பத்து நிமிடம் மட்டும் கும்மி அடிக்கலாம் எண்டு வந்தேனன் ...ஆனால் ஒரு மணி நேரமாகிவிட்டது ...
அதிரா அக்கா சொல்லுவர் வலைப்பூ பக்கம் கடுகு நேரம் வரலாம் எண்டு நினைத்தாலும் கட கடா வேண்டு நேரமாகிம் எண்டு ...

ஹேமா அக்கா டாடா ...டைம் கிடைக்கும் பொது கும்மியில் தலைமை பொறுப்பை ஏற்க்க வருகிறேன் ...
இந்த விடயத்தை எங்கட யோகா மாமாவிடம் மட்டும் போட்டுக் கொடுத்துடாதிங்க ...

தனிமரம் said...

வீட்டுத் தூண்ல கட்டிப்போட்டு நானே பிடிச்சுக் குடுக்கப்போறன்.நானே யோகா அப்பாட்ட பால்க்கோப்பிக்கு சண்டை போடுறனான்.இப்ப எப்பவும் நீங்கள் முந்தி வந்திடுறீங்கள்.

எனக்கு சுக்குக் கோப்பி தாற ஆளைப் பாருங்கோ.எனக்கு வேண்டாம் உந்த சுக்குக் கோப்பி.எனக்கு வயிறு நல்லாத்தான் இருக்கு // பொல்ஹாவெலையில் குடித்துப் பார்த்தால் தெரியும் ஐராங்கனியுடன் சுக்குக் கோப்பியின் சுவை!ஹீ

ஹேமா said...

போய்ட்டு வாங்கோ கருவாசிக்குட்டி.கவனமாகப் படிச்சு நல்ல வரவேணும்.அதுதான் சந்தோஷம்.நானும் போகப்போறேன்.காலேல 6 மணிக்கு வேலை.நேசன் போய்ட்டு வரேன் !

தனிமரம் said...

இல்லை ஹேமா அக்கா ,அதிரா அக்கா என்ன விடயம் எண்டே சொல்லவில்லை ,,,போன மாதம் தான் பிறந்த நாள் போச்சி..இப்போ திருமண நாள் இருக்கலாம் ..இல்லை எண்டால் அக்காவின் குட்டிச்களுக்கு பிறந்த நாளா இருக்கலாம் ..

அக்கா ரொம்ப பிஸி ஆகி விட்டங்கள் ..நோ// உண்மைதான் போல என்னிடம் கூட கன பதிவுக்குப் பின்னால் இன்று வந்தா பூனையார்

தனிமரம் said...

கும்மியில் தலைமை பொறுப்பை ஏற்க்க வருகிறேன் ...
இந்த விடயத்தை எங்கட யோகா மாமாவிடம் மட்டும் போட்டுக் கொடுத்துடாதிங்க // சத்தியமாக் நான் சொல்லமாட்டன் அவரிடம் என்று நம்பினால் நான் ரொம்ப நல்லவன் இல்லை!நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்!இனிய் உறக்கம் கண்களைத்தழுவட்டும்!

தனிமரம் said...

சூப்பர் ...உங்கட மாறி நண்பன் கிடைத்தமைக்கு உங்க நண்பருக்கு வாழ்த்துக்கள்// அவர் ஒரு பட்டதாரி நான் ஒரு ஊதாரி என்றாலும் உங்கள் வாழ்த்து அவரைச்சேரும் கலை!

Esther sabi said...

குறும்படங்கள் அதிகளவில் ஈழத்திலிருந்து வெளிவருகின்ற போதும் ஓரே நாளில்.. பனை மர காடு, போன்ற படங்கள் வெள்ளி திரை படங்கள் தயாராகி வருவது குறிப்பிடதக்கது அண்ணா

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.S.FR said...

காலை வணக்கம்!இரவு வர முடியவில்லை!பெட்டையள்(பெண்கள்)வந்து கும்மி அடிச்சிருக்கீனம்.எல்லாம் நான் இல்லையெண்டு தான் போல கிடக்கு?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

Yoga.S.FR said...

பதிவில ஒரு எழுத்துப் பிழைகூட இல்ல.கம்பியூட்டர்ல அடிச்சதோ?பின்னூட்டத்தில தெரியுது,ஹி!ஹி!ஹி!!!!!!!!

தனிமரம் said...

காலை வணக்கம் யோகா ஐயா!
இரவு கொஞ்சம் நேரம் இருந்திச்சு அக்காள்மார்களுக்கு அதுதான் கும்மியிருக்கின்றார்கள்! ஹீ

தனிமரம் said...

பதிவில ஒரு எழுத்துப் பிழைகூட இல்ல.கம்பியூட்டர்ல அடிச்சதோ?பின்னூட்டத்தில தெரியுது,ஹி!ஹி!ஹி!!!!!!!! 
// இல்லை வழமைபோல ஐபோனில் தான் கந்தசாமியிடம் பதிவையும் படத்தையும் இணைக்கும் படி கேட்டிருந்தேன் கந்தசமித்தாத்தாவின் கைவண்ணம் எழுப்பிழை களை எடுத்திருக்கின்றார்.பின்னூட்டம் நம் கையில் !ஹீ ஹி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் யோகா ஐயா!

அம்பலத்தார் said...

//எனக்கு எப்போதும் பல நண்பர்கள் பல வட்டங்களில் இருப்பது என் பலம் என்பது ஒரு புறம் என்றால் ! பலவீனமும் அதுதான்!//
ஹி ஹி வணக்கம் நேசன், இப்படி சொன்னா எப்படி ரொம்பவும் குழப்பாமல் சொல்லுங்கோ பலமா பலவீனமா?

அம்பலத்தார் said...

//ஒரு நண்பனின் குறும்பட முயற்சிக்கு என்னால் முடிந்த அளவு ஊக்கிவிப்பு.. அவனுக்காக ஒரு பதிவை பதிவு செய்வது மட்டும் தான்!//
நட்புக்கு கை கொடுக்கும் நல்ல மனம் வாழ்க.

அம்பலத்தார் said...

உங்கள் நண்பன் மணிவண்ணனின் குறும்பட வெளியீடு சிறப்பாக அமையவும். படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறவும் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

எனக்கு எப்போதும் பல நண்பர்கள் பல வட்டங்களில் இருப்பது என் பலம் என்பது ஒரு புறம் என்றால் ! பலவீனமும் அதுதான்!//
ஹி ஹி வணக்கம் நேசன், இப்படி சொன்னா எப்படி ரொம்பவும் குழப்பாமல் சொல்லுங்கோ பலமா பலவீனமா? 
//ஹீ ஹீ வாய்க்கு பிளாஸ்டர் வரும் இரண்டும் தான்!!!

தனிமரம் said...

ஒரு நண்பனின் குறும்பட முயற்சிக்கு என்னால் முடிந்த அளவு ஊக்கிவிப்பு.. அவனுக்காக ஒரு பதிவை பதிவு செய்வது மட்டும் தான்!//
நட்புக்கு கை கொடுக்கும் நல்ல மனம் வாழ்க. 
//ஹேமா பாருங்கோ அம்பலத்தார் தான் மீண்டும் அரசியல் பேசச் சொல்லி சிக்னல் கொடுக்கின்றார் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

அம்பலத்தார் said...

ஹேமா said...
//இங்க பார்டா.....நான் வரேல்ல உந்த விளையாட்டுக்கு !//
வரமாட்டன் என்று சொல்லிக்கொண்டு வாற ஆளை ஆரென்று பாருங்கோ. அடடா எங்கட கவிதாயினி! வாங்கம்மா வாங்க.

தனிமரம் said...

உங்கள் நண்பன் மணிவண்ணனின் குறும்பட வெளியீடு சிறப்பாக அமையவும். படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறவும் வாழ்த்துக்கள். 
// நன்றி அம்பலத்தார்! உங்கள் வாழ்த்தும் ஆசியும் அவரை இன்னும் மெருகூட்டட்டும்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வரமாட்டன் என்று சொல்லிக்கொண்டு வாற ஆளை ஆரென்று பாருங்கோ. அடடா எங்கட கவிதாயினி! வாங்கம்மா வாங்க. 
//தொடர்ந்து எழுத வேண்டும் என்று தலையில் குட்டுவதே அக்காள் தானே இல்லை என்றாள் விரைவில் ......

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

//காலை வணக்கம்!இரவு வர முடியவில்லை!பெட்டையள்(பெண்கள்)வந்து கும்மி அடிச்சிருக்கீனம்.எல்லாம் நான் இல்லையெண்டு தான் போல கிடக்கு?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!//
பூனை இல்லாத நேரம் எலிகளுக்கு கொண்டாட்டம்தானே யோகா

அம்பலத்தார் said...

கலை said...
//ஹேமா அக்கா டாடா ...டைம் கிடைக்கும் பொது கும்மியில் தலைமை பொறுப்பை ஏற்க்க வருகிறேன் ...
இந்த விடயத்தை எங்கட யோகா மாமாவிடம் மட்டும் போட்டுக் கொடுத்துடாதிங்க ...//
Yoga Please note the point.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
// அவர் ஒரு பட்டதாரி நான் ஒரு ஊதாரி என்றாலும் உங்கள் வாழ்த்து அவரைச்சேரும் கலை!//
ஊதாரியும் பட்டதாரியும் காம்பினேசன் நல்லாத்தான் இருக்கு.

Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!ஒரு முடிவோடதான் இருக்கிறியள் போல கிடக்கு,ஹ!ஹ!ஹா!!!!!!!////அம்பலத்தார் said...

தனிமரம் said...
// அவர் ஒரு பட்டதாரி நான் ஒரு ஊதாரி என்றாலும் உங்கள் வாழ்த்து அவரைச்சேரும் கலை!//
ஊதாரியும் பட்டதாரியும் காம்பினேசன் நல்லாத்தான் இருக்கு!

Anonymous said...

விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன் நேசரே...Proof reader வந்தாச்சு போல...-:)

Yoga.S.FR said...

அம்பலத்தார் said...

கலை said...
//ஹேமா அக்கா டாடா ...டைம் கிடைக்கும் பொது கும்மியில் தலைமை பொறுப்பை ஏற்க்க வருகிறேன் ...
இந்த விடயத்தை எங்கட யோகா மாமாவிடம் மட்டும் போட்டுக் கொடுத்துடாதிங்க ...//
Yoga Please note the point.////பண்ணிட்டேன்!ரிசல்ட் வரட்டும்.அப்புறம் தெரியும் சேதி!!!

தனிமரம் said...

பூனை இல்லாத நேரம் எலிகளுக்கு கொண்டாட்டம்தானே யோகா//அம்பலத்தார் ஐயா யோகா ஐயாவை இப்படிச் சொல்லலாமோ ?? அவர் யார் தெரியுமா அந்த இடத்தில் காணி ..,!

தனிமரம் said...

கலை said...
//ஹேமா அக்கா டாடா ...டைம் கிடைக்கும் பொது கும்மியில் தலைமை பொறுப்பை ஏற்க்க வருகிறேன் ...
இந்த விடயத்தை எங்கட யோகா மாமாவிடம் மட்டும் போட்டுக் கொடுத்துடாதிங்க ...//
Yoga Please note the point.
//இப்படி எத்தனைபேர் அம்பலத்தார் தீர்ப்புக்கு சாட்சி சொல்ல!ஹீ ஹீ

தனிமரம் said...

தனிமரம் said...
// அவர் ஒரு பட்டதாரி நான் ஒரு ஊதாரி என்றாலும் உங்கள் வாழ்த்து அவரைச்சேரும் கலை!//
ஊதாரியும் பட்டதாரியும் காம்பினேசன் நல்லாத்தான் இருக்கு.
//ஹா ஹா தயாரிப்பாளர் அனுபவம் இல்லைப்போல அம்பலத்தாருக்கு ஹீ ஹீ காம்பினேஸன் ..ம் !

தனிமரம் said...

விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன் நேசரே...Proof reader வந்தாச்சு போல...-:)

// நிச்சயம் வரும் விமர்சனம் என்ன செய்வது அப்படி ஒருவர் இன்னும் கிடைக்கவில்லை ரெவெரி அண்ணா!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

அம்பலத்தார் said...

கலை said...
//ஹேமா அக்கா டாடா ...டைம் கிடைக்கும் பொது கும்மியில் தலைமை பொறுப்பை ஏற்க்க வருகிறேன் ...
இந்த விடயத்தை எங்கட யோகா மாமாவிடம் மட்டும் போட்டுக் கொடுத்துடாதிங்க ...//
Yoga Please note the point.////பண்ணிட்டேன்!ரிசல்ட் வரட்டும்.அப்புறம் தெரியும் சேதி!!!
//ஆஹா அப்பா கருக்கு மட்டையோடு காத்திருக்கின்றார் கலை எங்காவது குதிரை ஓடிச் சரி பாஸாகிவிடுங்கோ!ஹீ